தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஆரிய இனவெறி ஆர்.எஸ்.எஸின் சதிகளும் தமிழகம் சந்திக்கப் போகும் சவால்களும் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆரிய இனவெறி ஆர்.எஸ்.எஸின் சதிகளும் தமிழகம் சந்திக்கப் போகும் சவால்களும் Empty ஆரிய இனவெறி ஆர்.எஸ்.எஸின் சதிகளும் தமிழகம் சந்திக்கப் போகும் சவால்களும்

Fri Nov 13, 2015 5:24 am
மத்தியில் இப்போது பாஜக அரசு ஆட்சி நடத்தினாலும் அவர்களை எல்லா துறைகளிலும் இயக்கும் இயங்குசக்தியாக இருப்பது ஆர்.எஸ்.எஸ்தான் என்பது அரசியல் தெரிந்த சாதரணமானவர்களுக்கும் தெரிந்த செய்தி. ஆனால் இந்த மதவெறிக் கும்பலான ஆர்.எஸ்.எஸ்சின் நோக்கத்தை அறிந்து கொண்டால் தான் அவர்களின் எதிர்கால சதிதிட்டமென்ன என்பன போன்ற பலவற்றைப் புரிந்து கொள்ளமுடியும்.


இந்த மதவெறிக் கும்பல் அடுத்த இலக்காக வைத்திருப்பது அடுத்த வருடத்தில் நடைபெறப்போகும் இரு மாநிலத் தேர்தல்கள் தான். அதில் ஒன்று மேற்கு வங்காளம், மற்றொன்று தமிழகம். இந்த சூழ்நிலையில் இவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள உதவும் வண்ணம் இந்த சிறியக் கட்டுரையை எழுதுகிறோம். இதுவே முழுமையானது அல்ல.


முதலில் ஆர்.எஸ்.எஸின் நோக்கத்தை தெரிந்து கொண்டால் தான் அதன் இன்றைய செயல்பாடுகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அதாவது இந்தியா இந்துக்களின் நாடு என்றும், இங்கு வாழும் அனைவரும் இந்துக்களே என்றுகூறி மத அடிப்படைவாதத்தையும், சிறுபான்மையினர் மற்றும் தேசிய இனங்களை சேர்ந்தவர்களுக்கு எதிரான முழக்கத்தையும் முன்வைத்து, 1925ல் ஆர்.எஸ்.எஸ் உதயமாகிறது. அன்றிலிருந்து தனது அடிப்படைவாதத்திற்கு வலுவூட்ட பல்வேறு மதக்கலவரங்களையும், கொலைகளையும் செய்து வருகிறது. அதன் உச்சம் தான் கோட்சே என்பவனை வைத்து காந்தியை சுட்டுக் கொன்றது.


இப்படி கொடூரமான செயலை செய்த ஆர்.எஸ்.எஸ் இயக்கமானது இதுவரை நான்கு முறை இந்தியாவில் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இனிமேல் இதுபோல் நடந்து கொள்ள மாட்டோமென்று மன்னிப்பு கேட்டு தடையை நீக்கியிருக்கிறார்கள். இப்படி ஒரு மோசமான இயக்கமான ஆர்.எஸ்.எஸின் பிடியில் தான் இந்தியா சிக்குண்டுள்ளது. இவர்களின் கருத்துகளை வலுவூட்ட கிடைக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளும். அப்படிப்பட்ட சூழல் தான் இப்போது இருக்கிறது என்பதை உணர்ந்து தான் மோடியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.


பாஜகவில் ஆர்.எஸ்.எஸின் ஆட்கள்:


பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஆரிய இனவெறி ஆர்.எஸ்.எஸின் வேலை தொடங்குகிறது. அதாவது மோடியின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளில் நீண்ட காலமாக ஆர்.எஸ்.எஸில் இருந்த ஏழு பேருக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. அதில் முக்கியமானவர் வெளியுறவுத் துறை அமைச்சர் இராஜ்நாத் சிங். இவர்தான் நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை கொண்டுவர வேண்டுமென்று தொடர்ந்து பேசிக்கொண்டு வருகிறார்.


மேலும் அந்த கட்சியில் தலைவராக அமித் ஷாவை கொண்டு வருகிறார்கள். இவர் ஒரு அதிதீவிரமான ஆர்.எஸ்.எஸ்காரர். அதுபோக கட்சியில் தற்போது பொதுச் செயலாராக இருக்கும் ஐந்துபேர்களில் மூன்று பேர் (ராம் மாதவ், ராம் லால் மற்றும் முரளிதரராவ்) ஆர்.எஸ்.எஸினால் நேரடியாக பாஜகவுக்கு அனுப்பப்பட்டவர்கள். மீதமுள்ள இரண்டு பேர் (புபேந்திர யாதவ் மற்றும் சரோஜ் பாண்டே) ஆர்.எஸ்.எஸிடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். இதுபோக இதுவரை இல்லாத நடைமுறையாக அமித் ஷா நான்கு இணைச் செயலாளர்களை நியமிக்கிறார். அவர்கள் நால்வரும் ஆர்.எஸ்.எஸைச் சேர்ந்தவர்கள்.


மேலும் நாட்டின் மிக முக்கிய பொறுப்புகளான பண்பாடு, கலாச்சாரம், கல்வி முதலியனவற்றுக்கும் ஆர்.எஸ்.எஸின் ஆட்களே நியமிக்கப்படுகிறார்கள். உதாரணமாக


1. ஆர்.எஸ்.எஸ் ஊறுப்பினரான கஜேந்திர சவுகான் இந்தியாவின் திரைப்படம் மற்றும் தொலைகாட்சி இயக்குனரகத்தின் தலைவராகிறார்.
2. ஆர்.எஸ்.எஸ் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரான பல்தேவ்சர்மா தேசிய புத்தக அறக்கட்டளைக்கு தலைவராகிறார்.
3. ஆர்.எஸ்.எஸ் ஊழியராக இருக்கின்ற இந்தர் மோகன் காபபி என்பவர் பல்கலைக்கழக மானியக்குழுவின் உறுப்பினராகிறார்.
4. இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழுவின் தலைவராக ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான ஓய்.சுதர்சன ராவ் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இப்படி நாடு முழுவதையும் தனது கட்டுபாட்டுக்குள் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ் அதி தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது.


ஆர்.எஸ்.எஸின் தற்போதைய செயல்திட்டங்கள்


ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை இந்தியாவெங்கும் பரப்ப, அதிகாரம் தனது கைகளில் இருக்கும் இந்த நேரம் தான் சரியானது என்று முடிவெடுத்து எந்தெந்த மாநிலங்களெல்லாம் தனக்கு செல்வாக்கு இல்லையோ, அங்கே மத அடிப்படை வாதத்தையும் போலி மோதல்களையும் உருவாக்கி அதன்மூலம் தனது செல்வாக்கை நிலைநிறுத்த தற்போது தீவிரமாக முயற்சி செய்கிறது. இதை தற்போது நடந்து கொண்டிருக்கும் பீகார் தேர்தலைப் பார்த்தாலே நமக்குப் புரியும்.


உத்திரப்பிரதேசத்தில் ஒவ்வொரு ஆர்.எஸ்.எஸ் தொண்டனும் 100 பேரையாவது பாஜகவுக்கு வாக்களிக்க வைக்க வேண்டுமென்றும், மேலும் அந்த 100 பேருக்கும் தான் ஒரு இந்து என்றும், சிறுபான்மையினர் நமக்கு எதிரிகள் என்றும் நம்ப வைக்க வேண்டும் என்பது தான் அயோக்கியன் அமித் ஷாவின் தேர்தல் வியூகம். அதன்படியேதான் தற்போது மேற்கு வங்காளத்திலும் தமிழகத்திலும் தனது வேலையை ஆர்.எஸ்.எஸ் செய்கிறது.


ஆர்.எஸ்.எஸின் செயல்திட்டமும் மேற்குவங்கம் மற்றும் தமிழகம் ஓப்பீடும்


மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு இரண்டும் மத அடிப்படை வாதத்தை மிகத் தீவிரமாக எதிர்க்கும் மாநிலங்கள். அதிலும் குறிப்பாக தமிழகம் இவர்களின் புரட்டுக்களை இராண்டாயிரம் ஆண்டுகளாக எதிர்த்து வந்தவர்கள். மேற்கு வங்காளம் கம்யூனிச சித்தாந்தத்தையும், தமிழகம் பகுத்தறிவு சித்தாந்தத்தையும் கொண்ட மாநிலங்கள்.


இந்தச் சூழலில் மேற்கு வங்காளத் தேர்தல் குறித்து விவாதிக்க ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டங்கள் இந்த வருடத்தில் மட்டும் 5 முறை நடந்துள்ளது. கடந்த முறை 2011ல் நடந்த தேர்தல்களில் மொத்தமிருக்கிற 290 இடங்களில் ஒரு இடம் கூட பாஜக வெல்லவில்லை என்பதை மாற்ற வேண்டுமென்று மோடி விரும்புகிறார் என்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமித் ஷா பேசியிருக்கிறார். மேலும் இங்கு யார் தலைவராக வேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ்சே முடிவு எடுத்துக் கொள்ளலாமென்றும் ஓப்புதல் அளித்திருக்கிறார் அமித் ஷா. மேலும் மேற்கு வங்காளத்தில் ஆர்.எஸ்.எஸ் காலூன்றுவதன் மூலம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியை முழுவதையும் மற்றும் சீனா எல்லையோரத்தையும் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று ஆர்.எஸ்.எஸ் பேசியிருக்கிறது. இதனை பாஜகவின் மூத்த தலைவரான சித்தார்த் நாத் சிங் தனது பேட்டி ஒன்றில் அறிவித்தார்.


இதனையடுத்து மேற்குவங்காளத்தில் கடந்த ஏப்ரலில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக போட்டியிட்டது,. முதன்முறையாக அந்தத் தேர்தலில் அனைத்து உள்ளாட்சி பொறுப்புகளுக்கும் ஆளை நிறுத்தி தனது இருப்பை தக்கவைத்துக் கொண்டது. அந்த தேர்தலில் குறைந்தளவு வெற்றியை பெற்ற போதிலும் அதாவது மொத்தமிருந்த 1943 இடங்களில் வெறும் 16லிருந்து 74 இடங்களையே பெற்றிருந்தது. இருந்தாலும் எங்களுக்கும் மேற்கு வங்காளத்தில் அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை நிற்கவைக்க ஆட்கள் இருக்கிறார்கள்; நாங்களும் கம்யூனிஸ்ட்கள் மற்றும் மம்தா பேனர்ஜியின் கட்சிக்கு இணையாக இங்கு இருக்கிறோமென்று மக்கள் மனதில் நிலைநிறுத்தியது. அடுத்ததாக அது கையில் எடுத்தது மதச்சண்டைகள்.


மேற்கு வங்கத்தைப் பொருத்தவரை 1971ல் வங்கதேசம் தனிநாடாகப் பிரிந்த போது உருவான இந்து முஸ்லீம் பிரச்சனைகளை தவிர, அங்கு அதன் பிறகு பெரிதாக மதச்சண்டைகள் உருவாகவில்லை. ஆனால் இன்று தொடர்ச்சியாக அங்கு மதச்சண்டைகளை உருவாக்கும் விதமாக தொடர்ந்து பேசி சிறுபான்மையினருக்கு எதிரான அணி திரட்டலை செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ்.


இதுதான் தமிழகத்திலும் நடந்தது/நடக்கிறது. சற்று யோசித்துப் பார்த்தால் கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது அது பெற்ற இடங்கள் கார்ப்ரேசன் கவுன்சிலர் 4, முனிசிபால்டி சேர்மன் 2, முனிசிபால்டி கவுன்சிலர் 37, பாஞ்சாயத்து தலைவர் 13 மற்றும் வார்டு மெம்பர் 181 பேர் என மொத்தம் 237 இடங்களை கைப்பற்றி, திமுக, அதிமுகவுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சியாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டது. அதன் மூலம் ஒரு பெரிய கூட்டணியை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்படுத்தி பாஜக என்ற கட்சியை மாற்று கட்சியாக முன்னிலைப்படுத்தியது.


மேலும் தனக்கு வேண்டிய உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு சிறந்த நிர்வாகத்திற்கான மத்திய அரசின் விருதுக்கு பரிந்துரைத்து, அதன் மூலம் கிராமம் தோறும் தமிழகத்தில் காலூன்றுகிற ஒரு முயற்சியையும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக செய்கிறது.


இது ஒருபுறமென்றால் மறுபுறம் முன்னைவிட வீரியமாக அவ்வப்போது மாட்டிறைச்சிக்கு தடை, இடஓதுக்கீடுக்கு எதிரான முழக்கங்கள், பகவத் கீதையை புனித நூலாக அறிவிக்க வேண்டுமென்று புதுப்புது சர்சைகளைக் கிளப்பி அதன் மூலம் மக்கள் மனநிலையையும் முற்போக்கு இயக்கங்களின் மனநிலையையும் எடை போடுகிறது. மேலும் தனக்கு சாதகமான ஆட்களை காட்சி ஊடகங்களில் வைத்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸின் கருத்துகளை மக்கள் கருத்தாக மாற்றும் வேலையும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


இதையும் சிலர் ‘நாமெல்லாம் இந்துக்கள் தானே, ஆர்.எஸ்.எஸ் வளர்ந்தால் நல்லது தானே’ என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறுயில்லை. ஏனென்றால் ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படும்போது பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி சொன்னது ’சிங்களவர்களுக்கும் எங்களுக்கும் ஆரிய உறவு’ என்று. அப்படியானல் தமிழர்கள் யார்? அவர்களுக்குத் தெளிவாக தெரிந்திருக்கிறது தமிழர்கள் வேறு; இந்துக்கள் வேறு என்று. ஆனால் இங்கு தான் சிலர் ‘என் பெயர் கோபலாகிருஷ்ணன்’ என்று 16வயதினிலே சப்பாணி மாதிரி சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவன் தமிழர்களை எதிரியாகவே பார்க்கிறான்/பார்ப்பான்.


ஒருவேளை இந்தியாவெங்கும் ஆர்.எஸ்.எஸ் காலூன்றுகிறதென்றால் அது ஒடுக்கப்பட்ட மக்கள் தேசிய இனமக்கள் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு எதிராகவே இருக்கும். இதை ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாயாஜி ஜோசி சமீபத்தில் தனது பேட்டியில் சொல்லியிருக்கிறார். அதாவது “இந்துஸ்தான் என்பது இந்துக்கள் வாழும் இடம். எனவே இங்கு வாழும் அனைவருமே இயற்கையாகவே இந்துக்கள் தான். இதனை மறுப்பவர்கள் இங்கு இருக்கத் தேவையில்லை” என்ற பகிரங்க மிரட்டலை விடுத்திருக்கிறார்.


இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு என்று வெளியுலகை நம்ப வைத்துக்கொண்டு அதற்கு வேட்டுவைக்கும் அனைத்து வேலைகளையும் செய்யும் இந்த ஆரிய இனவெறி ஆர்.எஸ்.எஸ் கும்பலையும் அதன் அரசியல் வடிவமான பாஜகவையும் மக்கள் புரிந்துகொண்டு புறக்கணிக்க வேண்டும். இதனை தமிழர்களாகிய நாம் தொடங்கி வைப்போம்.


- சு.கி.கொண்டல், மே 17 இயக்கம்
‎Samuel Churchill‎ to Best@whatsapp
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum