தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
மீன் சாப்பிடுங்க Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மீன் சாப்பிடுங்க Empty மீன் சாப்பிடுங்க

Mon Mar 11, 2013 5:20 am
மீன் சாப்பிடுங்க 304363_268486636601758_153499844_n
கடல்
வாழ் உயிரினம்!! இதில் ஏராளமான் ஒமேகா-3- கொழுப்பு அமிலம் (Omega-3 Fatty
Acids) உள்ளதால், இது மூளைக்கும், இதயத்திற்கும் நல்லது. இதனால் நினைவுத்
திறன் அதிகரிக்கும். நினைவு மறதி நோய் (Dementia and Alzheimer's Disease)
பாதிக்காது. இப்படி கடல் மீனை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம்,
குழந்தைகளுக்கு பலவகை பிரச்சினைகளுக்கு தீர்வு தருகிறதாம். இதுலுள்ள DHA
(Docosahexaenoic Acid) என்ற வேதிப்பொருள் அவர்களின் அதிகமான்
செயல்திறனையும் (Hyperactivity), நடத்தை கோளாறுகளையும் (Behavioural
Problems) சரிசெய்வதாகவும், மேலும் அவர்களின் கல்வி தொடர்பான திறமைகளை
அதிகரிப்பதாகவும், கவன ஈர்ப்புத் திறன் கூடுவதாகவும் ஆராய்ச்சி மூலம்
கண்டறியப்பட்டுள்ளது.

கடல் உணவுப்பொருள்கள் இதயத்தின் நலத்துக்கும், அதனைப் பராமரிக்கவும்
மிகவும் உதவுவதாக பல ஆதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாரம் ஒரு முறை மீன்
சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு வருவது பாதியாக குறைக்கப்படுகிறதாம்.
பாரம்பரியமாக மீனை தொடர்ந்து உண்ணும் இந்நூட் இன மக்கள் மற்றும்
ஜப்பானியர்களுக்கு இதயப் பிரச்சினைகள் மற்றும் மாரடைப்பு போன்றவை மிகக்
குறைவாகவே வருகிறதாம். மீன் சாப்பிடுபவர்கள் மற்றும் மீன்
சாப்பிடாதவர்களிடையே கணக்கெடுப்பு உலகம் முழுவதும் நடத்தியதில்தான் இந்த
தகவல்கள் கிடைத்தன. மேலும் அமெரிக்க வாழ் செவிலிகளிடம் மீன் மற்றும் கடல்
உணவு உண்ணுவது தொடர்பாக தகவல் சேகரித்ததில் அவர்களுக்கு இதயப் பிரச்சினை
50%, சர்க்கரை நோயின் வாய்ப்பு 60% குறைந்தது தெரிய வந்தது.

மாதம் மூன்று முறை மீன்/கடல் உணவு உண்டால் உங்களின் இதயத்திற்கு, சிக்கல்
வராதாம். மாரடைப்பு, ஸ்ட்ரோக்கிலிருந்து தப்பிக்கலாமாம். மீன் இரத்தக்
குழாய்களில் இரத்தம் கட்டியாகி அடைப்பதை தவிர்க்கிறது. அதிக கொழுப்பு உள்ள
உணவு மீனின் எண்ணெயிலுள்ள EPA, (Eicosapentaenoic Acid (EPA) and
Docosahexaenoic Acid (DHA) & இயற்கையான ஒமேகா-3 - கொழுப்பு அமிலம்
போன்றவை தற்காப்பு சக்தியை அதிகரிக்கிறது.இவர்களுக்கு DHA என்பது பொதுவாக
கருவில் வளரும் குழந்தையின் துவக்க காலத்தில் மூளை மற்றும் கண்ணின்
வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. இது மூளை வளரும்போது தகவல்களுக்கு
பதிலிறுக்க மூளையின் செல்களைத் தூண்டுகிறது. கருவுற்றிருக்கும் தாய்
மற்றும் குழந்தை பெற்ற தாய்க்கும் மிகவும் நெருங்கிய நன்மை செய்யும்
நண்பன்.

தாய்ப்பாலில் DHA மற்றும் அரக்டானிக் அமிலம் (Arachidonic Acid)
இருப்பதால், தாயப்பால் குடித்த குழந்தைகளின் கண்பார்வை நன்றாகவும்,
மூளைத்திறன் அதிகமாகவும் இருக்கிறது. DHA மகப்பேறு காலத்தில் உண்டாகும்
மனவழுத்தத்தைக் குறைக்கிறது. பொதுவாக கடல் மீன் உண்பதன் மூலம் மன இறுக்க
நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

சில நாடுகளில் இந்த DHA மற்றும் ஒமேகா-3 -கொழுப்பு அமிலம் குறைவால்
குழந்தைகள் மிகவும் பாதிக்கப் படுகின்றனர். இதற்கு நிகரான வெளி உணவையோ/
மாற்றுப் பொருள்களையோ கொடுப்பது சிரமம். முதுமைக் காலத்தில் நமக்கு
ஏற்படும் நினைவு மறதி நோய் மற்றும் மூளையின் செயல்பாட்டுத் திறன் (Dementia
and Alzheimer's Disease) பிரச்சினைகள் வரும் அளவை கடல் மீன்/உணவு
பெருமளவு குறைக்கிறது. உடல் பருமன் வராமல் தடுக்கிறது.

கண்ணின் பல பிரச்சினைகளுக்கு கடல் மீன் உணவு நல்லது. புற்று நோய் வரும்
அபாயத்தை தவிர்க்கிறது. இரண்டாம் வகை சர்க்கரை நோயும் இதனால் குறைகிறது.
இரத்தக் குழாயினுள் இரத்தம் உறைதலை, இரத்தக் கட்டியைத் தவிர்க்கிறது.
மூட்டு வலி மற்றும் கீல்வாத வலியைக் குறைக்கிறது. நுரையீரலைக் கண்காணித்து,
பாதுகாத்து, சுவாசம் தொடர்பான சங்கடங்கள் வராமல் கவனித்துக் கொள்கிறது.

ஒமேகா-3 -கொழுப்புகள் (Omega-3 Fats) நமது தோலை பளபளவென மினுக்கும் அழகுடன்
வைத்துக்கொள்ள உதவுகிறது. தோல் நோய்களை அண்டவிடாமல் பார்த்துக் கொள்கிறது.
முதுமைக் காலத்தில் கொலாஜென் (Collagen) சிதைவால் ஏற்படும் தோல்
சுருக்கத்தையும் குறைக்கிறதாம். பொதுவாக ஏற்படும் மலச்சிக்கல் மற்றும்
சீரணப் பிரச்சினைகளைத் தவிர்க்கிறது. உடல் வளர்ச்சிக்கு பிரமாதாய்
உதவுகிறது.

குறிப்பு: இத்தனை பயன்களும் குழம்பு மீனால்தான். வருக்கும் மீனில் கொஞ்சம் குறையும். வறுத்த மீனில் கொலஸ்டிரால் வரும்.

நன்றி: தினக்ஸ்
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

மீன் சாப்பிடுங்க Empty Re: மீன் சாப்பிடுங்க

Wed Mar 13, 2013 6:05 pm


மிகச்சிறந்த மருந்து மீன் உணவு ...!

மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன ???...
மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும்
கவலைப் பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை, எதுவும் உங்களை அண்டவே
அண்டாது.

மீன் உணவில், கொழுப்பு
அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற
ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல்
இருக்க, இந்த ஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு
சாப்பிடுபவர் களுக்கு அவர்கள் அறியாமலேயே, "ஒமேகா 3' கிடைக்கிறது.

அதனால், வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது.

எந்த நோய் வராது?
1. ஆஸ்துமா:
மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது. அதிலும்,
குழந்தைகளுக்கு, மீன் உணவு கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக
ஆஸ்துமா வரவே வராது.

2. கண் பாதிப்பு:
மூளைக்கும், கண்
பார்வைக்கும் மிகவும் பயனளிக்கிறது மீன் உணவில் உள்ள "ஒமேகா 3' ஆசிட், மூளை
சுறுசுறுப்பாக இயங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராமலும் செய்கிறது
இது.

3. கேன்சர்:
பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில்,
"ஒமேகா 3' யின் பங்கு 70 சதவீதம் வரை உள்ளது. மீன் உணவு சாப்பிடும்
பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது.

4. இருதய நோய்:
கொழுப்பு அறவே இல்லாமல் இருப்பதால், இருதய பாதிப்பு வருவது என்ற
கேள்விக்கே இடமில்லை. ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு
பிரச்னை போன்ற எதுவும் வராது. இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது
மீன் உணவு.

எப்படி சாப்பிடணும்?

1. மீன் உணவை, எந்த
வகையில் சாப்பிட்டாலும், அதன் சத்துக்கள் போகாது. ரொட்டி போல சுட்டு
தயாரிக்கும் போது நன்றாக சமைக்க வேண்டும். எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயில்
மூலம் தயாரித்தால் நல்லது.

2. வாணலியில், சிறிய அளவு வெண்ணெய் போட்டும் பொரித்து சமைக்கலாம். "ஓவன்' சாதனத்தில் வைத்தும் சமைக்கலாம்.

3. உறைய வைக்கப்பட்ட மீனாக இருந்தால் அதற்கேற்ப, நேரம் விட்டு சமைக்க
வேண்டும். சில வகை மீன்களில் பாதரசம் அதிகம். அதனால், அவற்றை சமைக்கும்
போது, மிகுந்த கவனம் தேவை.

4. பாதரசம் அதிகமுள்ள மீன் வகையாக
இருந்தால், கருத்தரிக்க இருக்கும் பெண்களும், ஆறு வயதுக்குட்பட்ட
குழந்தைகளும் தவிர்த்துவிட வேண்டும்.

5. மோசமாக உள்ள குளங்கள், குட்டைகளில் பிடித்த மீன்களை சமைத்துச் சாப்பிடக் கூடாது. அதனால், வேறு பாதிப்புகள் வரலாம்




மீன் சாப்பிடுங்க 600353_619829974710064_171602154_n

நன்றி: முகநூல் சுபா
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum