தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
யார் இந்த ஹர்திக் படேல்? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

யார் இந்த ஹர்திக் படேல்? Empty யார் இந்த ஹர்திக் படேல்?

Mon Aug 31, 2015 8:39 am


யார் இந்த ஹர்திக் படேல்? 11887963_145801985760527_1785640096774462637_n

Karuna Nidhi 
[28/08 4:42 PM] Dr.R.Karuna Nidhi .M.A ENGLISH Litt. B.Ed


யார் இந்த ஹர்திக் படேல்?


ஒரு மாநிலமே முடங்கியிருக்கிறது. தலைநகர் அகமதாபாத் கலவர நகரமாகியிருக்கிறது. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டும் அகமதாபாத்தில் மட்டும் 50 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் என்று 140 வாகனங்கள் தீக்கிரையாகியிருக்கின்றன. இதுவரை 9 உயிர்கள் கலவரங்களில் பறிபோயிருக்கின்றன. மேசானா, ராஜ்கோட், சூரத் என சௌராஷ்டிரம் வரை வன்முறைத் தீ தொடர்ந்து பரவுகிறது. கடி நகரில் சுகாதார அமைச்சர் நிதின் படேலின் வீடு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. மேசானாவில் உள்துறை இணையமைச்சர் ரஜனிகாந்த் படேல், மோர்பியில் வேளாண் இணையமைச்சர் ஜெயந்தி கவாடியா, சமூகநீதித் துறை அமைச்சர் ரமண்லால் வோராவின் அலுவலகம் ஆகியவை எரித்தழிக்கப்பட்டிருக்கின்றன. மோர்பியில் மத்திய வேளாண் இணையமைச்சர் மோகன் கவுன்டரியாவின் கார் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது.


 இன்னும் வடோதராவில், பலிதானாவில் என்று ஆளும் பாஜகவின் பிரதிநிதிகளே அடிபடும் கதைகள் ஒவ்வொன்றாய் வந்துகொண்டேயிருக்கின்றன. முதல்வரும் பிரதமரும் அமைதிக்காக வேண்டுகோள் விடுத்தும் பலனில்லாமல், விரைவு அதிரடிப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை என மத்தியப் படைகளின் பல பிரிவுகள் அழைக்கப்பட்டிருக்கின்றன.


சின்னச் சின்ன ஊர்களில்கூட அவர் கூட்டிய கூட்டங்களுக்கு 5,000 பேருக்குக் குறையாமல் கூடுகிறார்கள். வடோதராவில் 50,000 பேர், சூரத்தில் 2 லட்சம் பேர், அகமதாபாத்தில் 5 லட்சம் பேர் என அவர் கூட்டும் கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் திரளும் மக்களின் எண்ணிக்கை மிரளவைக்கிறது. அவருடைய ‘பாடிதார் அனாமத் ஆந்தோலன் சமிதி’ அழைப்பு விடுத்த மாநிலம் தழுவிய ஒரு நாள் முழு அடைப்பு அன்று அகமதாபாத்தில் மட்டும் 10 லட்சம் பேர் திரண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த குஜராத்தும் ஸ்தம்பித்திருக்கிறது.

காலங்காலமாக இந்தியாவைச் செல்லரித்துக் கொண்டிருக்கும், விருட்டென்று பாய்வதற்கான தருணம் பார்த்து நம் உடலின் ஒவ்வொரு அணுவிலும் பதுங்கிக் காத்திருக்கும் சாதிய அரசியல் ஆதிக்கத்தின் தெறிப்புப் புள்ளிகளில் ஒன்று, இந்த ஹர்திக் படேல். குஜராத்தில் படேல் சமூகத்தினருக்கான பிரதிநிதித்துவத்துக்காக, அவர்களுடைய சமவாய்ப்புக்காக இடஒதுக்கீடு கேட்டுத்தான் ஹர்திக் படேல் போராட்டம் நடத்துகிறார் என்று சொன்னால், குஜராத் நிலவரம் தெரிந்த சின்னக் குழந்தைகூடச் சிரித்துவிடும். ஏனென்றால், இன்றைய குஜராத்தின் அரசியல் - அதிகாரவர்க்கத்தைச் சாதிரீதியாக உடைத்துப்போட்டால், எங்கும் எதிலும் படேல்களே முன்னணியில் இருப்பார்கள். மாநிலத்தின் மக்கள்தொகையில் 15% படேல்கள். ஆளும் பாஜகவின் மாநிலத் தலைவர் ஆர்.சி.ஃபைடு ஒரு படேல். குஜராத் முதல்வர் ஆனந்திபென் ஒரு படேல். பாஜகவின் 120 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 40 பேர் படேல்கள். இன்னும் ஏனைய கட்சிகளில், ஏனைய துறைகளில், பொருளாதாரத்தில் என்று பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம்.


குஜராத்தில் சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை மாதவ் சிங் சோலங்கி தலைமையிலான காங்கிரஸ் அரசு 30 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவந்தபோது, இதே படேல் சாதிய அமைப்புகள் அன்றைக்குச் சமூகரீதியான இடஒதுக்கீட்டுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தன. பொருளாதாரரீதியிலான இடஒதுக்கீட்டை முன்னிறுத்தின. இப்போதும், ஹர்திக் படேல் இயக்கத்தின் இறுதி இலக்கு அதை நோக்கிதான் நகர்கிறது என்கிறார்கள், குஜராத்தின் சமூகவியல் இயக்கத்தை முழுமையாக அறிந்தவர்கள். ஏனென்றால், முன்னேறிய சமூகமான படேல் சமூகத்தினருக்குச் சமூகரீதியான இடஒதுக்கீடு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அரிது. ஏற்கெனவே ஜாட்டுகளுக்கான இடஒதுக்கீடு சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்தச் சூழலில் ஜாட்டுகள், படேல்களைத் தொடர்ந்து ஏனைய முன்னேறிய சமூகங்களும் இடஒதுக்கீடு வலியுறுத்தல்களுடன் களத்தில் இறங்கினால், இந்தியச் சூழலில், நாட்டின் இயக்கமே ஸ்தம்பிக்கும். அப்போது இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான / பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கான குரல்கள் மேலே வரும்.


இடஒதுக்கீடு தொடர்பான சங்கப் பரிவாரங்களின் நிலைப்பாடு நாம் அறியாதது அல்ல. கலவரப் புகைமூட்டம் அடங்குவதற்குள்ளேயே விஷ்வ இந்து பரிஷத்தின் இணைப் பொதுச்செயலர் சுரேந்திர ஜெயின், “சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று முழங்கியிருப்பதும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.டி.ரவி, “சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும்” என்று ட்விட் செய்திருப்பதும் இந்த நேரத்தில் நிறைய அர்த்தங்களை உள்ளடக்கியவை. எல்லாவற்றையும்விட முக்கியமானது, இந்தக் கலவரத்தின் பின்னே குஜராத் அரசின் கைகள் இருப்பதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஹர்திக் படேல் கூட்டங்களுக்காக வந்தவர்களின் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டன; கூட்டம் நடத்தப்பட்ட இடங்கள் கட்டணமின்றி ஒதுக்கப்பட்டன என்கிற புகார்களில் தொடங்கி குஜராத் போலீஸாரே ஓரிடத்தில் வாகனங்களை அடித்து நொறுக்குவதாக ‘என்டிடிவி’ வெளியிட்ட காட்சிப் பதிவுகள் வரை எதுவும் புறந்தள்ளிவிட முடியாதவை.


இன்றைக்கு ஹர்திக் படேல் தன் மேடைகளில் யாருடைய சிலையைத் தன்னுடைய எழுச்சியின் மைய அடையாளச் சின்னமாக நிறுத்தியிருக்கிறாரோ, அதே சர்தார் வல்லபபாய் படேலுக்குத்தான் உலகிலேயே மிகப் பெரிய சிலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் மோடி. அன்றைக்கு மோடி முன்னிறுத்திய படேல், அவர் பேசிய வளமான - வலிமையான அரசியலின் முன்மாதிரிக் குறியீடு என்று புரிந்துகொண்டது இந்த தேசம். ஆனால், குஜராத்தின் இளைய சமூகத்தினர் மத்தியில் சர்தார் வல்லபபாய் படேல் எப்படியான குறியீடாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதை ஹர்திக் படேலின் மேடையை அலங்கரிக்கும் வல்லபபாய் படேலின் சிலை நமக்குச் சொல்கிறது. தன்னுடைய மரண நாட்களில்கூட, “பாபுஜியின் படையின் விசுவாசமிக்க சிப்பாய்” என்று தன்னைக் கூறிக்கொண்ட காந்தியர் வல்லபபாய் படேல் இன்றைக்கு உயிரோடு இருந்தால், இதையெல்லாம் பார்த்து ரத்தக் கண்ணீர் வடிப்பார்.
இந்தப் பின்கதைகள் எல்லாம் ஓரிடத்தில் இருக்கட்டும். இந்தியாவுக்கு மிக முக்கியமான ஒரு செய்தியைத் திரும்பவும் கவனப்படுத்தியிருக்கின்றன இந்தக் கலவரங்கள். மக்களிடையே பிளவும் பிரிவினைவாதமும் இனவுணர்வும் அரசியலாதிக்கம் செலுத்துமிடங்களில் சிறுபான்மைச் சமூகங்கள் மட்டும் அல்ல; பெரும்பான்மைச் சமூகமும் நிம்மதியாக வாழ முடியாது என்பதுதான் குஜராத் இந்தியாவுக்கு நினைவூட்டும் மிக முக்கியமான அந்தச் செய்தி. பிரிவினை அரசியலின் தொடக்கக் குறி சிறுபான்மையினரில் தொடங்கலாம்; அதன் முழு வீச்சு எல்லோரையும் சுற்றிவளைத்து, அதன் இறுதி இலக்கு கடைசி மனிதனின் உயிரையும் விலை கேட்பதாகவே அமையும்.


நாம் ஹர்திக் படேலுக்கும் இந்தக் கலவரங்களுக்கும் சங்கப் பரிவாரங்களுக்கும் தொடர்பில்லை என்றே நம்புவோம். நாடு முழுவதும் குஜராத் பெருமை பேசிய நரேந்திர மோடியும் அவரை முன்னிறுத்தியவர்களும் இங்கே ஒரு நியாயமான கேள்விக்கு முகங்கொடுக்க வேண்டும். “நான் ஒட்டுமொத்த தேசத்துக்காகவும் சிந்திக்கிறேன். சாதி, மத அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்ட வளர்ச்சி அரசியல் என்னுடையது” என்று தன்னுடைய 56 அங்குல மார்பை விரித்துக்காட்டி முழங்கிய மோடியின் வலிமை இப்போது எங்கே போனது? ஒரு 22 வயது சின்னப் பையன்(ர்) சாதியின் பெயரால் ஒரு மாநிலத்தையே முடக்கிவைத்திருக்க முடியும் என்றால், அங்கே அரசாங்கம் என்ன செய்கிறது? மத்திய, மாநில அரசுகளைத் தன் கையில் வைத்திருக்கும் மோடி என்ன செய்கிறார்? எது குஜராத் அரசையும் மத்திய அரசையும் கலங்க வைக்கிறது? எது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிடாமல் அவர்களைத் தடுக்கிறது?


இந்தக் கேள்விகளின் பதில்களுக்கான விதைகள் சங்கப் பரிவாரங்களின் வரலாற்றில் புதைந்திருக்கின்றன. விஸ்வநாத் பிரதாப் சிங்கின் ஆட்சி வெறும் 11 மாதங்களில் வீழ்ந்த சரித்திரத்தை இன்றைக்கு கூகுளில் வாசிக்கும் தலைமுறைக்குத் தெரியாது, பாஜக பின்னின்று நிகழ்த்திய அந்த ஆட்சிக்கவிழ்ப்பு எதற்கான விலை என்று. மதவாத அரசியல் - ஆதிக்க சாதிய அரசியல் இரண்டையும் எதிர்கொள்ள வி.பி.சிங் கொடுத்த விலை அது.


அயோத்தியில் ராமர் கோயில் எனும் முழக்கத்தை வெளிப்படையாக முன்வைத்த சங்கப்பரிவாரங்கள் மண்டல் ஆணையப் பரிந்துரையின்படி, வி.பி.சிங் அமலாக்கிய பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் இரட்டை ஆட்டம் ஆடின. வெளியே பாஜக அதை ஆதரித்தது; ஆனால், உள்ளே முன்னேறிய சாதிய அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் தூண்டிவிடப்பட்டு நாடே பற்றியெறிந்தது.


குஜராத்தில் இன்றைக்கு பாஜக அமர்ந்திருக்கும் சிம்மாசனத்துக்கும் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்களுக்கும் நெருக்கமான தொடர்புகள் உண்டு. ஆக, குஜராத்தில் இன்றைக்கு நடக்கும் எதுவும் குஜராத்தோடு மட்டுமே முடிந்துவிடுபவை அல்ல; குஜராத் முன்மாதிரிகளாக நாடு முழுவதும் பரவக்கூடிய சாத்தியம் கொண்டவை.


SUBMITTED TO N.L.S STATE PRESIDENT OF TAMIL NADU GOVERNMENT ALL DEPARTMENT RETIRED EMPLOYEES ASSOCIATION. 
FORMERLY STATE PRESIDENT OF TNGEA ASSOCIATION AND SECRETARY OF ALL INDIA STATE GOVERNMENT EMPLOYEES ASSOCIATION
SHARED WITH P.V.C FORMERLY STATE VICE PRESIDENT OF TNGEA ASSOCIATION AND GENERAL SECRETARY OF TNPHDO ASSOCIATION.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

யார் இந்த ஹர்திக் படேல்? Empty Re: யார் இந்த ஹர்திக் படேல்?

Wed Sep 02, 2015 7:09 pm
யார் இந்த பட்டேல் சமூகத்தினர்???? இவர்கள் எந்த அளவுக்கு அடக்கி ஒடுக்கப்பட்டு ஏழ்மை நிலையில் உள்ளனர் என்பதை தொடர்ந்து படியுங்கள்.....
* வெளிநாடுகளில் வைர வியாபாரம் செய்யும் இந்தியர்களில் 60% பேர் பட்டேல் சமூகத்தை சார்ந்தவர்கள் தான்.
* உள்நாடுகளில் வைர வியாபாரம் செய்பவர்களில் 40% பேர் பட்டேல் சமூகத்தை சார்ந்தவர்கள் தான்.
* குஜராத்தில் பட்டு உற்பத்தி முழுக்க முழுக்க இவர்கள் கைகளில் தான் இருக்கிறது.
* ஒபாமா இந்தியா வந்த போது மோடி 3 மணிநேரத்துக்கு ஒரு முறை 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோட்டுகளை மாற்றி மாற்றி அணிந்து வந்தாரே அந்த கோட்டுகளை மோடிக்கு பரிசாக அளித்தவர்கள் இந்த பட்டேல் சமூகத்தை சார்ந்தவர்கள் தான்.
* 30 வருடத்திற்கு முன்பே தங்கள் சமூகம் நல்ல நிலையில் இருப்பதாகவும், தங்களுக்கு இடஒதுக்கீடு தேவை இல்லை என்றும் அரசுக்கு எழுதி கொடுத்தவர்கள் இந்த பட்டேல் சமூகத்தினர்.
* குஜராத்தில் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, கோதுமை, அரிசி ஆகியவற்றின் உற்பத்தி இந்த சமூகத்தின் கை வசம் தான் உள்ளது.
* குஜராத்தின் தற்போதைய முதல்வர், எதிர்கட்சி தலைவர், 12 அமைச்சர்கள், மொத்த MLA க்களில் 52 சதவீதத்தினர், மற்றும் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த சமூகத்தை சார்ந்தவர்கள் தான்.

இவர்களின் தற்போதைய போராட்ட நோக்கம் இட ஒதுக்கீடு கேட்டு அல்ல. தற்போது இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்து மக்கள் அனுபவித்து வரும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வைப்பதே ஆகும். இவர்களை தூண்டி விடுவது மோடியும், ஆர்எஸ்எஸ் ம்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum