அழைப்பு உங்களுக்குத்தான் - விண்ணப்பிக்க ...
Tue Apr 12, 2016 12:37 am
யூ.பி.எஸ்.சி. : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.), தற்போது, மத்திய குடும்ப நலத்துறையில் 'பப்ளிக் ஹெல்த் ஸ்பெஷலிஸ்ட்' அதிகாரி பணிக்கு 26 பேர் உள்பட பல்வேறு துறைகளில் உள்ள 53 அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய கல்வித் தகுதி, வயது வரம்பு, அனுபவ விவரம் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். 14-4-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
ராணுவ தொழிற்சாலை : பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் ராணுவ தொழிற்சாலைகளில் ஒன்றான பனகார், 31 பீல்டு அம்யூனிசன் டெப்போவில், டிரேட்ஸ்மேன் பணிக்கு 83 பேரும், தீயணைப்பு வீரர் பணிக்கு 19 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரங்களை www.indianarmy.nic.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
துணை ராணுவம் : துணை ராணுவ படைகளில் ஒன்றான சசாஸ்திரா சீமா பல் படைப்பிரிவில், இன்ஸ்பெக்டர் ஜெனரல், டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல், டெபுடி கமாண்டன்ட் உள்ளிட்ட அதிகாரி பணிகளுக்கு 14 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரங்களை www.ssbrectt.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, அறிவிப்பில் இருந்து 6 வாரங்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
பாதுகாப்புத் துறை : மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும், மின்னணு மற்றும் ரேடார் தொழில்நுட்ப வளர்ச்சி அமைப்பு சுருக்கமாக இ.ஆர்.டி.இ. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பில் 'ஜூனியர் ரிசர்ச் பெல்லோ' பணிக்கு 8 பேர் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பி.இ., பி.டெக் படித்த 28 வயதுடைய விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். விரிவான விவரங்களை www.drdo.org என்ற இணையதளத்தில் பார்க்கவும்.
இஸ்ரோ: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அமைப்பில், ஆராய்ச்சியாளர் பணிக்கு 8 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பி.இ., பி.டெக் மற்றும் எம்.இ., எம்.டெக், எம்.எஸ்சி. படித்தவர்களுக்கு பணி உள்ளன. இது பற்றிய விவரங்களை www.isro.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, 16-4-2016-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
ஐ.சி.ஏ.ஆர். : இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்.) அமைப்பின் கீழ் செயல்படும் மீன்வள தொழில்நுட்ப மையத்தில் தற்போது 'லோயர் டிவிஷன் கிளார்க்' பணிக்கு 11 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 27 வயதுக்கு உட்பட்ட, 12-ம் வகுப்பு படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை மார்ச் 26-ஏப்ரல்1 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பார்த்துவிட்டு, அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
ஆராய்ச்சி மையம் : சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பின் கீழ் செயல்படும் நஞ்சுயியல் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர், முதுநிலை ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 14 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய வயது வரம்பு, கல்வித்தகுதி, அனுபவம் உள்ளிட்ட விவரங்களை www.iitrindia.org/faculty.htm என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம். விண்ணப்பங்கள் 5-5-2016-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
எம்.எம்.டி.சி. : மத்திய அரசின் மினிரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை வர்த்தக நிறுவனம் எம்.எம்.டி.சி. தற்போது இந்த நிறுவனத்தில் பொதுமேலாளர், துணை பொது மேலாளர், முதுநிலை மேலாளர், மேலாளர், துணைமேலாளர் உள்ளிட்ட அதிகாரி பணிகளுக்கு 19 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரங்களை www.mmtclimited.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 29-4-2016.
கல்லூரி : டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் ஆசிரியப் பணி அல்லாத அலுவலக பணிகளுக்கு 42 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதுபற்றிய விவரங்களை www.hansrajcollege.co.in என்ற இணையதள முகவரியில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|