தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
அ முதல் ஃ வரை... வரி சேமிக்க எளிய வழிகள்! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அ முதல் ஃ வரை... வரி சேமிக்க எளிய வழிகள்! Empty அ முதல் ஃ வரை... வரி சேமிக்க எளிய வழிகள்!

Wed Mar 23, 2016 2:15 pm
அ முதல் ஃ வரை... வரி சேமிக்க எளிய வழிகள்!
 ச.ஸ்ரீராம் ரெட்டி, ஆடிட்டர்.
    
'அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்" 

என்பது வள்ளுவன் வாக்கு. அதாவது, சேர்க்கும் திறன் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல் சேர்க்கப்பட்டு வந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும் என்பதாகும்.

அ முதல் ஃ வரை... வரி சேமிக்க எளிய வழிகள்! Vector-taxes-help

 
உணவு, கல்வி மற்றும் மருத்துவம் போன்ற அடிப்படைத்  தேவைகள் கூட தினம், தினம் விலையேற்றத்தைக் காண்கின்ற சூழலில், வள்ளுவன் வாக்குப்படி திறனறிந்து பொருள் சேர்பதின் மூலமே சராசரி மக்கள் விலையேற்றத்தை எதிர்கொள்ள முடியும்.

விலையேற்றம் ஒரு பக்கம் இருக்க வரிச்சுமை சராசரி மக்களின் வாழ்வாதாரத்தை இன்னும் நலிவடையச் செய்கிறது. இந்த நிலையில் வரி தவிர்ப்பதின் மூலமும் எவ்வாறு பொருள் சேர்க்க முடியும் என்ற உத்திகளை சராசரி மக்களும் அறிய வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம் 

தனிநபர் வருமானம்:

வரி விதிப்பு ஆண்டு 2016-17க்கான வரி தவிர்ப்பு குறித்து திட்டமிட சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தனிநபர் ஒருவர் எவ்வாறு பல்வேறு பிரிவுகளின் கீழ் வரிவிலக்கு மற்றும் கழிவுகளை (Deductions) பெறலாம் என்பதை காண்போம்.

தனிநபர் வருமானத்திற்கான வரிக் கணக்கீடு அவர் 60 வயதிற்கு உட்பட்டவரா / 60 வயதிற்கு மேற்பட்டவரா (மூத்த குடிமக்கள்) அல்லது 80 வயதிற்கு மேற்பட்டவரா என்பதை பொருத்து மாறுபடும்.







அ முதல் ஃ வரை... வரி சேமிக்க எளிய வழிகள்! Tabel

அதுமட்டுமல்லாமல் 2% கல்வி வரியும் 1 % உயர் கல்வி வரியும் மற்றும் மொத்த வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் உள்ளவர்கள் கூடுதல் கட்டணமாக (Surcharge) 12% அளவில் மொத்த வரியின் மீது கணக்கிட்டு கட்ட வேண்டும்.

குடியிருப்பு தகுதியும் வருமானவரி கணக்கீடும்:

ஒருவரின் குடியிருப்பு தகுதிக்கேற்ப வருமானவரி கணக்கீடு மாறுபடும். 

உதாரணமாக, இந்தியக் குடியிருப்பு பெற்றவர், உலகில் எங்கு சம்பாதித்தாலும் வருமான வரி கணக்கிட வேண்டும். மாறாக, குடியிருப்பு அல்லாதவர்  (என்ஆர்ஐ) இந்தியாவில் சம்பாதிக்கும் வருமானத்திற்கு மட்டும் வரி கட்டினால் போதுமானதாகும்.

ஆகையால், வரி கணக்கிடும் முன் குடியிருப்பு தகுதியை நிர்ணயிப்பது அவசியம். குடியிருப்பு தகுதி (Residential status) நிர்ணயிக்கும் முறையை சுருக்கமாக காணலாம்.

நிபந்தனைகள்

1. (பிரிவு 6(1)) சம்பந்தப்பட்ட நிதியாண்டில் 182 நாட்கள் அல்லது அதற்கு மேலாக இந்தியாவில் தங்கி இருக்க வேண்டும்.
2. சம்பந்தப்பட்ட நிதியாண்டில் 60 நாட்கள் மற்றும் அதற்கு முந்தைய '4' நிதியாண்டுகளில் 365 நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்க வேண்டும்.

(இந்தியாவில் இருந்து புறப்பட்ட நாளும் இந்தியாவில் வந்து இறங்கிய நாளும் கணக்கில் கொள்ள வேண்டும்).

மேற்கண்ட நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றிற்கு உட்பட்டு இருந்தாலும் அவர் குடியிருப்பு பெற்றவர் ஆவார். இரண்டு நிபந்தனைகளுக்கும் உட்படாதவர் குடியிருப்பு பெறாதவராக கருதப்படுவார்.

2. பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்ய வெளிநாடு செல்பவர்கள் அங்கு பெறும் சம்பளம் மற்றும் படிகளுக்கு (Allowanus) வரிகட்ட வேண்டுமா? வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்பவர்களுக்கு மேற்கண்ட முதல் நிபந்தனை மட்டுமே பொருந்தும் அதாவது 182 நாட்கள் அல்லது அதற்கு மேலாக இந்தியாவில் தங்கியிருந்தவர்கள் மட்டுமே வரி கட்ட வேண்டும். மேலும், பயணச்செலவு, விடுதி மற்றும் உணவு செலவுகளுக்காக பெறும் பணத்திற்கு வரிகட்ட தேவையில்லை.

வரிவிலக்கு பெற்ற படிகள் என்னென்ன?

தினப்படி (Daily Allowance) பயணப்படி (Transport Allowance) சீருடைப்படி (Uniform Allowance) போன்றவை முழு வரிவிலக்கிற்கு உட்பட்டவை ஆகும்.

பகுதியாக விலக்களிக்கப்பட்ட படிகள்:

குழந்தைகள் கல்விப்படி - மாதம் ரூ.100 இரண்டு குழந்தைகளுக்கு

குழந்தைகள் விடுதிப்படி - மாதம் ரூ.300 இரண்டு குழந்தைகளுக்கு

பயணப்படி - மாதம் ரூ.1,600 (ஊனமுற்றோருக்கு ரூ3,200 வரை)

இதுமட்டுமின்றி, வீட்டு வாடகைபடி (HRA), Perquisite எனப்படும் இதர பலன்கள், விருப்ப ஓய்வுத்தொகை, வேலை நீக்க நிவாரணத்தொகை ஆகியவையும் பகுதியாக வரிவிலக்கிற்கு உட்பட்டவையாகும். 

சம்பள வருமானத்தில் இருந்து என்னென்ன கழிவுகள் (Deduction) பெறலாம்?

வருமான வரிச் சட்டம் பிரிவு 16-ன் கீழ் (IT Act Sec 16)


1. அரசுப் பணியில் உள்ளவர்கள் கேளிக்கைபடி (Entertainment Allowance) ரூ. 5,000 வரை வரிவிலக்கு பெறலாம்.

2. தாங்கள் கட்டிய தொழில்வரி முழுவதும் உச்சவரம்பின்றி கழிவு பெறலாம்.

* வேலை நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் பரிசுப் பொருள்களுக்கு வரிசெலுத்த வேண்டுமா?

ஆம் சம்பந்தபட்ட நிதியாண்டில் நீங்கள் பெறும் பரிசுப்பொருட்கள் மற்றும் பரிசு கூப்பன்கள் ஆகியவற்றின் மதிப்பு ரூ.5000 அல்லது அதற்கு மேல் இருப்பின், அது சம்பள வருமானத்துடன் சேர்த்து வரிக் கணக்கிடப்படும்.

  வீட்டுக்கடன் வட்டி கழிவு (Interest Deduction) பெற உச்ச வரம்பு (பிரிவு 24)

1. வாடகைக்கு விடப்பட்ட வீட்டின் மீதான கடனுக்கான வட்டியை உச்சவரம்பின்றி தங்கள் வாடகை வருமானத்தில் கழிவு பெறலாம்.

2. மாறாக, சுயமாக  குடியிருக்கும் வீட்டிற்கான வட்டியை வரம்பிற்கு உட்பட்டு கழித்துக் கொள்ளலாம். அதாவது, புதிய வீடாக இருப்பின் ரூ.2,00,000 வரையும் புணரமைக்கப்பட்ட (Renovation) வீடாக இருப்பின் ரூ.30,000 வரையும் வட்டியை கழித்துக்கொண்டு மீதமுள்ள வருமானத்திற்கு வரி கணக்கிட வேண்டும்.

* வீடு கட்டி முடிப்பதற்கு முன் கட்டப்பட்ட வட்டியை கழிக்க முடியுமா?

வீடு கட்டி முடிப்பதற்கு முன் கட்டிய வட்டியை  ஐந்து தவணைகளில் கட்டி முடித்த நிதியாண்டில் இருந்து கழிக்கலாம்.

* காலி மனையில் பெறப்படும் வாடகை வருமானத்திற்கு வரி கட்ட வேண்டுமா?

காலி மனை அல்லது நிலத்தின் மீதான வாடகை வருமானத்திற்கு இதர வருமானங்களின் கீழ் வரி கணக்கிடப்படும். அவ்வருமானம் பெறுவதற்கு செலவிடப்பட்ட செலவுகளை கழித்துக் கொள்ளலாம்.

வீட்டுக் கடன் அசல் தொகை கழிப்பதற்கு வரம்பு எவ்வளவு?

வீட்டுக்கடன் அசல் தொகையை பிரிவு 80சி இன் கீழ் ரூ.1,50,000 வரை கழித்துக் கொள்ளலாம்.


கூட்டு சொத்தின் மீதான வட்டி மற்றும் அசலை கணவன் மனைவி தனித்தனியாக கழிக்கலாமா?

ஆம். கழிவுகள் ஒவ்வொரு வரி செலுத்துபவருக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகையால் வட்டி மற்றும் அசல் தொகை அதிகமாக இருக்கும்பட்சத்தில் கூட்டு சொத்தாக பதிவு செய்து தனித்தனியாக கழிவு பெறுவது உகந்ததாகும்.

நகராட்சிக்கு செலுத்திய வரியை (municipal tax) கழிக்க முடியுமா?

நகராட்சிக்கு செலுத்தப்படும் அனைத்து விதமான வரிகளையும் உச்சவரம்பின்றி உங்கள் வீட்டு சொத்து வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ளலாம்.

* வெளிநாட்டில் பெறும் வாடகை வருமானம் வரிக்குட்பட்டதா?

ஆம், நீங்கள் இந்தியாவில் குடியிருப்பு (Resident) உள்ளவராயின் நீங்கள் பெறும் அனைத்து வருமானமும் வரிக்குட்பட்டது. (உலகில் எங்கு எப்படி சம்பாதித்தாலும்) அவ்வகையில், வெளிநாட்டு வாடகை வருமானம் வரிக்கு உட்பட்டதாகும்.

  பாரம்பரியமாக பெறப்படும் சொத்துக்களை கையாள்வது எப்படி? வரி கட்ட வேண்டுமா?

தாய், தந்தை அல்லது மூதாதையர்களிடமிருந்து பாரம்பரியமாக பெறப்படும் சொத்திற்கு வரி ஏதும் கட்ட வேண்டியதில்லை. இருப்பினும் அவ்வாறு பெறப்பட்ட சொத்தின் மூலம் கிடைக்கின்ற வருமானத்திற்கு வரிகட்ட வேண்டும்.

* விற்கப்படும் நிலத்தின் வழிக்காட்டி மதிப்பு (Guideline valve) அதிகமாகவும், சந்தை மதிப்பு அல்லது நிலத்தின் விற்பனை விலை குறைவாகவும் இருந்தால் எந்த மதிப்பின் மீது வரி கட்ட வேண்டும்?

பிரிவு 50சி ன் கீழ் அசையா சொத்துக்களின் குறைந்தபட்ச விலை வழிக்காட்டு மதிப்பு ஆகும். ஆகையால் நீங்கள் நியாயமாக வழிகாட்டி மதிப்பை விட குறைவாகவே விற்றாலும் வழிக்காட்டி மதிப்பிற்குதான் வரிகட்ட வேண்டும்.

வீடு விற்கும் போது கிடைக்கின்ற மூலதன ஆதாயத்திற்கு வரியை தவிர்க்க வழிமுறைகள் என்னென்ன?

கீழ்க்கண்ட முறைகளில் தாங்கள் பெறும் மூலதன ஆதாயத்தை மறுமுதலீடு செய்து வரியை தவிர்க்கலாம்.

அ முதல் ஃ வரை... வரி சேமிக்க எளிய வழிகள்! Tabel2

  கிராம வரம்பிற்கு உட்பட்ட விவசாய நிலத்தை விற்பதினால் கிடைக்கும் ஆதாயம்:

விற்கப்படும் விவசாய நிலம் கிராம வரம்பிற்கு உட்பட்டு இருப்பின் ஒட்டு மொத்த ஆதாயமும் வரி விலக்கிற்கு உரியதாகும். மறு முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை.

* மேற்கண்ட கழிவுகள் தவிர, வேறு ஏதேனும் பிரிவுகளில் மூலத்தின் ஆதாயத்திற்கு எதிராக கழிவு பெற முடியுமா?
ஆம் பிரிவு 54ECன் கீழ் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) உளரக மின்மயமாக்கல் கழகம் (REC)) பத்திரங்களில் ரூ. 50,00,000 வரை ஒரு நிதியாண்டில் முதலீடு செய்து கழிவு பெற முடியும்.

அ முதல் ஃ வரை... வரி சேமிக்க எளிய வழிகள்! Sdadasஅரசாங்கத்தினால் கட்டாயமாக கையகப்படுத்தப்படும் மூலதன சொத்திற்கு எதிராக ஏதேனும் கழிவு பெற முடியுமா?

கட்டாய கையகப்படுத்துதல் மூலம் கிடைக்கின்ற மூலதன ஆதாயத்திற்கு சிறப்பு கழிவு ஏதுமில்லை. ஆயினும்  அவை பிரிவு 54B மற்றும் 54EC ன் கீழ் கழிவு பெற தகுதி வாய்ந்தது.
மேலும், தாமதமாக கொடுக்கப்படும் இழப்பீட்டிற்கான வட்டியில் 50% கழிவு பெறலாம். மீதமுள்ள 50% வட்டி இதர மூலங்கள் பிரிவில் வரி கணக்கிட வேண்டும்.

குடும்ப ஓய்வூதியத்திற்கு எதிரான கழிவுகள்

பெறப்பட்ட குடும்ப ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கு அல்லது ரூ.15,000 இதில் எது  குறைவோ அதை கழிவாகவோ பெறலாம். மீதமுள்ள தொகைக்கு வரி கட்ட வேண்டும்.



திருமணத்தின் போது பெறப்படும் பரிசுப்பொருட்களுக்கு வரிகட்ட வேண்டுமா?

இல்லை, திருமண விழாவில் பெறும் பரிசுப்பொருட்கள் வரி விலக்கிற்கு உட்பட்டதாகும்.

* மற்ற பரிசுப்பொருட்களுக்கு வரி கட்ட வேண்டுமா?

வரையறுக்கப்பட்ட ரத்த சொந்தங்களிடம் இருந்து பெறப்படும் பரிசுப் பொருட்களுக்கு வரிகட்ட வேண்டியதில்லை. 

மற்றவை, ரூ.50,000யை தாண்டும்பட்சத்தில், மொத்த தொகைக்கும் ரூ.50,000 உட்பட வரி கட்ட வேண்டும்.

  பணம் அல்லாத மற்ற பரிசுப் பொருட்களுக்கு வரிகட்ட வேண்டுமா?

ஆம். பணம் அல்லாத பரிசுப்பொருட்களின் சந்தை மதிப்பு ரூ.50,000க்கு மேலாக இருப்பின் வரிகட்ட வேண்டும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அ முதல் ஃ வரை... வரி சேமிக்க எளிய வழிகள்! Empty Re: அ முதல் ஃ வரை... வரி சேமிக்க எளிய வழிகள்!

Wed Mar 23, 2016 2:19 pm
அ முதல் ஃ வரை... வரி சேமிக்க எளிய வழிகள்! Tabel
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அ முதல் ஃ வரை... வரி சேமிக்க எளிய வழிகள்! Empty Re: அ முதல் ஃ வரை... வரி சேமிக்க எளிய வழிகள்!

Wed Mar 23, 2016 2:20 pm
அ முதல் ஃ வரை... வரி சேமிக்க எளிய வழிகள்! Tabel2
Sponsored content

அ முதல் ஃ வரை... வரி சேமிக்க எளிய வழிகள்! Empty Re: அ முதல் ஃ வரை... வரி சேமிக்க எளிய வழிகள்!

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum