தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஆதார் அட்டை Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆதார் அட்டை Empty ஆதார் அட்டை

Sat Jun 29, 2013 8:54 am
கேஸ் இணைப்பு பெறுவது, பாஸ்போர்ட் பெறுவது உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளதால் அதை உடனே பெறுவது நல்லது. கேஸ் இணைப்பு பெற, பாஸ்போர்ட் வாங்க, வீடு வாங்க விற்க, பி.எப். கணக்கு துவங்க அல்லது அதில் இருந்து பணத்தை எடுக்க, வங்கி கணக்கு துவங்க என்று பலவற்றுக்கும் ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 
இதனால் ஆதார் அட்டை வழங்கும் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடப்பதை பார்க்க முடிகிறது. ஆதார் அட்டை பெறுவது எப்படி? 

1. ஆதார் அட்டை பெற பதிவு செய்ய கட்டணம் எதுவுமில்லை. ஒருவர் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். 

2. ஆதார் பதிவு மையங்களுக்கு சென்று உங்களின் அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றை காண்பிக்கவும். 

3. ஆதார் அட்டை பெற அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றுக்கு 33 வகை ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அடையாள அட்டை மற்றும் வசிப்பிடச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிடவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. 

4. புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐடி கார்டு ஆகியவை அடையாளச் சான்றாக எடுத்துக்கொள்ளப்படும். இருப்பிடச் சான்றாக நீங்கள் ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் சமயத்திற்கு முன்னதாக உள்ள 3 மாதங்கள் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

5. ஒரு வேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் அல்லது தாசில்தார் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும். 

6. எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

7. பதிவு மையத்தில் உங்கள் புகைப்படம், கைரேகை, கண்ணின் கருவிழி ஸ்கேன் ஆகியவை எடுக்கப்படும். 

8. ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் ஒருவருக்கு ஒரு ஆதார் எண் தான் வழங்கப்படும். 

9. நீங்கள் அளித்த தகவல்கள் சரிபார்க்கப்படும். அவை சரியாக இருந்தால் ஆதார் நம்பர் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். 

10. ஆதார் எண் கிடைக்க 60 முதல் 90 நாட்கள் வரை ஆகலாம். 

11. ஆதார் கடிதங்களை அச்சடிப்பது வினியோகிப்பது இந்தியா போஸ்ட்டின் வேலை. 

12. ஆதார் கடிதங்களை உரியவிரடம் கொடுக்க இந்தியா போஸ்ட் சாதாரணமாக 3-5 வாரங்கள் எடுத்துக்கொள்ளும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆதார் அட்டை Empty Re: ஆதார் அட்டை

Tue Sep 10, 2013 3:42 pm
 ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி??...

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.

அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.

ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள்
http://uidai.gov.in/update-your-aadhaar-data.html)
சென்று லாகின் செய்ய வேண்டும்.

2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.

3. டாக்குமென்டுகளைஅப்லோட் செய்ய வேண்டும்.

ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும். ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.

ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்

1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.

2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.

ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.

3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.

4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.

அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்குதேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.

ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.

இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.

6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.

7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆதார் அட்டை Empty Re: ஆதார் அட்டை

Sat Jan 03, 2015 7:55 am
ஆதார் என்றால் என்ன?
ஆதார் என்பது இந்திய அரசால் வழங்கப்படும் தனிப்பட்ட அடையாள எண். ஒருவரின் கருவிழிப்படலம், இரு கை விரல்களின் ரேகை, புகைப்படம் போன்ற தகவல்களைச் சேகரித்து 12 இலக்க எண்களைக் கொண்ட தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படும்.

ஆதார் அட்டை பெறத் தகுதிகள்:
இந்தியாவில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் ஆதார் அட்டை பெறலாம். 5 வயது மற்றும் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் ஆதார் அட்டை பெறலாம். வயது வரம்பு கிடையாது. அடையாள அட்டை இல்லாதவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆதார் அட்டை பெற எங்கே விண்ணப்பிப்பது?
இந்தியாவில் வசிக்கும் யாரும் எங்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். திருச்சியைச் சேர்ந்த ஒருவர் புதுச்சேரியில் வசிக்கிறார் என்றால் புதுச்சேரியிலேயே விண்ணப்பிக்கலாம்.
தற்போது தமிழகத்தில் அரசு மையங்களில் எங்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் ஆனால். நவம்பர் மாதத்திற்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் நிரந்தர ஆதார் மையங்கள் அமைக்கப்படும். அதுவரை அருகிலுள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்துகொடுக்கலாம்.
சென்னையில் உள்ளவர்கள் அந்தந்த வார்டுக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்துகொடுக்கலாம்.
இதுதவிர அரசுப் பள்ளிகள் / தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்துகொடுக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தையோ, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மையப் பணியாளர்களையோ அணுகி விவரங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஆதார் அட்டை பெற பதிவுக் கட்டணம் ஏதுமில்லை.

ஆதார் அட்டை பெறத் தேவையான ஆவணங்கள்:
ஆதார் அட்டை பெற அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றுக்கு 33 வகை ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று தேவை.
1.வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம். புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐ.டி. கார்டு ஆகியவை அடையாளச் சான்றாக எடுத்துக்கொள்ளப்படும். இருப்பிடச் சான்றாக நீங்கள் ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் சமயத்திற்கு முன்னதாக உள்ள 3 மாதங்களில் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
2.ஒருவேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் அல்லது தாசில்தார் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.
3.எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.
என்ன விவரங்கள் சேகரிப்பார்கள்?
தேவையான ஆவணங்களைக் கொடுத்தபின் கருவிழிப்படலம், இரு கை விரல் ரேகைகள், புகைப்படம் ஆகியவை எடுத்துக் கொள்ளப்படும்.
ஒருவர் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் ஒருவருக்கு ஒரு ஆதார் எண்தான் வழங்கப்படும். நீங்கள் அளித்த தகவல்கள் சரிபார்க்கப்படும். அவை சரியாக இருந்தால் ஆதார் நம்பர் உங்கள் முகவரிக்கு 60 முதல் 90 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பத்தின் நிலையறிய:
https://portal.uidai.gov.in/ResidentPortal/statusLinkஇந்தத் தளத்திற்குச் சென்று உங்களுக்கு வழங்கப்பட்ட எண்ணையும், தேதியையும் குறிப்பிட்டு விண்ணப்பத்தின் நிலையறியலாம். எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் 60 முதல் 90 நாட்களுக்குள் ஆதார் அடையாள அட்டை உங்கள் முகவரிக்கு வந்து சேரும்.
ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
http://appointments.uidai.gov.in/ இந்தத் தளத்திற்குச் சென்று விவரங்களைப் பதிந்து ஆன்லைனில் அப்பாயின்மெண்ட் வாங்கிக்கொண்டு நேரில் செல்லலாம். ஒருவேளை செல்ல முடியாத சூழல் இருந்தால் அப்பாயின்மெண்ட்டை கேன்சல் செய்துகொள்ளலாம். மீண்டும் வேறு அப்பாயின்மெண்ட் பெற்றுக் கொள்ளலாம்.

ஆதாரில் குறைபாடு:
ஆதாரில் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் ஆதார் கிடைத்து 48 மணி நேரத்திற்குள் தேவையான ஆவணங்களை எடுத்துச் சென்று நிரந்த மையத்தில் சரிசெய்துகொள்ளலாம்.
மேலதிக தகவலுக்கு:
புதுச்சேரியில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள: 88070 82845, 97866 27066
தமிழகத்தில் கடலூரில் மட்டும் நிரந்தர ஆதார் மையம் உள்ளது. இதன் தொடர்பு எண்: 94861 43053
1800 300 1947 என்ற எண்ணில் தகவல் மையத்தை இலவசமாகத் தொடர்பு கொள்ளவும். இதில் தமிழ் தவிர மற்ற தென்னிந்திய மொழிகளில் பேசுவார்கள். விரைவில் தமிழும் கொண்டுவரப்படும்.
https://portal.uidai.gov.in/ResidentPortal/ getstatusLink ©ØÖ® http://uidai.gov.in/ இந்தத் தளங்களுக்குச் சென்று மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

குறிப்பு: இது 2013ம் வருடம் அக்டோபர் மாதத்தில் புதியதலைமுறை வார இதழில் வெளி வந்த தகவல். 
இது குறித்து தெரியாதவர்களுக்காக மீண்டும் பதிவு செய்யப்படுகிறது. 
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆதார் அட்டை Empty Re: ஆதார் அட்டை

Thu Feb 12, 2015 10:40 am

ஆதார் அட்டை 10945642_1701599573399793_3296386333048188112_n

Selvam Palanisamy
1.ஆதார் அட்டை என்னிடம் இல்லை. அதனை நான் பதிவு செய்வது எப்படி?
இந்திய பதிவாளர் ஜெனரல் அவர்கள், மக்கள்தொகை கணக்கெடுப்பு மையத்தை தொடர்பு கொள்ளவும். 
முகவரி: 
The Director, 
Directorate of Cencus Operations, Tamilnadu,
E-Wing, Third Floor, Rajaji Bhavan,
Besant nagar, 
Chennai-600 090,
Phone:91-44-24912993. 
Mail: dco-tam.rgi@nic.in
******************************************************************************************
2. ஆதார் அட்டைக்கு பதிவு செய்து, அது கிடைக்கப் பெறாமல் இருந்தால், அவற்றின் விபரங்களை எப்படி அறிவது?
* SMS ல் UID STATUS <14 digit EID> என டைப் செய்து 51969 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
*இலவச அழைப்பு எண்: 1800 300 1947 மூலம் போன் செய்யவும்.
https://resident.uidai.net.in/check-aadhaar-status இணைய தளத்தில் பெறலாம்.
*******************************************************************************************
3. தொலைக்கப்பட்ட ஆதார் அட்டையை திரும்பப் பெறுவது எப்படி?
http://eaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.
*********************************************************************************************
4. தொலைக்கப்பட்ட ஆதார் பதிவுச்சீட்டு (Enrolment Slip)பெறுவது எப்படி?
ஆதார் இணையதளமான https://resident.uidai.net.in உள் செல்லவும். பின்னர் "find UID/EID" என்பதினை அழுத்தவும். ஆதார் பதிவின்போது அளிக்கப்பட்ட பெயர் மற்றும் கைபேசி எண்ணை பதிவு செய்து OTP (ஒரு முறை குறியீட்டு எண்) பெறவும். பெறப்பட்ட OTP எண்ணை இணையதளத்தில் பதிவு செய்யவும். பதிவான ஆதார் எண் / பதிவு எண்ணினை உங்கள் கைபேசியில் காணலாம்.
**********************************************************************************************5. ஆதார் விவரங்களை திருத்தம் செய்வது (Updation) எப்படி?
பெயர், விலாசம், பிறந்த தேதி மற்றும் கைபேசி எண்ணை திருத்தம் செய்ய ,
* இணையதளமான https://resident.uidai.net.in உள்சென்று செய்யலாம்.
*விண்ணப்பம் எழுதி அதனுடன், அதனை சார்ந்த அடையாள ஆவணத்தை கீழ்கணட UIDAI மண்டல அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பலாம். முகவரி:
UIDAI,
Post box No.:10, 
Chhindwara,
Mathya Pradesh-480 001, 
INDIA .
அல்லது
UIDAI
Post Box No:99
Banjara Hills,
Hyderabad - 500 034, 
INDIA. 
மறக்காமல் அனைத்து ஆவணங்களிலும் தங்களது சுய கையொப்பம் இட்டு அனுப்பவும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆதார் அட்டை Empty Re: ஆதார் அட்டை

Thu Feb 12, 2015 10:43 am
ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?

நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்! 

http://uidai.gov.in/update-your-aadhaar-data.html

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.

அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.
ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.

2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.

3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.

ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.

ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.
ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்:
1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.
2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.

ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.

3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.

4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.

அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.

ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.

இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.

6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.

7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆதார் அட்டை Empty Re: ஆதார் அட்டை

Thu Feb 12, 2015 10:45 am
மத்திய அரசு இந்திய மக்கள் அனைவருக்கும் மிகப்பெரிய பொருட் செலவில் ஆதார் அட்டை வழங்கி வருகிறது. இப்பணி 85 சதவீதம் முடிவடைந்த நிலையில் ஆதார் அட்டையை பற்றி தெரிந்துக்கொள்ளாமல் இருந்தால் மிகவும் தவறு. உங்களிடம் ஏற்கனவே ஆதார் அட்டை இருந்தால் நல்லது. 


இருப்பினும், இப்போது தான் நீங்கள் புதிதாக விண்ணப்பிக்க விரும்புகிறீர்கள் என்றால், அதனை வைத்திருப்பதால் கிடைக்கும் சில பயன்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

1. ஆதார் அட்டையில் தனித்த எண் இருப்பதால், அதனை போலியாக உருவாக்குவது கடினம். அதற்கு காரணம் நம் பயோமெட்ரிக்ஸ் தகவல் உடன் அதாவது கை விரல் ரேகை, கண் கருவிழியின் ரேகை மற்றும் முகம் போன்ற பல தகவல்கள் இந்த அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

2. ஆதார் என்பது உலகளாவிய எண்ணாகும். சென்ட்ரல் யூனிக் ஐடென்டிஃபிகேஷன் டேட்டாபேஸை தொடர்பு கொண்டு பயனீட்டாளரின் அடையாளத்தை நாட்டில் எங்கு இருந்து வேண்டுமானாலும் ஏஜென்சிகளும் சேவை மையங்களும் உறுதி செய்து கொள்ளலாம்.

3. UID-யுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு எண் மூலமாக பாதுகாப்பான முறையில் குறைந்த செலவில், பயனீட்டாளரின் கணக்கில் பணத்தை பரிமாற்றம் முடியும்.

4. இந்த ஆதார் அட்டையின் மூலம் வங்கி பரிமாற்றத்தில் வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான பரிமாற்றம் செய்துக்கொள்ள முடியும். இதனால் வங்கிச் சேவையில் தரம் மேம்படும். இந்த அட்டையின் எந்த ஒரு ஏஜென்சிகளுக்கும் பயனீட்டாளரின் அடையாளத்தை சரிப்பார்க்க முடியும், மேலும் இத்தகவல்கள் 100% உத்திரவாதத்துடன் கிடைக்கும்.

5. ஆதார் அட்டையை மத்திய அரசால் அங்கீகாரிக்கப்பட்ட ஒரு அடையாள ஆவணம், இந்த அட்டையின் மூலம் பயனாளிகள் தங்களின் உரிமைத் தகுதி, கோரிக்கை சேவைகள் மற்றும் தாங்கள் எழுப்பியுள்ள புகார்களை பற்றி இன்றைய தேதி வரையிலான தகவல்களை தங்களின் கைப்பேசி மூலமாக, kiosks மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆதார் அட்டை Empty Re: ஆதார் அட்டை

Mon Sep 05, 2016 7:31 am
ஆதார் அட்டை பற்றி சில தகவல்கள்.

1.ஆதார் அட்டை என்னிடம் இல்லை. அதனை நான் பதிவு செய்வது எப்படி?இந்திய பதிவாளர் ஜெனரல் அவர்கள், மக்கள்தொகை கணக்கெடுப்பு மையத்தை தொடர்பு கொள்ளவும்.
முகவரி:
The Director,Directorate of Cencus Operations, Tamilnadu,E-Wing, Third Floor, Rajaji Bhavan,Besant nagar,Chennai-600 090,Phone:91-44-24912993.Mail: dco-tam.rgi@nic.in

2. ஆதார் அட்டைக்கு பதிவு செய்து, அது கிடைக்கப் பெறாமல் இருந்தால், அவற்றின் விபரங்களை எப்படி அறிவது?* 
SMS ல் UID STATUS <14 digit EID> என டைப் செய்து 51969 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.*இலவச அழைப்பு எண்: 1800 300 1947 மூலம் போன் செய்யவும்.
*https://resident.uidai.net.in/check-aadhaar-statusஇணைய தளத்தில் பெறலாம்.*

3. தொலைக்கப்பட்ட ஆதார் அட்டையை திரும்பப் பெறுவது எப்படி?
http://eaadhaar.uidai.gov.in/என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

4. தொலைக்கப்பட்ட ஆதார் பதிவுச்சீட்டு (Enrolment Slip)பெறுவது எப்படி?
ஆதார் இணையதளமானhttps://resident.uidai.net.inஉள் செல்லவும். 
பின்னர் "find UID/EID" என்பதினை அழுத்தவும். 
ஆதார் பதிவின்போது அளிக்கப்பட்ட பெயர் மற்றும் கைபேசி எண்ணை பதிவு செய்து OTP (ஒரு முறை குறியீட்டு எண்) பெறவும். பெறப்பட்ட OTP எண்ணை இணையதளத்தில் பதிவு செய்யவும். பதிவான ஆதார் எண் / பதிவு எண்ணினை உங்கள் கைபேசியில் காணலாம்.

5. ஆதார் விவரங்களை திருத்தம் செய்வது (Updation) எப்படி?பெயர், விலாசம், பிறந்த தேதி மற்றும் கைபேசி எண்ணை திருத்தம் செய்ய ,* 
இணையதளமானhttps://resident.uidai.net.inஉள்சென்று செய்யலாம்.*
விண்ணப்பம் எழுதி அதனுடன், அதனை சார்ந்த அடையாள ஆவணத்தை கீழ்கணட UIDAI மண்டல அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பலாம். 
முகவரி:UIDAI,Post box No.:10,Chhindwara,Mathya Pradesh-480 001,INDIA .அல்லதுUIDAIPost Box No:99Banjara Hills,Hyderabad - 500 034,INDIA.மறக்காமல் அனைத்து ஆவணங்களிலும் தங்களது சுய கையொப்பம் இட்டு அனுப்பவும்.
Sponsored content

ஆதார் அட்டை Empty Re: ஆதார் அட்டை

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum