தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
வேதாகமத்தில் அதிக தடவை பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்கள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வேதாகமத்தில் அதிக தடவை பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்கள் Empty வேதாகமத்தில் அதிக தடவை பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்கள்

Wed Jan 27, 2016 9:38 am
வேதாகமத்தில் அதிக தடவைகள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்கள்.

☀️ தாவீது என்ற பெயர் 1118 தடவைகள்


☀️ மோசே என்ற பெயர் 740
தடவைகள்


☀️ ஆரோன் என்ற பெயர் 339
தடவைகள்


☀️ சவுல் என்ற பெயர் 338
தடவைகள்


☀️ ஆபிரகாம் என்ற பெயர் 306
தடவைகள்


☀️ சாலொமோன் என்ற பெயர்
295 தடவைகள்


☀️ யாக்கோபு என்ற பெயர் 270
தடவைகள்


☀️ யோசேப்பு என்ற பெயர் 208
தடவைகள்


☀️ யோசுவா என்ற பெயர் 197
தடவைகள்


☀️ பவுல் என்ற பெயர் 185
தடவைகள்


☀️ பேதுரு என்ற பெயர் 166
தடவைகள்


☀️ யோபு என்ற பெயர் 137
தடவைகள்


☀️ எரேமியா என்ற பெயர் 136
தடவைகள்


☀️ சாமுவேல் என்ற பெயர் 135
தடவைகள்


☀️ ஈசாக்கு என்ற பெயர் 127
தடவைகள்


நம்முடைய கர்த்தராகிய இயேசு என்னும் நாமமோ 973 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.


✍️ குறிப்பு: இது மூல ஆதாரத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.


நன்றி :- அனுதின மன்னா



  2: முக்கிய சரித்திர திகதிகள் (வருடங்கள்)
 
☀️ கி.மு. 4026 - ஆதாம்
படைக்கப்பட்டது (ஆதி. 2:7)


☀️ கி.மு. 4026-க்கு பின்
ஏதேனிய உடன்படிக்கை
செய்யப்பட்டது, (ஆதி. 3:15)

முதல் தீர்க்கதரிசனம்

☀️ கி.மு. 3896-க்கு முன்
காயீன் ஆபேலைக்
கொல்கிறான் (ஆதி. 4:Cool


☀️ கி.மு. 3896 - சேத்தின்
பிறப்பு (ஆதி. 5:3)


☀️ கி.மு. 3404 - நீதிமான்
ஏனோக்கின் பிறப்பு (ஆதி.
5:18)


☀️ கி.மு. 3339 -
மெத்தூசலாவின் பிறப்பு
(ஆதி. 5:21)


☀️ கி.மு. 3152 - லாமேக்கின்
பிறப்பு (ஆதி. 5:25)


☀️ கி.மு. 3096 - ஆதாமின்
மரணம் (ஆதி. 5:5)


☀️ கி.மு. 3039 - ஏனோக்கு
எடுத்துக்கொள்ளப்படுகிறார்.
(ஆதி. 5:23,24; அவர்
தீர்க்கதரிசனம் உரைத்த காலம்
யூ. 14 முடிகிறது)


☀️ கி.மு. 2970 - நோவாவின்
பிறப்பு (ஆதி. 5:28,29)


☀️ கி.மு. 2490 -
மனிதகுலத்தைக் குறித்து
கடவுளுடைய (ஆதி. 6:3)
அறிவிப்பு


☀️ கி.மு. 2470 - யாப்பேத்தின்
பிறப்பு (ஆதி. 5:32; ஆதி. 9:24;
10:21)


☀️ கி.மு. 2468 - சேமின்
பிறப்பு (ஆதி. 7:11; 11:10)


☀️ கி.மு. 2370 -
மெத்தூசலாவின் மரணம்
(ஆதி. 5:27)
→ பிரளயம் ஏற்படுதல்
(இலையுதிர்காலத்தில்) ஆதி.
7:6,11


☀️ கி.மு. 2369 -
ஜலப்பிரளயத்துக்குப் பின்
உடன்படிக்கை (ஆதி. 8:13; 9:16)
செய்தல்


☀️ கி.மு. 2368 - அர்பக்சாத்தின்
பிறப்பு (ஆதி. 11:10)


☀️ கி.மு. 2269-க்குப் பின்
பாபேல் கோபுரம் கட்டுதல்
(ஆதி. 11:4)


☀️ கி.மு. 2020 - நோவாவின்
மரணம் (ஆதி. 9:28,29)


☀️ கி.மு. 2018 - ஆபிரகாமின்
பிறப்பு (ஆதி. 11:26,32; 12:4)


☀️ கி.மு. 1943 - ஆபிரகாம்
கானானுக்குச் செல்லும்
வழியில் ஆதி. 12:4,7;
ஐப்பிராத்தைக் கடக்கிறார்.
→ ஆபிரகாமிய யாத். 12:40;
உடன்படிக்கை
செல்லுபடியாக்கப்பட்டது;
கலா. 3:17 நியாயப்பிரமாண
உடன்படிக்கை வரையான 430
ஆண்டு காலப்பகுதியின்
தொடக்கம்...


☀️ கி.மு. 1933-க்கு முன்
லோத்து மீட்கப்படுகிறார்;
ஆபிரகாம் ஆதி. 14:16,18; 16:3
மெல்கிசேதேக்கை
சந்திக்கிறார்


☀️ கி.மு. 1932 - இஸ்மவேல்
பிறக்கிறார் (ஆதி. 16:15,16)


☀️ கி.மு. 1919 - விருத்தசேதன
உடன்படிக்கை செய்யப்பட்டது
(ஆதி. 17:1,10,24)
→ சோதோம் கொமோராவின்
ஆக்கினைத்தீர்ப்பு (ஆதி. 19:24)


☀️ கி.மு. 1918 - மெய்யான
சுதந்தரவாளியாகிய
ஈசாக்கின் பிறப்பு; ஆதி 21:2,5;
→ ‘ஏறக்குறைய
நானூற்றைம்பது
வருஷகாலத்தின்’ அப். 13:17-20
தொடக்கம்...


☀️ கி.மு. 1913 - ஈசாக்கு
பால்மறந்தது;
→ இஸ்மவேலை (ஆதி. 21:8;
15:13); அனுப்பிவிடுதல்;
→ 400 வருட துன்பகாலத்தின்
அப். 7:6 தொடக்கம்...


☀️ கி.மு. 1881 - சாராளின்
மரணம் (ஆதி. 17:17; 23:1)


☀️ கி.மு. 1878 - ஈசாக்குக்கும்
ரெபெக்காளுக்கும்
திருமணம் (ஆதி. 25:20)


☀️ கி.மு. 1868 - சேமின் மரணம்
(ஆதி. 11:11)


☀️ கி.மு. 1858 - ஏசா மற்றும்
யாக்கோபின் பிறப்பு (ஆதி.
25:26)


☀️ கி.மு. 1843 - ஆபிரகாமின்
மரணம் (ஆதி. 25:7)


☀️ கி.மு. 1818 - முதல் இரண்டு
மனைவிகளை ஏசா (ஆதி.
26:34) விவாகஞ்செய்தல்


☀️ கி.மு. 1795 - இஸ்மவேலின்
மரணம் (ஆதி. 25:17)


☀️ கி.மு. 1781 - யாக்கோபு
ஆரானுக்கு ஓடிப்போகிறார்,
(ஆதி. 28:2,13,19)
→ பெத்தேலில் அவர் கண்ட
தரிசனம்


☀️ கி.மு. 1774 - யாக்கோபு
லேயாளையும்
ராகேலையும் (ஆதி. 29:23-30)
மணம் செய்கிறார்


☀️ கி.மு. 1767 - யோசேப்பின்
பிறப்பு (ஆதி. 30:23,24)


☀️ கி.மு. 1761 - யாக்கோபு
ஆரானிலிருந்து
கானானுக்குத் (ஆதி. 31:18,41)
திரும்புகிறார்


☀️ (ஏறக்குறைய) கி.மு. 1761 -
யாக்கோபு தேவதூதரோடு
போராடுகிறார்; ஆதி.
32:24-28 இஸ்ரவேல் என்று
பெயரிடப்படுகிறார்


☀️ கி.மு. 1750 - யோசேப்பை
அவருடைய சகோதரர்
அடிமையாக (ஆதி. 37:2,28)
விற்கின்றனர்


☀️ கி.மு. 1738 - ஈசாக்கின்
மரணம் (ஆதி. 35:28,29)


☀️ கி.மு. 1737 - யோசேப்பு
எகிப்தின் பிரதம
மந்திரியாக்கப்பட்டார் (ஆதி.
41:40,46)


☀️ கி.மு. 1728 - யாக்கோபு
தன் முழு குடும்பத்துடன்
எகிப்துக்குள் ஆதி. 45:6; 46:26;
பிரவேசிக்கிறார் (ஆதி47:9)


☀️ கி.மு. 1711 - யாக்கோபின்
மரணம் (ஆதி. 47:28)


☀️ கி.மு. 1657 - யோசேப்பின்
மரணம் (ஆதி. 50:26)


☀️ கி.மு. 1613-க்கு முன்
யோபின் சோதனை (யோபு
1:8; 42:16)


☀️ கி.மு. 1600-க்குப் பின்
எகிப்து முதல் உலக வல்லரசாக
(யாத். 1:Cool
மேன்மையடைகிறது


☀️ கி.மு. 1593 - மோசேயின்
பிறப்பு (யாத். 2:2,10)


☀️ கி.மு. 1553 - ஜனங்களை
விடுவிக்க மோசே
முன்வருதல் யாத். 2:11,14,15;
மீதியானுக்கு
ஓடிப்போகிறார் அப். 7:23
(ஏறக்குறைய)


☀️ கி.மு. 1514 - எரியும்
முட்புதரின் அருகில் மோசே
யாத். 3:2


☀️ கி.மு. 1513 - பஸ்கா;
இஸ்ரவேலர் எகிப்தைவிட்டு
(யாத். 12:12)
வெளியேறுகின்றனர்;


→ செங்கடலை பிளந்து
(யாத்14:27,29,30) கடவுள்
விடுவிக்கிறார்;
→ எகிப்தின் வல்லமை (ஆதி.
15:13,14) கவிழ்க்கப்பட்டது;
→ 400 வருட துன்ப காலம்
முடிந்தது சீனாய் (ஓரேப்)
மலையில் நியாயப்பிரமானம்
(யாத். 24:6-Cool உடன்படிக்கை
செய்யப்பட்டது
→ ஆபிரகாமிய உடன்படிக்கை
கலா. 3:17;
செல்லுபடியானதிலிருந்து
430 வருடகால முடிவு
(யாத். 12:40)
→ வனாந்தரத்தில் மோசே
ஆதியாகமத்தைத் (யோவா.
5:46) தொகுக்கிறார்;
வேதாகமம் எழுதுவது
தொடங்குகிறது


☀️ கி.மு. 1512 -
ஆசரிப்புக்கூடார பணி
முடிவடைகிறது (யாத்.
40:17)
→ ஆரோனிய ஆசாரியத்துவம்
ஸ்தாபிக்கப்படுகிறது
(லேவி. 8:34-36)
→ மோசே
யாத்திராகமத்தையும்
லேவியராகமத்தையும்
(லேவி. 27:34) எழுதி
முடிக்கிறார். எண். 1:1


☀️ (ஏறக்குறைய) கி.மு. 1473 -
மோசே யோபு புத்தகத்தை
எழுதி முடிக்கிறார் (யோபு
42:16,17)


☀️ கி.மு. 1473 - மோசே
மோவாபின் சமவெளிகளில்
(எண். 35:1; 36:13)
எண்ணாகமத்தை எழுதி
முடிக்கிறார்
→ மோவாபில் இஸ்ரவேலுடன்
உடன்படிக்கை (உபா. 29:1)
→ மோசே உபாகமத்தை
எழுதுகிறார் (உபா. 1:1,3)
→ மோவாபிலுள்ள நேபோ
மலையில் மோசே (உபா.
34:1,5,7) மரிக்கிறார்
→ யோசுவாவின்
தலைமையில் இஸ்ரவேலர்
(யோசு. 4:19) கானானுக்குள்
பிரவேசிக்கின்றனர்


☀️ கி.மு. 1467 - தேசத்தின்
பெரும்பாகம் கைப்பற்றப்பட்டது
→ யோசு. 11:23 அப்போஸ்தலர்
13:17-20-ன் ‘ஏறக்குறைய
யோசு14:7, 450 வருஷங்களின்’
முடிவு (யோசு 14:10-15)


☀️ (ஏறக்குறைய) கி.மு. 1450 -
யோசுவாவின் புத்தகம்
எழுதி முடிக்கப்பட்டது
(யோசு. 1:1; 24:26)
→ யோசுவாவின் மரணம்
(யோசு. 24:29)


☀️ கி.மு. 1117 - சாமுவேல்
சவுலை இஸ்ரவேலின்
அரசனாக (1 சா. 10:24)
அபிஷேகம் செய்கிறார் (அப்.
13:21)


☀️ கி.மு. 1107 -
பெத்லெகேமில் தாவீதின்
பிறப்பு (1 சா. 16:1)


☀️ (ஏறக்குறைய) கி.மு. 1100 -
நியாயாதிபதிகள் புத்தகத்தை
சாமுவேல் எழுதி (நியா.
21:25) முடிக்கிறார்


☀️ ஏறக்குறைய கி.மு. 1090 -
ரூத் புத்தகத்தை சாமுவேல்
எழுதி முடிக்கிறார் (ரூத்
4:18-22)


☀️ (ஏறக்குறைய) கி.மு. 1078 -
1 சாமுவேல் புத்தகம் எழுதி
முடிக்கப்பட்டது (1 சா. 31:6)


☀️ கி.மு. 1077 - எப்ரோனில்
தாவீது யூதாவின்
அரசராகிறார் (2 சா. 2:4)


☀️ கி.மு. 1070 - இஸ்ரவேல்
முழுவதன்மீதும் தாவீது
அரசராகிறார்; எருசலேமைத்
தன் தலைநகராக்குகிறார் (2
சா. 5:3-7)


☀️ கி.மு. 1070-க்குப் பின்
உடன்படிக்கைப் பெட்டி
எருசலேமுக்குள் கொண்டு (2
சா. 6:15) வரப்படுகிறது
→ ராஜ்யத்துக்கான ஓர்
உடன்படிக்கை (2சா 7:12-16)
தாவீதுடன் செய்யப்படுகிறது


☀️ (ஏறக்குறைய) கி.மு. 1040 -
காத்தும் நாத்தானும் 2
சாமுவேலை எழுதி (2 சா.
24:18) முடிக்கின்றனர்


☀️ கி.மு. 1037 - சாலொமோன்
தாவீதுக்குப்பின்
இஸ்ரவேலின் (1 இரா. 1:39)
அரசராகிறார் 1 இரா 2:12


☀️ கி.மு. 1034 - சாலொமோன்
ஆலயம் கட்ட தொடங்கினார் (1
இரா. 6:1)


☀️ கி.மு. 1027 - எருசலேமில்
ஆலயம் கட்டி
முடிக்கப்படுகிறது (1 இரா.
6:38)


☀️ (ஏறக்குறைய) கி.மு. 1020 -
சாலொமோனின்
உன்னதப்பாட்டை சாலொமோன்
(உன். 1:1) எழுதி முடிக்கிறார்


☀️ கி.மு. 1000-க்கு முன்
பிரசங்கி புத்தகத்தைச்
சாலொமோன் எழுதி
முடிக்கிறார் (பிர. 1:1)


☀️ கி.மு. 997 -
சாலொமோனுக்குப் பின்
ரெகொபெயாம் (1 இரா. 11:43)
அரசராகிறார்;
→ ராஜ்யம் பிரிகிறது; (1 இரா
12:19,20 ) யெரொபெயாம்
இஸ்ரவேலின் அரசனாக ஆளத்
தொடங்குகிறார்


☀️ கி.மு. 993 - சீஷாக்
யூதாவுக்குள்
படையெடுத்து (1 இரா.
14:25,26) ஆலயத்திலிருந்து
பொக்கிஷங்களை எடுத்துச்
செல்கிறான்


☀️ கி.மு. 980 -
ரெகொபெயாமுக்குப் பின்
அபியாம் (அபியா) 1 இரா.
15:1,2 யூதாவின்
அரசனாகிறான்


☀️ கி.மு. 977 -
அபியாமுக்குப் பின் ஆசா
யூதாவின் அரசனாகிறார் (1
இரா. 15:9,10)


☀️ (ஏறக்குறைய) கி.மு. 976 -
யெரொபெயாமுக்குப் பின்
நாதாப் இஸ்ரவேலின் (1 இரா.
14:20) அரசனாகிறான்


☀️ (ஏறக்குறைய) கி.மு. 975 -
நாதாபுக்குப் பின் பாஷா
இஸ்ரவேலின் அரசனாகிறான்
(1 இரா. 15:33)


☀️ (ஏறக்குறைய) கி.மு. 952 -
பாஷாவுக்குப் பின் ஏலா
இஸ்ரவேலின் அரசனாகிறார் (1
இரா. 16:Cool


☀️ (ஏறக்குறைய) கி.மு. 951 -
ஏலாவுக்குப் பின் சிம்ரி
இஸ்ரவேலின் அரசனாகிறான்
(1 இரா. 16:15)
→ சிம்ரிக்குப் பின் உம்ரியும்
திப்னியும் இஸ்ரவேலின் (1
இரா. 16:21) அரசராகின்றனர்


☀️ (ஏறக்குறைய) கி.மு. 947 -
உம்ரி இஸ்ரவேலின் தனி
அரசனாக ஆளுகிறான் (1 இரா.
16:22,23)


☀️ (ஏறக்குறைய) கி.மு. 940 -
உம்ரிக்குப் பின் ஆகாப்
இஸ்ரவேலின் அரசனாகிறான்
(1 இரா. 16:29)


☀️ கி.மு. 936 - ஆசாவுக்குப்
பின் யோசபாத் யூதாவின் (1
இரா. 22:41,42) அரசனாகிறார்


☀️ (ஏறக்குறைய) கி.மு. 919 -
ஆகாபுக்குப் பின் அகசியா
இஸ்ரவேலின் தனி (1 இரா.
22:51,52) அரசனாகிறான்


☀️ (ஏறக்குறைய) கி.மு. 917 -
அகசியாவுக்குப் பின்
இஸ்ரவேலின் யோராம் தனி (2
இரா. 3:1) அரசனாகிறான்


☀️ கி.மு. 913 - யூதாவின்
யோராம் யோசபாத்துடன்
‘ராஜ்யபாரம் (2 இரா. 8:16, 17)
பண்ணத்’ தொடங்குகிறான்


☀️ (ஏறக்குறைய) கி.மு. 906 -
யோராமுக்குப் பின் அகசியா
யூதாவின் (2 இரா. 8:25,26)
அரசனாகிறான்


☀️ (ஏறக்குறைய) கி.மு. 905 -
அத்தாலியாள் அரசி
யூதாவின் சிங்காசனத்தை (2
இரா. 11:1-3) கைப்பற்றுகிறாள்
→ யோராமுக்குப் பின்
யெகூ இஸ்ரவேலின் (2 இரா.
9:24,27) அரசனாகிறார் (2 இரா
10:36)


☀️ கி.மு. 898 -
அகசியாவுக்குப் பின்
யோவாஸ் யூதாவின் (2 இரா.
12:1) அரசனாகிறார்


☀️ கி.மு. 876 -
யெகூவுக்குப் பின்
யோவாகாஸ் இஸ்ரவேலின் (2
இரா. 13:1) அரசனாகிறான்


☀️ (ஏறக்குறைய) கி.மு. 859 -
யோவாகாஸுக்குப் பின்
யோவாஸ் இஸ்ரவேலின் தனி
(2 இரா. 13:10) அரசனாகிறான்


☀️ கி.மு. 858 -
யோவாசுக்குப் பின்
அமத்சியா யூதாவின் (2 இரா.
14:1,2) அரசனாகிறார்


☀️ (ஏறக்குறைய) கி.மு. 844 -
யோவாசுக்குப் பின்
இரண்டாம் யெரொபெயாம் (2
இரா. 14:23) இஸ்ரவேலின்
அரசனாகிறான்
→ யோனாவின் புத்தகத்தை
யோனா எழுதி முடிக்கிறார்
(யோனா 1:1,2)


☀️ கி.மு. 829 -
அமத்சியாவுக்குப் பின்
உசியா [அசரியா] யூதாவின்
(2 இரா. 15:1,2) அரசனாகிறார்


☀️ (ஏறக்குறைய) கி.மு. 820 -
அநேகமாக யோவேலின்
புத்தகம் எழுதப்பட்டிருக்கும்
(யோவே. 1:1)


☀️ (ஏறக்குறைய) கி.மு. 804 -
ஆமோஸின் புத்தகத்தை
ஆமோஸ் எழுதி (ஆமோ. 1:1)
முடிக்கிறார்


☀️ (ஏறக்குறைய) கி.மு. 792 -
சகரியா இஸ்ரவேலின்
அரசனாக (6 மாதங்கள்) (2 இரா.
15:Cool ஆளுகிறான்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வேதாகமத்தில் அதிக தடவை பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்கள் Empty Re: வேதாகமத்தில் அதிக தடவை பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்கள்

Wed Jan 27, 2016 9:52 am
☀ (ஏறக்குறைய) கி.மு. 791 -
சகரியாவுக்குப் பின் சல்லூம்
இஸ்ரவேலின் (2 இரா. 15:13,17)
அரசனாகிறான்
→ சல்லூமுக்குப் பின்
மெனாகேம் இஸ்ரவேலின்
அரசனாகிறான்

☀ (ஏறக்குறைய) கி.மு. 780 -
மெனாகேமுக்குப் பின்
பெக்காகியா இஸ்ரவேலின் (2
இரா. 15:23) அரசனாகிறான்

☀ (ஏறக்குறைய) கி.மு. 778 -
பெக்காகியாவுக்குப் பின்
பெக்கா இஸ்ரவேலின் (2 இரா.
15:27) அரசனாகிறான்

☀ (ஏறக்குறைய) கி.மு. 778 -
ஏசாயா தீர்க்கதரிசனமுரைக்கத்
தொடங்குகிறார் (ஏசா. 1:1;
6:1)

☀ கி.மு. 777 - உசியாவுக்கு
[அசரியா] பின் யோதாம்
யூதாவின் (2 இரா. 15:32,33)
அரசனாகிறார்

☀ (ஏறக்குறைய) கி.மு. 761 -
யோதாமுக்குப் பின் ஆகாஸ்
யூதாவின் (2 இரா. 16:1,2)
அரசனாகிறான்

☀ (ஏறக்குறைய) கி.மு. 758 -
ஓசெயா இஸ்ரவேலின்
அரசனாக ‘ஆளத் (2 இரா. 15:30)
தொடங்குகிறார்’

☀ கி.மு. 745 - ஆகாஸுக்குப்
பின் எசேக்கியா யூதாவின்
(2 இரா. 18:1,2) அரசனாகிறார்

☀ கி.மு. 745-க்குப் பின்
ஓசியா புத்தகத்தை ஓசியா
எழுதி முடிக்கிறார் (ஓசி.
1:1)

☀ கி.மு. 740 - அசீரியா
இஸ்ரவேலைக்
கீழ்ப்படுத்துகிறது, (2 இரா.
17:6,13,18) சமாரியாவைக்
கைப்பற்றுகிறது

☀ கி.மு. 732 - சனகெரிப்
யூதாவின் மீது
படையெடுக்கிறான் (2 இரா.
18:13)
☀ கி.மு. 732-க்குப் பின்
ஏசாயா புத்தகத்தை ஏசாயா
எழுதி முடிக்கிறார் (ஏசா.
1:1)

☀ கி.மு. 717-க்கு முன் மீகா
புத்தகத்தை மீகா எழுதி
முடிக்கிறார் (மீ. 1:1)

☀ (ஏறக்குறைய) கி.மு. 717 -
நீதிமொழிகளை
தொகுத்தமைப்பது
முடிகிறது (நீதி. 25:1)

☀ கி.மு. 716 -
எசேக்கியாவுக்குப் பின்
மனாசே யூதாவின் (2 இரா.
21:1) அரசனாகிறான்

☀ கி.மு. 661 - மனாசேக்குப்
பின் ஆமோன் யூதாவின்
அரசனாகிறான் (2 இரா. 21:19)

☀ கி.மு. 659 - ஆமோனுக்குப்
பின் யோசியா யூதாவின்
அரசனாகிறார் (2 இரா. 22:1)

☀ கி.மு. 648-க்கு முன்
செப்பனியா புத்தகத்தைச்
செப்பனியா எழுதி
முடிக்கிறார் (செப். 1:1)

☀ கி.மு. 647 - தீர்க்கதரிசியாக
எரேமியா
நியமிக்கப்படுகிறார் (எரே.
1:1,2,9,10)

☀ கி.மு. 632-க்குப் பின்
நாகூம் புத்தகத்தை நாகூம்
எழுதி முடிக்கிறார் (நாகூ.
1:1)

☀ கி.மு. 632 - கல்தேயரும்
மேதியரும் நினிவேயை
வீழ்த்துகின்றனர் (நாகூ. 3:7)
பாபிலோன் இப்போது
மூன்றாவது உலக
வல்லரசாகும்
நிலையிலுள்ளது

☀ கி.மு. 628 -
யோசியாவுக்குப் பின்
யோவாகாஸ் யூதாவின்
அரசனாக (2 இரா. 23:31)
ஆளுகிறான்
→ யோவாகாஸுக்குப் பின்
யோயாக்கீம் யூதாவின் (2
இரா. 23:36) அரசனாகிறான்

☀ (ஏறக்குறைய) கி.மு. 628 -
ஆபகூக் புத்தகத்தை ஆபகூக்
எழுதி முடிக்கிறார் (ஆப. 1:1)

☀ கி.மு. 625 - (இரண்டாம்)
நேபுகாத்நேச்சார்
பாபிலோனின் (எரே. 25:1)
அரசனாகிறான்; முதல்
ஆட்சியாண்டு

☀ கி.மு. 624-ன்
நிசானிலிருந்து
கணக்கிடப்படுகிறது

☀ கி.மு. 620 -
நேபுகாத்நேச்சார்
யோயாக்கீமை கப்பம்கட்டும் 2
(இரா. 24:1) அரசனாக்குகிறான்

☀ கி.மு. 618 -
யோயாக்கீமுக்குப் பின்
யோயாக்கீன் யூதாவில் (2
இரா. 24:6,Cool அரசனாகிறான்

☀ கி.மு. 617 -
நேபுகாத்நேச்சார் முதல்
யூதக் கைதிகளைப் (தானி.
1:1-4) பாபிலோனுக்குச்
சிறைப்படுத்திக் கொண்டு
செல்கிறான்
→ சிதேக்கியா யூதாவின்
அரசனாக்கப்படுகிறான் (2 இரா.
24:12-18)

☀ கி.மு. 613 - எசேக்கியேல்
தீர்க்கதரிசனமுரைக்கத்
தொடங்குகிறார் (எசே. 1:1-3)

☀ கி.மு. 609 -
நேபுகாத்நேச்சார்
மூன்றாவது தடவையாக
யூதாவுக்கு (2 இரா. 25:1,2)
எதிராக வருகிறான்;
எருசலேமை
முற்றுகையிடத்
தொடங்குகிறான்

☀ கி.மு. 607 - ஐந்தாவது
மாதம் (ஆப்), ஆலயம் (2 இரா.
25:8-10)
சுட்டெரிக்கப்படுகிறது,
→ எருசலேம் (எரே. 52:12-14)
அழிக்கப்படுகிறது
→ ஏழாவது மாதம், யூதர்கள்
யூதாவைவிட்டு (2 இரா.
25:25, 26)
வெளியேறுகிறார்கள்;
→ “புறஜாதியாரின்
காலம்” (லூக். 21:24)
தொடங்குகிறது
→ எரேமியா புலம்பலை
எழுதுகிறார்

☀ கி.மு. 607 - ஒபதியா
புத்தகத்தை ஒபதியா
எழுதுகிறார் (ஒப. 1)

☀ (ஏறக்குறைய) கி.மு. 591 -
எசேக்கியேல் புத்தகத்தை
எசேக்கியேல் எழுதி (எசே.
40:1) முடிக்கிறார் எசே. 29:17

☀ கி.மு. 580 - 1 மற்றும் 2
இராஜாக்களும்
எரேமியாவும் எழுதி (எரே.
52:31) முடிக்கப்படுகின்றன 2
இரா. 25:27

☀ கி.மு. 539 - மேதியரும்
பெர்சியரும் பாபிலோனைக்
(தானி. 5:30,31)
கைப்பற்றுகின்றனர்
→ மேதிய-பெர்சியா
நான்காவது உலக
வல்லரசாகிறது

☀ கி.மு. 537 -
எருசலேமுக்குத் திரும்பிச்
செல்லும்படி அனுமதித்த (2
நா. 36:22,23) பெர்சியனாகிய
கோரேசின் கட்டளை (எரே.
25:12)
செயல்படுத்தப்படுகிறது
→ எருசலேமின் 70 ஆண்டு
(எரே. 29:10) பாழ்க்கடிப்பு
முடிகிறது

☀ (ஏறக்குறைய) கி.மு. 536 -
தானியேல் புத்தகத்தைத்
தானியேல் எழுதி
முடிக்கிறார்
(தானி. 10:1)

☀ கி.மு. 536 - செருபாபேல்
ஆலயத்துக்கு அஸ்திவாரம்
போடுகிறார் (எஸ்றா 3:8-10)

☀ கி.மு. 522 - ஆலய கட்டட
வேலையின்பேரில்
தடையுத்தரவிடுதல் (எஸ்றா
4:23,24)

☀ கி.மு. 520 - ஆகாய்
புத்தகத்தை ஆகாய் எழுதி
முடிக்கிறார் (ஆகா. 1:1)

☀ கி.மு. 518 - சகரியா
புத்தகத்தைச் சகரியா எழுதி
முடிக்கிறார் (சக. 1:1)

☀ கி.மு. 515 - செருபாபேல்
இரண்டாவது ஆலயத்தைக் கட்டி
(எஸ்றா 6:14,15) முடிக்கிறார்

☀ (ஏறக்குறைய) கி.மு. 475 -
எஸ்தர் புத்தகத்தை
மொர்தெகாய் எழுதி
முடிக்கிறார் (எஸ்தர் 3:7; 9:32)

☀ கி.மு. 468 - எஸ்றாவும்
ஆசாரியர்களும்
எருசலேமுக்குத் திரும்பி
(எஸ்றா 7:7) வருகின்றனர்

☀ (ஏறக்குறைய) கி.மு. 460 - 1
மற்றும் 2 நாளாகமங்கள்
மற்றும் எஸ்றா (எஸ்றா 1:1)
புத்தகங்களை எஸ்றா எழுதி
முடிக்கிறார்;
→ (2 நா. 36:22) கடைசி
சங்கீதங்கள்
தொகுத்தமைக்கப்படுகின்றன

☀ கி.மு. 455 - எருசலேமின்
மதில்களை நெகேமியா
திரும்பக் (நெ. 1:1)
கட்டுகிறார்; 70 வாரங்களின்
தீர்க்கதரிசனம் (நெ. 2:1,11)
நிறைவேறத் தொடங்குகிறது
(நெ. 6:15; தானி. 9:24)

☀ கி.மு. 443 -க்குப் பின்
நெகேமியாவின் புத்தகத்தை
நெகேமியா எழுதி (நெ.
5:14) முடிக்கிறார்
→ மல்கியாவின் புத்தகத்தை
மல்கியா எழுதி
முடிக்கிறார் (மல். 1:1)

☀ கி.மு. 406 - எருசலேமைத்
திரும்பக் கட்டுவது
முடிவுற்றதாக தெரிகிறது
(தானி. 9:25)

☀ கி.மு. 332 - கிரீஸ்,
ஐந்தாவது உலக வல்லரசு,
யூதேயாவை ஆளுகிறது
(தானி. 8:21)

☀ (ஏறக்குறைய) கி.மு. 280 -
கிரேக்க செப்டுவஜின்ட்
தொடங்குகிறது

☀ கி.மு. 165 - கிரேக்க
விக்கிரகாராதனையால்
தீட்டுப்படுத்தப்பட்டபின்
(யோவா. 10:22) ஆலய
மறுபிரதிஷ்டை; பிரதிஷ்டை
பண்டிகை

☀ கி.மு. 63 - ரோம், ஆறாவது
உலக வல்லரசு, எருசலேமை
(யோவா. 19:15) ஆளுகிறது
வெளி. 17:10

☀ (ஏறக்குறைய) கி.மு. 37 -
ஏரோது (ரோம் நியமித்த
அரசன்) மூர்க்கத் தாக்குதலால்
எருசலேமைக்
கைப்பற்றுகிறார்

☀ கி.மு. 2 - யோவான்
ஸ்நானகன் மற்றும்
இயேசுவின் (லூக். 1:60; 2:7)
பிறப்பு

☀ கி.பி. 29 - யோவானும்
இயேசுவும் தங்கள்
ஊழியங்களைத் (லூக். 3:1,2,23)
தொடங்குகின்றனர்

☀ கி.பி. 33 - நிசான் 14:
இயேசு பலியாகி, புதிய
உடன்படிக்கையை (லூக்.
22:20) அமலாக்குகிறார்;
சிலுவையில்
அறையப்படுகிறார்
(லூக்23:33)
→ நிசான் 16: இயேசுவின்
உயிர்த்தெழுதல் (மத். 28:1-10)
→ சீவான் 6, பெந்தெகொஸ்தே:
தேவாவி ஊற்றப்படுகிறது
(அப். 2:1-17,38)
→ யூதர்கள்
கிறிஸ்தவர்களாவதற்கு
பேதுரு வழியைத் திறந்தார்

☀ கி.பி. 36 - 70 வார
ஆண்டுகளின் முடிவு;
கொர்நேலியுவை பேதுரு
(தானி. 9:24-27) சந்திக்கிறார்.
இவர் விருத்தசேதனம்
செய்யப்படாத (அப். 10:1,45)
புறஜாதியாரிலிருந்து
கிறிஸ்தவ சபைக்குள் வந்த
முதல் நபர்

☀ (ஏறக்குறைய) கி.பி. 41 -
“மத்தேயு” சுவிசேஷத்தை
மத்தேயு எழுதுகிறார்

☀ (ஏறக்குறைய) கி.பி. 47-48
முதல் மிஷனரி பயணத்தைப்
பவுல் தொடங்குகிறார் (அப்.
13:1–14:28)

☀ (ஏறக்குறைய) கி.பி. 49 -
புறஜாதியாரில்
விசுவாசிகளானோருக்கு
விருத்தசேதனம் (அப். 15:28,29)
தேவையில்லையென ஆளும்
குழு தீர்மானிக்கிறது

☀ (ஏறக்குறைய) கி.பி. 49-52
பவுலின் இரண்டாவது
மிஷனரி பயணம் (அப். 15:36–
18:22)

☀ (ஏறக்குறைய) கி.பி. 50 -
பவுல் கொரிந்துவிலிருந்து
1 தெசலோனிக்கேயரை (1
தெ. 1:1) எழுதுகிறார்

☀ (ஏறக்குறைய) கி.பி. 51 -
பவுல் கொரிந்துவிலிருந்து
2 தெசலோனிக்கேயரை (2
தெ. 1:1) எழுதுகிறார்

☀ (ஏறக்குறைய) கி.பி. 50-52
கொரிந்துவிலிருந்து
அல்லது சீரியாவின் (கலா. 1:1)
அந்தியோகியாவிலிருந்து
பவுல் கலாத்தியருக்குத் தன்
நிருபத்தை எழுதுகிறார்

☀ (ஏறக்குறைய) கி.பி. 52-56
பவுலின் மூன்றாவது
மிஷனரி பயணம் (அப். 18:23–
21:19)

☀ (ஏறக்குறைய) கி.பி. 55 -
பவுல் எபேசுவிலிருந்து 1
கொரிந்தியரையும் (1 கொ.
15:32)
மக்கெதோனியாவிலிருந்து
2 கொரிந்தியரையும் (2 கொ.
2:12,13) எழுதுகிறார்

☀ (ஏறக்குறைய) கி.பி. 56 -
பவுல் கொரிந்துவிலிருந்து
ரோமருக்கு நிருபம் (ரோ.
16:1) எழுதுகிறார்

☀ (ஏறக்குறைய) கி.பி. 56-58
“லூக்கா” சுவிசேஷத்தை
லூக்கா எழுதுகிறார் (லூக்.
1:1,2)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வேதாகமத்தில் அதிக தடவை பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்கள் Empty Re: வேதாகமத்தில் அதிக தடவை பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்கள்

Wed Jan 27, 2016 9:58 am
☀ (ஏறக்குறைய) கி.பி. 60-61
பவுல் ரோமிலிருந்து
இவற்றை எழுதுகிறார்:
→ எபேசியர் (எபே. 3:1)
→ பிலிப்பியர் (பிலி. 4:22)
→ கொலோசெயர் (கொலோ.
4:18)
→ பிலேமோன் (பிலே. 1)


☀ (ஏறக்குறைய) கி.பி. 61 -
பவுல் ரோமிலிருந்து
எபிரெயருக்கு நிருபம் (எபி.
13:24) எழுதுகிறார் எபி10:34
→ லூக்கா ரோமில்
அப்போஸ்தலருடைய
நடபடிகளை எழுதி
முடிக்கிறார்


☀ கி.பி. 62-க்கு முன்
“யாக்கோபு” நிருபத்தை,
இயேசுவின் சகோதரனான
(யாக். 1:1) யாக்கோபு
எருசலேமிலிருந்து
எழுதுகிறார்


☀ (ஏறக்குறைய) கி.பி. 60-65
“மாற்கு” சுவிசேஷத்தை
மாற்கு எழுதுகிறார்


☀ (ஏறக்குறைய) கி.பி. 61-64
பவுல்
மக்கெதோனியாவிலிருந்து
1 தீமோத்தேயுவை (1 தீ. 1:3)
எழுதுகிறார்
→ பவுல் தீத்து நிருபத்தை
மக்கெதோனியாவிலிருந்து
(தீ. 1:5) எழுதுகிறார்


☀ (ஏறக்குறைய) கி.பி. 62-64
பேதுரு
பாபிலோனிலிருந்து 1
பேதுருவை (1 பே. 1:1; 5:13)
எழுதுகிறார்


☀ (ஏறக்குறைய) கி.பி. 64 -
பேதுரு
பாபிலோனிலிருந்து 2
பேதுருவை (2 பே. 1:1)
எழுதுகிறார்


☀ (ஏறக்குறைய) கி.பி. 65 -
பவுல் ரோமிலிருந்து 2
தீமோத்தேயுவை (2 தீ.
4:16-18) எழுதுகிறார்
→ இயேசுவின் சகோதரரான
யூதா, “யூதா” நிருபத்தை
(யூ. 1,17,18) எழுதுகிறார்


☀ கி.பி. 70 - எருசலேமும்
அதன் ஆலயமும் ரோமரால்
[தானி. 9:27] அழிக்கப்பட்டன (மத்.
23:37,38; லூக். 19:42-44)


☀ (ஏறக்குறைய) கி.பி. 96 -
யோவான், பத்மு தீவில்,
வெளிப்படுத்துதலை
(வெளி. 1:9) எழுதுகிறார்


☀ (ஏறக்குறைய) கி.பி. 98 -
“யோவான்” என்ற
சுவிசேஷத்தையும்
(யோவா. 21:22,23) 1, 2, மற்றும்
3 யோவான் என்ற தன்
நிருபங்களையும் யோவான்
எழுதுகிறார்;
→ பரிசுத்த வேதாகமம்
எழுதப்படுவது முடிந்தது


☀ (ஏறக்குறைய) கி.பி. 100 -
கடைசி அப்போஸ்தலராகிய
யோவான் மரிக்கிறார் (2 தெ.
2:7)


✍ குறிப்பு:
இந்தத் வருடங்களில் (திகதிகள்)
பல சரியானவை என்று
நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால்
ஒரு சில வருடங்கள் கிடைத்த
ஆதாரங்ளைக்கொண்டு
தோராயமாக
கொடுக்கப்பட்டுள்ளன என்பதை
மறக்கவேண்டாம். எந்தவொரு
நிகழ்ச்சிக்கும் திகதியை
மாற்றவே முடியாது
என்பதற்காக அல்ல இந்த பதிவு.
ஆனால் கால ஓட்டத்தில் என்ன
நிகழ்ச்சிகள் எப்போது நடந்தன,
அவற்றின் இடையேயுள்ள
தொடர்பு என்ன என்பதை நாம்
அறிந்துக்கொள்ள
உதவுவதற்கே இந்த பதிவு.


  2: வேதாகம காலங்கள்
 
☀ அறியாமையின் காலம் :
→ மனிதர்கள் - ஆதாம், ஏவாள்.
→ கட்டளை - ஏதேன்
தோட்டத்தில் ஒரு குறிப்பிட்ட
மரத்தின் கனியை
புசிக்கக்கூடாது. (ஆதி.
2:1-25).


☀ மனசாட்சியின் காலம் :
→ மனிதர்கள் - உலக மக்கள்
அனைவரும் .
→ கட்டளை - மனசாட்சியின்
படி வாழ்தல். (ஆதி. 3:22-9:17).


☀ மனித அரசாட்சியின் காலம்:
→ மனிதர்கள் - உலக மக்கள்
அனைவரும் .
→ கட்டளை - நாட்டின்
சட்டங்களுக்கும்,
மனசாட்சிக்கும் கீழ்படிதல்.
(ஆதி 9:17-முதல்)


☀ நியாயப்பிரமாண காலம் :
→ மனிதர்கள் - இஸ்ரவேலர்.
→ கட்டளை -
நியாயபிரமாணத்தின் படி
வாழ்தல். (யாத் 20:1 – முதல்)


☀ சபையின் காலம்
(கிருபையின் காலம்) :
→ மனிதர்கள் -
இரட்சிக்கப்படுவோர்.
→ கட்டளை - விசுவாச
பிரமாணத்தின் படி வாழ்தல்,
ஆவியானவரால் நடத்தப்பட்டு
வாழ்தல். (அப் 2 முதல்)


☀ உபத்திரவ காலம் :
→ மனிதர்கள் - இரகசிய
வருகையின் போது
கைவிடப்பட்டவர்கள்.
→ கட்டளை - அந்தி
கிறிஸ்துவின்
முத்திரையை ஏற்றுக்
கொள்ளக்கூடாது. (வெளி
4:1-20:1 வரை).


☀ ஆயிர வருட அரசாட்சியின் காலம் :
→ மனிதர்கள் -
அனுமதிக்கப்பட்டோர்,
பரிசுத்தர்களால்
ஆளப்படுபவர்கள்.
→ கட்டளை - புதிய
சட்டங்களுக்கு கீழ்படிதல்.
(வெளி 20:1-15).


☀ புதிய வானம் புதிய பூமி :
→ மனிதர்கள் - பரிசுத்தர்கள்.
→ கட்டளை - தேவ
பிரசன்னத்தில் வாழ்தல். (வெளி
21-22).


  2: போராட்டமும் முடிவும் - வெளிப்படுத்தின விசேஷம்
 
☀ மூல மொழியாகிய
கிரேக்கத்தில் இப்புத்தகம்
“Apokalypsis” (Book of Revelation)
என்று அழைக்கப்படுகிறது.


☀ அப்பாக்கலிப்ஸிஸ்
(Apokalypsis [Apocalypse])
என்பதற்கு “திறத்தல்” அல்லது
“திரை நீக்குதல்” என்று அர்த்தம்.


☀ நம்முடைய பரிசுத்த
வேதாகமத்திலே
கடைசியும், 66-வது
புத்தகமாகவும் வருகிறது.


☀ இந்த புத்தகத்தின்
எழுத்தாளர் யோவான்;
இயேசு கிறிஸ்துவின்
அடிமை என்றும், சகோதரனும்,
உபத்திரவத்தில் பங்காளியும்,
பத்மு தீவுக்கு
நாடுகடத்தப்பட்டிருந்தவர்
என்றும் இவரைப் பற்றி நமக்கு
சொல்லப்படுகிறது.


☀ இந்த யோவான் யாருக்காக
இதை எழுதினாரோ
அவர்களுக்கு நன்கு
அறிமுகமானவர்; ஆதலால்
தன்னை யாரென மேலும்
அடையாளங்காட்ட வேண்டிய
அவசியமில்லை.


☀ அவர் அப்போஸ்தலன்
யோவானாகவே இருக்க
வேண்டும். இந்த முடிவை
பெரும்பாலான பூர்வ
சரித்திராசிரியர்கள்
ஆதரிக்கின்றனர்.


☀ யோவானின் மற்ற
புத்தகங்கள் அன்பை
பெருமளவு
வலியுறுத்துவது
உண்மைதான். அதற்காக, அதிக
வல்லமை வாய்ந்த, ஊக்கமிக்க
இந்த வெளிப்படுத்துதலை
அவர் எழுதியிருக்க
முடியாதென்பதை இது
அர்த்தப்படுத்துவதில்லை.


☀ யோவானும் அவருடைய
சகோதரனாகிய
யாக்கோபும்தான் ஒரு
சமாரிய பட்டணத்தின் மீது
மிகுந்த கோபமூண்டவர்களாய்
வானத்திலிருந்து அக்கினி
விழுந்து
அதிலிருந்தவர்களைப்
பட்சிப்பதற்கு அனுமதி
கேட்டனர். இதனிமித்தமே
இவர்களுக்கு,
“பொவனெர்கேஸ்” அல்லது
“இடிமுழக்க மக்கள்” என்ற பட்டப்
பெயர் கொடுக்கப்பட்டது.
(மாற். 3:17; லூக். 9:54)
Sponsored content

வேதாகமத்தில் அதிக தடவை பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்கள் Empty Re: வேதாகமத்தில் அதிக தடவை பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்கள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum