தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இஸ்ரேல் மீது கர்த்தரின் தீர்ப்பு – ஆமோஸ் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இஸ்ரேல் மீது கர்த்தரின் தீர்ப்பு – ஆமோஸ் Empty இஸ்ரேல் மீது கர்த்தரின் தீர்ப்பு – ஆமோஸ்

Sat Feb 13, 2016 8:59 am
☀ இப்புத்தகம் மூல மொழியாகிய எபிரேயத்தில் “ah-mohs (amos)” என்றழைக்கப்படுகிறது. ☀ ஆமோஸ் என்பதற்கு “பாரமாக இருப்பது” அல்லது “பாரத்தை சுமப்பது (Carried)” என்று அர்த்தம். ☀ இப்புத்தகம் எபிரேய மற்றும் இலத்தீன் வேதாகமங்களில் மூன்றாவதாகவும், கிரேக்க வேதாகமத்தில் இரண்டாவதாகவும் “சிரிய தீர்க்கதரிசிகள்” வரிசையில் இடம்பெறுகிறது. 

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 30-வது புத்தகமாக வருகிறது. ☀ வேதாகமத்தில் இடம்பெறும் தீர்க்கதரிசனங்களுள், ஆமோஸ் உரைத்த தீர்க்கதரிசனங்களே முதலில் எழுத்து வடிவம் பெற்றதாகும். ☀ ஆடு மேய்க்கிறவரும் காட்டத்தி பழங்களைப் பொறுக்குகிறவருமாக இருந்த ஆமோஸையே கர்த்தர் அழைத்து, ஆமோஸின் சொந்த ஜனமாகிய யூதாவுக்கு மட்டுமல்ல முக்கியமாக வடக்கு ராஜ்யமாகிய இஸ்ரவேலுக்கு எதிராக தீர்க்கதரிசனம் உரைக்கும்படி அனுப்பினார். ☀ 2 இராஜாக்கள் 17:13,22,23-ல் குறிப்பிடப்பட்ட தீர்க்கதரிசிகளில் இவரும் ஒருவர். 

☀ இவர் யூதாவிலிருந்த தெக்கோவா ஊரைச் சேர்ந்தவர். இது, எருசலேமுக்கு தெற்கே சுமார் 16 கிலோமீட்டர் தொலைவிலும் பத்து கோத்திர ராஜ்யமாகிய இஸ்ரவேலின் தெற்கு எல்லையிலிருந்து ஏறக்குறைய ஒரு நாள் பயண தூரத்திலும் இருந்தது. (ஆமோ.1:1;7:14,15). ☀ இஸ்ரவேலின் வடபகுதியான ராஜ்யத்தின் மேல், அவர்களுடைய மெத்தனமான திருப்தி, விக்கிரகாராதனை, எளியவர்களை ஒடுக்குதல் ஆகியவற்றுக்காக அவர்கள் மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் கூறும் படியாகவே எழுதப்பட்டது. ☀ ஆமோஸ் இஸ்ரவேலின் அயல் நாட்டவர்மேல் கர்த்தரின் நியாயத்தீர்ப்பை அறிவித்துவிட்டு, இறுதியாக இஸ்ரவேலின்மேல் தீர்க்கத்தரிசனம் சொல்கிறார். 

☀ இஸ்ரவேலின் பாவங்களை அவர் கடுமையாகக் கண்டிக்கிறார். குறிப்பாக, அவர்களிடையே காணப்பட்ட அநீதி, நிர்வாகச் சீர்கேடு, பேராசை, பொய்யான விக்கிரக ஆராதணை ஆகிய பாவங்களை கண்டிக்கிறார். ☀ பத்து கோத்திர ராஜ்யத்தார் தமஸ்குவுக்கு அப்பால் நாடு கடத்தப்படுவர் என ஆமோஸ் தீர்க்கதரிசனம் உரைத்தார். ☀ இஸ்ரவேலைச் சுற்றியிருந்த எதிரிகளான சீரியர், பெலிஸ்தர், தீருதேசத்தார், ஏதோமியர், அம்மோனியர், மோவாபியர் ஆகிய அனைவரும் அழிவின் அக்கினியால் சுட்டெரிக்கப்படுவார்கள் என்றும் ஆமோஸ் முன்னறிவித்தார். ☀ யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும் இஸ்ரவேலின் ராஜாவான யோவாசின் குமாரனாகிய இரண்டாம் யெரொபெயாமின் நாட்களிலும், அசாதாரணமான ஒரு பூமியதிர்ச்சி உண்டாவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவும் இவர் தீர்க்கதரிசியாக தன் ஊழியத்தை ஆரம்பித்தார் என இவருடைய தீர்க்கதரிசனத்தின் முதல் வசனம் கூறுகிறது. ☀ ஆகவே இவருடைய தீர்க்கதரிசனம், இவ்விரண்டு அரசர்களின் ஆட்சிகளும் ஒன்றாக இருந்த காலமாகிய கி.மு. 829-லிருந்து சுமார் 804 வரையான 26 ஆண்டு காலப்பகுதியில் உரைக்கப்பட்டிருக்க வேண்டும். 

☀ உசியாவின் நாட்களில் ஏற்பட்ட பெரும் அழிவுண்டாக்கிய பூமியதிர்ச்சியைப்பற்றி சகரியா தீர்க்கதரிசி குறிப்பிடுகிறார். அந்தச்சமயத்தில் ஜனங்கள் பயத்தில் தப்பியோடினர். (சக.14:5) ☀ உசியா துணிகரமாய் ஆலயத்தில் தூபம் காட்ட முயற்சி செய்தபோது ஒரு பூமியதிர்ச்சி உண்டானது என்று யூத சரித்திராசிரியர் ஜொஸிபஸ் கூறுகிறார். எனினும், ஆமோஸ் குறிப்பிட்ட இந்தப் பூமியதிர்ச்சி உசியாவின் ஆட்சியின் ஆரம்பத்தில் உண்டானது என தோன்றுகிறது. ☀ இஸ்ரவேலின் ஆடம்பர வாழ்க்கையை ஆமோஸ் கண்டனம் செய்தார். ஏனெனில் செல்வந்தர், ‘யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட தங்கள் வீடுகளைக்’ கட்டுவதற்காக தரித்திரரை வஞ்சித்தார்கள்; அந்த வீடுகளில் அவர்கள் மதுபானம் குடித்து, வெறித்து விருந்துண்டார்கள். (ஆமோ.3:15;5:11, 12;6:4-7) ☀ இந்த ஆடம்பர வாழ்க்கைக்கான அத்தாட்சிகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சமாரியாவை தோண்டி ஆராய்ந்ததில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட மிகுதியான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ☀ மொத்தம் 9 அதிகாரங்களும், 146 வசனங்களையும் கொண்டுள்ளது.

 ☀ 5-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 4-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது. ☀ “கர்த்தராகிய பேரரசர்” என 21 தடவை குறிப்பிடுகிறார். ☀ யோனா மற்றும் ஓசியா ஆகிய தீர்க்கதரிசிகள், ஆமோஸின் காலத்தில் வாழ்ந்த மற்ற தீர்க்கதரிசிகளாவர். ☀ அப்போஸ்தலர் 7:42,43-ல் ஸ்தேவான் ஆமோஸிலிருந்து மூன்று வசனங்களை சுருக்கிக் கூறுவதும், அப்போஸ்தலர் 15:15-18-ல் யாக்கோபு இதிலிருந்து மேற்கோள் காட்டுவதும் குறிப்பிடத்தக்கது. (ஆமோ.5:25-27;9:11,12). ☀ இப்புத்தகம் கடவுளின் நித்திய நேர்மையை வலியுறுத்துகிறது. கர்த்தர் பரிசுத்தராய் இருப்பதனால், அவருடைய ஜனங்களும் பரிசுத்தமாய் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum