வேலை வேண்டுமா? - பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி வேலை
Tue Nov 24, 2015 6:01 pm
பாரத ஸ்டேட் வங்கி நீங்கலாக, மற்ற அனைத்துப் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்களும், அதிகாரிகளும் ஐ.பி.பி.எஸ். எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection-IBPS) என்ற அமைப்பின் பொதுத் தேர்வுகள் மூலமாகவே தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அந்த வகையில், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, சிண்டிகேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் 2016-2017-ம் நிதி ஆண்டில் ஏற்படும் சிறப்பு அதிகாரி (Specialist Officer) காலிப்பணியிடங்கள் ஐ.பி.பி.எஸ் அமைப்பின் பொதுத்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.
தகவல் தொழில்நுட்ப அதிகாரி, வேளாண் விரிவாக்க அதிகாரி, சட்ட அலுவலர், மனிதவள மேம்பாட்டு அதிகாரி, விற்பனை அலுவலர் ஆகிய பதவிகள் சிறப்பு அதிகாரி பட்டியலின் கீழ் வருகின்றன.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் மேற்கொள்ளப்படும். ஆன்லைன் வழியிலான எழுத்துத் தேர்வு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. தகவல் தொழில்நுட்பச் சிறப்பு அதிகாரி பணிக்கு பி.இ. அல்லது பி.டெக். படிப்பில் தகவல் தொழில்நுட்பம் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் படித்திருக்க வேண்டும். எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் எம்.சி.ஏ. பட்டதாரிகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வேளாண் விரிவாக்க அலுவலர் பணிக்குக் கல்வித் தகுதியாகப் பி.எஸ்சி. விவசாயம், பி.எஸ்சி. தோட்டக்கலை, பி.எப்.எஸ்சி., (மீன்வளம்), பால் வளம், வேளாண்மை பொறியியல் ஆகிய படிப்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சட்ட அலுவலர் பணிக்கு பி.எல். அல்லது எல்.எல்.பி. பட்டம் வேண்டும். மனித வள அதிகாரி பணியில் சேர வேண்டுமானால் பணியாளர் மேலாண்மையில் முதுகலை பட்டம் அல்லது பட்டப் படிப்புடன் பணியாளர் மேலாண்மை, தொழில் உறவுகள், சமூகவியல், தொழிலாளர் சட்டம்-இவற்றில் முதுகலை டிப்ளமா பெற்றிருக்க வேண்டும். விற்பனை அலுவலர் பணிக்கு எம்.பி.ஏ. (மார்க்கெட்டிங்) அல்லது ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் வணிகவியல் மேலாண்மை அல்லது வணிகவியல் நிர்வாகத்தில் டிப்ளமா வேண்டும்.
மேற்கண்ட அனைத்துப் பணிகளுக்கும் வயது வரம்பு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எஸ்.சி, எஸ்.டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. சிறப்பு அதிகாரி பணிக்கான தேர்வுக்கு டிசம்பர் 10-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.ibps.in) விண்ணப்பிக்குமாறு ஐ.பி.பி.எஸ் அறிவித்துள்ளது. தேர்வுக்கான பாடம் உள்ளிட்ட இதர கூடுதல் விவரங்களை ஐ.பி.பி.எஸ் இணையதளத்தில் விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|