தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
முகத்தில் கரியை பூசிக் கொண்ட பஜ்ரங்தள்  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

முகத்தில் கரியை பூசிக் கொண்ட பஜ்ரங்தள்  Empty முகத்தில் கரியை பூசிக் கொண்ட பஜ்ரங்தள்

Fri Jul 08, 2016 8:47 am
முகத்தில் கரியை பூசிக் கொண்ட பஜ்ரங்தள்  13102678_592595864257164_2498844619367140291_n

இந்தியாவின் சாபக்கேடு தொடர்கிறது...

மத்திய பிரதேசம்.... அடிக்கடி கிறிஸ்தவர்கள் தாக்கப்படும் அவலம் இங்கே தான் மதவெறி கூட்டத்தின் மூலம் நிறைவேறி வருகிறது. கட்டாய மதமாற்றம் என்று கூறி பலரை அடித்து, பல குடும்பங்களை சீரழித்து, பலரின் எதிர்கால வாழ்க்கையை சீரழித்த இந்த பஜ்ரங்க்தள் அமைப்பு... மீண்டும் முன்பு எப்பொழுதும் இல்லாத ஓர் கோழைத்தனமான செயலை நிறைவேற்றி உள்ளது. 

"திருமணமான இருவருக்கும் இந்து மத பெயர் தான் உள்ளது.. ஆதலால் அவர்கள் திருமணம் இந்து கோவிலில் தான் நடத்த வேண்டும்" என்று இவர்கள் மிரட்டி உள்ளது எவ்வளவு கீழ்த்தரமானது என்று உங்களுக்கு புரிந்திருக்கும். 

"பெண் 10 வயது இருக்கும் போது கட்டாய மதமாற்றம் செய்து விட்டார்கள்" என்று இப்பொழுது ஓர் புதிய யுத்தியை கையாள முயற்சித்த இவர்கள் முகத்தில் கரியை பூசி இருக்கிறாள் இந்த மணப்பெண்.

NDTV மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் கொடுத்துள்ள செய்தியில் "நாங்கள் இருவரும் மதமாற்றப்படவில்லை, நாங்கள் மனமாற்றம் அடைத்திருக்கிறோம்" என்று கூறி இருக்கிறார்கள். (http://indianexpress.com/article/india/india-news-india/mp-panel-member-wants-christians-tried-for-sedition-2779902/)

மத்திய பிரதேசம் சாதனா என்ற இடத்தில் Church of God உள்ளது. இது 1998 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுது தான் முதல் திருமண நிகழ்வை நடத்தியது. ஆனால் இதை பொறுக்க முடியாத இந்த கூட்டம், சிலரை அழைத்து கொண்டு திருமணம் நாந்து கொண்டிருந்த ஆலயத்திற்குள் அத்து மீறி சுமார் 10 மணிக்கு நுழைந்தது. அப்பொழுது அங்கிருந்த Bro. Stephen Rajkumar (GEMS) ஏற்கனவே இந்த கும்பலால் இரண்டு முறை தாக்கப்பட்டவர், Bro. Gyan Das (Sidhi) மற்றும் Bro. Dharvaiya (Umariya) கடுமையாக தாக்கப்பட்டு இவர்கள் மதமாற்றுகிறார்கள் என்ற பொய்யான தகவலை மீண்டும் காவல்துறைக்கு அளித்து கைது செய்ய வைத்தனர். இவர்கள் காவல்த்துறையினர் ஏதோ வெடிகுண்டு தீவிரவாதிகளை கைது செய்து அழைத்து போவதை போல அழைத்து செல்வதை இங்கே காணலாம் (http://news.gemsbihar.org/2016/05/persecution-of-christians-and.html)

காவல் துறை விசாரணையில் நடந்தது என்ன தெரியுமா?


 மாப்பிள்ளை அருண் அவர்களின் தந்தை மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தவர். இவர் பல மருத்துவர்களிடம் சென்று குணம் ஆகாததால் இந்த சபைக்கு வந்துள்ளார். ஜெபிக்க ஜெபிக்க அருனின் தந்தை முழு குணம் அடைத்து விட்டார். ஆதாலால் தான் தாங்கள் இயேசு கிறிஸ்துவை முழு மனதுடன் ஏற்று கொண்டோம் என்று அருண் கூறி இருக்கிறார். ஆனால் இந்த காவல் துறை அவர்கள் கூறியதை புரிந்து கொள்ளாமல் "அருனின் தந்தைக்கு பிசாசு பிடித்திருக்கிறது, ஆதலால் அவர் சரியான தகவலை தரவில்லை" என்று முடிவெடுத்தது.. இந்த கொடுமையை எங்கே போய் சொல்ல?

இது ஒருபுறம் இருக்க ஆலயத்திற்குள் புகுந்த இந்த மூளையற்ற கும்பல் Arun Kushwaha (மாப்பிள்ளை) மற்றும் Subhadra Kushwaha (மணப்பெண்) இருவரையும் ஆலயத்திற்குள் வைத்தே மிரட்டியது. நீங்கள் இந்து மதபெயரை வைத்துள்ளீர்கள். ஆதாலால் எங்கள் இடத்தில் தான் திருமணம் செய்ய வேண்டும் இல்லையென்றால் உங்கள் இருவரையும் காவல்த்துறையிடம் ஒப்படைத்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். ஆனால் இருவரும் இதற்கு மறுத்துவிட்டனர். ஆதலால் திருமண கோலத்திலேயே காவல் நிலையத்திற்கு சென்றனர். (படம் பார்க்கவும்)

இருவரும் கொடுத்த வாக்குமூலத்தை இங்கே உங்களுக்கு கொடுக்கிறோம் 

"Arun and Subhadra remain determined to marry. “I am not scared by what happened but it’s at the back of my mind that I may be harmed when I am out. We will marry again when she becomes major in a few days. It will be a court marriage because we have no other option,” he says, adding that he would henceforth see whether authorities take similar action in cases of other Hindu minors getting married. Standing at her home that is still decorated, for what would have been the first wedding in the family, Subhadra nods, “I will marry him.” - See more at: http://indianexpress.com/article/india/india-news-india/mp-panel-member-wants-christians-tried-for-sedition-2779902/#sthash.5OZJ9yGh.dpuf"

இந்த கொடுமையான நிகழ்வு நடந்து முடிந்த பின்னரும் யாரின் மீதும் குற்றம் சுமத்த முடியாத இந்த பஜ்ரங்தள் அமைப்பு மீண்டும் மே 1ம் தேதி 2016 அன்று இந்த ஆலயத்திற்கு முன் கூடியது. சபை ஆராதனைக்கு யாரும் போக கூடாது என்று "ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷம் இட்டப்படி ஆலயத்தை மறித்தனர். ஆலயத்திற்குள் வந்தவர்களை கடுமையாக மிரட்டினர். மட்டும் அல்லாது தாங்கள் ஏன் இப்படி செய்கிறோம் என்று அருகில் இருந்த வீடுகளுக்கு சென்று கூறினர்.

இதனால் காவல்துறை விரைந்து வந்தது. பின் காவல் துறை உதவியோடு ஆலயம் நடந்தது. இந்த கொடுமையான நிலைமை மாறவும், இந்த சபைக்கு எதிராக நின்ற ஒவ்வொரு கால்களும் என் தேவனுடைய நுகத்தை சுமந்து ஓடவும், எவன் கையில் எல்லாம் கொடிகள் இருந்ததோ அவர்கள் எல்லாம் வேதாகமத்தை தூக்கவும் ஜெபியுங்கள். 

இந்த திருமண வழக்கு வருகிற 11ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படுகிறது. இந்த நாளிற்காக ஜெபித்து கொள்ளுங்கள். 

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum