தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
தண்ணீரில் மூழ்கியவர்களுக்கான முதலுதவி Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தண்ணீரில் மூழ்கியவர்களுக்கான முதலுதவி Empty தண்ணீரில் மூழ்கியவர்களுக்கான முதலுதவி

Fri Mar 08, 2013 11:40 pm



தண்ணீரில் மூழ்கியவர்களுக்கான முதலுதவி Water_rescue_001
தண்ணீரில்
மூழ்கியவர்களைக் கரைக்குக் கொண்டுவந்து அவரது வயிற்றில் அழுத்தி தண்ணீரை
உமிழ்வதுபோல சினிமாக்களில் காட்சி அமைப்பார்கள். ஆனால் இது தவறானது.தண்ணீரில்
மூழ்கியவர் தண்ணீர் குடிக்கும்போது அது நுரையீரல் மற்றும் வயிற்றுக்குள்
செல்லும். வயிற்றுக்குள் செல்லும் நீரால் பாதிப்பு இல்லை. இதை அழுத்தி
வெளியே எடுப்பதால் எந்தப் பயனும் இல்லை.

நுரையீரலுக்குச் சென்ற தண்ணீரே உயிர் இழப்புக்குக் காரணம்.
நுரையீரலுக்குள் சென்ற தண்ணீரை வெளியேற்றும் சிகிச்சையை மருத்துவர்கள்
மற்றும் மருத்துவப் பணியாளர்களால் மட்டுமே செய்ய முடியும்.

நீரில் மூழ்கியவருக்கு முதலுதவி செய்யும்போது அவரைத் தரையில்
படுக்கவைத்து மூச்சு உள்ளதா எனப் பார்க்க வேண்டும். சுவாசம் இல்லை எனில்,
அவருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கலாம்.

தண்ணீரில் மூழ்கியவர்களுக்கான முதலுதவி Cpr_003

தண்ணீரில் மூழ்கியவருக்கு மூச்சும் நாடித் துடிப்பும் இல்லை என்றால் இறந்துவிட்டார் என்று நீங்களாக முடிவுகட்டிவிட வேண்டாம்.

மயக்க நிலையில் இருப்பவருக்கு சி.பி.ஆர் (Cardio-pulmonary
Resuscitation) எனப்படும் இதய செயற்கை சுவாசமூட்டல் முதலுதவியைச் செய்து
எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

சி.பி.ஆர். இதய சுவாசமூட்டல்:

பாதிப்பு அடைந்தவருக்கு சுவாசம் நின்றுபோனாலோ, நாடித்துடிப்பு இல்லாமல்
இருந்தாலோ, சி.பி.ஆர். செய்வதன் மூலம் அவரது உடலில் ரத்த ஓட்டத்தை இயல்பு
நிலைக்குக் கொண்டுவர முடியும். இதனால் ஆக்சிஜன் இழப்பால் ஏற்படும் இறப்பு
மற்றும் மூளை சேதத்தையும் தடுக்க முடியும்.

எப்படிச் செய்வது?

பாதிப்பு அடைந்தவரைச் சமதளத்தில் படுக்கவைத்து, அவருக்குப் பக்கவாட்டில்
அமர்ந்துகொண்டு இடது மார்புப் பகுதியில் நம்முடைய இரண்டு கைகளின்
உள்ளங்கைப் பகுதியை ஒன்று சேர்த்து அரை செ.மீ. அளவுக்கு மென்மையாக அழுத்த
வேண்டும்.

தண்ணீரில் மூழ்கியவர்களுக்கான முதலுதவி Cpr_001

மூன்று முறை அழுத்திய பின்பு அவரது வாயோடு வாய்வைத்துக் காற்றை ஊத
வேண்டும். (மீட்பு சுவாசம் பார்க்கவும்) இதேபோன்று தொடர்ந்து செய்ய
வேண்டும்.

அழுத்தும்போது வேகமாக அழுத்தினால் விலா எலும்பு உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே கவனம் தேவை.

குழந்தைகளுக்கு:

குழந்தைகளுக்கு சி.பி.ஆர். முதல் உதவி
செய்யும்போது, உள்ளங்கையைக் கொண்டு அழுத்தம் கொடுக்காமல், இரண்டு
விரல்களால் கொடுக்க வேண்டும். அதேபோல 15 முறை மட்டும்தான் அழுத்தம் தர
வேண்டும்.

தண்ணீரில் மூழ்கியவர்களுக்கான முதலுதவி Cpr_002

மீட்பு சுவாசம்:

பாதிப்பு அடைந்தவரைப் படுக்கவைத்துத் தாடையைச் சிறிது உயர்த்தி அவரது
மூக்கின் நுனிப்பகுதியை மூடி அழுத்திப் பிடித்துக்கொண்டு அவரது வாயை நன்கு
திறந்துகொள்ளவும்.

தண்ணீரில் மூழ்கியவர்களுக்கான முதலுதவி Cpr_004

பின்பு உங்களது வாயை நன்கு திறந்து காற்றை நன்கு உள் இழுத்துக்கொண்டு
அவரது வாயோடு வாய்வைத்து மூடி பின்னர் உள் இழுத்த காற்றை வெளிவிடவும்.
இதனால் பாதிப்பு அடைந்தவருக்குச் சுவாசம் கிடைக்கும்.


நன்றி: லங்கா

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum