தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கிறிஸ்துவின் மத்தியஸ்தம் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்துவின் மத்தியஸ்தம் Empty கிறிஸ்துவின் மத்தியஸ்தம்

Thu Feb 11, 2016 12:28 pm
நம்மை பரிசோதனை செய்யும் நேரமிது. நம்முடைய அழைப்பிதனையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாய் இருங்கள்.(2பேதுரு 1: 10).பேதுரு இதனை சொல்லும் பொழுது தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவின் மூலம் விசுவாசத்தினுடைய அடிதளத்தை நாம் கூட்ட வேண்டும். (அதாவது தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையை புரிந்து கொள்ளவேண்டும்) அதனோடு தைரியம் ‚ (ஆவிக்குரிய பலன்) தைரியத்தோடே ஞானத்தையும் ‚ஞானத்தோடே இச்சை அடக்கத்தையும் ‚ இச்சை அடக்கத்தோடே பொறுமையும் ‚பொறுமையோடே தேவ பக்தியையும் ‚ தேவ பக்தியோடு சகோதர சிநேகத்தையும் ‚ சகோதர சிநேகத்தோடு அன்பையும் கூட்டி வழங்குதல். பவுல் கூறுகிறார் ‚மேற்சொன்ன இவைகள் யாவும் இல்லாதிருந்தால் நாம் ஒன்றுமேயில்லை.

பேதுரு நமக்கு சொல்லும் போது ‚இவைகள் இல்லாதவன் எவனோ அவன் முன் செய்த பாவங்களற தாம் சுத்தரிக்கப்பட்டதை மறந்து கண் சொருகி போன குருடனைப் போல இருக்கிறான். அதாவது அவன் ஒரு உண்மையான மாயமற்ற மறுபடியும் பிறந்த கிறிஸ்தவன் அல்ல. அவன் சபையில் ஒருவேளை தசம பாகம் கொடுக்கலாம் ‚ பாடல் பாடலாம்‚ ஆராதனைக்கு ஒழுங்காக பங்கு கொண்டு இருக்கலாம்‚ ஒருவேளை அவன் ஊழியம் கூட செய்து கொண்டு இருக்கலாம்‚ ஆனால் மேற்சொன்ன இவைகளில் இல்லாதவன் எவனோ அவன் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தையோ‚புதிய பிறப்பினையோ பெறாமல் இருக்கிறான். இயேசு சொன்னார் பரிசுத்த ஆவியானவர் (வல்லமை அல்ல) அவர் வரும் போது சகல சத்திய வழியிலும் நடத்துவார்.(யோவான் 16 : 13) (அல்லது) இது இல்லாதவன் ஒரு கிறிஸ்தவன் ஆக முடியாது.இந்த அறிவு இருக்கும் போது கிருபையும் சமாதானமும் பெருகும்.

அறிய வேண்டிய காரியங்கள் இந்த காலங்களில் நிறைவேறும் பொழுது நமக்குள்ளாய் காணப்படும் பயங்கள் நம்மை விட்டு அகன்று போகிறது.தேவனுடைய சமாதானத்தை இந்த சத்தியத்தை அறியாத மனிதனால் புரிய முடியாது. ஆகையால் ஒரு மாயமற்ற கிறிஸ்தவனாக இருக்கின்றவனுடைய சாட்சி, அவன் இந்த நாளுக்குரிய தேவனுடைய எல்லா வார்த்தையின் வெளிப்பாட்டை புரிந்து கொண்டு இருக்கிறான்.கர்த்தர் இப்பொழுது என்ன செய்துக் கொண்டு இருக்கிறார் இனி எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறார் என்பதையும் பரிபூரணமாக புரிந்து கொள்கிறான்.ஆகையால் கிறிஸ்துவின் சிந்தையானது உங்களுக்குள் இருக்கும் போது கர்த்தர் உரைக்கிறது என்ன என்பதை உஙகளால் கண்டு கொள்ள முடியும்.யாக்கோபு இதை குறித்து சொல்லும்போது ‚இப்படிப்பட்ட காரியம் உங்களுக்கு உண்டாயிருந்தால் திரு வசனம் கேட்கிறவர்களாய் மாத்திரம் அல்ல அதன் படி செய்கிறவர்களாய் இருங்கள் என்று கூறுகிறான். அப்படிப்பட்டவர்கள் தான் சத்தியத்தை அங்கரிப்பார்கள் (பரிசுத்த ஆவி அருளப்பட்டவர்கள்) தேவன் மட்டுமே சத்தியத்தை எழுத முடியும்.

1.யோவான் 1:7 வசனத்தின் படி அவர் ஒளியில் இருக்கிறது போல நாம் ஒளியில் நடந்தால் ஒருவரோடு ஒருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கி நம்மை சுத்தகரிக்கும். தேவன் இப்பொழுது வெளிப்படுத்துகிற வெளிச்சத்தை நம்முடைய வாழ்க்கையில் வெளிப்படுத்தாமல் இருந்தால் நம்மால் இரத்தத்தின் கீழ் வர முடியாது. (மறுபடியும் பிறத்தல்) உண்மையான ஐக்கியத்தை கண்டு கொள்ள முடியாது. நாம் இந்நாளுக்குரிய செய்தியை நாம் ஏற்று கொள்ளாமல் போனால் நாம் கிறிஸ்துவர்கள் அல்ல‚ மேலும் தேவனால் அழைக்கப்பட்டவர்களும் அல்ல. ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் தான் சாட்சி. இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரு மனிதனுடைய அந்த நாளுக்குரிய வெளிபாடுகளை குறித்து தேவன் வெளிப்படுத்துவார். அந்த காரியங்கள் அவனுடைய வாழ்க்கையில் நிறைவேறுகிறதையும் காண்பீப்பார். அது இப்போது உள்ள சத்தியத்தின் படி அவனுடைய வாழ்க்கை ஒரு நிருபங்களாக காணப்படும்.இயேசு இப்போது என்ன செய்கின்றார்.

கடந்த வாரத்திலே நான் எமது அலைவரிசை வழியாக சில நேயர்களிடம் பேசி கொண்டிருந்த போது அதில் ஒருவர் சொன்னார் “ ஒரே ஒரு மத்தியஸ்தர் தேவனுக்கும் மனிதர்களுக்கும் இடையில் இருக்கிறார். அந்த மனிதர் இயேசு கிறிஸ்து. அவர் எப்பொழுதும் மத்தியஸ்தராயிருக்கிறார் ” (நீங்கள் உங்கள் வேதாகமத்தில் 1 தீமோத்தேயு 2 : 5 னை வாசிக்கும் பொழுது கிறிஸ்துவுடைய மத்தியஸ்தர் ஊழியத்தை குறித்து படிக்க முடியும்.) நான் அந்த சகோதரிக்கு சொன்னேன் இது வேதகாம போதகம் கிடையாது. நாம் 1 தீமோத்தேயு 2 : 5 ஐ வாசிக்கும் போது “ தேவன் ஒருவரே, இரண்டு அல்ல மூன்று அல்ல, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தர் ஒருவரே” ‚கிறிஸ்து எப்பொழுதும் நமக்காக பரிந்து பேசமாட்டார். ஆகையால் நான் இப்போது கிறிஸ்து மத்தியஸ்தர் அல்ல என்று சொன்னேன். 1963 - ல் ஏழாவது சபையின் காலங்களின் முடிவிலே ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டு முடிவடைந்ததால் ‚ அவர் மத்தியஸ்தர் கிடையாது.

கிறிஸ்தவர்களாகிய நாம் விசுவாசத்தோடு வாழ்ந்தால் அதோடு இப்போதைய சத்தியத்தை சரியாக புரிந்துக் கொண்டால் இயேசு இப்போது என்ன செய்துக் கொண்டு இருக்கிறார் என்பது புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் அவர் எதை செய்வதாக இருந்தாலும் அவரால் நமது விசுவாசத்தின் மூலமாகவே செய்ய முடியும். இயேசு கிறிஸ்துவை ஒருவர் நேசிக்கிறார் என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்றால் அவர்கள் தேவனுடைய வார்த்தையை வாசிப்பார்கள். விசுவாசம் இல்லாமல் அவர்களால் கிறிஸ்தவர்களாய் இருக்க முடியாது. மேலும் அவர்கள் தேவனுக்கும் பிரியமாய் இருக்க முடியாது.

நாம் இப்பொழுது நம் இயேசு கிறிஸ்து மத்தியஸ்தராய் இருக்கிறார் என்று கற்பனை செய்வோமானால் நாம் அவர் காண்பிக்காததை நம்மால் அறிய முடியாது. நாம் ஒரு வேளை நம்முடைய இதயத்தில் முழு இருதயத்தோடு இயேசுவை நேசிக்கலாம். ஆனால் அவர் என்ன செய்துக் கொண்டு இருக்கிறார் என்பதை அறியாமல் போனால் அவருடைய அன்பை நாம் பெற முடியாது. உறவு முறை என்பது புரிந்து கொள்ளாதது அல்ல. ஆனால் நாம் ஒரு புறம் தத்துவ ரீதியில் விசுவாசிப்போமானால், கிறிஸ்துவுடைய சிந்தை இல்லாமல் நாம் கிறிஸ்தவர்கள் ஆக முடியாது. இப்பொழுது நம்மை பரிசோதனை செய்கிற நேரம் “அழைப்பையும் தெரிந்துக் கொள்ளுதலையும் உறுதியாக்கும் படி ஜாக்கிரதையாக இருங்கள்” (2 பேதுரு 1 : 10).

சபை அல்லது கிறிஸ்துவுடைய சரீரமானது தேவனுடைய ஆவியினால் நடத்தப்பட்டு அதற்கு அவரே தலை, தேவன் வார்த்தையாக இருக்கிறார். நாம் கிறிஸ்துவுடைய சரீரமாக இருந்தால் நமக்குள்ளே போதுமான விசுவாசம் இருக்கும் அல்லது புரிந்துக் கொள்ளுதல் இருக்கும் நாம் எல்லோரும் இயேசு இப்பொழுது என்ன செய்கிறார் என்பதை அறிந்துக் கொள்ளுகிறோம். நாம் இயேசு என்ன செய்கிறார் என்பதை அறியாமல் இருந்தால் நாம் அவரை அறிய முடியாது. அவருக்கு சேவை செய்ய முடியாது. அவருடைய சரீரத்துக்குள் ஞானஸ்நானம் பெற முடியாது. நாம் மறுபடியும் கிறிஸ்துவர்களாய் இருக்க முடியாது. நமக்குள்ளே கிறிஸ்துவுடைய சிந்தை இருக்க வேண்டும். அவருடைய சிந்தை ஒரு போதும் குழப்பமானது அல்ல அது யூகித்து செய்வதும் அல்ல ஆனால் விளங்காததும் புரிந்துக் கொள்ளாததும் அல்ல. அவருடைய வார்த்தை என்ன செய்கிறது என்று அறியும் பொழுது அவர் என்ன செய்கிறார் என்பதை அறிந்து இருக்கிறோம் (1.கொரிந்தியர் 14 :Cool. ஆகையால் நீங்கள் விசுவாசம் உள்ளவர்களா என்று உங்களை “ நீங்களே சோதித்து அறியுங்கள்”. இயேசு கிறிஸ்து உங்களுக்குள் இருக்கின்றாரா என்று உங்களை நீங்களே அறிகிறீரகளா” ( 2. கொரி 13 :5) உங்களுடைய விசுவாசம் குறையும் பொழுது நீங்கள் தேவனுடைய தேவைக்கேற்றவாறு ஆயத்தமாகி அவர் உங்களை சரி செய்வதற்காக அவரை புரிந்து கொண்டு அவர் சரி செய்வதற்கு விட்டு கொடுங்கள்.

நாம் கீழ்வரும் 5 கேள்விகளை ஆராய்வோம்

மத்தியஸ்தர் என்றால் என்ன?
இயேசு ஏன் ஒரு மத்தியஸ்தர் ஆனார்?
எப்பொழுது இயேசு மத்தியஸ்தர் ஆனார்?
யாருக்காக இயேசு மத்தியஸ்தர் ஊழியம் செய்தார்?
அவருடைய மத்தியஸ்தர் ஊழியம் எப்பொழுது நிறைவேறிற்று?
1. மத்தியஸ்தர் என்றால் என்ன?


ஒரு மத்தியஸ்தர் ( இடையில் ) என்பவர் நடுவில் இருத்தல். அதாவது இரண்டு நபர்களுக்கு இடையில் ஒப்பந்தம் இல்லாமல் இருக்கும் பொழுது அவர்களுக்கு இடையில் இருப்பவர் தான் மத்தியஸ்தர். இரண்டு நபர்களுக்குள் பிரச்சனை இருக்கும் பொழுது அந்த இரண்டு நபர்களுக்கு “ இடையே உள்ள” பிரச்சனையை தீர்க்க அவர்களுக்கு இடையே நிற்ப்பது தான் மத்தியஸ்தர். எந்த ஒரு புறமும் சாயாமல் அந்த ஒப்பந்தத்துடைய அடிப்படையில் மறுபடியும் புதிப்பித்தல்.


ஒரு மத்தியஸ்தர் இரண்டு நபர்களுடைய பலவீனங்களையும், தேவைகளையும் அறிந்து அந்த ஒப்பந்தத்தின் உடன்படிக்கையின் படி நம்பிக்கையின் பாத்திரவானாக இருக்கிறார். வேதகாமம் கூறுகிறது“ நம்முடைய பலவீனத்தை குறித்து பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப் போல், சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராய் இருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கிருக்கிறார் ( எபிரெயர் 4 : 15) . அவர் அந்த வார்த்தைக்குரிய உடன்படிக்கையின்படி நம்பிக்கை உடையவராய் இருந்தார், அவர் வார்த்தையானவராய் வெளிப்பட்டு அந்த ஒப்பந்தத்தை அவருடைய சுய இரத்தத்தினால் அதை உறுதிப்படுத்துகிறார். தேவனுக்கும் மனிதனுக்கும் ஒரே ஒரு மத்தியஸ்தராய் இருக்க அவர் தம்மை தகுதியுள்ளவராய் ஆக்குகிறார். ஆகவே அவர் ஒரு நடு மயமான மத்தியஸ்தராக இருக்கிறார். இயேசு தேவனுடைய சிருஷ்டிராக இருக்கிறார். தேவன் தம்மில் தாமே சிருஷ்டிப்பில் ஆரம்பமாக இருக்கிறார். தேவனுடைய சிருஷ்டிப்புக்கு ஆதியும் ஆனவர். (வெளி 3:14)


இயேசுவானவர் தேவனுக்கும் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கிடையே வருகிறார். அவர்கள் அவருடைய மாறாத வார்த்தைக்கு ஒப்பந்தமில்லாமல் இருந்தார்கள். தேவன் வார்த்தையாக இருக்கிறார் இயேசு அந்த வார்த்தையாக மாமிசத்தில் கன்னி பிறப்பின் மூலமாக நம்முடைய மீட்பின் இரட்சகராக வெளிப்பட்டார்.


சபையின் காலம் பரிசுத்த வான்களுக்கு எது கொடுக்கப்படவில்லையோ அவைகளையெல்லாம் அறியாமல் இருந்ததால் தவறாக இருந்தது. ஆனால் நீண்ட காலமாக வேதகாமமானது முத்தரிக்கப்பட்டு அவர்களுடைய காலத்துக்கேற்றவாறு வார்த்தையானது வெளிப்பட்டது. இயேசு மத்தியஸ்தராக இடைப்பட்டு அவர்களில் மத்தியஸ்தராக வெளிப்பட்டு தேவனுடைய இந்த காலத்துக்குரிய இப்போதைய சத்தியத்தை பெற்றுக் கொள்ளவும், அவர்கள் விட்டு வந்ததை அவருடைய இரத்தத்தின் மூலமாக பரிபூரணமடைவதன் மூலம் அவர்கள் மறுபடியும் பிறந்தவர்களாய் இருந்தார்கள்.

2. ஏன் இயேசு மத்தியஸ்தர் ஆனார்? ஏன் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு மத்தியஸ்தர் தேவை ?

வேறுவிதமாக கூறினால் ஏன் எல்லா சபை காலத்திலும் பரிசுத்தவான்கள் தவறாக இருந்தார்கள். தேவனுடைய வார்த்தையின் முழுமையானதை பெற்றுக் கொள்ளாததினால் தவறாக இருந்தார்கள். ஏன் என்றால் வேதகாமம் முழுவதும் ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்டு இருந்தது. முடிவு வரும் வரையில் முத்தரிக்கபட்டது. (தானியோல் 12:4,9 வெளி 10:4) முடிவின் நேரமானது வந்த பொழுது கிறிஸ்து அவருடைய மத்தியஸ்த ஊழியமானது முடிவடைகிறது. கடைசி காலத்தின் சபைக்கு அவருடைய மத்தியஸ்தம் கடைசியாக முன் குறிக்கப்பட்ட பரிசுத்தவான் வரும் போது மத்தியஸ்த ஊழியம் முடிவடைகிறது.
மீட்பின் புத்தகத்தை குறித்து முப்பர்களுடைய அழைப்பிதலின் பதில், மற்றும் மீட்பின் புத்தகத்தை மீட்குதல், முத்திரைகள் உடைக்கப்பட்டது. ஏழாம் தூதனுக்கு இரகசியம் வெளிப்பட்டது, அல்லது கிறிஸ்துவுடைய கடைசி கால இரகசியம் வெளிப்பட்டது.
கிறிஸ்துவானவர் நீண்ட காலமாக முத்தரிக்கப்பட்டு விடுப்பட்ட எல்லாவற்றிற்கும் மத்தியஸ்தராக இருக்கிறார் பெந்தகோஸ்தேயிலிருந்து லவோதிக்க சபை கால முடிவு வரையிலும் கிறிஸ்துவானவர் ஒரு மத்தியஸ்தராக தேவனுக்கும் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கும், விசுவாசத்தில் ஒப்பந்தம் இல்லாத இருந்தவர்களுக்கும் இருக்கிறார். ஏனென்றால் மீட்பதற்காக வந்தார் நீண்ட காலமாக பரிசுத்த வேதகாமம் முத்தரிக்கப்பட்டு இருந்தது அவருடைய வார்த்தையின் பாகமாக அவர்கள் இருந்தார்கள். கிறிஸ்து அந்த புத்தகத்தை வாங்குவதற்கு முன்பாக பரிசுத்தவான்கள்; விசுவாசிப்பதிலும், போதிப்பதிலும், குறைவாக இருந்தார்கள். ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டு அவருடைய இரகசியம் அவரால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. மனிதன் தவறிலே விழுந்தான் தம்முடைய சொந்த சிந்தையினாலும் சொந்த காரணங்களினாலும், வார்த்தையின் பாகத்தை கலப்படம் செய்ததினால் மனிதன் தவறிலே விழுந்தான். ( 1 கொரி 13 :10, கலாத் 1:8,9, வெளி 22 : 8, 19) ஏன் கிறிஸ்து மத்தியஸ்தராய் இருந்தார், ஏன் சபையின் காலங்களில் பரிசுத்தவான்கள் தவறாக இருந்தார்கள் என்பதை இவைகள் நமக்கு விளக்குகிறது. Stature of the Perfect Man பெந்தகோஸ்தேயின் ஆரம்ப காலத்தில் யூத முறைமைகள் தூய்மை ஆக்கப்படாத சரீரங்களாக ஆரம்பம் ஆனது. (அப் 15, கலாத் 4, தீத் 1:14) எபேசுவின் காலத்தில் பரிசுத்தவான்கள் ஆதி அன்பை விட்டார்கள் . வார்த்தையை அவர்கள் விட்ட பொழுது நிக்கோலாய் மதத்தின் கொள்கைகள் ஆரம்பமானது. அது தேவனுக்கும் மனிதனுக்குமிடையே அது தவறுதலான கொள்கையாக இருந்தது. அவைகள் பெர்கமு சபையில் அந்த கொள்கைகள் உபதேசங்களாக உருவெடுத்தது. யூதேய ரோமன் கத்தோலிக்க சபையை நிறுவின பொழுது அது முதலாம் நிசயா ஆலோசனை சங்கமாக மாறினதும் மற்றும் ஆரம்பத்தில் கிறிஸ்தவர்களை அவர்கள் கொல்ல ஆரம்பித்தார்கள் மற்றும் அவர்கள் திருத்துவ தேவர்களையும், தவறான ஞானஸநானத்தையும் மூன்று பெயர்களில் கொடுத்தார்கள். பரிசுத்த வான்களின் இருதயத்திலிருந்து விசுவாசம் போனது, தவறான சபையினால் அவர்கள் கொல்லப்பட்டார்கள். தியத்திரா சபையின் காலத்தில் (606) மேற்கத்திய உலகத்தில் இருண்ட காலம் வந்தது. இந்த காலக்கட்டங்களில் பரிசுத்தவான்கள் இஸ்ரவேலராக மாறினார்கள். மூன்று சபை காலங்களில் வார்த்தையின், பாகமானது கத்தோலிக்க முறைமையின் படி தவறுதலான ஆராதனை கொள்கைக்கு உட்படுத்தப்பட்ட்து. தீர்க்கதரிசிகள் இல்லாமல் சீர்திருத்த வாதிகள் மட்டுமே சபைக்கு வந்து உபதேசம் செய்து ஸ்தாபனம் ஆக்கிக் கொண்டு முதலாம் ஆலோசனை சங்கத்தில் ஸ்தாபனம் ஆக்கி அங்கே இருந்த தவறுகள் எடுத்து கூறாதனால் அவர்கள் விழுந்தாரகள். அவர்கள் இயேசு கிறிஸ்து ஒரே ஒரு சபையை மாத்திரம் அங்கீகரித்ததை ஏற்று கொள்ளவில்லை. அந்த சபையை அவர் பெந்தகோஸ்தே நாளில் ஏற்படுத்தினார். கடைசி கால சபைகளில் விசுவாசத்தின் மூலம் கிருபையால் நீதிமான் ஆக்கப்படுதல், (கிரியைகளினால் அல்ல) வெளிப்பாட்டின் மூலம் பரிசுத்தமாக்கப்படுதல் (அல்லது வார்த்தையின்படியான பரிசுத்தம்) மற்றும் பரிசுத்த ஆவியினுடைய அபிஷேகம், பரிசுத்த ஆவியினுடைய ஞானஸ்நானம் இவைகள் எல்லாம் மறுபடியும் புதுப்பிக்கப்படுதல் பெந்தகோஸ்தேயில் மற்றும் ஏழு கால சபைகளில் கிறிஸ்துவானவர் வார்த்தையின் பரிபூரணமாய் இருந்தார். வார்த்தையின் பாகமாக முன் குறிக்கப்பட்டவருக்கு ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு தூதனுடைய செய்தின் மூலமாக அவர்களோடு இடைப்பட்டு அவர்கள் விட்டு வந்த முறைகைள், தவறுதலை, சுட்டிகாட்டி அவருடைய இரத்தத்தினால் அவர்களுக்கு வெளிப்பட்டார். விசுவாசத்தின் பொறுமையால் வாழும் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் தெரிந்து கொள்ளுதலின் படி அவர்கள் நிருபங்களாக எழுதப்பட்டு அவர்கள் மறுபடியும் பிறந்தார்கள். தேவ கிருபையால் அவர்கள் விட்டு வந்த எல்லாவற்றையும் பெற்று அவர்கள் கிறிஸ்தவர்களாய் மறுபடியும் பிறந்தார்கள் (2. பேதுரு 1 :12)

3. எப்பொழுது இயேசு மத்தியஸ்தர் ஆனார் ?


நல்ல கேள்வி அவர் இந்த பூமியில் இருந்த பொழுது மத்தியஸ்தராக இல்லை. “இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு இல்லை” (எபிரெயர் 9 : 22) கல்வாரிக்கு முன்பால் இயேசு தீர்க்கத்தரிசியாக இருந்தார் . அப்பொழுது அவர் பிரதான ஆசாரியாராக இல்லை அல்லது நம்முடைய ராஜா மற்றும் இரட்சகராக இருந்தார்.


மனுஷ குமாரனாக தேவன் தீர்க்கத்தரிசியாக மனுஷ குமாரனாக அவர் சொந்தத்தில் வந்து தம்முடைய மணவாட்டிக்காக சிலுவையில் தொங்கினார். பெந்தகோஸ்தே நாளில் தேவ குமாரனாக இருந்தார், (பாரா கிளாக்டஸ்), சபை பரிசுத்தவான்களுக்கு மத்தியஸ்தர் ஆனார் அல்லது பரிந்து பேசுகிறவராய் ஆனார். கடைசி காலத்தின் லவோதிக்க சபையின் முடிவில் ( 1906 - 1965) மாமிசத்திற்கு உள்ளே இருந்து கிருபையினால் பாவிகளை இரட்சித்து, இருதயத்தின் காரியங்களை வெளிப்படுத்தி, நோயாளிகளை குணப்படுத்தி, மரித்தோரை எழுப்பி, இயேசு கிறிஸ்து மனுஷ குமாரனாக மறுபடியும் தம்மை வெளிப்படுத்தினார். நேற்றும் , இன்றும், என்றும் மாறாதவராக (லூக் 17 : 30 ஆதி 18, எபி 4:12)லவோதிக்காவிற்கு பிறகு ஏழு முத்திரைகளுக்குரிய வெளிப்பாடானது, கிறிஸ்துவை வார்த்தையின் வடிவில் இந்த பூமிக்கு மனுஷ குமாரன் என்ற ஊழியத்திற்கு கொண்டு வந்தார் ( வெளி 10, 1:4) (யோவான் 5:7) 
நான்கு சுவிசேஷங்களும் கிறிஸ்து மனுஷ குமாரனாக வார்த்தையின் வடிவில் இந்த பூமிக்கு வந்து லவோதிக்க சபையில் முடிப்பதாக முன் உரைக்கிறது மற்றும் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் விசுவாசத்தின் ஒரு மனப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. இன்று இயேசு மத்தியஸ்தர் அல்ல. ஆயிர வருட அரசாட்சி தொடக்கத்தில் தம்முடைய மகிமையினால் எல்லா காலங்களின் பரிசுத்தவான்களுடன் கூட வருவார். அர்மெகாடன் யுத்தம் ஏற்படும் போது துன்மார்க்கர்கள் இருக்க மாட்டார்கள்;. அப்பொழுது அவர் தேவகுமாரனாக மத்தியஸ்தராக இருக்கமாட்டார். அதற்கு பதிலாக மனுஷ குமாரனாக நியாதிபதியாக, தாவீதின் குமாரனாக நியாதிபதியாக இருப்பார்.


சபை ஆரம்பிக்கப்பட்ட நாள் வரையில் கிறிஸ்து மத்தியஸ்தராக இருந்தார். பெந்தெகோஸ்தே நாள் முழுவதிலும் வரும் வரையிலும் அவர் மத்தியஸ்தராகவே இருந்தது இல்லை. சராசரியாக சபைக்கு செல்லுகிறவர்கள் கிறிஸ்து ஒவ்வொரு பேர்களுக்கும் மத்தியஸ்தராக இருக்கிறார் என்று நினைக்கிறார்கள். வருந்த தக்கது என்னவென்றால் சராசரி சபைக்கு செல்லுகிறவர்கள் இப்படி நினைக்க கூடாது இயேசுவானவர் எல்லாருக்கும் மத்தியஸ்தராக இருந்தது இல்லை. ஏதேன் தோட்டத்தில் மூல பாவம் ஆரம்பமானது. இந்த பூமியில் உள்ள அநேக ஜனங்கள் ஆதாமுடைய பந்தயத்தில் இல்லாமல் இருக்கிறார்கள். பலனாக அவர்களுக்கு ஒரு இரட்சகர், மீட்பர் இல்லாமல் இருக்கிறார்கள். ஏனென்றால் இயேசுவே கடைசி ஆதாம். ஆவர் கடைசி காயீன் அல்ல.


4. இயேசு யாருக்கு மத்தியஸ்தர் ஆனார்?


ஆதாமுடைய ஓட்டத்திலிருந்த அவரால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு மட்டும் மத்தியஸ்தராய் இருந்தார். யார் எல்லாம் முன் குறிக்கப்பட்டு இருந்தார்களோ அவர்களுக்கு தான் வேதகாமம் ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்டு இருக்கிறது. அப்படி என்றால் பெந்தெகோஸ்திலிருந்து லவோதிக்க சபையின் காலங்களில் மட்டுமே அவர் மத்தியஸ்தர். இன்று அவர் ஒரு மத்தியஸ்தராய் இல்லை.
நினைத்து பார்க்கமுடியாத பெயரளவு கிறிஸ்தவர் சொல்லுவார்கள் இந்த கல் தடை கல்லாக இருக்கிறது, யார் சொன்னது, இயேசு மத்தியஸ்தராய் இல்லாத இருந்தால் ஜனங்கள் எப்படி இரட்சிக்கப்படுவார்கள்? கிறிஸ்துவுடைய மத்தியஸ்தர் ஊழியம் இரட்சிப்புடன் சம்மந்தப்படவில்லை. அது மறுபடியும் பிறப்பதுடன் சம்மந்தப்பட்டு இருக்கிறது. ஓவ்வொரு தனிநபரும் ஆதாமுடைய ஓட்டத்தில் பிறந்து இருக்கிறார்கள், இரட்சிக்கப்பட்டும் இருக்கிறார்கள். ஏன் என்றால் அவர்களுடைய நாமம் ஜீவ புத்தகத்தில் இருக்கிறது அவைகள் எல்லாம் முதலாம் பரிணாம அடிப்படையில் முதலாம் ஆதாமிலிருந்து ஆபேல் தொடங்கி பெண்கள் பிறப்பில் எல்லாருக்கும் யாராக இருந்தாலும் இரட்சிப்பானது தேவனுடைய முன் அறிதலில் ஜீவ புத்தகமானது உலக தோற்றத்திற்கு முன்னதாகவே எழுதப்பட்டது. அதில் இருக்கிற ஒவ்வொரு நாமங்களையும் மீட்கும் படியாக இயேசு மரித்தார். அவர்களுடைய நாமங்கள் நீண்ட காலங்களாகவே இரட்சிக்கப்பட்டு இருக்கிறது. யாருடைய நாமங்கள் எல்லாம் இல்லையோ, அதிலிருந்து கிறுக்கப்பட்டதோ அவர்கள் அந்த புத்தகத்திலிருந்து அவர்கள் விலக்கப்பட்டார்களாக இருந்தார்கள். பழைய ஏற்பாட்டில் ஆரோன் இயேசுவைப் போல் பரிந்து பேசுகிறவனாய் இருந்தான். ஆரோன் இஸ்ரவேல் பிள்ளைகளுடைய தவறுதலையும் அவர்கள் பிள்ளைகளுடைய தவறுதலையும் அவர்கள் பிள்ளைகளுடைய அறியாமைகளுக்காகவும், அவர்களுக்காக பரிந்து பேசுகிறான். ஆரோன் எகிப்தியர்களுக்கோ , மோவாபியர்களுக்கோ, கானனியர்களுக்கோ எகிப்தியர்களில் கலந்தவர்க்ளுக்கோ அல்லது அவர்கள் பிரயாணம் பண்ணின பிள்ளைகளுக்காகவோ அவன் மத்தியஸ்தனாக இல்லை. அழைக்கப்பட்ட மக்களுக்கும் அல்லது வெளியே அழைக்கப்பட்ட ஒவ்வொருவர்களுக்கும் அவன் மத்தியஸ்தராக இருந்தான். துன்மார்க்கருக்கு ஆரோன் பரிந்து பேசினது இல்லை. அப்படியே கிறிஸ்துவானவர் புத்தர்களுக்காகவோ, முஸ்லீம்களுக்கோ, யூதர்களுக்கோ, மத்தியஸ்தர் அல்ல. தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு மட்டும் மத்தியஸ்தர் ஆவார். அவர் அவர்கள் செய்த தங்களுடைய கிறிஸ்து வாழ்க்கையில் செய்த தவறுதலுக்காகவும், மற்றும் அறியாமைக்காகவும், மற்றும் விசுவாசத்தல் தவறுகள் உள்ளவர்களுக்கு மட்டுமே பரிந்து பேசுகிறார்.


5. எப்பொழுது அவருடைய மத்தியஸ்தர் ஊழியம் நிறைவேறிற்று?


கிறிஸ்து வரும் போது எப்போதும் மத்தியஸ்தராக இருக்கமாட்டார். பரிசுத்த வேதகாமம் முழுவதும் ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்ட காலங்களில் மட்டும் அவர் மத்தியஸ்தராக இருந்தார். அவருடைய மத்தியஸ்தர் அலுவல் தேவனுக்கும் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கும் ஒப்பந்தத்தை செய்கிறது. அவருடைய மத்தியஸ்தர் ஊழியம் அவருடைய ஜெபம் கெத்சமெனேயில் உலகத்திற்கு ஜெபிக்காமால் தேவனால் வேறு பிரிக்கப்பட்ட ஜனத்திற்காக மட்டும் ஜெபித்தார். அவர்கள் எல்லாரும் ஒன்றாக இருக்கும் படிக்கு பரிசுத்த பிதாவே “ நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும், இருக்கிறது போல எல்லோரும் நம்மில் இருத்தல்”.
அந்த வார்த்தை “ஒன்று” அவர்களும் கூட நம்மில் ஒன்றாய் இருத்தல் என்பதின் அர்த்தம் பவுல் இப்படியாக அழைக்கிறான் “ விசுவாசத்தின் ஒருமைப்பாட்டில்” அல்லது ஒரே சிந்தை - இரண்டு பேர் ஒப்பந்தத்தில் இருக்கிற போது அவர்கள் இருவரும் ஒன்றாய் இருக்கிறார்கள்.
தற்பொழுது தேவன் ஐந்து விதமான அலுவல்களை ஊழியத்தில் வைத்து பலப்படுத்தி அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை விசுவாசத்தில் வளரச் செய்கிறார் அவர்கள் எப்பொழுதும் தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதான அவ நம்பிக்கைக்கு பதில் அளிக்கிறவர்க்ளாய் இருக்கிறார்கள். இந்த அலுவலர்கள் அப்போஸ்தலர், தீர்க்கத்தரிசி, சுவிஷேசகர் போதகர், மேய்ப்பன் இவர்கள் எல்லோரும் ஒரு சரீரமாக இருத்தல், நாம் விசுவாசத்தில் ஒருமை வரும் வரையில் கிறிஸ்துவுடைய ஜெபத்தை நிறைவு செய்தல். பிதா இயேசுவில் இருக்கிறது போல, அவர் பிதாவில் இருக்கிறது போல, நாமும் அவர்களில் ஒன்றாய் இருக்கிறோம்.


நான் ஒரு கருத்தை கூற விரும்புகிறேன் தினந்தோறும் நடைபெறுகின்ற வீட்டு கூட்டத்தில் பிரசன்னம் இல்லாத ஊழியரோ அல்லது மூப்பரோ இருந்தால் இப்படி சகோதரர்களை பிரிக்கிற இப்படிப்பட்ட தவறான கூட்டங்களை நீங்கள் செய்ய வேண்டாம். இவைகள் தான் ஸ்தாபனங்ளை உண்டாக்கி குழப்பங்களை உண்டு பண்ணுகிறது. தேவனுடைய மாறாத வார்த்தையை கடைப்பிடித்து நல்ல உண்மையான சத்தியத்தை கடைபிடித்து இருக்கிற மூப்பரை தவிர நீங்கள் இப்படிப்பட்ட கூட்டங்களை நடத்தகூடாது . கிறிஸ்து நீண்ட காலங்களாக மத்தியஸ்தராக இருக்கமாட்டார். பரிசுத்த வேதகாமம் ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்ட கால வரையில் அவர் மத்தியஸ்தராக இருந்தார். தானியேலும், இயேசுவும் சொன்னார்கள் முடிவுகாலம் வரையிலும், முத்தரிக்கப்பட வேண்டும். “ஏழாம் தூதன் சத்தத்தின் நாட்களிலே தேவ இரகசியம் இதுவரையில் உலகத் தோற்ற முதல் பரிசுத்த தீர்க்கதரிசிகள் உரைக்கபட்ட வார்த்தைகள் வெளிப்பட வேண்டும். (அப் 3:21, வெளி 10 :7, 1.கொரி 13: 10)


அந்த தூதன் தீர்க்கதரிசி வில்லியம் பிரண்ஹாம் என்பவரே. அவருடைய ஊழியமானது அப்போஸ்தலர் விசுவாசத்தை மறுபடியும் கொண்டு வந்தது. (மல்கியா 4 : 5, 6 மத் 17 : 11) தேவ இரகசியம் நிறைவேறினது மற்றும் இப்பொழுது உலக சபையில் இருக்கிறதான கிறிஸ்துவின் மக்கள் அவர்கள் வெளியே அழைக்கப்பட்டு (மத்தேயு 25 :16, வெளி : 18:6) விசுவாசத்தின் ஒருமைப்பாட்டுக்குள்ளாக (எபேசியர் 4 : 13)தேவனுடைய புத்தி்ரராக மாறுவதற்காகவும், வெளிப்படுத்துவதற்கும் இருக்கிறாரகள் (ரோமர் 8:10, 1 கொ 15 : 46 - 57) வெளிப்படுத்துதல் ஐந்தாம் அதிகாரத்தில் ஏழு சபையின் முடிவில் மூப்பர்கள். உறவின் மீட்பராக யார் இருக்கிறது என்று கேட்கிறார்கள். யோவான அழுகிறான் ஏனென்றால் ஒரு மனிதனும் இதற்கு பதில் கொடுப்பதற்கும் அந்த புத்தகத்தை வாங்குவதற்கும், அந்த புத்தகத்தை திறந்து பார்ப்பதற்கும் அதற்கு தகுதியான மீட்பன் இல்லாதபடியால் யோவான் அழுதான். அதற்கு ஒரு மீட்பர் இல்லாதிருந்தால் என்றைக்கோ நாம் அழிந்திருப்போம். ஆனால் இதோ யூதா கோத்திரத்தின் சிங்கம் (இயேசு கிறிஸ்து) அதற்கு தகுதிப் பெற்றுருக்கிறார். கேத்சமனே தோட்டத்தில் அதற்கு இவர் தான் பாத்திரர். யோவான் திரும்பி பார்த்த பொழுது ஒரு சிங்கமானது சிங்காசனத்தின் முன்பாக அடிக்கப்பட்ட வண்ணமாக இருக்கிற இரத்தத்தோடு நிற்கிற ஒரு ஆட்டுக் குட்டி பலிச் செலுத்துகிறதை காண்கிறான். அதுதான் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக பிரதான ஆசாரியாக எல்லா சபை பரிசுத்தவான்களின் பாவங்களுக்காக பரிந்து பேசுகிறவராக இருந்தார். ஆட்டுக்குட்டியானவர் மத்தியஸ்த ஊழியத்தை செய்தார். இனி அவர் நமக்கு நியாதிபதியாக, இராஜாதி இராஜவாக, யூதராஜ சிங்கமாக இருப்பார். வெளிப்படுத்துதல் நான்காம் அதிகாரத்தில் நாம் பார்க்கும் பொழுது ஏழு கால சபையின் காலம் கிறிஸ்துவினுடைய மத்தியஸ்த ஊழியத்துடன் ஏழு ஆவிகளால் முத்தரிக்கப்பட்டு பூமிக்கு விடப்பட்டு அவருடைய சரீரத்திற்குள்ளாக பரிசுத்தவான்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு ஆயிற்று. இனி சிங்காசனத்திற்கு முன்பாக இரக்கம், அவருடைய இரத்தம் இருக்காது. இனி அவருடைய சிங்காசனமானது நியாயசனமாக மாறி தேவனுடைய கோபம் வெளிப்பட்டு, ஏழு முத்திரைகள் அடங்கிய புத்தகத்தை பிடித்திருக்கிறார். வெளிப்படுத்துதல் ஐந்தாம் அதிகாரத்தில் கிறிஸ்து அந்த புத்தகத்தை எடுத்து எல்லா பெயர் பத்திரத்தையும் அதில் எழுதப்பட்ட எல்லாவற்றையும் அவர் மீட்டுக் கொண்டார். அவர் ஏழு முத்திரைகளையும் உடைத்து நியாதிபதியாக உட்கார்ந்து இருக்கிறார். இப்பொழுது அவர் மனுஷ குமாரன், இராஜாதி இராஜ மற்றும் நியாதிபதியாக யோவான் 5 : 27 சொல்லப்பட்ட நியாதிபதியாக மற்றும் நான்கு சுவிஷேங்கள் கூறப்பட்டபடியும் இருக்கிறார். ஸ்தாபன விசுவாசிகள் கீழும் மேலுமாக குதித்து மற்ற பாஷைகளைப் பேசி மறுபிறப்பின் அனுபவத்தை பெறாமல் இருக்கிறார்கள். ஏனென்றால் தவறாக இன்னும் கிறிஸ்து தேவகுமாரனாக, மத்தியஸ்தராக இன்றும் இருக்கிறார் என்று தவறான நம்பிக்கைக் கொண்டு இருக்கிறார்கள். அவர் மனுஷ குமாரனாக ஆன பிறகு அவர் நியாயதிபதி அவர்களுக்கு தற்போதைய சத்தியத்தின் படி உள்ள யோசனை இல்லாமல் இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அவர் ஒளியில் நடந்தது போல இவர்கள் அவருடைய ஒளியில் நடக்காமல் இருக்கிறார்கள். ஆனால் கடந்து போன நாளுடைய நிழலை ஆள்மாறாட்டம் செய்கிறார்கள். எனவே அவர்களுடைய ஐக்கியம் கர்த்தருடன் அல்லாமல் மாயமற்ற கிறிஸ்தவர்களோடும் அதாவது இன்றைய சத்தியத்தைக் குறித்து விசுவாசம் இல்லாதவர்களோடும், இயேசு கிறிஸ்து இப்பொழுது என்ன செய்கிறார் என்பதை அறியாது இருக்கிறபடியால் தங்களுடைய பாவங்களை இயேசு கிறிஸ்துவின் இரத்ததினால் சுத்தரிக்காமல் இருக்கிறார்கள் (2. பேதுரு 1 : 12, 1. யோவான் 1 : 7)


வெளிப்படுத்துதல் நான்காம், ஐந்தாம் மற்றும் 10 : 1- 7 இவை யாவும் 1963-ல் கடைசி கால பரிசுத்தவான் . லவோதிக்க சபை, அல்லது பெந்தகோஸ்தே சபை பரிசுத்தவான் முன் அறிந்த பொழுது அவர்கள் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பண்ணப்படும் பொழுது கிறிஸ்துவின் மத்தியஸ்தர் ஊழியம் நிறைவேறியது. கிறிஸ்துவானவர் வேதாகாமம் முத்தரிக்கப்பட்ட காலத்தில் மட்டும் மத்தியஸ்தராக இருந்தார். இன்றைக்கு அவர் ஒரு மத்தியஸ்தராக இல்லை.


இந்த நாளுக்காக தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு ஒரு மத்தியஸ்தர் தேவையில்லை. ஏனென்றால் நாம் ஏற்கெனவே முன் குறிக்கப்பட்டு வார்த்தையின் பரிபூரணத்தினால் ஏழு முத்திரைகளுடைய வெளிப்பாட்டின் மூலம் நாம் மறுபடியும் பிறந்து இருக்கிறோம். அதுபோலவே 144000 இஸ்ரவேலர் முன் குறிக்கப்பட்டு வார்த்தையின் பரிபூரணத்தினால் ஏழு எக்காளங்களின் இரகசியங்களின் வெளிப்பாட்டில் மூலம் பிறக்கிறார்கள். அதாவது நாம் கிறிஸ்துவில் மீட்கப்பட்டோம் அங்கே தான் வார்த்தையின் பாகமான பரிசுத்தவான்களாகவதற்கு ஒரு மத்தியஸ்தர் ஊழியம் நடைபெற்றது. கிறிஸ்துவுடைய பரிபூரணப்பட்ட வார்த்தையானது ஏழு முத்திரைகளின் வெளிப்பாட்டால் வந்தது. வார்த்தையின் பாகமும் மற்றும் மத்தியஸ்தர் ஊழியமும் நம்முடைய அறியாமையை நம்மை விட்டு அகற்றிப்போட்டது. (1 கொரி 13:10)
என்ன விசுவாசிக்கிறோம் என்பதை நாம் சோதனை செய்ய வேண்டும். நாம் என்ன விசுவாசிக்கிறோம் என்பதை புரிந்துக் கொள்ளாமல் போனால் நாம் விசுவாசம் இல்லாதவர்களாய் நம்முடைய ஞானமானது மதியீனமாக இருக்கும். நம்மை தேவன் அங்கீகரிப்பதற்காக நம்மை விட்டுக் கொடுப்போம். மனிதன் அல்ல நம்முடைய நாளுக்குரிய வார்த்தையும், அதன் செய்தியையும் ஒப்புக் கொள்வோம்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum