தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
வேதாகம சொற்களுக்கு பொருள் விளக்கம் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வேதாகம சொற்களுக்கு பொருள் விளக்கம் Empty வேதாகம சொற்களுக்கு பொருள் விளக்கம்

Fri Jan 30, 2015 7:16 pm
அகத்தியம் (எஸ் 4:Cool - கட்டாயம், அவசியம். 


அகரதமான (ஏசா 14:15) - ஆழமான. 


அசங்கியம் (எஸ்றா 9:11) - அருவருப்பு, தூய்மையின்மை.


 அசம்பி (1 சாமு 21:5) - பயணிகள் தோட்பை (அகராதி குறிப்பு). 


அஸ்திராயுதம் (எரே 50:25,51:20) - அதிகபட்ச கோபத்தில் பிரயோகிக்கும் ஒரு கொடுமையான ஆயுதம்.. 


அஞ்சிக்கை (ஓசி 3:5) - அச்சம், பயம். 


அசூசம் (புலம்பல்) - தீட்டு.


 அசுப்பு (யோபு 9:23, எரோ 4:20) - சடுதியாக, திடீரென வருதல். 


அபரஞ்சி பூஷணம் (நீதி 25:12) - புடமிடப்பட்ட பொன்.


 அழுங்கு (லேவி 11:30) - எறும்பு தின்னும் ஒருவித விலங்கு. 


அழிம்பு (எரே 6:7) - கொள்ளையும், சூறையாடுதலும். 


ஆரோகணம் (சங் 120-134) - இசையில் மேலேறும் ஓர் சுருதி. 


இதமியம் (நியா 18:20) - மகிழ்ச்சியோடு உடன்படுதல். 


ஈசல் போடுதல் - விசிலடித்தல் (விசிலடித்து நையாண்டி செய்தல்). இளக்கரிப்பு (ஏசா 42:4) - சோர்ந்து போதல். 


உக்கல் (ஆப 3:16) - உறுத்துப் போதல்.


 உசாவு துணை (யோபு 26:3) - உற்ற துணைவன். 


உம்பிளிக்கை (எஸ்றா 9:12) - மானியமாக கொடுக்கப்பட்ட பொருள். ஆனால் இவ்விடத்தின அர்த்தம் (நித்திய சுதந்திரம்). 


உறுமால் (அப் 19:12) - கைக்குட்டை துணி. 


ஒற்தலாம் (மத் 23:23,லூக் 11:42) - ஒரு தானிய வகை. (புதினா). 


கடாட்சம் (உன் 8:10) - அருட்பார்வை, கருணை பெறுதல். 


ஏகோபித்து (நியா 20:1) - ஒருமித்து. 


கட்டியக்காரன் (தானி 3:4)- அரசு கட்டளையை ஊரில் பறைசாட்டுவோன்.


 கலாதி (எஸ்றா 4:15)- கலகம், சண்டை, புரட்சி. 


கலிக்கம் (வெளி 3:18)- கண்ணிலிடும் மருந்து. 


கிரியிருப்பவர்கள் (2 இராஜா 14:14)- பிணைக் கைதிகள். 


கறளை (எரே 48:6)- பிரயோஜனமில்லாத.


 காங்கை (ஏசா 25:5)- வெப்பம். 


காய்மகாரம் (1சாமு 18:9)- பொறாமை.


 கிரியாப்பிரமாணம் (ரோம 3:27)- செயல்களில் முக்தியடைய முயற்சித்தல்..


 கிரித்தியங்கள் (நியா 2:19)- தீய பழக்கங்கள், காலங்காலமாக விடாமல் வைத்திருக்கும் தீய கிரியைகள். 


குருக்கு (ஆதி 3:18)- நெருங்சில் செடி (அதிக முட்களை கொண்ட ஓர் தாவரம்). 


குங்கிலியம் (யாத் 30:34)- ஒருவகை நறுமணப் பொருள். (வெள்ளை குங்கிலியம், கருங்குங்கிலியம் என இரண்டு வகை இருப்பதாக தெரிகிறது). 


குலாரி வண்டில் (ஏசா 66:20)- மிருகங்கள் இழுத்துச்செல்லும் வண்டி. பல்லாக்கு.


 கொறுக்கை (ஏசா 19:6)- கோரைப்புல் / நாணல். கொடி 


மாசி (யோபு 38:37)- நிலையற்று அலையும் மேகங்கள்.


 கும்பு (எசே 7:14)- ஜனக்கூட்டம்.


 கொம்மை (நெகே 3:1,11)- இவ்வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. இவ்விடத்தில் பெரிய மதில்களின் மேல் ஏற்படுத்தப்படும் காவல் மாடங்கள் என பொருள்படும்..


 கோரி (யோபு 21:32)- கல்லறை, சமாதி.


 சாமாசி பண்ணும் தூதன் (யோபு 33:23)- மத்தியஸ்தர், சமரசம் செய்பவர். 


சம்பாரம் (எசே 24:10)- உணவில் சேர்க்கப்படும் நறுமணப் பொருள்.. 


சலக்கரணை (2 இராஜா 4:13)- கரிசணையோடு.


 சளுக்கு (எரே 5:28)- நயமாக பேசுதல். 


சன்னது (எஸ்றா 7:11)- ஆவணம், கடிதம், அரசாணை. 


சர்ப்பனை (அப் 25:3)- வஞ்சனை, பதுங்கி இருந்து தாக்குவதற்கு சூழ்ச்சி.


 சன்னதக்காரன் (உபா 18:11)- பில்லி சூனிய, ஏவல் வேலை செய்கிறவன்.


 சுயம்பாகி (ஆதி 40:1)- சமையற்காரன். 


சீதளம் (ஆதி 8:22)- பல அர்த்தங்கள்உண்டு. குளிர்ச்சி என்ற அர்த்தம். சிரேஷ்டம் (நாகூம் 3:Cool- தலை சிறந்தது..


 சொகுசா (எசே 1:4,8:2)- துத்தநாகமும், செம்பும் கலந்த ஓர் உலோகம்..


 சுணை (எரே 51:27)- கூர்மையான முட்கள் போன்ற கொடுக்கு..


 தகசுத்தோல் (யாத் 25:5,26:14)- கடற்பசுவின் தோல், (நீர் நாய், நீர் பசு). 


தஸ்திர அறை (எஸ் 6:1)- பத்திரங்கள், அரசு ஆவணங்கள் வைக்கும் அறை. 


தர்ப்பணம் (யாத் 38:Cool- கண்ணாடி (வெண்கல கண்ணாடி). 


தாக்கீது (தானி 6:7,8,12)- ஆணை.


 தாவிளை (யாத் 16:3)- பரவாயில்லை / ஒன்றைவிட மற்றொன்று மேலானது என்ற அர்த்தத்தில் சொல்லப்படும் வார்த்தை. (தேவலை - நடைமுறை வழக்கு). 


தாற்றுக்கோல் (பிர 12:11)- ஒரு பக்க முனையில் கூர்மையான ஆணி கொண்ட பிரம்பு / தார்க்கோல், தார்க்குச்சி. 


தாற்பரியம் (பிர 8:1)- உட்பொருள், உள்நோக்கம், உள் அர்த்தம்..


 துண்டரிக்காரர் (தானி 11:14)- கொடியவர்கள், கலகம் செய்பவர்கள்.. 


துர்ச்சனர் (எரே 11:15)- இழிவானவைகளை செய்பவர்கள். 


தூலம் (ஏசா 28:27)- நெற்போரடிக்கும் கோல்.


 தெற்றுவாய் (ஏசா 32:4)- திக்குவாய். 


நிபச்சொல் (ஏசா 58:9)- கோள் சொல்லுதல், பொல்லாதவைகளை பேசுதல்.


 வல்லயம் (2 சாமு 18:14)- ஒரு வகை ஈட்டி. 


வலசை வாங்குதல் (ஏசா 10:31)- ஒரு இடத்தின் ஜனங்கள் கூட்டமாக வேறிடத்திற்கு தப்பித்து ஓடிப்போதல். 


முகனை (நாகூம் 3:10)- தொடக்கம் அல்லது முன்புறம். 


லோபி (ஏசா 32:5)- கருமி. 


வாச்சி (1இராஜா 6:7,சங் 74:6)- மரஞ்செதுக்கும் ஆயுதம் (உளி). 


வியாஜ்யம் (யாத் 23:6, நீதி 25:9)- வழக்கு. 


வியார்த்தி (தானி 5:12)- விளக்கமளிக்கும் திறமை.


 துரிஞ்சில் (ஏசா 2:21)- வெளவால். 


பரிச்சேதம் (எரே 6:15)- சிறுபகுதி (கொஞ்சம்கூட வெட்கப்படவில்லை என்ற அர்த்தத்தில் இங்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது). 


அளகபாரம் (உன் 6:5)- கூந்தல் தொகுதி. 


ஆயம் (எஸ்றா 4:20)- சுங்கம், ஆண்டு வருவாயில் ஒரு பகுதி
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum