தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
வைக்கோல் பொம்மை Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வைக்கோல் பொம்மை Empty வைக்கோல் பொம்மை

Wed Mar 25, 2015 11:00 am
வைக்கோல் பொம்மை 1559705_1610322102523255_7634341076418519872_n

பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள்பிதா பிரியமாயிருக்கிறார். லூக்கா 12:32

ஒரு விவசாயி தனது நிலத்தில் பறவைகள் வந்து பயிர்களை அழிக்காமல் இருக்க வைக்கோலால் செய்யப்பட்ட ஒரு மனித உருவத்தை படைத்தது அந்த தோட்டத்தில் நிறுத்தினார். அந்த வைக்கோல் பொம்மையை பார்த்து எல்லா பறவைகளும் பயந்து ஓட இந்த வைக்கோல் பொம்மைக்கு தலைக்கனம்வந்துவிட்டது. விவசாயி தான், அந்த தோட்டத்தின் எஜமான் என்பதை அந்த வைக்கோல் பொம்மை அறிந்திருந்த போதும், நான் தான் அந்த தோட்டத்தை பாதுகாக்கின்றேன் என்று தன்னை அந்த விவசாயிக்கும் மேலாக நினைத்துக் கொண்டது. ஒரு நாள் தோட்டக்காரனின் பிள்ளைகள் அந்த தோட்டத்தில் விளைந்திருப்பதை அறுவடை செய்ய வந்தார்கள். வைக்கோல் பொம்மை அவர்களை வெளியில் போகும்படியாக கத்த ஆரம்பித்துவிட்டது. இதை பார்த்த தோட்டத்தின் எஜமான், இந்த நிலத்தின் அணைத்து ஆசீர்வாதங்களுக்கும் அவர்களுடையதே என்று சொல்லி அந்த வைக்கோல் பொம்மையை தீயினால் சுட்டெரித்துவிட்டார்.

இந்த கதையில் இருப்பதை போன்று தான் தேவன் இந்த பூமியை படைத்து அவரது பிள்ளைகளை பார்த்து *நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். (ஆதி1:28). பிச்சாசனவன் தந்திரமாக அதை மனிதனிடம் இருந்து பறித்து கொண்டு மனிதனுக்கு அந்த ஆசீர்வாதத்தில் பங்கில்லை என்று சொல்லி மனிதக்கும் தேவனுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறான். தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் பிசாசிற்கு பயப்பட தேவையில்லை. அவன் உருவத்தில் பெரியவனாக இருந்தாலும் அவன் வைக்கோல் பொம்மை தான். 

சத்துருவை சுட்டெரிக்கும் வேதமென்னும் அக்கினயையும், ஜெபமென்னும் அக்கிணி ஜுவாலையையும் தேவன் நம்மிடத்தில் கொடுத்திருக்கிறார். *இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் (அறுவடையின் எஜமான்) தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள். புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்* (லூக்கா 10 :1-3) என்ற படியாக ஓநாய் போன்ற சத்துருவை அழிக்கும்படியாக ஆட்டுக்குட்டியாகிய நம்மை கர்த்தர் தெரிந்தெடுத்துள்ளார்.

ஒருவேளை உங்கள் சூழ்நிலைகளைப் பார்த்து, நான் எவ்வாறு கர்த்தருக்காக வல்லமையாக செயல்பட முடியும் என்று சிந்திக்கலாம். *பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள்பிதா பிரியமாயிருக்கிறார்* என்று இயேசு நமக்கு கொடுத்த வாக்குறுதியை நினைவில் கொள்ளுங்கள். வல்லமையாக செயல்படுங்கள். ராஜ்யத்தை இயேசுவுக்காக சுந்தந்தரியுங்கள்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum