தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஜி.எஸ்.டி  வரி என்றால் என்ன? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஜி.எஸ்.டி  வரி என்றால் என்ன? Empty ஜி.எஸ்.டி வரி என்றால் என்ன?

Thu Aug 04, 2016 9:34 am
நம் நாட்டில் ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்பனைக்குக் கொண்டுவர பல்வேறு வரிகளை மத்திய, மாநில அரசுகளுக்குச் செலுத்த வேண்டியுள்ளது. அதாவது விற்பனை வரி, சேவை வரி, உற்பத்தி வரி, நுழைவு வரி, கலால் வரி போன்ற பல்வேறு வரிகள் உள்ளன. இதைத் தவிர்த்து, கல்வித் தீர்வை (Cess), சர்சார்ஜ் என்பது இருக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாதிரியான வரி விதிப்பு இருக்கும். இதையெல்லாம் தவிர்த்து அனைத்துக்கும் சேர்த்து ஒரு வரி என்பதுதான் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி (Goods and Services Tax). இந்த வரி விதிப்பு முறையை நடைமுறைக்குக் கொண்டுவருவதால், பல்வேறு நன்மைகள் ஏற்படும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
ஜி.எஸ்.டி  வரி என்றால் என்ன? P26a
ஜிஎஸ்டி அமலுக்கு வரும்போது எந்த வகையில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பது குறித்து வரி ஆலோசகரான வைத்தீஸ்வரனிடம் கேட்டோம். விரிவாக எடுத்துச் சொன்னார் அவர்.
ஜிஎஸ்டி ஏன் தேவை?
‘‘மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பல்வேறு வரிகளைச் செலுத்தும் தொகையின் அளவானது உற்பத்தி செலவைவிட அதிகமாக உள்ளது. இப்படி அதிகமாகச் செலுத்தும் வரித் தொகை உற்பத்தி பொருளின் விலையில் சேர்க்கப்படுகிறது. இதனால் அதிகமாகப் பாதிக்கப்படுவது நுகர்வோர்தான். இதுமட்டும் இல்லாமல் வரிக்கு வரி செலுத்த வேண்டிய சூழ்நிலையும் உருவாகிறது.
ஜி.எஸ்.டி  வரி என்றால் என்ன? P26b
உதாரணமாக, காரின் உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு முக்கிய மூலப்பொருள் இரும்பு ஆகும். இதை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து வாங்கும்போது சிஎஸ்டி (Central Sales Tax) வரி செலுத்த வேண்டும். உற்பத்தி செய்த பொருளை மீண்டும் வேறு மாநிலத்துக்கு அனுப்பும் போதும் சிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருக்கும். அந்த உதிரிப் பாகங்களை பயன்படுத்தி, கார் தயாரித்து அதை மீண்டும் தமிழகத்துக்கே அனுப்பும்போது மீண்டும் சிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். இந்த சிஎஸ்டி வரிக்கு கிரெடிட் பெற முடியாது. எனவே, இந்த வரித் தொகை முழுவதும் உற்பத்திப் பொருளின் விலையில் சேர்க்கப்படும். இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு ஜிஎஸ்டிதான். அனைவருக்கும் ஒரேவிதமான வரி விகிதம்தான் இருக்கும். ஜிஎஸ்டியில் 17 - 18% வரை வரி விதிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சி எந்த வகையில் உதவும்?
தற்போது பலவிதமான வரிகள் இருப்பதால், ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக அரசு துறைகள் செயல்பட வேண்டி உள்ளது. இந்த துறைகளுக்கிடையே தகவல்கள் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் நிறுவனங் களும் பல்வேறு வரி விதிப்பு இருப்பதால், பல சிக்கல்களைச் சந்திக்கிறது.
ஜிஎஸ்டி அமல் படுத்தும்போது கறுப்புப் பணம் குறையும். முறையான வரி செலுத் தாமல் சிறிய, நடுத்தர அளவில் தொழில் செய் பவர்கள் முறையாக வரி செலுத்தி தொழில் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாட்டின் வருமானம் அதிகரிக்கும். அதுவும் தவிர, முறையாக வரி செலுத்தி தொழில் செய்யும்போது அவர்களின் வருமானம் எவ்வளவு என்பது தெரிந்துவிடும். இதனால் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். வரித் தொகை அதிகரிக்கும்போது நாட்டின் வளர்ச்சிப் பணிகளை வேகமாக செய்ய முடியும். மதிப்பு கூட்டு வரி  (VAT) வந்த பிறகு நிறைய  நிறுவனங்கள் பல மாநிலங்களில் கிடங்குகளை திறக்கும் சூழ்நிலை உருவானது. ஜிஎஸ்டி வரும்போது இந்தக் கிடங்குகளின் தேவை இருக்காது. தொழிலுக்குத் தேவையான கிடங்குகள் மட்டுமே இருக்கும்.  இதனாலும் நிறுவனங்களின் செலவு வெகுவாகக் குறையும். 
யாருக்குப் பயன்?
ஒற்றை வரி விதிப்பு முறையின் காரணமாக உற்பத்தி செய்யும் பொருளின் விலைகள் வெகுவாகக்ஜி.எஸ்.டி  வரி என்றால் என்ன? P26c குறையும். ஆனால், அதே நேரத்தில் சேவைகளாக பெறும் வசதிகளுக்கான செலவு அதிகரிக்கும். அதாவது, செல்போன், பொழுதுபோக்கு, இன்டர்நெட், இன்ஷூரன்ஸ் பிரீமியம், ஹோட்டல், ஆலோசனை, போக்குவரத்து, ஏஎம்சி, கட்டுமானம், அழகு நிலையம், தீம் பார்க், கல்விக் கட்டணம் போன்ற சேவைகளுக்கான வரி விதிப்பு அதிகரிக்கும். தற்போது இதற்கு 14.5% செலுத்துகிறோம். ஜிஎஸ்டியில் 17 - 18% வரி இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதனால் தனிநபரின் செலவு அதிகரிக்கும்.
பென்ஷன் வாங்குபவர்கள், ஓய்வு பெற்றவர்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் அதிகம் பாதிக்கப் படுவார்கள். ஏனெனில் இவர்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்பில்லை. இவர்களின் தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கு அதிகமான சேவைகள் தேவைப்படும். அதாவது, ஹோட்டல் சாப்பாடு, இன்ஷூரன்ஸ் பிரீமியம், செல்போன் பில், போக்குவரத்துக்கு வாடகை கார்களை பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கும். இது அனைத்துமே விலை உயர வாய்ப்புள்ளது. இதனால் வருமானம் ஈட்ட முடியாத நிலையில் இருக்கும் முதியோர்களின் செலவும் அதிகரிக்கும். 
உடனடியாக விலை குறையாது!
சிஜிஎஸ்டி (Central GST), எஸ்ஜிஎஸ்டி (State GST), ஐஜிஎஸ்டி (Integrated GST) என மூன்று வகைகளில் ஜிஎஸ்டி வரி விதிப்பு பிரிக்கப்படும். இந்த வரி விதிப்பு முறையினால் உடனடியாக பொருள்களின் விலை குறைவதற்கான வாய்ப்பு குறைவு. ஜிஎஸ்டி அமல்படுத்தியபிறகு ஒரு வருடத்துக்குப் பணவீக்க விகிதம் அதிகரிக்கவே செய்யும். அதன்பிறகு கொஞ்சமாகப் பொருட்களின் விலை குறைந்து, பணவீக்க விகிதமும் குறைந்துவிடும்.
ஜி.எஸ்.டி  வரி என்றால் என்ன? P26e
மாநில அரசுகளின் வருமானம்?
ஜி.எஸ்.டி  வரி என்றால் என்ன? P26dஅரசின் முக்கிய வருமானம் வரி விதிப்பின் மூலமாகத்தான் கிடைக்கிறது. மாநில அரசு வரியை நம்பிதான் இருக்கிறது. தற்போது சேவை வரி 15%, விற்பனை வரி, வாட் வரியின் மூலமாக மாநில அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. ஜிஎஸ்டி அமல்படுத்தும்போது இந்த வரி வருமானம் குறைய வாய்ப்புள்ளது. அதாவது, ஜிஎஸ்டியில் 18% என வரி விதிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அதில் மத்திய அரசு 10%, மாநில அரசு 8% என வருமானத்தை பிரித்துக் கொள்கிறது என்று வைத்துக் கொள்வோம். தற்போது மாநில அரசுக்கு 14.5% - 15% வரை வருமானம் கிடைக்கிறது. இந்த வருமான இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வருமான இழப்பை சரிக்கட்டும் வகையில் குறிப்பிட்ட அளவு தொகையை வழங்கும். அதே சமயத்தில், முதன் முதலாக மாநிலங்களும் சேவைக்கான ஜிஎஸ்டி மூலமாக அதிக வருமானத்தை ஈட்ட வாய்ப்புள்ளது. ஜிஎஸ்டியின் பாதிப்பு அல்லது பயன் மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசப்படும். பொதுவாக, உற்பத்தி அதிகம் இருக்கும் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வருவாய் குறைவாக இருக்கும். அதிக நுகர்வு இருக்கும் மாநிலங்களில் ஜிஎஸ்டி மூலமாக அதிக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த ஜிஎஸ்டியில் மதுபானங்கள், புகையிலை ஆகிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி இருக்காது. ஆனால், இந்தப் பொருட்களுக்கு வேறு  வரி விதிப்பு அதிகமாக இருக்கும்.  பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக் குள் இல்லை. இவற்றுக்கும் வேறு வகையான வரி விதிப்பு இருக்கும். தற்போதைய நிலையில் எந்தப் பொருட்களுக்கு எல்லாம் வரி இல்லையோ, அவற்றில் சிலவற்றுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.   காய்கறிகள், பால், தயிர், பழங்கள் போன்றவற்றுக்கும் இந்த வரி விதிப்பும் இருக்காது. பெட்ரோல், டீசலுக்கான வரி விதிப்பு மாநில அரசுகளிடம்தான் இருக்கும்.’’ என்றார்.
ஜி.எஸ்.டி  வரி என்றால் என்ன? P26f
ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தபிறகு பொருட்களின் உற்பத்தி செலவு குறையும். இதனால் நம்மால் பலவிதமான பொருட்களை வாங்கும் நிலை உருவாகும். நிறுவனங்களின் லாபம் கூடினால் அது முதலீடாக மாறும். இதனால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படக் கூடிய நிலை உருவாகும்.
 
இரா.ரூபாவதி படம்: கா.முரளி.
(2015, டிசம்பர் 20 -  நாணயம் விகடனில் வெளியான கட்டுரை)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஜி.எஸ்.டி  வரி என்றால் என்ன? Empty Re: ஜி.எஸ்.டி வரி என்றால் என்ன?

Thu Aug 04, 2016 12:15 pm
ஜிஎஸ்டி மசோதா சாமானிய மக்களை எவ்வாறு பாதிக்கும்?

சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நடைமுறைக்குவந்தால், கட்டுமான பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது. அதேவேளையில், மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்படும்.


தொலைக்காட்சி, வாஷிங்மெஷின் உள்ளிட்டவற்றுக்கான தற்போதைய வரி 24 முதல் 25 சதவிகிதத்தில் இருந்து 17 முதல் 18 சதவிகிதமாக குறைகிறது. 


கட்டுமானப் பொருட்களுக்கான வரி 24 முதல் 25 சதவிகிதத்தில் இருந்து 17 முதல் 18 சதவிகிதமாக குறைய வாய்ப்புள்ளது. 
24 முதல் 25 சதவிகிதமாக இருக்கும் மரப் பொருட்களுக்கான வரி, 17 முதல்18 சதவிகிதமாக ஆக குறையும்.


பிஸ்கட் மற்றும் கேக் ஆகியவற்றிற்கான‌ வரியும் 24 முதல் 25 சதவிகிதத்தில் இருந்து 17 முதல் 18 சதவிகிதமாக குறைகிறது.
 
மருந்து பொருட்களின் வரி 5 சதவிகிதத்தில் இருந்து இரண்டு மடங்குக்கு மேலாக அதிகரித்து 12 சதவிகிதமாக இருக்கும். 


செல்போன்களின் வரி 5 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக உயர்ந்திருக்கும்.


 30 முதல் 40 சதவிகிதமாக ஆக உள்ள விடுதி மற்றும் ஆடம்பர கார்களின் வரி 40 சதவிகிதம‌க அதிகரிக்கும். 


தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்களின் வரி 2 சதவிகிதத்திலிருந்து 5 முதல் 6 சதவிகிதமாக உயர்கிறது. 


அதேவேளையில் கட்டுமானத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் வரி 12 முதல் 15 சதவிகிதத்திலிருந்து 12 சதவிதமாக விலை மாறாமல் நிலையானதாக இருக்க வாய்ப்புள்ளது.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஜி.எஸ்.டி  வரி என்றால் என்ன? Empty Re: ஜி.எஸ்.டி வரி என்றால் என்ன?

Thu Aug 04, 2016 8:25 pm
ஜிஎஸ்டி எனப்படும் ஒரே சீரான வரி விதிப்பான, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த ஜிஎஸ்டி எப்படி செயல்படப்போகிறது என்பதற்கான விளக்கப்படம்.
ஜி.எஸ்.டி  வரி என்றால் என்ன? Gst
 ஜி.எஸ்.டி  வரி என்றால் என்ன? Gst
 
ஜி.எஸ்.டி  வரி என்றால் என்ன? Gst2
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஜி.எஸ்.டி  வரி என்றால் என்ன? Empty Re: ஜி.எஸ்.டி வரி என்றால் என்ன?

Wed Aug 17, 2016 2:19 pm
ஜி.எஸ்.டி. மசோதா என்றால் என்ன? - அனுபமா குப்தா


கடந்த வாரம் தொடங்கிய மழைக்கால பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், மீண்டும் ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி ) மசோதாவை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியுள்ள நிலையில் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால், ஜி.எஸ்.டி. மசோதா பற்றிய எதிர்பார்ப்பு நாடு முழுக்க இருந்தாலும் ஜி.எஸ்.டி. மசோதா என்றால் என்ன என்று பலருக்கும் தெரிவதில்லை.


ஜி.எஸ்.டி. மசோதா என்பது, மறைமுக வரி விதிப்பைச் சீர்படுத்தி, இந்தியா முழுவதும் ஒரேமாதிரியான வரி விதிப்பு முறையை அமல்படுத்துவதாகும். இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் எளிமையாகும். ஆனால், இந்தத் திட்டத்தை அமல்படுத்த மிக நீண்ட பாதையைக் கடக்க வேண்டியிருக்கிறது. இப்படியிருக்கும் சூழலில், ஜி.எஸ்.டி. மசோதா கடந்து வந்த பாதையையும், அதில் இருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதையும் இங்கே பார்க்கலாம்.


சரக்கு மற்றும் சேவை வரி - பல வரிகளுக்குப் பதிலாக ஒரே வரி!


உள்நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களைச் சந்தையில் விற்கும்போது அதன்மீது கலால் வரி, சேவை வரி, அந்தப் பொருட்களை வர்த்தகத்துக்காக மற்றொரு மாநிலத்துக்குக் கொண்டு செல்லும்போது செலுத்தும் நுழைவு வரி, மதிப்புக் கூட்டு வரி என பல வரிகள் விதிக்கப்படுகின்றன. அதேபோல, பொருட்களை இறக்குமதி செய்தால், அவற்றின்மீது சுங்க வரி விதிக்கப்படுகிறது. இதுபோல் ஒவ்வொரு மாநிலமும் உற்பத்தி செய்யும் பொருட்கள்மீதும், இறக்குமதி செய்யும் பொருட்களின்மீதும் வரி மேல் வரி விதித்து வரிக் கட்டமைப்பை சீர்குலைப்பதாலும், இது பொதுமக்களுக்கு வரிச் சுமையை ஏற்படுத்துவதாலும், இது பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகள் ஏற்படுத்துவதால் அனைத்து மறைமுக வரியையும் ஒரே வரியாக்க வேண்டும் என்பதே இந்த மசோதாவின் நோக்கமாகும்.


மக்களின்மீது சுமத்தப்படும் நேர்முக வரியை அரசாங்கம் நேரடியாகவே வசூலிக்கிறது. உதாரணத்துக்கு, நாம் செலுத்தும் வருமான வரியும் இந்த நேர்முக வரிகளில் ஒன்றுதான். இந்தியாவில் மிகப்பெரிய மறைமுக வரிகளாக இருக்கும் கலால் மற்றும் கடமை வரிகளுக்குப் பதிலாக இந்த சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படவுள்ளது. அதேபோல, மாநில அளவில் வசூலிக்கப்படும் மறைமுக வரிகளான விற்பனை வரி மற்றும் நுழைவு வரிகளுக்குப் பதிலாகவும் இந்த சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படவுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் பெட்ரோல் மற்றும் புகையிலை போன்ற பொருட்களுக்கு அதிகளவில் இந்த வரிகளால் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


இந்த மறைமுக வரிகளுக்குப் பதிலாக ஜி.எஸ்.டி. மசோதாவை அமல்படுத்துவதன்மூலம் வரி விதிப்பு முறை எளிமையாக்கப்படும்.


இந்த வரியை அமல்படுத்துவதன் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அதிகளவில் வருமான இழப்புகள் ஏற்படும். இதனால் இந்த ஜி.எஸ்.டி. மசோதாவின்கீழ் விதிக்கப்படும் வரிவிதிப்பு விகிதங்களின் அளவை தீர்மானிக்க மூத்த பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. 15 முதல் 15.5 சதவிகிதம் வரை வரி வசூலிக்கலாம் என்று இக்குழு பரிந்துரைத்தது. ஆனால், இதன் இறுதி முடிவை மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் கொண்ட ஜி.எஸ்.டி. குழுதான் எடுக்கும்.


ஜி.எஸ்.டி. மசோதா கடந்துவந்த பாதை


இந்த ஜி.எஸ்.டி. மசோதாவின் வரலாறு 10 வருடங்களுக்கு முன்பு செல்கிறது. அதாவது, கடந்த 2006ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தநேரத்தில், அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, இந்த சரக்கு மற்றும் சேவை வரியை ஏப்ரல் 1, 2010ஆம் ஆண்டு முதல் அமல்படுத்த அவர் முன்மொழிந்தார். அதிலிருந்து கடந்த ஆண்டு மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டவரை இந்த மசோதா மிகப்பெரிய பாதையைக் கடந்து வந்துள்ளது. பெட்ரோல் மற்றும் புகையிலை போன்ற பொருட்களுக்கு மாநில அரசு நுழைவு மற்றும் சேவை வரி வசூலிக்கிறது. ஆனால், இந்த மசோதாவில் இவ்விரண்டு வரிகளும் மாநில அரசிடமிருந்து பறிக்கப்படும். எனவே, மாநில அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்படும்.


பெட்ரோல் மற்றும் புகையிலை போன்ற பொருட்களை இந்த மசோதாவில் சேர்ப்பதன்மூலம் மாநில அரசுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே, இந்த வரியில் எந்தெந்த பொருட்களைச் சேர்ப்பது? மற்றும் அனைத்து மறைமுக வரிகளையும் ஒரே வரியாக வசூலிப்பதால் மாநில அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை எப்படிச் சரிசெய்வது? போன்ற விஷயங்களில் அனைவரிடமும் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால், இந்த மசோதாவை நிறைவேற்ற கால தாமதம் ஆனாது. அதன்பின்னர், 2015ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்தத் திட்டத்தை மாநிலங்களவையில் நிறைவேற்ற பி.ஜே.பி. அரசு எதிர்க்கட்சியின் கருத்தை கேட்டு வருகிறது. இதனால், இந்தத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அண்மையில் பிரதமர் மோடி இந்த மசோதாவைப்பற்றி கருத்து தெரிவித்தார். அதில், "இந்த மசோதாவை எதிர்த்து எந்த அரசியல் கட்சியும் தற்கொலை செய்துகொள்ளாது என்று நினைக்கிறேன்" என்றார்


இந்த மசோதா கடக்கவேண்டிய பாதை


இந்த மசோதாவை நிறைவேற்ற பல கட்டங்களைத் தாண்ட வேண்டியிருக்கிறது. முதலில் மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். பாராளுமன்றக் கூட்டத்தை ஒத்திவைப்பதும், எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபடுவதும் இந்த மசோதவை நிறைவேற்ற மேலும் கால தாமதமாக்கும். மேலும், இந்த மசோதாவுக்கு குறைந்தது 15 மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களில் ஒப்புதல் பெறவேண்டும். இதன்பிறகு, இந்த மசோதாவை அமல்படுத்த குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரவேண்டும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு 60 நாட்கள் கழித்து ஜி.எஸ்.டி. குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் அனைத்து மாநிலப் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அதிகாரிகளும் இடம்பெறுவார்கள். பிறகு, இந்த மசோதாவை அமல்படுத்த அதற்கான வடிவமைப்பையும், சட்டங்களையும் இந்தக் குழு பரிந்துரைக்கும். எந்தெந்தப் பிரிவுக்கான பொருட்கள் மறைமுக வரிகளின் கீழ் வகுக்கப்படும் என்பதைத் தீர்மானிக்க சில காலம் ஏற்படும். இதுபோன்ற நடவடிக்கைகளை தாண்டிவர வேண்டியிருப்பதால், இந்த மசோதாவை அமல்படுத்த இன்னும் ஓர் ஆண்டு தேவைப்படும். ஆனால், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் வரிவிதிப்பு முறையில் அர்த்தமுள்ள மாற்றத்தைக் காணமுடியும்.


ஜி.எஸ்.டி. மசோதாவால் ஏற்படப்போகும் விளைவு


1994ஆம் ஆண்டு சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், வரி விதிப்புக்கு உட்படாத பல்வேறு சேவைகள் அனைத்தும் வரி நிர்வாகத்தின்கீழ் கொண்டு வரப்பட்டது. அதேபோல, மறைமுக வரிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரு பொதுவான வரி முறையை அமல்படுத்த வேண்டிய காலகட்டத்தில் இந்தியா தற்போது உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் எண்ணற்ற மற்றும் சிக்கலான மறைமுக வரிகளை நீக்கி, இந்த சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவதன்மூலம் வரி நிர்வாகம் மிகவும் எளிமையாக்கப்படும். வெளிப்படையான வரிவிதிப்பு முறையால் நுகர்வோர்கள் பயனடைவார்கள். மேலும், உற்பத்தியாளர்கள் வரியை எளிதாகக் கட்டவும், நிர்வாகம் செய்யவும் இந்த மசோதா உதவும்.


இந்த மசோதா அமலுக்கு வந்தாலும் ஓர் இரவிலோ அல்லது ஒரு வருடத்திலோ எந்த மாற்றத்தையும் காண முடியாது. இதனால் ஏற்படுத்தக்கூடிய சமூக கட்டமைப்புகளும் சில காலம் ஏற்படும். அதேபோல, இதனால் வரும் நன்மைகளை நாம் உணரவும் சில காலம் ஏற்படும்.


நன்றி- ஸ்க்ரோல் (http://scroll.in/article/812012/all-you-wanted-to-know-about-the-gst-including-when-and-if-its-likely-to-be-implemented)
தமிழில்: ரிச்சர்ட்
Sponsored content

ஜி.எஸ்.டி  வரி என்றால் என்ன? Empty Re: ஜி.எஸ்.டி வரி என்றால் என்ன?

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum