தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
உங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் "டிஜிட்டல் அடையாள அட்டை" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்!Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா? Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mc
Log in
Top posting users this month
1 Post - 50%
பார்வையிட்டோர்

Share
Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16177
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆன்லைன் வர்த்தகத்தில் முதல் 6 தளங்கள்

on Mon Sep 16, 2013 7:51 pm

வாரண்ட்டியோ கியாரண்ட்டியோ அந்தப் பொருள் தயாரிக்கும் நிறுவனம் அதற்கு ரெஸ்பான்சிபிலிட்டியாக இருக்கும்போது அந்தப்பொருளை ஆன்லைனில் வாங்கினால் பணத்தை குறைந்தது 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை மிச்சப்படுத்த முடியும்.. ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது என்பது இப்போது மிகவும் எளிதாகி விட்டது.. எந்தப்பொருளாக இருந்தாலும் ஆன்லைனில் சென்று நமக்கு என்ன தேவையோ அதனை சம்மந்தப்பட்ட வெப்சைபட்டுகளில் சென்று ஆர்டர் செய்தால் பொருட்கள் வீடுதேடிவருகின்றது.. நேரம் மிச்ச மாகும்...டோர் டெலிவரி செய்யும் போது பணத்தை கொடுத்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.. இந்த சேவையை இந்தியாவில் பல நிறுவனங்கள் செய்து வருகின்றன என்றாலும் கூட குறிப்பிட்டு சொல்லுமளவிற்கு ஆறு நிறுவனங்கள் இதனை மிகச் சிறப்பாக செய்கின்றன..

இப்படி ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் போது இணையத்தில் மூலம் வர்த்தகம் அதிகரிக்கும்; இனி பொருளாதார முன்னேற்றம் இணைய வர்த்தகம் மூலமே செழிப்புறும், சிறப்புப் பெறும் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் இன்னும் மேலை நாடுககள் போல இணைய தளம் மூலம் பொருட்கள் வாங்குவதற்கு இன்னும் நம் மக்களின் நம்பிக்கை உறுதிப்படவில்லை. மின்சார கட்டணத்தையும் டெலிபோன் கட்டணத்தையும் கூட இன்டெர் நெட் வசதி மற்றும் வங்கிக் கணக்கு வசதி இருந்தும் மக்கள் நம்பிக்கையில்லாமல் நேரடியாக சென்று பல மணிநேரம் க்யூவில் நின்று கட்டிவிட்டு வருகின்றனர்.

என்னதான் இருந்தாலும், ஒரு பொருளைப் பார்த்து, அதனைத் தடவி, முகர்ந்து பார்த்து, தட்டிப் பார்த்து வாங்குவதுதான் நம் மக்களின் வழக்கம். ஆனால் இணையத்தின் மூலம் பொருட்களை வாங்குவது, சில தளங்களில், விலை குறைவாக உள்ளது என்ற நிலை, நகர்ப்பகுதிகளில் உள்ள மக்களை இணைய தளங்கள் பால் ஈர்த்துள்ளது. இப்படி ஆன்லைனில் வாங்குவோர்களில் சில குறிப்பிட்ட நிறுவனங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகமாகவே உள்ளது.. 

இந்தியாவில் இயங்கும் வர்த்தக இணைய தளங்களில், முதல் ஆறு இடங்களில் உள்ள தளங்கள்..

1. பிளிப்கார்ட் டாட் காம் (Flipkart.com): பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் அமைத்துள்ள வர்த்தக இணைய தளம். 2007 முதல் இயங்கி வருகிறது. புத்தகங்களை விற்பனை செய்வதில் தொடங்கி, தற்போது டிஜிட்டல் சாதனங்கள் உட்பட பலவகையான பொருட்களை விற்பனை செய்து வருகிறது. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், நெட் பேங்கிங், கிப்ட் வவுச்சர், பொருள் வழங்கும்போது பணம் செலுத்தல் எனப் பலவகைகளில் பொருட்களுக்கான பணத்தைப் பெற்றுக் கொள்கிறது. இணைய தளங்களின் செயல்பாட்டினை, பன்னாட்டளவில் ஆய்வு செய்திடும் அலெக்ஸா நிறுவனம் இதன் செயல் திறன் பற்றிச் சில குறிப்புகளைத் தந்துள்ளது. இந்த தளத்திற்கு வரும் ஒரு வாடிக்கையாளர், சராசரியாக ஒரு நாளில் எட்டு தனிப் பக்கங்களைக் காண்கிறார். அதிகம் பேர் பார்க்கும் தளங்களில், உலக அளவில் இந்த தளம் 233 ஆவது இடத் தினையும், இந்திய அளவில் 13 ஆவது இடத்திøனையும் பெற்றுள்ளது. இந்த தளம், 8,207 தளங்களில் லிங்க் பெற்றுள்ளது. 

2. இபே.இன் (Ebay.in): பன்னாட்டளவில் இயங்கும் அமெரிக்க நிறுவனம் இதனை நிர்வகிக்கிறது. இதில் பொருட்கள் விற்பனையுடன், ஏலம் வழியாகவும் விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. நாம் இதில் பொருட் களை விற்பனையும் செய்திடலாம். 1995 முதல் செயல்படுகிறது. இதன் இந்தியப் பிரிவு மிகச் சிறப்பாக, இந்திய இணைய வர்த்தக தளங்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. அலெக்ஸாவின் கணிப்புப்படி, ஒரு வாடிக்கையாளர், இந்த தளத்தில் சராசரியாக 11.8 தனிப் பக்கங் களைக் காண்கிறார். உலக அளவில் 371 ஆவது இடத்தையும், இந்திய அளவில் 23 ஆவது இடத்தையும் இது பெற்றுள்ளது. இந்த தளம், 3,977 தளங்களில் லிங்க் பெற்றுள்ளது. 

3. ஜபாங் டாட் காம் (Jabong.com): ராக்கெட் இன்டர்நெட் என்னும் நிறுவனத்திற்குச் சொந்தமான இணைய வர்த்தக தளம் இது. நாகரிக சாதனங்கள் மற்றும் லைப் ஸ்டைல் என அழைக்கப்படுகிற பொருட்களை இந்த தளம் விற்பனை செய்கிறது. நவ நாகரிக உடைகள், காலணிகள், இவற்றிற்கான துணை சாதனங்கள், அழகுப் பொருட்கள், நறுமணத் திரவியங்கள், வீடுகளுக்கான சாதனங்கள் என இந்த தளம் விற்பனை செய்திடும் பட்டியல் நீள்கிறது. சென்ற ஆண்டு ஜனவரியில் இந்த தளம் விற்பனையைத் தொடங்கியது. இதன் சலுகை விற்பனை பற்றி அவ்வப் போது தெரிந்து கொள்ள, இந்த தளம் சென்று நம் மின் அஞ்சல் முகவரியினைப் பதிந்து கொள்ளலாம். அலெக்ஸாவின் கணிப்புப்படி, தேடுதல் சாதனங்களில் 6 சதவீதம் தேடுதல்கள், இந்த தளம் குறித்து அமைந்துள்ளன. பன்னாட்டளவில் 706 ஆவது இடத்தினையும், இந்திய அளவில் 47 ஆவது இடத்தையும் இந்த தளம் கொண்டுள்ளது. இந்த தளம், 1,294 தளங்களில் லிங்க் பெற்றுள்ளது. 

4. ஸ்நாப்டீல் டாட் காம் (Snapdeal.com): டில்லி ஐ.ஐ.டி.யில் பயின்ற பொறி யாளர்களால், 2010 முதல் செயல்படுத்தப்படும் தளம் இது. தினசரி விற்பனையில் தொடங்கி, இன்று வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் விற்பனை செய்திடும் தளமாக இயங்குகிறது. தினந் தோறும் ஏதேனும் பொருட்களைச் சலுகை விலையில் தருவது இதன் சிறப்பாகும். இத்தகைய சிறப்பு தள்ளுபடி பொருட்களைத் தினந்தோறும் அறிய, இதன் தளத்தில் நம் மின் அஞ்சல் முகவரியினைப் பதிவு செய்து கொள்ளலாம். 

5. ஹோம் ஷாப்18 டாட் காம் (Homeshop18.com): புதுமையான பொருட்களை இந்த தளம் வழியிலும், தொலைக் காட்சி சேனல்களில் விளம்பரமாகவும் இந்த தளம் விற்பனையை மேற்கொள்கிறது. 24 மணி நேர விற்பனை சேனலாக 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இது தொடங்கப் பட்டது. பத்து சதவீதம் பேர் தங்கள் தேடுதல்களில் இதனைத் தேடி அறிவதாக அலெக்ஸா அறிவித்துள்ளது. 

6. மேக் மைட்ரிப் டாட் காம் (MakeMyTrip.com): முந்தைய தளங்களைப் போல பொருட்கள் விற்பனையை இந்த தளம் மேற்கொள்ளவில்லை என்றாலும், இணையதளம் மூலம் மக்கள் விரும்பும் சிலவற்றைப் பெற்றுத் தருவதால், இந்தப் பட்டியலில் இந்த தளம் இடம் பெறுகிறது. பன்னாடு மற்றும் இந்திய விமானப் பயணங்களுக்கான டிக்கெட், பஸ் டிக்கட், ஹோட்டல் அறை ஏற்பாடு, விடுமுறைப் பயணங்கள் என பயண முறை விற்பனையை இந்த தளம் பெரிய அளவில் மேற்கொள்கிறது. 2,000 ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த தளம், தொடர்ந்து தன் வாடிக்கையாளர் கள் எண்ணிக்கையை உயர்த்தி வருகிறது. இந்தியாவில் 20 நகரங்களில் இதன் அலுவலகங்கள் இயங்குகின்றன. நியூயார்க் மற்றும் சான் பிரான் சிஸ்கோ ஆகிய வெளிநாட்டு நகரங்களிலும் இதற்கு கிளைகள் உள்ளன. அலெக்ஸாவின் கணிப்புப்படி, பன்னாட்டளவில் இந்த தளம் 929 ஆவது இடத்தையும், இந்தியாவில் 64 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. இந்த தளம், 4,802 தளங்களில் லிங்க் பெற்றுள்ளது.

இது தவிர மற்ற தளங்களின் பெயர்களும், பன்னாட்டளவிலும், இந்திய அளவிலும் அவை தற்சமயம் பெற்றுள்ள இடவரிசை எண்களும் கீழே பார்க்கலாம். 
7. Myntra.com: இடவரிசை 1,032/73 
8. Yebhi.com: இடவரிசை 1,277/89 
9. Tradus.com: இடவரிசை 1,330/92 
10. Shopclues.com : இடவரிசை 2,050/129 
11. Infibeam.com: இடவரிசை 1,966/135 
12. Naaptol.com: இடவரிசை 1,809/136

இணையத்தில் பொருட்கள் வாங்குவது என்பதும் நம்பகமானதுதான்.. இன்னும் நம் நாட்டில் அந்த நம்பகத்தன்மை மக்களுக்கு ஏற்படுவதற்கு சில ஆண்டுகள் ஆகலாம்.. thanks f/b Udhai Kumar


நன்றி: ரசிகன்....
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum