தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
வெண்ணிற ஆடை மூர்த்தியின் தத்துவங்கள் (ஜோக்) Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வெண்ணிற ஆடை மூர்த்தியின் தத்துவங்கள் (ஜோக்) Empty வெண்ணிற ஆடை மூர்த்தியின் தத்துவங்கள் (ஜோக்)

Mon Mar 11, 2013 6:32 am
வெண்ணிற ஆடை மூர்த்தியின் தத்துவங்கள் (ஜோக்) Police
ஏழையாக இருப்பது நல்லது. வியாதி வந்தால் டாக்டர் சீக்கிரம் குணப்படுத்திவிடுவார்.
==============================
E.C.G என்பது ஜீவன் ஈஸியாகப் போகுமா இல்லை அவஸ்தைப்பட்டு போகுமா என்று கோடிட்டு காட்டும் வரைபடம்.
==============================
அபராதம் என்பது தவறாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் வரி. வரி என்பது சரியாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் அபராதம்.
==============================
செல்வா: அப்பா நம்ம கார யாரோ திருடிட்டு போறாங்க.
அப்பா: அவங்க யாருன்னு பாத்தியா?
செல்வா: இல்லப்பா ஆனா கார் நம்பர் நோட் பண்ணினேன்.
==============================
வக்கீல்: போலீஸ் விசிலடிச்சு,கையை ஆட்டி கூப்பிட்ட போது ஏன் காரை நிறுத்தலை?
பெண்: நான் அந்த மாதிரி பெண் இல்லைங்க..
==============================
நல்லவேளை நான் தமிழ்நாட்டில் பிறந்தேன். வடநாட்டில் பிறந்திருந்தால் ஹிந்தி தெரியாமல் கஷ்டப்பட்டிருப்பேன்.
==============================
மூக்கில் ரத்தம் கசியாமல் இருக்க மற்றவர் விசயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பதே நலம்.
==============================
வந்தது போகட்டும் என்பதற்காக செய்யப்படுவது சாதாரண ஆபரேசன். வராமலே
போகட்டும் என்பதற்காக செய்யப்படுவது குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசன்.
==============================
அவர் யாரிடமும் ஷட்-அப் என்று சொல்ல மாட்டார். அவர் ஒரு பல் டாக்டர்.
==============================
எங்கள் தாத்தா நூறு வயது வரை உயிரோடு இருப்பதற்கு காரணம் ஆப்பிள் தான். ஆம் இதுவரை அவர் ஆப்பிள் சாப்பிட்டதே இல்லை.
==============================
உடல் முழுதும் முடி இருப்பவனுக்கு குளிக்க சோப்பு தேவையில்லை. ஷாம்பூ
போதும். வழுக்கை தலையோடு இருப்பவனுக்கு ஷாம்பூ தேவையில்லை. சோப்பு போதும்.
==============================
ஒரு பெண்ணுக்கு அழகுதான் அவளது சொத்து என்றால் நிறைய பெண்களுக்கு சொத்து வரி கட்ட அவசியமே இருக்காது.
==============================
மொட்டைத்தலை உள்ளவனுக்கு மயிர் கூச்செறியும் கதை சொல்லலாமா?
==============================
எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமெனில் வயதானவர்கள் பக்கத்திலேயே இருங்கள்.
==============================
உடல் எடையை குறைக்க அவன் தினமும் பூண்டு சாப்பிட்டு வந்தான். ஆனால் எடை குறையவில்லை. நண்பர்கள் குறைந்துவிட்டனர்.
==============================
ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது?
==============================
திருமண மோதிரம்: உலகத்திலேயே விரலுக்கு போடும் மிகச் சிறிய விலங்கு
==============================
ஒரு பெண் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுவாள் திருமணம் ஆகும்வரை. ஒரு
ஆண் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டான் திருமணம் ஆகும்வரை.
==============================
உலகத்திலேயே ஒரே ஒரு பெண்தான் நல்லவள் இல்லை. அவள்தான் என் மனைவி என பல கணவன்மார்கள் நினைப்பதுண்டு.
==============================
சமையலறையில் நிகழும் விபத்தைதான் ஏன் மனைவி எனக்கு டின்னராக பரிமாறுகிறாள்
==============================
இரண்டு கல்யாணம் செய்து கொள்பவனுக்கு தண்டனை - இரண்டு மாமியார்கள்.
==============================
கணவன்: ஏன் உறவுக்காரங்க வந்தா நீ சரியா கவனிக்கிறதில்லை?
மனைவி: ஏன் இப்படி சொல்றீங்க. என் மாமியாரைவிட உங்க மாமியாரத்தான நான் நல்லா கவனிக்கிறேன்.
==============================
நண்பர் 1 : கார் ஓட்டும்போது விபத்து ஏற்பட்டிருக்கிறதா?
நண்பர் 2 : உண்டு. என் மனைவியை முதன் முதலாக ஒரு பெட்ரோல் பாங்கில்தான பார்த்தேன்.
==============================
தூக்கத்தில் உளறுவது பற்றி அவன் கவலைப்பட மாட்டான். அவனுடைய மனைவிக்கும் அவனுடைய ஸ்டெனோ வுக்கும் ஒரே பேர்தான்.
==============================
குழந்தைகள் வேகமாக வளர்வதே ஸ்கூல் யூனிபார்ம் வாங்கியபின் 2,3 மாதங்களில்தான்
==============================
டெலிபோனை கண்டுபிடித்தவர் கிரகாம்பெல். அவருக்கு மட்டும் ஒரு மகள் இருந்திருந்தால் அவர் டெலிபோனை கண்டுபிடித்தே இருக்க மாட்டார்.
======================================
ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு வந்த கடிதம்:

அய்யா என் மனைவி என்னை விவாகரத்து செய்ய திட்டமிட்டிருந்தாள். உங்கள்
பத்திரிகையில் வந்த "விவாகரத்தும், அதன் விபரீத விளைவுகளும்" என்கிற
அருமையான கட்டுரையை படித்ததும் மனம் திருந்தி விவாகரத்து முயற்சிகளை
கைவிட்டுவிட்டாள்.

பின் குறிப்பு: இத்துடன் நான் என் சந்தாவை கேன்சல் செய்கிறேன். இனிமேல் உங்கள் பத்திரிக்கையை எனக்கு அனுப்ப வேண்டாம்.
==============================

நன்றி: வெண்ணிறாடை மூர்த்தி. அவர் எழுதிய புத்தகத்தில் தொகுத்தது
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum