தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இயேசுக் கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தப்படுவோமக! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இயேசுக் கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தப்படுவோமக! Empty இயேசுக் கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தப்படுவோமக!

Sat Feb 13, 2016 9:35 am
நியாயத்தீர்ப்பு வருகிறது சந்திக்க   ஆயத்தப்படுங்கள்

தீமையைவெறுத்தலும் கர்த்தரை அறிந்து அவரது கட்டளைப்படி  நடத்தலும் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழியாகும். கர்த்தர் தன்னுடைய நியாயப்பிரமாணத்தைக் காத்துநடப்பவர்களுக்கும் , அதன்படி நடக்காதவர்களுக்கும் நியாயத்தீர்ப் வைத்துள்ளார். நல்லதைக்காத்து நடக்கிறவர்கள் நன்மையையும், தங்கள் இஸ்டத்திற்கு கடவுள்பயமற்று தீமையான வாழ்வை நடத்தி கிறவர்களுக்கு  ஆக்கினைத்தீர்ப்பையுங் கொடுத்து  கர்த்தர் நியாயந்தீர்ப்பார். வேதாகமம்  யோவான் 5ம் அதியாரம் 25-30 வரை கூறுவதைக் கண்நோக்கிப் பார்ப் போமாக.”மரித்தோர்தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், பிதாவானவர்தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார். அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும்அவருக்குக் கொடுத்திருக்கிறார். இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனைஅடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்;எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.” மரித்தவர்களும் உயிரோடு இருப்பவர்களும் நியாயத்தீர்படைவது நிச்சயமாகும்

வேதாகமத்தின்படி இறுதி நியாயத்தீர்ப்பு மிக மிக முக்கியமானதாகும், சரித்திரத்தின் இறுதியில் நன்மைசெய்தவர்கள் வேறாகவும், தீமைசெய்தவர்கள் வேறாகவும்  பிரிக்கப்படுவார்கள். அதற்குரிய காலம் கர்த்தரால் நியமிக்கப்பட்டுள்ளது. (Act 17:31  மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான். ) ஆனால் இந்த நாள்கள் பிதாவைத் தவிர வேறுயாருக்கும் தெரியாது. மத்தேயு 24ம் அதிகாரத்தில் 36-40 இவ்வாறு கூறுகின்றது. (அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும்,ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும். )

 

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் மனிதவர்க்கத்தின் நியாகேர்த்தர் ஒருவரேயிருந்தார். அவரிடத்தில் நியாயந்தீர்ப்பதற்கான வல்லமையும், ஞானமும், இருந்த்து, அவர் அவர் நீதியாகவும், உண்மையாகவும், நியாயமாகவும் நீயாயந்தீர்ப்பார். சங்கீதம் 96:13, 98: 9 என்ன கூறுகின்றது எனப்பார்ப் போம்.( Psa 96:13 அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார். Psa 98:9 அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார். )
நியாயந்தீர்க்கும் வேலையை தன்னுடைய ஒரேபேறான குமாரனாகிய கிறிஸ்துவிற்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவர் மத்தியஸ்தராகவும்,தன்னுடைய மக்களை பாவத்திலிருந்து விடுவிப்பவராகவும், கர்த்தருடைய பகைவர்களை அழிப்பவராகவும் செயற்படு கின்றார்.(யோவான் 5:22) நியாயத்தீர்ப்பின் பின்பு இடம்பெறும் அரசாட்சியில் கர்த்தருடைய பிள்ளைகளும் கிறிஸ்துவுடன் இணைந்து செயற்படுவார்கள். (1 Cor. 6:2–3; Rev. 20:4)(. 1Co 6:2 பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா? 1Co 6:3 தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா? அப்படியிருக்க, இந்த ஜீவனுக்கேற்றவைகளை நீங்கள் தீர்த்துக்கொள்ளக்கூடாதிருக்கிறது எப்படி? Rev 20:4 அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். )
இறுதி நியாயத்தீர்ப்பானது விசாலமான நோக்கத்தைக் கொண்டுள்ளது, இது சரித்திரத்தின் ஆரம்பம்முதல் இறுதிவரையுள்ள எல்லாவிதமாதேசத்துமக்களையும் உள்ளடக்கியது, விழுந்துபோன தூதர்களைப்போல.(Matt. 25:31–46; Rom. 14:10–12, (2 Pet. 2:4).). கர்த்தர்மீது நம்பிக்கைகொண்டு, பாவத்திலிருந்து மனம்திரும்பி, கர்த்தருடைய வழியில் நடப்போருக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை, ஆனால் நித்திய வாழ்விற்குள் அவர்கள் பிரவேசிப்பார்கள்( சங்கீதம்.1) நியாயத்தீர்பின் பிரதானநோக்கம் தெரிவுசெய்யப்பட்டவர்களாயிருந்து இரட்சிப்பைக் கொற்றுக்கொண்டு அதன்படி நடந்தவர்கள் அனைவரும் கர்த்தருடைய மகிமையைப்பெற்றுக் கொள்வார்கள், கர்த்தரைவெறுத்து அவர்வழிகளில் நடக்காதயாவரும் ஆக்கினைத்தீர்ப்பிற்குள்ளாக்கப்படுவார்கள். (2 Thess. 1:3–10)

 

நியாயத்தீர்பு என்றால் என்ன?

நியாயத்தீர்ப்பு என்பது மனிதர்களின் தெரிவிற்கும் செயற்பாட்டிற்கும் இறைவனால் கொடுக்கப்படும் பதிலாகும்.

நாங்கள் ஏன் நியாயந்தீர்க்கப்படுகிறோம்.?

கர்த்தர் பரிபூரணமானவர். அவர் மனிதவர்க்கத்தை சுயாதீனமாக சிந்தித்து தன்னைத் தெரிவுசெய்வதற்கும், தள்ளிவிடுவதற்கும் பூரணசுதந்திரம் கொடுத்துள்ளார், இந்த தெரிவுசெய்வதற்கு ஏற்ப நியாத்தீர்ப்பும் அமையும்.

நியாயத்தீர்ப்பின் அழிவிலிருந்து யார் பாதுகாக்கப்படுவார்கள்?

இயேசுக்கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு அவர்வழியில் சீவிப்பவர்கள் யாவரும் நியாயத்தீர்ப்பின் அழிவிலிருந்தும் தண்டனையிலிருந்தும் பாதுகாக்கப்படுவார்கள்.

எவ்வாறு ஜனங்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள்?

பூமியில் வாழ்ந்த யாவரும் அதாவது மரித்தோரும் உயிருடன் இருப்போரும் தங்கள் பாவத்திற்கு ஏற்ப இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது நியாயந்தீர்க்கப்படுவார்கள்.

நியாயந்தீர்க்கப்படுவோர் எங்கு அனுப்ப்ப்படுவார்கள்?.

இயேசுக்கிறிஸ்துவினால் பாவங்கள் மன்னிக்கப்பட்டோர் தேவசமூகமாகிய பரலோகத்திற்கும், பாவம்மன்னிக்கப்பாடாதோர் கந்தகமும் நெருப்பும் காணப்படும் நரகத்திற்கு அனுப்ப்ப்படுவார்கள்.
கடைசி நாட்கள் என்றால் என்ன?

கடைசி நாட்கள் என்பது உலகசரித்திரத்தின்முடிவும், அவிசுவாசிகளுக்கான இயேசுக்கிறிஸ்துவின் வருகையுமாகும், இது நியாயத்தீர்ப்பின் நேரமாகும், கிறிஸ்தவர்களாகிய நமக்கோ கலியாணநாளுக்கான பிரவேசிக்கும் நேரமாகும்.
கடைசி நாளைக்குறித்து நமக்கு யார் கூறுவார்கள்?

பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளும், புதிய ஏற்பாட்டை எழுதியோரும் கடைசிநாட்களை உணர்ந்து, கர்த்தருடைய பிள்ளைகள் அதற்காகத் தங்களை ஆயத்தம்செய்யும்படி அந்த நாளைக்குறித்து விபரித்துக் கூறுகிறார்கள்
எப்பொது கடைசி நாள்கள் வரும்?

நாங்கள் கடைசிநாட்களில்தான் இருக்கின்றோம். இது கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் முதல் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட காலமாகும். இரண்டாம் வருகைக்குரிய நாளையம் நேரத்தையும் பிதாவைத்தவிர வேறுயாரும் அறியார்கள். கடைசிநாள்கள் இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகையுடன் முடிவுறும்.
கடைசிநாள்களைக்குறித்து கர்த்தர் ஏன் எங்களுக்கு அறிவிக்கின்றார்?

எங்களுடைய பாவங்களிலிருந்து மனம்திரும்பும்படி போதிய அவகாசம் கர்த்தர் எங்களுக்கு கொடுக்கின்றார்.அத்துடன் சுவிஷேசத்தை மற்றவர்களுக்கு அறிவிக்கும்படியும் கூறுகின்றார்.
கடைசிநாள்களில் நாம் எப்படி ஜீவிக்க வேண்டும்?

கடைசிநாள்களை நாம் நம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் எதிர்கொள்ளவேண்டும்.பரலோகத்தில் நாம் பெற்றுக் கொள்ளும் மகிமையை நாம் இங்கு எதிர்கொள்ளும் உபத்திரபங்களுடன் ஒப்பிட்டுபார்க்கவேகூடாது.

வேதாகமத்தில் காணப்படும் “ உபத்திரபங்கள் உங்களுக்கு உண்டு என்பதை இரண்டு வகையாக வகுக்கலாம்.
1. விசுவாசிகளாக மாறிய பிற்பாடு இடம்பெறும் சோதகைள், உபத்திரபங்கள்.
2. 7 வருட உபத்திரபங்கள், அதாவது இயேசுவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாதவர்கள் மீது கர்த்தருடைய கோபாக்கினை உலகத்தின்மீது ஊற்றப்படும் நாள்கள்.

கர்த்தருடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளாதவர்களைத் தண்டிக்கும் வண்ணமாகவே இந்த உபத்திரபகாலங்கள் அனுமதிக்கப்படுகின்றன. விசுவாசித்து ஏற்றுக் கொண்டவர்களுக்கோ  வாக்குத் த்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. (Rom 8:1  )ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. சபையானது நியாயத்தீர்ப்பைச் சந்திப்பதில்லை. ஏனெனில் அவர்களுடைய பாவங்கள் சகலதும் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து கல்வாரிக் குருசினில் சிந்திய  இரத்த்த்தினானே கழுவப்பட்டு , அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும். Rev 6:17  அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள். இந்த உபத்திரப காலம் விஷேடமாக கர்த்தரை ஏற்றுக் கொள்ளாதவர்களின் இருதயத்தில் பயத்தை உருவாக்கி கர்த்தர் பக்கம் திரும்பம்படி உருவாக்கப்பட்டது,உண்மையில் மனம்திரும்பி இயேவை ஏற்றுக் கொள்வார்களாயின் அவர்களுக்கும் சிலுவையில்தொங்கிய கள்ளனுக்கு கிடைத்த இரக்கம் அவர்களுக்கும்கிடைக்க சந்தர்ப்பங்கள் உண்டல்லவா?(Rev 9:20  அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல் மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளைவிட்டு மனந்திரும்பவுமில்லை; Rev 9:21  தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும் விட்டு மனந்திரும்பவுமில்லை. ) இயேசுக்கிறிஸ்து நியாயத்தீர்பிற்காகவரும் பொழுது அரணைக்கும் கரங்களை நீட்டி அரவணைப்பவராக வரவில்லை மாறாக தண்டிப்பவராக மிகவும் ஆக்கிரோஷத்துடன்வருவார். அப்பொழுது ஜனங்கள்,Rev 6:16  பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்; Rev 6:17  அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.

Rev 6:8 நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.

Rev 6:12 அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம் போலாயிற்று. Rev 6:13 அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது. Rev 6:14 வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப்போயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின.
Rev 6:13 அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.

ev 8:8 இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது; அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று. Rev 8:9 சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று; கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இயேசுக் கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தப்படுவோமக! Empty Re: இயேசுக் கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தப்படுவோமக!

Sat Feb 13, 2016 9:35 am
சபை உபத்திரபத்தைச்சந்திக்குமா?

வேதாகமத்தை நாம் ஆராய்ந்து பார்க்கும்போது சபையானது உபத்திரபகாலத்திற்குமுன்பு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதை கண்டு கொள்ளமுடியும். உலக அழிவிற்குமுன்பாக சபையானது எடுத்துக் கொள்ளப்படுமா இல்லையா என்பதை வேதாகம வார்தைகளுக்கூடாக கண்டுகொள்ளல் அவசியமாகும்.

சபையானது பெரிய உபத்திரபத்தைச் சந்திக்கவேண்டுமா இல்லையா?

பல வருடங்களாக சபைகளின்மத்தியில் தவறான எண்ணக்கருக்கள்தோண்றியுள்ளதை நாம் அவதானிக்கமுடிகின்றது. இது ஒரு தவறானமொழிபெயர்ப்பு என்றெ சிலஆராய்ச்சியாளர்களால் கருதமுடிகின்றது. இதுவேதாகமத்திற்கு எதிர் மறையான கருத்தாகும்.வேதாகமத்தை ஆராய்ந்து எது சரியானது என்பதை நாம் கண்டிப்பாக கற்றுக்கொள்ளல் வேண்டும். மறுபடி பிறந்து கர்த்தருடன் ஜீவிக்கும் அனைவரும் கர்த்தருடைய இரகசிக வருகையில் ஒரு நொடிப்பொழுதில் வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவோம்
உபத்திரபகாலத்தில் நடக்கும் சம்பவங்கள் யாவை என்பதை கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து கூறியுள்ளார் அவற்றைக் கற்றுக் கொள்ளுவோம்.

உபத்திரபகாலத்தில் நடக்கும் சம்பவங்கள் யாவை என்பதை கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து கூறியுள்ளார் அவற்றைக் கற்றுக் கொள்ளுவோம்.

 

அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். Mat 24:29
தீவுகள் யாவும் அகன்றுபோயின; பர்வதங்கள் காணப்படாமற்போயின. தாலந்து நிறையான பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷித்தார்கள்; அந்த வாதை மகா கொடிதாயிருந்தது. Rev 16:20 ,21
இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது; அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று. சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று; கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று. மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீரூற்றுகளின்மேலும் விழுந்தது. அந்த நட்சத்திரத்திற்கு எட்டியென்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப் போலக் கசப்பாயிற்று; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள். Rev 8:8 – 11
கர்த்தருடைய இரகசிக வருகை எப்படி இருக்கும்?.

எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ள தாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக் கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமை யையும், சாவுக்கேது வாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? உயிர்த்தெழுதலுக்குப்பிற்பாடு இயேசுக்கிறிஸ்துவின் சரீரம் எப்படி இருந்த்தோ அப்படியெ எங்களுடைய சரீரமும் அழியாமையுடையதாய் மாற்றப்படும். 1Co 15:52 -55
ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள். 1Th 4:16 -18
அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள். Rev 6:17
எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய் தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும், வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிற வர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும், நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையா யிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது. 1Ti 1:9 -11
பரிசுத்த பவுல் தன்னுடைய கடிதங்களில் இரகசிகவருகை பற்றி வேறெங்காவது கூறியுள்ளாரா?

இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லா தவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். 1Co 15:51 -52
பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள் வந்து, ஜனங்களுக்குப் போதனைசெய்து, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனானென்று எண்ணி, அவனைப் பட்டணத்துக்கு வெளியிலே இழுத்துக்கொண்டு போனார்கள். Act 14:19
அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார். 2Co 12:4
ஏனெனில் தேவன் உலகத்தைச் சிருஷ்டித்ததுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான உபத்திரவம் அந்நாட்களில் உண்டாயிருக்கும். Mar 13:19
இரகசிய வருகைபற்றி மூன்றுவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. அவையாவன.

1. உபத்திரபவ காலத்திற்கு முன்பு எடுத்துக் கொள்ளப்படுதல்.
2. உபத்திரபவ காலத்தின் மத்தியில் எடுத்துக் கொள்ளப்படுதல்
3. உபத்திரபவ காலத்தின்பின்பு எடுத்துக் கொள்ளப்படுதல்

உபத்திரப காலத்திற்கு முன்பு சபை எடுத்துக் கொள்ளப்படும் என்ற கொள்ளையுடயவர்கள் இயேசுவின் இரகசிக வருகையில் பரிசுத்தவான்களாக ஜீவிக்கும் மறுபிறப்படைந்த கிறிஸ்தவர்கள் வானத்தில் “சேர்த்துக் கொள்ளப்படல்” எனறபதத்தை உபயோகிக்கின்றனர். இதற்காக 1தெசலோனிக்கர் 4: 15-17
(கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாமநித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். )
இக்கொள்கையுடையவர்கள் உபத்திரபவகாலத்திற்கு முன்பே இரகசிகவருகை இடம்பெறும் என்று நம்புகிறார்கள். இவர்கள் கர்த்தருடைய இரண்டாம்வருகையை இரண்டுவகையாக வகுத்துள்ளார்கள். இக்கருத்தானது சபையையும் இஸ்ரவேலர்களையும் குறித்து உருவாகியுள்ளது. முடிவுகாலத்தில் யூதர்களுக்கான செயற்பாடுகளும் தீர்க்கதரிசனங்களும் நிறைவேற்றப்படல் வேண்டும், அதற்கு முன்பாக சபையானது பூமியிலுருந்து அகற்றப்படல் வேண்டும்

1. உபத்திரபகாலத்திற்குமுன்பாக கிறிஸ்து தன்னுடைய பரிசுத்தவான்களுக்காக வருவார்.(இரகசிகவருகை)
2. பரிசுத்தவான்களோடு நியாயத்தீர்ப்பிற்காக வருதல்.(வெளியரங்கமான வருகை)
இக்கொள்கையுடையவர்கள் சபை அல்லது பரிசுத்த ஆவியானவர் உலகிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும்வரையில் அந்திக்கிறிஸ்துவானவன் வெளிப்படமுடியாது என்று பரிசுத்த பவுலுடைய போதனையை விசுவாசிக்கிறார்கள். (2 Thess 2:6-Cool;
நியாயத்தீர்ப்பு சம்பந்தமாக வெளிப்படுத்தல் புத்தகத்தில் 3ம் அதிகாரத்திற்குப்பின்பு சபையைப்பற்றி எதுவும் கூறப்படவில்லை, இது சபையானது இரகசியவருகையில் எடுத்துக் கொள்ளப்பட்டாயிற்று என்பதையே சுட்டிக்காண்பிக்கின்றது இரகசிய வருகை என்பது இமைப்பொழுதில் இடம்பெற்று முடிந்துவிடும், இதன் கருத்து தன்னுடைய பரிசுத்தவான்களுக்காக மேற்கொள்ளும் இந்தச் செயற்பாட்டில எந்த தீர்க்கதரிசனசெயற்பாடுகளும் பாதிக்கப்படாது என்பதேயாகும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இயேசுக் கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தப்படுவோமக! Empty Re: இயேசுக் கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தப்படுவோமக!

Sat Feb 13, 2016 9:35 am
உபத்திரபவ காலத்திற்கு முன்பு சபை எடுத்துக் கொள்ளப்படுதல்.

இந்தக் கொள்கையுள்யோர், உபத்திரபகாலம் தொடங்குமுன்பாகவே சபையானது வானத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நம்புகின்றார்கள். உபத்திரப காலம் என்பது கடுங்கோபத்தினதும், நியாயத்தீர்ப்பினதும்,வெறுப்புக்கொண்ட, இருண்ட, அழிவுக்கான நாள்களாகும், ஆனால் இயேசுவுடன் வாழ்பவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பு இல்லை என்று கூறியுள்ளார். (றோமர்.8:1ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. ) சபையானது ஏற்கனவே இயேசுக்கிறிஸ்துவின் இரத்த்த்தினால் கழுவப்பட்டு பரிசுத்தமாகவுள்ளபடியால், அதனைப்பரிசுத்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
நியாத்தீர்ப்பு, இரகசிகவருகை என்ற இரண்டு வித்தியாசமான நிகழ்வுகள் கூறப்படுகின்றன. ஆனால் அவை இரண்டும் ஒரேநேரத்தில் நடைபெறமாட்டாது என்று எப்படி எம்மால்கூறமுடியும்? மூன்றுவிதமான நிரூபணங்கள் கீழேகொடக்கப்படுகின்றன.
1. முதலாவது தானியேல் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள எழுபது வாரங்கள் தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது. (Dan. 9:25–27). நாங்கள் தற்போது 69-70 வாரங்களுக்கிடையில் ஜீவிக்கின்றோம். 70வது வாரம் 7வருடங்களுக்குரிய உபத்திரபகாலமாகும். சபையானது 7வருட உபத்திரபகாலத்திற்கு முன்பாக பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். (Rom. 5:9; 1 Thess. 1:10; 1 Thess. 5:9; Rev. 3:10). 70 வது வாரத்தின் கடைசியில் கிறிஸ்து அரசாட்சி செய்வதற்காக பூமிக்கு வருவார். (Dan. 9:24; Matt. 24).
2. இரண்டாவதாக இரகசியவருகைக்கும் 2ம் வருகைக்கும் இடையிலுள்ள காலம்குறித்து வெளிப்படுத்தலில் தெளிவாக்க் காணக்கூடியதாகவுள்ளது. இதில் முதலாவது மூன்று அதிகாரங்களிலும், சபையானது பூமியிலுள்ளதாக்க் காட்டப்படுகின்றது. நான்காம் அதிகாரம் தொடங்கி 19: 10 இல் உபத்திரபகாலம் சம்பந்தமாக விபரிக்கின்றது, கர்த்தருடைய கோபம் மனுஷகுமாரனை ஏற்றுக்கொள்ளாத உலகத்தின்மீது ஊற்றப்படுவதாக்க் காண்பிக்கப்படுகின்றது. இந்தக்காலத்தில் சபை உலகத்திலுள்ளதாக இங்கு கூறப்படவில்லை. மூன்றாம் அதிகாரத்தின்முடிவில் சபையானது பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். உபத்திரபத்தின் முடிவுகாலத்தில்,கிறிஸதுவானவர் தன்னுடைய எதிரிகளைச் சங்கரிப்பதற்காகவும் தன்னுடைய இராஜ்ஜியத்தைச் ஸ்தாபிப்பதற்காகவும் வருகிறார் என்று வெளிப்படுத்தல் 19:11இல் கூறப்பட்டுள்ளது.
3. மூன்றாவதாக நாம் கவனிக்கவேண்டிய மிகமுக்கிய விடயமானது, கிறிஸ்துவானவர் தன்னுடைய பரிசுத்தவான்னளுக்காக வருகிறார் என்பதற்கும் தன்னுடைய பரிசுத்தவான்களிற்காகவும் வருகிறார் என்பதற்குமிடையில் காணப்படும் இடைவெளியை நாம் கணக்கிலெடுக்கவேண்டும். இரகசிக வருகையில் பரிசுத்தவான்கள் யாவரும் ஒன்றுசேர்க்கப்பட்டு பரலோகத்திற்குள் சேர்க்கப்பட்டு மகிமையான சரீரம் கொடுக்கப்படுகின்றார்கள். ஆனால் கிறிஸ்து அரசாட்சிக்காக வரும்போது, மகமையின் சரீரம் கொடுக்கப்படாத விசுவாசிகள் பூமியிலிருப்பார்கள், ஆயிரம்வருட அரசாட்சியில் அவர்கள்திருமணம்செய்து பிள்ளைகள்பெற்று வளர்ப்பார்கள், (Isa. 11:6, Cool. இந்தவிசுவாசிகள் எங்கிருந்து வந்தவர்கள், ? இவர்கள் இரகசிய வருகைக்கும் வெளிப்படுத்தல் காலத்திற்குமிடையிலுள்ளவர்கள் என்றும் அந்தக்காலத்தில் இயேசுவை ஏற்றுக் கொண்டு இரட்சிக்கப்பட்டவர்களாயிருக்கலமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள

 

உபத்திரப காலத்தின் மத்தியில் சபைஎடுத்துக் கொள்ளப்படும்

உபத்திரப காலத்தின் மத்தியில் சபை எடுத்துக் கொள்ளப்படும் என்ற கொள்கையுடையோர், உபத்திரப காலத்தின் மத்தியில் சபை எடுத்துக் கொள்ளப்படும் என்று நம்புகிறார்கள். இவர்கள் 42 மாதம் உபத்திரபகாலம் என்று தானியல் (e.g., Dan 7, 9, and 12; Rev 11 and 12)புத்தகத்தில் கூறிய 7வாரங்கள் எனபதை விசுவாசித்து அதன் ½ பகுதியாகிய காலத்தை ஏற்றுக்கொள்ளிறார்கள். முழு உபத்திரபகாலத்தில் இறுதி அரைப்பகுதியே மகா உபத்திரப காலம் என் நம்புகிறார்கள். (Rev 16—18)
7 வாரத்தில் முதல் அரைப்பகுதியில், சபையானது உலகத்தில் இருக்கும் என்றும், அவர்கள் அந்திக்கிறிஸ்த்துவுக்கு சாட்சியாக இருப்பார்களென்றும், அவனுடையகையின்கீழ் உபத்திரப்ப் படுவார்கள் என்றும் நம்புகிறார்கள், ஆனால் சபையானது நியாயத்தீர்ப்புக்காலத்திற்குமுன்பு வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நம்புகிறார்கள். அதன்பின்பதான் கர்த்தருடைய கோபம் உலகத்தின்மீது ஊற்றப்படும் என்று நம்புகிறார்கள்.

உபத்திரப காலத்தின் பின்பு எடுத்துக் கொள்ளப்படுதல்

உபத்திரப காலத்தின் பின்பு எடுத்துக் கொள்ளப்படுதல் என்னும் கொள்ளையுடையோர், இரண்டாம் வருகையும் எடுத்துக் கொள்ளப்படுதலும் ஒரேநேரத்தில் இடம்பெறும் என்ற கொள்ளையுடை யவர்களாகும்.இக்கொள்ளையுடையவர்கள், 7 வருட உபத்திரபகாலத்தை சபையானது சந்திக்கவேண்டும் என்றும், கர்த்தருடைய நியாயத்தீர்ப்புக்கு முன்பு சபையானது வானத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், அத்துடன் உடனடியாகவே அவர்கள் யாவரும் இயேசுக்கிறிஸ்துவுடன் நியாயத்தீர்ப்புக்காக கர்த்தருடன் திரும்பி வருவார்கள் என்றும் நம்புகிறார்கள்.யோவான் 16: 33 க்கருத்தில’கொண்டே இதனை அவர்கள் கூறுகிறார்கள்.( Joh 16:33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். ) ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். 1Th 4:16 -17அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள். அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களைப் பூமியின் கடைமுனை முதற்கொண்டு, வானத்தின் கடைமுனைமட்டுமுள்ள நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார். Mar 13:26 -27

 

ஆனந்த பரவசத்துடன் பரலோகம் செல்லுதல்(றப்சர்)

ஆனந்த பரவசத்துடன் பரலோகம் செல்லுதல் என்பது நாங்கள் அறியாத்து அல்ல. ஏற்கனவே வேதாகமத்தில் இது குறித்து நாம் வாசித்து அறிந்துள்ளோம்.. மூன்று நிகழ்வுகள் இதுகுறித்துவேதாகமத்திலிருந்து கூறமுடியும்.
1. முதலாவது ஆனந்தபரவசத்தில் பரத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டவர் ஏனோக்கு என்பவராகும். (Gen 5:24 ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார். )
2. இரண்டாவதாக தீர்க்கதரசி எலியா ஆனந்தபரவசத்தில் பரத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டவராகும்.( 2Ki 2:11 அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான். )
3. மூனறாவதாக மரித்து உயித்தெழுந்த இயேசுக்கிறிஸ்து ஆனந்தபரவசத்தில் பரத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்.( Act 1:9 இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. Act 1:10 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று: Act 1:11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.

 

நாம் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவை நாம் சந்திக்க ஆயத்தப்படுவோமா? அவருடைய வருகை அதிசீக்கிரமாகவிருக்கின்றது. உலகில் நடைபெறும் பூமியதிர்ச்சிகள்,கொள்ளைநோய்கள், கொலைகள், நாட்டுக்கு விரோதமாக யுத்தங்கள், சுனாமிகள்,வெள்ளப்பெருக்குகள், பசிபட்டினிகள் இதனை வெளிப்படுத்துகின்றன.
மனம்திரும்புவோம், இயேசுவை ஏற்றுக் கொள்ளுவோம்,கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தப்படுவோம்.
உங்கள் யாவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள், கர்த்தர் உங்களோடு இருப்பாராக.
நன்றி
திராணி.
Sponsored content

இயேசுக் கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தப்படுவோமக! Empty Re: இயேசுக் கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தப்படுவோமக!

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum