தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
லீ குவான் யூ - சிங்கப்பூரின் தந்தை Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

லீ குவான் யூ - சிங்கப்பூரின் தந்தை Empty லீ குவான் யூ - சிங்கப்பூரின் தந்தை

Thu Mar 26, 2015 12:22 am
லீ குவான் யூ - சிங்கப்பூரின் தந்தை 11073312_791132350954858_6389856643372214003_n

சிங்கப்பூர் நிறுவனரும், சிங்கப்பூரைத் தோற்றுவித்த தந்தை என்றும் போற்றப்படும் 91 வயதான முன்னாள் பிரதமர் லீ குவான் யூ - மார்ச் மாதம் 23 ஆம் தேதி காலை 3:18 உயிர் நீத்தார்.
.
கடந்த பல வாரங்களாக நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3.18 மணிக்கு அமைதியான முறையில் அவரது உயிர் பிரிந்ததாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. 
.
லீ குவான் யூ (Lee Kuan Yew, பிறப்பு: 16 செப்டம்பர் 1923) சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமர் (1959 - 1990) ஆவார். இவரை சிங்கப்பூரின் தந்தை எனச் சொல்லுவர். 
.
1959 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவரின் மக்கள் செயல் கட்சி மொத்தமுள்ள 51 இடங்களில் 43 இடங்களில் வெற்றி பெற்றது. இவ்வெற்றியினால் 'லி குவான் யூ' ஜூன் 3 ஆம் நாள் 1959 -ல் பிரதமராகப் பொறுப்பேற்றார்.
.
இவர் சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சியின் (PAP) நிறுவனர்களுள் ஒருவரும் ஆவார்.நவம்பர் 12 ஆம் நாள் 1954 ஆம் வருடம் மக்கள் செயல் கட்சியை நிறுவினார்.1959 முதல் 1990 வரை இவரது மக்கள் செயல் கட்சியை 7 முறை வெற்றிபெற வைத்தவர்.1990 - ல் மக்கள் செயல் கட்சியின் கோ சோக் தோங்கு பிரதமராக இருக்கும் போது இவர் அதில் ஒரு முதுநிலை அமைச்சராகப் பணியாற்றினார். 
.
பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த லீ க்வான் யூ, பின்னர் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தார். 1965 ல் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரிந்த போது லீ குவான் யூ முக்கிய பங்காற்றினார்.
.
சிங்கப்பூரின் முதல் பிரதமராக பதவியேற்ற லீ குவான் யூ, 31 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். இவரது ஆட்சிக் காலத்தில்தான் அதுவரை துறைமுக நகரமாக அறியப்பட்ட சிங்கப்பூர் பிரம்மிக்கும் வகையில் வர்த்தக நகரமாக உருமாறியது.
.
லீ குவான் யூ பிரதமர் ஆட்சியில் இருந்து விலகிய பின்னரும் சிங்கப்பூரின் மிக முக்கியமான அரசியல்வாதியாக இருக்கிறார். பின்னர் 2004 முதல் 2011 வரை இவருக்காகவே உருவாக்கப்பட்ட மதியுரை அமைச்சர் (Minister Mentor) பதவியில் பணியாற்றினார். சிங்கப்பூர் சுதந்திரத்திற்கு முன்னான 1955 ஆம் ஆண்டு தேர்தலில் ' தஞ்சாங் பாகர் ' தொகுதியில் வென்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

லீ குவான் யூ - சிங்கப்பூரின் தந்தை Empty Re: லீ குவான் யூ - சிங்கப்பூரின் தந்தை

Thu Mar 26, 2015 12:27 am
முகநூல் பின்னுட்டங்கள்:


1.  இலங்கை தமிழர் படுகொலைக்கு எதிராகவும், ராசபக்சேவுக்கு எதிராகவும் முழங்கிய முதல் உலகத் தலைவர். தமிழர்கள் அவர்கள் விரும்பும் விடுதலை அஅடையும் வரை ஓயமாட்டார்கள் என்று கூறியவர். தமிழுக்கும், தமிழருக்கும் அளப்பரிய பல நன்மைகள் செய்தவர். பார்பனர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட ஆரிய அடிமை சாதிய முறையே இந்திய வளர்ச்சிக்கு தடைக்கல் என்ற நுட்பமான கருத்தை பதிவு செய்தவர். 


Read this link about LKY.s comment about caste system in India.http://belfercenter.ksg.harvard.edu/.../india_is_a_nation...


லீ குவான் யூ - சிங்கப்பூரின் தந்தை Safe_image.php?d=AQCaQHDVKy571-wq&w=90&h=90&url=http%3A%2F%2Fbelfercenter.ksg.harvard.edu%2Fphpthumb%2Fphpthumb.php%3Fw%3D300%26h%3D300%26q%3D95%26bg%3DFFFFFF%26src%3D%252Ffiles%252FAP08120201924_1



India is a Nation of...
BELFERCENTER.KSG.HARVARD.EDU




2. மலேசியா, இஸ்லாமியர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சொல்லியபோது அதை எதிர்த்து எல்லா மக்களுக்கும் சம உரிமை கொடுக்கப்பட வேண்டும்.. இனம்,மொழி,மதம் எதுவும் பாராது எல்லா மக்களும் இந்நாட்டு பிள்ளைகளே என்று கூறி சிங்கப்பூரை தோற்றுவித்த தந்தை... இன்று சிங்கப்பூர் ஆசியாவிலேயே மிகச் சிறந்த நாடாகத் திகழ்கிறது. மதவெறிக் கொண்ட மலேசியா நாளுக்கு நாள் கவலைக்கிடமான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

லீ குவான் யூ - சிங்கப்பூரின் தந்தை Empty Re: லீ குவான் யூ - சிங்கப்பூரின் தந்தை

Thu Mar 26, 2015 12:28 am
லீ குவான் யூ - சிங்கப்பூரின் தந்தை 10929156_791332504268176_7514442923908817885_n
Sponsored content

லீ குவான் யூ - சிங்கப்பூரின் தந்தை Empty Re: லீ குவான் யூ - சிங்கப்பூரின் தந்தை

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum