தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
காஷ்மீரில் இயேசுவின் கல்லறை உள்ளதா?  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

காஷ்மீரில் இயேசுவின் கல்லறை உள்ளதா?  Empty காஷ்மீரில் இயேசுவின் கல்லறை உள்ளதா?

Sat Mar 23, 2013 6:08 pm








(இயேசுக்கிறிஸ்துவைக்
குறித்து பலவிதமான கருத்துக்கள் பிறஇன, மத மக்களிடையே நிலவுகின்றன.
அவற்றுக்கு ஆதாரபூர்வமான பதில்களை கொடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
இக்கட்டுரையான காஷ்மீரில இயேசுவின் கல்லறை உள்ளதா? அகமதியா இயக்கதினர்
கூறுவது உண்மைதானா என்பதை தர்க்க ரீதியிலும் வரலாற்று ரீதியிலும்
ஆராய்கிறது)


இயேசுக்கிறிஸ்துவின் 12 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட அறியப்படாத
வாழ்வைப் பற்றி கதையெழுதியவர்கள், அவர் இஸ்ரேலில் தமது ஊழியத்தை
ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்தியாவிற்கு வந்து பௌத்த மற்றும் இந்து மத
நூல்களைக் கற்றதாக கற்பனை செய்துள்ளனர். இக்கதைகளில் இயேசுகிறிஸ்துவின்
வாழ்வு இஸ்ரேலிலேயே முற்றுப்பெறுகின்றது. ஆனால் சரித்திர ஆதாரமற்ற
நம்பமுடியாத பலவிதமான பிழைகளும் முரண்பாடுகளும் உள்ள இக்கதைகளையே
முரண்படுத்தும் வண்ணம் அகமதியா இயக்கத்தினரின் வர்ணனை உள்ளது.
இவ்வியக்கத்தின் ஆரம்பகர்த்தாவான மிர்ஸா குலாம் அஹமட் என்பார்
இயேசுக்கிறஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு இந்தியாவிற்கு
வரவேயில்லை என்று கூறுவதோடு “சிலுவையில் அறையப்பட்டு மயக்கமடைந்த இயேசு,
கல்லறைக்குள் சுயஉணர்வு பெற்று, பின்னர் காணாமற்போன இஸ்ரவேலரைத் தேடி
ஆப்கானிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் வந்தார். வயதுமுதிர்ந்தவராக மரணமடைந்த
அவருடைய கல்லறை இப்போது காஷ்மீரில் இருக்கிறது. என ஜீசன் இன் இன்டியா
எனும் நூலில் எழுதியுள்ளார். (Jesus in India by Mizra Ghula Ahamd)
இயேசுக்கிறிஸ்துப் பற்றி கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மத்தியில்
இருக்கும் தவறான கருத்துக்களை அகற்றுவதற்காகவே தனது நூலை
வெளியிட்டுள்ளதாகவும் மிர்ஸா குலாம் அஹமட் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் உருது மொழியில் எழுதப்பட்ட அவருடைய நூல் பிற்காலத்தில்
ஆங்கிலம, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


இயேசுக்கிறிஸ்துவின் இந்திய விஜயத்தை பற்றிய அகமதியா இயக்கதினரது கதையும்
சரித்திர ரீதியாக நம்பகமற்றது எனபதை அறிந்து கொள்வதற்கு அவ்வியக்கம்
எவ்வாறு உருவானது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இந்திய இஸ்லாமிய
மறுமலர்ச்சி இயக்கமாக தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அகமதியா இயக்கம்
Jesus in India எனும் நூலை எழுதிய மிர்ஸா குலாம் அஹமட் என்பாரிலேயே
ஆரம்பத்தைக் கொண்டுள்ளது. அல்லாஹ்விடமிருந்து பலவிதமான தெய்வீக
வெளிப்படுத்தல்கள் தமக்குக் கிடைத்தாக தெரிவித்த மிர்ஸா குலாம் அஹமட் 1880
இற்கும் 1884 இற்கும் இடைப்பட்ட காலத்தில் தனது மார்க்கக் கருத்துக்களை 4
புத்தகங்களில் வெளியிட்டார். இவை ஒரு புத்தகத்தின் நான்கு பகுதிகளாகும்).
இவை பாரம்பரிய இஸ்லாமியரிடம் அதிக வரவேற்பைப் பெற்றாலும் கூட அகமதியா
இயக்கத்தாரின் வித்துக்களை இதில் காணலாம். அதன் பின்னர் 1889 ஆம் ஆண்டு
மார்ச் மாதம் 4 ஆம் திகதி மதத்தலைவருக்குரிய மரியாதையை தன்
சீடர்களிடமிருந்து பெறுவதற்கும் அவர்கள் தனக்கு விசுவாசமாயிருப்பதற்கான
வாக்குறுதியைப் பெறுவதற்குமான தெய்வீக வெளிப்படுத்தல்கள் தனக்கு
கிடைத்துள்ளதாக மிர்ஸா குலாம் அஹமட் அறிவித்தார். இது பாரம்பரிய
இஸ்லாமிலிருந்து அகமதியா இக்கம் தனியானதொரு குழுவாகப் பிரிவதற்க
வழிவகுத்தது அதன்பின் அகமதியா இயக்கத்தினர் மிர்ஸா குலாம் அஹமட்டைத் தமது
இயக்கத்தின் தலைவராக ஏற்றுக் கொண்டனர். இவர் 1891 ஆம் ஆண்டு. தான்
வாக்களிக்கப்பட்ட “மசீஹ“ (மேசியா) என்றும் இஸ்லாமியர்கள் எதிர்பார்த்துக்
கொண்டிருக்கும் “மஹ்தி“ என்றும்அறிவித்தார். . இதன்காரணமாக இஸ்லாமும்
அகமதியா இயக்கமும் ஒன்றிணைக்கப்பட்ட முடியாதவாறு இரண்டாகப் பிரிவடைந்தன.


பாரம்பரிய இஸ்லாமிய நம்பிக்கையின்படி, வரவிருக்கும் மசீஹ் உம் மஹ்தியும்
இரு வேறுபட்ட நபர்கள். மசீஹ் என்பார் உலக முடிவில் பரலோகத்திலிருந்து வந்து
இஸ்லாமிய மாரக்கத்தை மக்களுக்கு அறிவிக்கும் ஈஸாநபி(இயேசு) ஆனால் மஹ்தி
என்பர் உலக முடிவில் ஈஸா நபிக்கு வருவதற்கு முன்பு உலகிற்கு வந்து
இஸ்லாமியர்களை அவர்களது விசுவாசத்திற்குள் கொண்டுவருவதோடு ஈஸாவுக்கு
எதிரானவர்களை அழிப்பவர். இந்த பாரம்பரிய இஸ்லாமிய நம்பிக்கை முரணாக, தான்
மசீஹ் ஆகவும் மஹ்தியாகவும் வந்தவர் என மிர்ஸா குலாம் அஹமட் கூறியமையால்
இவர் இஸ்லாமிய மறுமலர்ச்சி தலைவராகவல்ல மாறாக இஸ்லாமுக்கு எதிரியாகவே
வந்தவர் என்றே பெரும்பாலான இஸ்லாமியர்கள் எண்ணினர். அதேசமயம் அக்காலத்தில்
கிறிஸ்தவம் வளர்ச்சியடைந்து வந்தமையால், இந்தியர்களின் பார்வையில்
கிறிஸ்தவத்தை இழிவுபடுத்தவும் மிர்ஸா குலாம் அஹமட் முயற்சித்தார். இதனால்
இஸ்லாமியர்கள் மத்தியில் அதுவரை காலமும் ஈஸாநபியைப் பற்றி இருந்த
நம்பிக்கைகள் ஆதாரமற்றவை எனக் கூறத்தொடங்கினார். எனினும் மிர்ஸா குலாம்
அஹமட் தன்னை அல்லாஹ்வின் தீரக்கதரிசியாக அறிமுகப்படுத்தியமையினால் முஹம்மது
நபியே இறுதித் தீர்க்கதரிசி என நம்பிய பாரம்பரிய இஸ்லாமியர்கள் இவரைத் தம்
தீர்க்கதரிசியாக ஏற்கவில்லை.
மிர்ஸா குலாம் அஹமட் தன்னை அல்லாஹ்வின் இறுத்தீரக்கதரிசியாகவும்
இஸ்லாமியர்களுடைய எதிர்ப்பார்ப்பின்படி வந்துள்ள மெசியாகவும்
காண்பிப்பதற்காகவே இயேசுக்கிறிஸ்து இந்தியாவிற்கு வந்தார் என சொல்லத்
தொடங்கினார்.


பாரம்பரிய இஸ்லாமியர்கள் குர்ஆன் 3:157-158 அடிப்படையாக்க் கொண்டு
இயேசுக்கிறிஸ்து சிலுவையிலறையப்படவில்லை, என்றும் அல்லாஹ்வினால் அற்புதமான
முறையில் காப்பாற்றப்பட்டு அவர் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்
என்றும் நம்புகின்றனர். இவ்வாறு எடுத்துக் கொள்ளப்பட்ட ஈஸாநபி உலகமுடிவில்
மீண்டும் வருவார் என்பது பாரம்பரிய இஸ்லாமியர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
இஸ்லாமியர்களின் இந்த நம்பிக்க்கையும் எதிர்பார்ப்பும் தவறானது என்றும்
தானே வரவிருக்கும் மெசியா என்றும் காண்பிப்பதற்காகவே மிர்ஸா குலாம் அஹமட்
இயேசுக்கிறிஸ்துவை இந்தியாவிற்கு கொண்டுவந்து விட்டார். இவருடைய கதையின்படி
இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டாலும் அவர் சிலுவையில் மரணமடையவில்லை.
மாறாக அவர் மயங்கிய நிலையிலேயே சிலுவையில் இருந்துள்ளார். பின்னர்
கல்லறைக்குள் அவரது சரீரம் வைக்கப்பட்டபோது கல்லறையின் குளிர்ச்சியான நிலை
அவரது மயக்கத்தை தெளியவைத்துள்ளது. அதேசமயம் அவருடைய சீடர்கள் தேவனால்
தங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட மருந்தை உபயோகித்து, இயேசுக்கிறிஸ்துவைப்
பூரணமாக குணமாக்கினார்கள். நாற்பது நாட்களுக்குப் பின் காணாமற் போன
இஸ்ரேலியரின் பத்துக் கோத்திரங்களையும் தேடி கீழ்த்திசை செல்லும்
பிரயாணத்தை இயேசு கிறிஸ்து ஆரம்பித்தார். முதலில் ஆப்கானிஸ்தானிலும்
பின்னர் காஷ்மீரிலும் குடியிருந்த அவர் 120வது வயதில் மரணமடைந்தார்.
அவருடைய கல்லறை இன்றுவரை காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரிலுள்ள ஸ்ரீநகரிலுள்ள
கான்யா வீதியில் உள்ளது.


மிர்ஸா குலாம் அஹமட் எத்தகைய நோக்கத்துடன் இயேசுக்கிறிஸ்து இந்தியாவிற்கு
வந்தார் என கதையெழுதினார் என்பதை அறிந்துகொண்டால் அவரது கதை வெறும்
கற்பனைக் கதை என்பதை அறிந்து கொள்வதற்கு அதிக நேரம் எடுக்காது. இஸ்லாமிய
மக்கள் மற்றும் கிறிஸ்தவ மக்களின் எதிர்பார்ப்பின்படி உலகமுடிவில்
வரவிருக்கும் மெசியாவாக தான் வந்துள்ளதை காண்பிப்பதற்காகவே அவர் இவ்வாறு
கதையை எழுதியுள்ளார். இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இயேசுக்கிறிஸ்து
பரலோகத்தில் இருக்கிறார் என நம்பிக்கொண்டிருந்தால் அவர்கள் அவரையே
எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று கருதிய மிர்ஸா குலாம் அஹமட் அவர்
பரலோகத்திற்குச் செல்லவில்லை. அவர் இந்தியாவிற்கு வந்துவிட்டார்.. இதோ
அவருடைய கல்லறை காஷ்மீரில் இருக்கிறது. எனவே அவர் பரலோகத்திலிருந்து வர
முடியாது. என தெரிவித்த மிர்ஸா குலாம் அஹமட் இயேசுக்கிறிஸ்து மீண்டும்
வரமாட்டார். அவருடைய தன்மைகளுடைய ஒருவரே வருவார். அவ்வாறு அவருடைய
ஆவியிலும் தன்மையிலும் இதோ நானே வந்திருக்கிற்றேன் என அறிவித்துள்ளார்.
“இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகைப் பற்றிய தீர்க்கதரிசனத்தின்படி
தோன்றியவரே மிர்ஸா குலாம் அஹமட் என்பதே அகமதியர்களின் நம்பிக்கையாகும்.
எனவே தன்னை வாக்களிக்கப்பட்ட மெசியாவாக காண்பிப்பதற்காகவே மிர்ஸா குலாம்
அஹமட் இயேசுக்கிறிஸ்து இந்தியாவிற்கு வந்துவிட்டார் என கூறியுள்ளமை அவரது
கதை கற்பனையிலுருவானது . அதில் எவ்வித உண்மையும் இல்லை என்பது
உறுதியாகின்றது.


இயேசுக்கிறிஸ்து இந்தியாவிற்கு வந்த்தைப்பற்றி மிர்ஸா குலாம் அஹமட் எழுதிய
கதை அவரது கற்பனையில் உருவானதாயிருக்க இயேசுவின் கல்லறை எப்படி காஷ்மீரில்
இருக்கமுடியும் என்று நாம் கேட்கலாம். மிர்ஸா குலாம் அஹமட் தனக்கு
அற்புதமான முறையில் இயேசுக்கிறிஸ்துவின் கல்லறை வெளிப்படுத்தப்பட்டதாகக்
குறிப்பிட்டுள்ளார். வாக்களிக்கப்பட்ட மெசியாவான மிர்ஸா குலாம் அஹமட்டினால்
இயேசுக்கிறிஸ்துவின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது என்பது பற்றி என்று
அகமதியா இயக்கத்தினர் நம்புகின்றனர். எனினும் மிர்ஸா குலாம் அஹமட்
கண்டுபிடித்த கல்லறை இயேசுக்கிறிஸ்துவினுடையதல்ல. ஏனென்றால் அதில் “யூஸ்
ஆசாப்“ என்னும் பெயரே உள்ளது என்றும் காஷ்மீரிலிருந்தவர்கள்
இயேசுக்கிறிஸ்துவையே “யூஸ் அசாப்“ என்று அழைத்தனர் என்று அகமதியா
இயக்கதினர் தர்க்கிக்கின்றனர். யூஸ் அசாப் என்பவர் வெளிநாட்டிலிருந்து வந்த
ஒரு தீரக்கதரிசி எனும் நம்பிக்கை காஷ்மீர் மக்கள் மத்தியல்
இருக்கின்றமையால், அத்தீரக்கதரிசி இயேசுக்கிறிஸ்துவே என அகமதியா
இயக்கத்தினர் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. மிர்ஸா குலாம் அஹமடே வரவிருக்கும்
இயேசுக்கிறிஸ்துவாக வந்துள்ளார் என்பதை நிரூபிப்பதற்காக எவரோ ஒருவருடைய
கல்லறையை இயேசுக்கிறிஸ்துவினுடையதாக கூறும் கதையை பக்கச்சார்பற்ற நிலையில்
சிந்திக்கும் எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. மிர்ஸா குலாம் அஹமட் தானே
வரவிருக்கும் மெசியா என்பதை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றும்
இயேசுக்கிறிஸ்துவாக வந்திருப்பவர் நானே என்று கூறிக்கொள்ளும் பலர்
இருக்கிறார்கள். இவர்கள் தாங்களை மார்க்கத் தலைவர்களாக காண்பித்து தம்மை
மக்கள் பின்பற்ற வேண்டும் என எதிர்பாரக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர்
தான் மிர்ஸா குலாம் அஹமட் தான் மெசியாவான கிறிஸ்து என்பதைக்
காண்பிப்பதற்காக இவர் இயேசுக்கிறிஸ்துவைப்பற்றிய கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய
மதநூல்களில் உள்ள சரித்திரம் நம்பகமற்றது என்று கூறுகின்றனர். இதனால்
இயேசுக்கிறிஸ்து இந்தியாவிற்கு வந்தார் என்ற கதையை எவ்விதத்திலும் நம்ப
முடியாதுள்ளது.

நன்றி : கிறிஸ்தியல் வெளியீடு : இலங்கை வேதாகம கல்லூரி மற்றும் பரலோகப் பாதை
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum