தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
லைஃப் ஸ்டைல் வலிகள்... Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

லைஃப் ஸ்டைல் வலிகள்... Empty லைஃப் ஸ்டைல் வலிகள்...

Thu Aug 25, 2016 4:25 pm
தீர்க்கும் வழிகள்

சித்தராஞ்சன்
எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை நிபுணர்
லைஃப் ஸ்டைல் வலிகள்... P42fர்க்கரை நோய், இதய நோய்களை லைஃப் ஸ்டைல் நோய்கள் என்கிறது மருத்துவம். வாழ்க்கை முறை மாற்றத்தினால் நாமே வரவழைத்துக்கொண்ட நோய்கள் இவை. கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி என உடலில் வரும் வலிகளுக்கும், வாழ்க்கை முறை மாற்றமே காரணம். மேலும், தவறான முறையில் படுத்து உறங்குவது, உடலுக்கு வசதி இல்லாத நிலையில் அமர்வது என நாமேதான் வலிகளை வரவழைத்துக்கொள்கிறோம். நம் உடலின் அசைவுகளை கவனித்து, முறைப்படுத்துவதன் மூலம்,   வலிகளில் இருந்து மீண்டு, ஆரோக்கியதோடும் இயங்க முடியும்.
லைஃப் ஸ்டைல் வலிகள்... P42g
உறங்கும் நிலை
லைஃப் ஸ்டைல் வலிகள்... P42d
தலைக்குத் தலையணைத் தேவை இல்லை, கழுத்துக்குத்தான் தேவை. கழுத்து வலி இருப்பவர்கள், உறங்கும் நிலையையும், தலையணையையும் ஒருமுறை கண்காணித்துப் பாருங்கள். பின், கழுத்து வலி ஏன் வருகிறது என்று புரியும். தூங்கும் முன்பு, சரியான நிலை எது என்று கவனித்துப்படுக்கலாம். தூங்கிய பின், நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பது நினைவில் வராது. எனவே, தூங்கும் முன் சரியான நிலையில் உறங்கச் செல்வது நல்லது. இதனால், கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி போன்றவற்றைத் தவிர்க்க முடியும்.
வலிகளை தவிர்த்திட
உடலுக்கும் மனதுக்கும் ஒய்வு அவசியம். மாதத்தில் மூன்று நாட்களாவது ஒய்வு எடுப்பது அவசியம்.
லைஃப் ஸ்டைல் வலிகள்... P42e
சரியான தூங்கும் முறை
லைஃப் ஸ்டைல் வலிகள்... Red_Dot(3) நாம் நேராகவும், ஒரு பக்கமாகவும் படுக்கும்போது, கழுத்துக்கும் தலைக்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதற்காகத்தான் தலையணையை வைத்துக்கொள்ள வேண்டும்.
லைஃப் ஸ்டைல் வலிகள்... Red_Dot(3) வாயுத் தொல்லை, நெஞ்சு எரிச்சல் பிரச்னை இருப்பவர்கள், குப்புறப் படுக்கக்கூடாது. வயிறு அழுத்தப்படுவதால், பிரச்னை மேலும் அதிகமாகும்.
லைஃப் ஸ்டைல் வலிகள்... Red_Dot(3) மிகத் தடிமனான, கடினமான தலையணையைப் பயன்படுத்தக் கூடாது. மெலிதான மற்றும் மென்மையான தலையணையே பயன்படுத்த வேண்டும்.
லைஃப் ஸ்டைல் வலிகள்... Red_Dot(3) கால் வலிக்காக, காலுக்கு கீழ் தலையணையை வைத்துப் படுப்பதில் தவறு இல்லை. ஆனால், எப்போதும் கால் பகுதி உயர்வாகவும், தலைப்பகுதி தாழ்வாகவும் இருக்கும்படி படுப்பது சரி அல்ல. சமநிலையில் படுப்பதே சரியானது.
லைஃப் ஸ்டைல் வலிகள்... Red_Dot(3) கீழே  படுத்துக்கொண்டிருக்கும் போது, மேஜையிலோ கட்டிலிலோ, மேலே கால் தூக்கி வைத்தவாறு படுக்கக்கூடாது. இது ரத்த ஒட்டத்தைப் பாதிக்கும். ஒரு பக்கமாக படுத்து உறங்குவது, மல்லார்ந்துப் படுத்து உறங்குவது சரியானது.
லைஃப் ஸ்டைல் வலிகள்... Red_Dot(3) மிக மிருதுவான, உடலை உள்ளே அழுத்தியவாறு இருக்கும் மெத்தை மற்றும் கடினமான மெத்தையைத் தவிர்க்க வேண்டும். படுத்தாலும் உடலை உள்ளே அழுத்தாத, சற்று மென்மையான மெத்தையில் படுப்பது சரி.
உட்காரும் நிலை
லைஃப் ஸ்டைல் வலிகள்... P42c
 
 
நாற்காலியில் அமரும் முறை
லைஃப் ஸ்டைல் வலிகள்... Red_Dot(3) முதுகுத் தண்டு சவ்வு, நரம்புகள், சதை ஆகியவை ஒன்றோடு ஒன்று சார்ந்தவை. எனவே, உட்காரும் நிலை தவறாக இருந்தாலோ, நீண்ட நேரம் கைகளைத் தொங்கவிட்டபடி அமர்ந்தாலோ, கைவலி வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
லைஃப் ஸ்டைல் வலிகள்... Red_Dot(3) முதுகு, இடுப்பு, கழுத்து ஆகியவை, செங்குத்தாக (90 டிகிரி) இருப்பது போல் நேராக உட்கார வேண்டும்.
லைஃப் ஸ்டைல் வலிகள்... Red_Dot(3) முதுகின் கீழ் பகுதி, நாற்காலியில் சாய்ந்தபடி இருக்க வேண்டும். அதேபோல, கைகளை நாற்காலியின் பிடிமானத்தின் மேல் வைத்து உட்கார வேண்டும்.
லைஃப் ஸ்டைல் வலிகள்... Red_Dot(3) கம்ப்யூட்டர் முன் உட்காரும் போது, கழுத்தும் கணினியின் திரையும் நேராக இருக்க வேண்டும்.
லைஃப் ஸ்டைல் வலிகள்... Red_Dot(3) நீண்ட தூரம் வாகனம் ஒட்டுபவர்களுக்கு, முதுகு எலும்புச் சவ்வுத் தட்டின் மேல் அதிகமான அழுத்தம் கொடுக்கப்பட்டு, முதுகு வலி வரும். வீக்கம்கூட வரலாம். முதலில் அழுத்தம் ஏற்பட்டு, பின்பு சதை இறுகி, வலி ஏற்படலாம்.
லைஃப் ஸ்டைல் வலிகள்... Red_Dot(3) ஒரு மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்த பின், இறங்குபவர்  முதுகு, கை, கால், கழுத்து ஆகியவற்றை வளைத்து (Stretch) எழுந்திருப்பது நல்லது. இதனால், தசைகள் தளர்வடைந்து வலி ஏற்படாது.
அலுவலகத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும் போது, சின்ன சின்ன
அசைவுகள் மூலம் நம் உடலைப் பாதுகாக்கலாம்.
லைஃப் ஸ்டைல் வலிகள்... P42a
உணவில் உஷார்
லைஃப் ஸ்டைல் வலிகள்... P42b
லைஃப் ஸ்டைல் வலிகள்... Red_Dot(3) புரதம் மற்றும் கொழுப்பு உணவுகளை அளவாகச் சாப்பிட வேண்டும். புரோட்டீன் பவுடர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
லைஃப் ஸ்டைல் வலிகள்... Red_Dot(3) எப்போதும் சரிவிகித உணவையே பின்பற்றுதல் நல்லது.
லைஃப் ஸ்டைல் வலிகள்... Red_Dot(3) போதுமான அளவு, தண்ணீர் அருந்த வேண்டும்.
லைஃப் ஸ்டைல் வலிகள்... Red_Dot(3) மதுப் பழக்கமும், புகைப் பழக்கமும் எலும்புகளின் அடர்த்தியைக் குறைத்துவிடும். அதேபோல, கோலா வகை குளிர் பானங்களும் எலும்புகளின் உறுதியைக் குறைக்கும். 
கால்சியம் நிறைந்த உணவுகளான கேழ்வரகு, சுண்டல், பால், முட்டை, மீன், பச்சை நிறக் காய்கறிகள் மற்றும் பழங்கள், முள்ளங்கி போன்றவற்றைச் சாப்பிடலாம்.

- ப்ரீத்தி
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum