விளையாட்டு வீரர்களுக்கு துணை ராணுவத்தில் வேலை
Tue Apr 12, 2016 12:29 am
விளையாட்டு வீரர்களுக்கு துணை ராணுவ படையில் சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:-
துணை ராணுவ பிரிவுகளில் ஒன்று சசாஸ்திரா சீமா பல். மத்திய ஆயுதப்படைப் பிரிவான இதன் டெல்லி பொது இயக்குனரகத்தில் இருந்து, விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு அடிப்படையிலான 'கான்ஸ்டபிள்' பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 375 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கால்பந்து, தடகளம், கைப்பந்து, கூடைப்பந்து, பூப்பந்து, கபடி, மல்யுத்தம், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக், ஆக்கி, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட 21 விளையாட்டு பிரிவில் சாதித்த இளைஞர்கள் இந்த பணியிடங்களில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். வயது வரம்பு விண்ணப்ப அவகாச காலத்தின் இறுதி நாளை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும்.
கல்வித்தகுதி:
குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உடற்தகுதி:
ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 179 செ.மீ. உயரமும், பெண் விண்ணப்பதாரர்கள் 157 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். ஆண்களின் மார்பளவு சாதாரண நிலையில் 80 செ.மீ. ஆகவும், 5 செ.மீ. விரிவுடையும் திறனுடனும் இருக்க வேண்டும்.
கட்டணம்:
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர், ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள், The Assistant Director (Sports) Force Hgr, Sashastra seema Bal (ssb) East BlockV, R.K.Puram. New Delhi 110066 என்ற முகவரிக்கு சென்றடைய வேண்டும். அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் சென்றடையும்படி விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.
இது பற்றிய அறிவிப்பு ஏப்ரல்2-8-ந் தேதியிட்ட 'எம்ப்ளாய்மென்ட் நியூஸ்' இதழில் பிரசுரமாகி உள்ளது. விரிவான விவரங்களுக்கு அந்த இதழை பார்க்கலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|