தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கடற் கொள்ளையர் - சுவாரசிய தகவல் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கடற் கொள்ளையர் - சுவாரசிய தகவல் Empty கடற் கொள்ளையர் - சுவாரசிய தகவல்

Tue Jul 30, 2013 8:33 pm
கடற் கொள்ளையர் - சுவாரசிய தகவல் 1069357_595356153828371_1630323106_n

கடலில் கப்பல் போக தொடங்கிய காலத்தில் இருந்தே கடல் கொள்ளையும் தொடங்கி விட்டது. வேதங்களிலும் புராணங்களிலும் கூட கடல் கொள்ளை பற்றி கூறப்பட்டுள்ளது.எகிப்தில் கொள்ளையர் தாக்குதல் பற்றிய முதல் செய்தி, கி.மு. 1350 -ல் பேரரசர் அக்னாடென் ஆட்சி காலத்து களிமண் பலகையில் குறிப்பிட்டுள்ளது. கடல் கொள்ளையர்களை கடல் மக்கள் என்று குறிப்பிடுகிறார்கள். மத்திய தரைக்கடல் பகுதியில் ஒரு புதிய கூட்டமைப்பை உருவாக்கி, அருகில் உள்ள நாடுகளை தாக்கத் தொடங்கினர். இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று இன்னும் உறுதியாக கூறமுடியவில்லை. ஆனாலும் 200 ஆண்டுகளுக்கு எகிப்து, கிரேக்கம், ஹிட்டைட், மைசீனியா, மிட்டானி ஆகிய நாடுகள் இவர்களது தாக்குதலுக்குள்ளானது.

எகிப்து பேரரசர் மூன்றாவது ராம்சேசின் களிமண் வெட்டு ஒன்று அவர்களது (கொல்லையர்களது) ஆயுதங்களுக்கு முன்னாள் அனைத்து நாடுகளும் சிதறிப்போயின. யாராலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை’ என்று கூறுகிறது.

இந்த கடல் மக்களின் படையெடுப்பால் மத்திய தரைக்கடல், கடல் கொள்ளையரின் கூடாரமாக மாறிப்போனது. அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மத்திய தரைக்கடலின் பல தீவுகள் கொள்ளையரின் தலைமையிடங்களாக செயல்பட்டன. எகிப்து பேரரசின் பலம் குறைந்தது அவர்களுக்கு சாதகமாகிப் போனது.

ஒரு நாட்டின் வர்த்தக கப்பல்களை தாக்கி கொள்ளையடித்துவிட்டு அதன் எதிரிநாட்டு துறைமுகத்தில் பாதுகாப்பாக அவர்களால் பதுங்கிக் கொள்ள முடிந்தது. கிரேக்கத்தில் கடல் கொள்ளை என்பது அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சியாக இருந்தது. சண்டையிடும் நாடுகள் கொள்ளையர்களை கூலிப்படையாக பயன்படுத்திக் கொண்டன. சில நாடுகளின் கடற்படை தளபதிகள் போரில்லாத காலத்தில் கொள்ளையர்களாக பணிபுரிய தொடங்கினர். கைச் செலவுக்கு காசில்லை என்றால் அரசாங்க அதிகாரிகள் கூட கப்பல்களை கடத்தி, மாமூல் வசூலிப்பது சகஜமானது. இப்படியாக கடற்கொல்லையின் ஆரம்ப காலங்கள் இருந்தன.
பொதுவாகவே திருடர்கள், கொள்ளைக்காரர்கள் என்று சட்டத்தை மீறுபவர்கள்மீது மக்களுக்கு ஓர் இனம்புரியாத கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது. அதிலும், கடல் கொள்ளையர்கள் என்றாலே பலருக்கு அலாதி பிரியம். கடற்கொள்ளையர் என்றவுடன் நம்மில் பலருக்கும் உடனே நினைவுக்கு வரும் உருவம், தோளில் கிளி, ஒரு கண்ணை மறைக்கும் கண்பட்டை, ஒரு மரக்கட்டைக் காலுடன் கூடிய கருப்பு தாடிக்காரர். இன்னும் கொஞ்சம் யோசித்தால், மண்டையோடும் எலும்புகளும் கொண்ட கருப்புக்கொள்ளையர் கொடியும், பாய்மரக் கப்பல்களும், புதையல் பெட்டிகளும் நினைவுக்கு வரும்.

இந்த பொது பிம்பம் உருவாக, பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கரிபீயன் கடலைக் கலங்கடித்துக் கொண்டிருந்த பல கொள்ளையர்கள்தான் காரணம். இவர்களைப் பற்றிய செய்திகள், காலங்காலமாகக் கதைகளாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்து கடற்கொள்ளையர்களின் மீது மக்களின் மனதில் ஒருவித ஆர்வத்தையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தின. என்னதான் கேட்பதற்கு கவர்ச்சியாக இருந்தாலும், கடற்கொள்ளையர்கள் சட்டத்தை மீறிய திருடர்கள். வர்த்தகர்களுக்குப் பெரும் தலைவலியாக இருந்தவர்கள். இந்த வில்லன்களில் மிகவும் பரவலாக அறியப்பட்ட வில்லன், ‘Black Beard’ எனப்படும் Edward Teach. கடற்க்கொள்ளையர்கள் குறித்த பொதுவான பிம்பத்துக்கு, ‘கறுப்புத் தாடியை’ இரவல் கொடுத்தவர் இவர்தான்.

பதினேழு – பதினெட்டாம் நூற்றாண்டுகள், வரலாற்றாளர்களால் கடல் கொள்ளையின் பொற்காலம் (Golden Age of piracy) என்றழைக்கப்படுகின்றன. அமெரிக்கக் கண்டம் கண்டுபிடிக்கப்பட்ட இருநூறு ஆண்டுகளுக்குள், ஐரோப்பிய நாடுகள் அங்கே பல காலனிகளை உருவாக்கி தங்கள் மக்களைக் குடியேற்றின. பெரும் பரப்பளவில், பண்ணைகளும் தோட்டங்களும் உருவாக்கப்பட்டு, பருத்தி, கரும்பு போன்றவை பயிரிடப்பட்டன.

பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் இங்கிலாந்து, பிரான்சு, ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற அனைத்து முன்னணி ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவில் காலனிகள் இருந்தன. காலனிகளுக்கும் ஐரோப்பாவுக்கும் நடுவே அட்லாண்டிக் கடல் இருந்தது. அதிவேகமான கப்பலில் பயணம் செய்தாலும், அதைக் கடக்க, குறைந்த பட்சம் சில வாரங்களாவது ஆகும். காலனிக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே வர்த்தகம் வருடந்தோறும் பெருகி வந்ததால், கப்பல்களுக்கும் மாலுமிகளுக்கும் பெரும் கிராக்கி ஏற்பட்டது.

கப்பல் வாழ்க்கை என்பது சாதாரணமானதல்ல. ஒவ்வொரு பிரயாணமும் மாதக் கணக்கில் நீடிக்கும்.உயிருடன் திரும்பி வருவோம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஊதியமோ மிகக் குறைவு. அதுவும் சரியாக, நேரத்துக்குக் கிடைப்பது சந்தேகம். கப்பல் மேலதிகாரிகள் ஊழலுக்குப் பேர் போனவர்கள். மாலுமிகளின் சம்பளத்தைத் திருடுவது, அவர்களுக்கான உணவை, உடைகளை வாங்குவதில் ஊழல் எனப் பலவகையிலும் தங்கள் கைவரிசையைக் காட்டினார்கள்.

பெரும்பாலும் படிப்பறிவில்லாதவர்களாக இருந்த மாலுமிகளால் இதை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை. எதிர்த்துப் பேசினால் சாட்டையடி விழும். வாரக்கணக்கில் இருட்டறையில் அடைத்துவிடுவார்கள். அல்லது, பட்டினி கிடக்கவேண்டியிருக்கும். பல சமயங்களில், சிறு குற்றங்களுக்குக் கூட தூக்கில் போட்டுவிடுவார்கள். உண்மையில், பெரும்பாலான மாலுமிகள், இந்தக் கொடுமையான கப்பல் வாழ்க்கையிலிருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.

எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் ஓர் அளவுக்கு மேல் கொடுமைகளைத் தாங்க முடியாதல்லவா? அதுதான் இங்கும் நடந்தது. பல கப்பல்களில் மாலுமிப் புரட்சிகள் வெடித்தன. மாலுமிகள், தங்கள் மேலதிகாரிகளைக் கொன்று கப்பல்களைக் கைப்பற்றினார்கள். புரட்சிக்குப் பின் அவர்களால் தாய்நாடு திரும்ப முடியவில்லை. திரும்பினால் தூக்குக் கயிறு காத்திருந்தது. கொள்ளையராக மாறுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியிருக்கவில்லை. கடுமையான மாலுமி வாழ்க்கையைவிட கொள்ளையர் வாழ்க்கை அவர்களுக்கு எளிதாகத் தெரிந்தது. இப்படித்தான் பல புதிய கொள்ளையர் கூட்டங்கள் உருவாயின.

இப்படி, மாலுமியாக இருந்து, கொள்ளையரானவர் தான் எட்வர்ட் டீச். ஐந்துக்கும் பத்துக்கும் கொள்ளையடிக்கும் கூட்டத்தில் இருந்த டீச், புகழ்பெற்ற கொள்ளையர் கேப்டனான பெஞ்சமின் ஹார்னிகோல்டின் சீடனாக ஆனார். அதற்குப் பிறகு, பெரிய அளவில் கொள்ளையடிக்கத் தொடங்கினார். அமெரிக்கக் கண்டத்திலிருந்து ஐரோப்பாவுக்குப் புதையல்களைக் கொண்டு சென்ற ஸ்பானிஷ் கப்பல்களைக் கொள்ளையடித்து, பெரும் பொருள் சேர்த்த ஹார்னிகோல்டு, கொள்ளையர்களுக்காகவே பிரத்யேகமாக ஒரு வாழ்விடம் வேண்டுமென்று விரும்பினார்.

அதற்காக கரிபீயன் தீவுகளில் ஒன்றான பஹாமாசின் தலைநகர் நசாவுவைக் கைப்பற்றினார். அந்தத் தளத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டது கொள்ளையர் கூட்டமைப்பு. முன்னைவிட அதிகமான முனைப்புடன் கொள்ளை தொழிலில் இறங்கினார்கள். விரைவில் குருவை மிஞ்சிய சிஷ்யனாக மாறி விட்டார் எட்வர்ட். ஹார்னிகோல்ட், பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர். தேசப்பற்றால் பிரிட்டிஷ் கப்பல்களைத் தாக்குவதில்லை என்ற கொள்கை கொண்டிருந்தார். ஆனால், அவரது சீடர்களோ, நமக்கு தேசமும் வேண்டாம், பற்றும் வேண்டாம் என்று கறாராக சொல்லிவிட்டார்கள். அதோடு, அவரை கேப்டன் பதவியிலிருந்து இறங்கிவிட்டார்கள். ஹார்னிகோல்டின் இடத்தை 1717 இல், Black beard பிடித்துக்கொண்டார்.

கொள்ளையர்களுக்கு கேப்டன் ஆன பிறகு, எட்வர்ட் டீச்சின் கொள்ளைத் தாக்குதல்கள் அதிகமாயின. அதுவரை சின்னச் சின்ன வணிகக் கப்பல்களை மட்டும் தாக்கிக் கொள்ளையடித்து வந்த அவரது கூட்டம், மாபெரும் போர்க் கப்பல்களைக் கூடத் துணிந்து தாக்கத் தொடங்கியது. ‘லா கன்கார்ட்’ என்ற ஆயுதமேந்திய பிரெஞ்சு சரக்கு கப்பலை கைப்பற்றினார் எட்வர்ட். அதையே தனது கொள்ளைக் கோட்டத்துக்கு தலைமை கப்பலாக ஆக்கிக் கொண்டார். ‘Queen Anne Revenge’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்தக் கப்பல் தான், அதுவரை கடற்கொள்ளையர்கள் பயன்படுத்திய கப்பல்களிலேயே மிகவும் பலம் வாய்ந்தது.

எட்வர்டின் தலைமை கப்பலில், அதிகமாக பீரங்கிகளும் திறமையான கேப்டனும் இருந்தார்கள். ‘Queen Anne வருகிறது’ என்ற செய்தியை கேட்டாலே வணிகக் கப்பல் கேப்டன்களுக்கு குலை நடுங்கும் நிலை உருவானது. எட்வர்டின் புகழ், பிற கொள்ளையர்கள் மத்தியிலும் வேகமாகப் பரவியது. பல கொள்ளையர்கள், தேடிவந்து அவருடைய கூட்டத்தில் இணைந்துகொண்டார்கள். ‘எட்வர்ட் டீச் கூட்டத்தின் உறுப்பினர்’ என்ற கெளரவம்(!) கிடைத்தாலும், அவருடைய கூட்டம் அடிக்கடி வெற்றிகரமாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதால், சீக்கிரமே பணக்காரர்களாகி விடலாம் என்ற எண்ணம் தான் மற்றவர்களைக் எட்வர்டின் பக்கம் ஈர்த்தது.

எட்வர்டின் கொள்ளைக் கூட்டம் 150 பேர் கொண்டதாக பெருகியது. அனைவரையும் ஒரே கப்பலில் வைத்திருக்க முடியாதென்பதை உணர்ந்தார் எட்வர்ட். தான் கைப்பற்றிய மேலும் இரு கப்பல்களைக் கொள்ளைக் கப்பல்களாகத் தயார் செய்தார். தன் சகாக்களிடம் கொடுத்தார். மொத்தம் மூன்று கொள்ளைக் கப்பல்கள். ஒரு கப்பலுக்கு கேப்டனாக இருந்தவர், மூன்று கப்பல்களுக்கு கமேண்டராகி விட்டார். இந்த காலகட்டத்தில் தான் அவருக்கு ‘Black beard (கருந்தாடி)’ என்ற பெயர் பிரபலமானது.

அதுவரை ‘எட்வர்ட் டீச்’ என்றே அறியப்பட்டு வந்த அவர், தன்னை பார்க்கிறவர்கள் பயப்படவேண்டும் என்பதற்காகவே, தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டார். நீண்ட கருந்தாடி, தோலின் குறுக்கே பல கைத் துப்பாக்கிகள் அடங்கிய தோல் பட்டை, பெரிய தொப்பி, நீண்ட அங்கி என் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். அவரது பெயரும் ‘Black Beard’ என்று மாறியது.

1718 இல், எட்வர்டின் கொள்ளைத் தாக்குதல்கள் மேலும் அதிகரித்தன. கரீபியன் கடலில் ஒரு குறுகிய பகுதியில் மட்டும் கொள்ளையடித்து வந்தவர், அந்த ஆண்டு, அந்த பகுதியிலிருந்த பிற ஐரோப்பிய காலனிகளிலும் தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார். எட்வர்டின் சாகசங்கள் பிற கொள்ளையர்களுக்கும் தைரியமளித்தது. அவர்களும் தங்கள் கைவரிசையை பல இடங்களில் காட்டினார்கள். ஹார்னி கோல்டு, நசாவுவில் உருவாகியிருந்த கொள்ளையர் தளம், ஒரு குடியரசைப் போன்று செயல்படத் தொடங்கியது. கொள்ளையர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பித்தார்கள்.

கொள்ளையர்கள் தொந்தரவால் வட அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையே நடைபெற்ற கடல்வழிப் போக்குவரத்து முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டது. ஐரோப்பாவிலிருந்து வந்து, அமெரிக்காவை காலனியாக்கிக் கொண்டவர்கள், ஆடிப் போனார்கள். கொள்ளையர்களிடமிருந்து தங்களை காப்பாற்றுமாறு இங்கிலாந்தின் முதலாம் ஜார்ஜ் மன்னரிடம் முறையிட்டார்கள்.

மன்னரும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொண்டார். ‘கொள்ளையர்களின் கொட்டத்தை அடக்கவேண்டுமேன்றால் முதலில் பஹாமாஸ் தீவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்’ என்றார்கள் அவருடைய அமைச்சர்கள். எனவே, பஹாமாசுக்கு ஒரு புதிய ஆளுனரை நியமித்தார் முதலாம் ஜார்ஜ். அவரை பெரும் படைபலத்துடன் கரிபீயனுக்கு அனுப்பி வைத்தார்.

வூடஸ் ரோஜர்ஸ் என்ற அந்த தளபதி ஒரு கப்பல் படையுடன் கொள்ளையரை ஒழிக்க இங்கிலாந்திலிருந்து கரீபியன் தீவுகளுக்குக் கிளம்பினார். ரோஜர்ஸ், கரீபியன் தீவுகளை நெருங்கிக்கொண்டிருந்தபோது, எட்வர்டின் கொள்ளைப் படை தங்கள் தொழிலில் உச்சகட்ட சாதனையை நிகழ்த்திக் கொண்டிருந்தது.

இதுநாள் வரை, கரிபியன் பகுதியிலிருந்த ஐரோப்பிய காலனிகளை மட்டும் கொள்ளையடித்து வந்த எட்வர்டிற்கு, வட அமெரிக்கப் பகுதிகளில் ஏன் கொள்ளையடிக்கக் கூடாது என்ற எண்ணம் வந்தது. அதுவரை யாரும் கொள்ளையடிக்காத பகுதியென்பதால் அங்கு பாதுகாப்புக்குக் கடற்ப்படை கப்பல்கள் ஏதும் இல்லை. எனவே, 1718, மே மாதத்தில், அமெரிக்கா காலனியான தெற்கு கரோலினாவின் தலைநகர் சார்லஸ்டன் துறைமுகத்தை தாக்கினார் எட்வர்ட் டீச்.

ஒரு கொள்ளையர் கூட்டம், தைரியமாக ஒரு பெரிய நகரை நேரடியாகத் தாக்குவது அதுவே முதல் முறை. சார்லஸ்டன் துறைமுக வாயிலில் தன் கப்பல்படையை நிறுத்திய எட்வர்ட், அங்கு வந்த பல கப்பல்களை கைப்பற்றினார். அதிலிருந்த பயணிகளை சிறைபிடித்தார். தனக்கு வேண்டிய சில மருந்துகளை உடனடியாக அனுப்பாவிட்டால் பிணைக் கைதிகளை கொன்றுவிடுவதாக சார்லஸ்டன் ஆளுநரை மிரட்டினார். சில நாட்களுக்கு இந்த முற்றுகை நீடித்தது. மருந்துகளை பெற்றுக்கொண்டு கைதிகளை விடுவித்தார் எட்வர்ட். அவர் நினைத்திருந்தால் சார்லஸ்டன் நகரையே தரைமட்டமாக்கியிருக்கலாம். ஆனால், வெறும் சில மருந்துகளுக்காக ஏன் இப்படியொரு தாக்குதலை நடத்தினார் என்பது இன்றுவரை புரியாத மர்மம்.

வட அமெரிக்காவிலிருந்து திரும்பிய எட்வர்டிற்கு, ரோஜர்சின் படை நசாவுவை நோக்கிச் செல்லும் செய்தி கிடைத்தது. அதனை சமாளித்துப் போரிட முடியாது என்பது அவருக்கு தெரிந்தே இருந்தது. அவர் தற்காலிகமாக கொள்ளை தொழிலிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்தார். அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தின் ஆளுநருக்கு லஞ்சம் கொடுத்து அங்கு குடியேறினார். அதற்காகவே, வேண்டுமென்றே தனது ‘Queen Anne’ கப்பலைத் தரைதட்டச் செய்தார்.

சில மாதங்கள் அமைதியாக வடக்கு கரோலினாவில் காலம் கடத்தினார். இந்நேரத்தில் ரோஜர்சின் கப்பற்படை, நாசாவு தீவினை அடைந்து அங்கிருந்த கொள்ளையர்களை அடித்து விரட்டியது. பல கொள்ளையர் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்கள். அவர்களுக்கு நேர்ந்த கதியிலிருந்து புத்திசாலித்தனமாக எட்வர்ட் தப்பிவ்ட்டாலும், அவரால் நிலத்தில் அமைதியாக வாழ முடியவில்லை. மீண்டும் கொள்ளை தொழிலுக்கு திரும்பவேண்டுமென்ற ஆசையை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

சில மாதங்களுக்குப் பிறகு, வட கரோலினா கடற்கரைப் பகுதிகளில் தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார். நசாவுவிலிருந்து தப்பி வந்திருந்த வேறு சில கொள்ளையர் கேப்டன்களும் அவருடன் இணைந்து கொண்டார்கள். ஆனால், இம்முறை காலனிய ஆட்சியாளர்கள் விழிப்புடன் இருந்தனர். வட கரோலினாவுக்குப் பக்கத்து மாநிலமாக வர்ஜீனியாவின் ஆளுநர், எட்வர்ட் மீண்டும் கொள்ளை தொழிலில் இறங்கியதை கேட்டவுடன், அவரை ஒழிக்க உடனடியாக ஒரு கடற்படையை தயார் செய்தார்.

இந்தப் படை, லெப்டினன்ட் மேனார்ட் தலைமையில் எட்வர்ட் டீச்சின் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை ரகசியமாக அணுகியது. எட்வர்டின் கப்பலின் மேல்தளத்தில், அவரின் கூட்டத்திற்கும் மேனார்டின் படைவீரர்களுக்குமிடையே கடும் சண்டை நிகழ்ந்தது.ஆவேசத்துடன் எட்வர்ட் போராடினாலும் இறுதியில் மேனார்டின் வீரர்கள் அவரை தீர்த்துக் கட்டினார்கள். அவரது தலை துண்டிக்கப்பட்டு, மேனார்டின் கப்பல் பாய்மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்டது.

எட்வர்ட் டீச் இறந்த சில வருடங்களில் பிற கொள்ளையர் தலைவர்களும் பிடிபட்டார்கள். கடற்கொள்ளையின் பொற்காலமும் முடிவுக்கு வந்தது. ஆனால், மரணத்துக்கு பிறகும் எட்வர்டின் புகழ் இன்றும் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. ‘கடற்க் கொள்ளையர்’ என்றாலே எட்வர்ட் டீச்சின் உருவம் நினைவுக்கு வருமளவுக்கு இன்றைக்கும் அவர் பலருடைய நினைவில் இருக்கிறார். நிஜ வாழ்வில் கரிபியன் கடற்பகுதியைக் கலங்கடித்தவர், இப்போது கதைகள், திரைப்படங்கள் மொலமாக உலகையே கலக்கிக் கொண்டிருக்கிறார்.


நன்றி: வேர்ல்டு...
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum