தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?  Empty சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?

Thu Dec 04, 2014 10:53 am
சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?  201412040223011699_Oil-company-officials_SECVPF
சமையல் எரிவாயு மானியத்தை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு என்னென்ன நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பதுபற்றி, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

ஜனவரியில் அமல்

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாகப்பெறும் திட்டம், இந்தியாவில் 54 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்த நேரடி மானியத்தைப் பெறுவதற்காக அடுத்த ஆண்டு 2015-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிவரை வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை தவறவிட்டால், எரிவாயுக்கான நேரடி மானியத்தை பெறமுடியாமல் போய்விட வாய்ப்புள்ளது.

வங்கியில் மானியம்

மானியத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால், எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு, அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு இருக்கவேண்டும். அவர்கள் முழு தொகை செலுத்தி எரிவாயு வாங்கினாலும், மத்திய அரசு அளிக்கும் மானியத்தொகை, அந்த வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுவிடும்.

அந்த வகையில் எரிவாயுக்கான மானியத்தை இதன்மூலம் வாடிக்கையாளர் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் சேர்ந்ததில் இருந்து மானியத்தொகை கிடைக்கத் தொடங்கிவிடும். எரிவாயு சிலிண்டரை வாங்கிய 3 அல்லது 4 நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் மானியத்தொகை வந்து சேர்ந்துவிடும்.

எரிவாயுக்கான நேரடி மானிய திட்டத்தில் இதில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் முறை எளிதானதுதான்.

யார் பெயரில் சிலிண்டர் இருக்கிறதோ, அவர் தனது எரிவாயு சிலிண்டர் முகவரை அணுகவேண்டும். தன்னிடமுள்ள ஆதார் எண் மற்றும் வங்கிக்கணக்கு எண்ணை குறிப்பிட்டு, அவர் கொடுக்கும் படிவம்-1 மற்றும் படிவம்-2 ஆகியவற்றை பூர்த்தி செய்யவேண்டும். படிவம்-1-ஐ வங்கியிலும், படிவம்-2-ஐ முகவரிடமும் வழங்கவேண்டும்.

ஆதார் இல்லாவிட்டால்

ஆதார் அட்டை அல்லது எண் இல்லை என்றால், வங்கிக்கணக்கு புத்தகத்தை காட்டி முகவரிடம் இருந்து படிவம்-3 மற்றும் படிவம்-4 ஆகியவற்றை வாங்கி பூர்த்தி செய்யவேண்டும். பின்னர் படிவம்-3-ஐ வங்கியிலும், படிவம்-4-ஐ முகவரிடமும் கொடுக்கவேண்டும்.

வங்கியில் படிவம் செலுத்தப்பட்டது என்பதற்கு அத்தாட்சியாக, படிவத்தின் கடைசி பகுதியை கிழித்து, அதில் வங்கி முத்திரையை பதித்தும், கையெழுத்திட்டும் வழங்குவார்கள். அதை பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த நடைமுறைகள் மூலம் எரிவாயுக்கான நேரடி மானியத்திட்டத்தில் சேர்ந்துவிடலாம். அதன்பின்னர் எப்போதும்போல் பணத்தை செலுத்தி சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம். அதற்கான மானியத்தொகை வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?  Empty Re: சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?

Wed Dec 17, 2014 12:56 pm
மானிய சிலிண்டர்... சந்தேகங்களுக்கு விளக்கங்கள்!
கே.அபிநயா, படம்: ஆ.முத்துக்குமார்

நாடு முழுக்க இருக்கும் சமையல் எரிவாயு ஏஜென்சிகளின் வாசலில், நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள் மக்கள். ‘ஜனவரி 1-ம் தேதிக்குள், ஆதார் எண்ணை ஏஜென்சியிடம் கொடுக்காவிட்டால், அதற்குப் பிறகு மானிய விலை சிலிண்டர் கிடைக்காது. 800 ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்துத்தான் வாங்க வேண்டும்' என்று பரவிக்கிடக்கும் தகவல்தான் காரணம்.
சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?  P32சிலிண்டருக்கான மானியம் தொடர்பாக அதிரடி வேலைகளில் மத்திய அரசு இறங்கியிருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், அதில் என்ன நடக்கிறது என்பது சரிவர தெளிவுபடுத்தப்படாததால்... மக்கள் படாதபாடு பட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில், மானிய சிலிண்டரை தொடர்ந்து பெறுவதற்கு என்ன வழி, இதற்கு என்ன செய்ய வேண்டும், யாரை அணுக வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் இங்கே விடையளிக்கிறார், சென்னையிலிருக்கும் ஸ்ரீ நவநீதலட்சுமி கேஸ் ஏஜென்சி உரிமையாளர் வரதராஜன்.
‘‘சமையல் எரிவாயுக்காக தற்போது வழங்கப்படும் சிலிண்டர்கள், மத்திய அரசின் மானியத்தின் காரணமாகவே 400 ரூபாய் விலையில் கிடைக்கிறது. இல்லையென்றால், 800 ரூபாய்க்கு மேல் தரவேண்டியிருக்கும். இப்படி மானிய விலையில் தரப்படும் சிலிண்டர்கள், தவறாகவும் பெறப்படுகின்றன, இதனால் அரசுக்கு ஏகப்பட்ட நஷ்டம் என்பதால், எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாக நுகர்வோரின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு செலுத்தப் போகிறது. இந்தத் திட்டம், கடந்த நவம்பர் 15 முதல் இந்தியாவில் 54 மாவட்டங்களில் அமலில் இருக்கிறது. அடுத்தகட்டமாக, இந்தியா முழுமைக்கும் அமல்படுத்தப்பட இருக்கிறது.
ஒரு குடும்பத்துக்கு வருடத்துக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் தரப்படும். உங்களுக்கான சிலிண்டரை விநியோகஸ்தரிடம் முழுவிலை கொடுத்து நீங்கள் வாங்கிக்கொள்ள வேண்டும். அந்த விலை, மாறுதலுக்கு உட்பட்டது. அப்படி நீங்கள் விநியோகஸ்தரிடம் சிலிண்டருக்காகக் செலுத்திய தொகைக்கும், மானிய விலைக்குமான வித்தியாசம் சலுகைப் பணமாக அடுத்த 48 மணி நேரத்தில் உங்களது வங்கிக் கணக்கில் அரசு சேர்த்துவிடும். அதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு என இரண்டு வழிகள் மூலமாக இந்தத் திட்டத்தில் இணைய வேண்டும். எந்த முறையில் இணைவது என்றாலும், வங்கிக் கணக்கு முக்கியம்.
ஆதார் எண் வைத்திருப்போர்!
ஆதார் எண் வைத்திருப்பவர்கள், அதை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும். இதற்காக, விண்ணப்பத்தை (படிவம்-1) பூர்த்தி செய்து, ஆதார் அட்டை நகலுடன் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அடுத்து, உங்களுடைய சமையல் எரிவாயு ஏஜென்சியுடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை (படிவம்-2) பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இத்துடன் ஆதார் அட்டை நகல் மற்றும் இதற்குமுன் வாங்கிய கேஸ் பில்லின் நகல் அல்லது கேஸ் புக்கின் முதல்பக்க நகலை ஏஜென்சியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அதேபோல, வாடிக்கையாளர் உதவி மைய தொலைபேசி எண் வாயிலாக 1800- 2333- 555 பதிவு செய்யலாம். இண்டேன் வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற தொலைபேசி எண் மூலம் இணையலாம். இது வழக்கமான சிலிண்டர் பதிவுக்கான தொலைபேசி எண்தான். இதில் எண் 2-ஐ அழுத்தினால் உங்களின் ஆதார் அட்டை எண் கேட்கப்படும். அதை அழுத்தினால், இந்தத் திட்டத்தில் உங்களது கணக்கு சேர்ந்துவிடும்.
இணையத்தின் மூலமாகவும் ஆதார் எண்ணை பதிவு செய்யலாம். இதற்கு,  www.rasf.uiadai.gov.in
 என்ற முகவரியை க்ளிக் செய்ய வேண்டும். தபால் அல்லது எஸ்.எம்.எஸ் மூலமாகவும் இணையலாம்.
சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?  P32a
[size]
ஆதார் அட்டை இல்லாதவர்கள்!
ஆதார் அட்டை இல்லாதவர்கள், தங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ அந்த வங்கியின் பெயர், கிளை, முகவரி உள்ளிட்ட விவரங்களைக் குறிக்கும் ‘IFSC' கோட்  எண்ணை  உங்கள் விநியோகஸ்தரிடம் கொடுத்து, அவர்களிடம் விண்ணப்பம் 4 பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் உங்களது கணக்கை இந்தத் திட்டத்தில் சேர்த்துவிடுவார்கள். அல்லது விநியோகஸ்தர்களிடம் விண்ணப்பம் 3 பெற்று, பூர்த்தி செய்து, வங்கியில் சமர்ப்பிக்கலாம். அதன் பின் மானியத்தொகை உங்கள் வங்கிக் கணக்கில் சேரும்.
பெயர் மாற்றம் அவசியம்!
சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, வங்கிக் கணக்கும் அவர் பெயரில் இருக்க வேண்டியது கட்டாயம். எனவே, குடும்பத் தலைவரின் மரணம் மற்றும் சில காரணங்களால் வேறு பெயர்களில் இணைப்பைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்கள், அவற்றை உங்களின் பெயருக்கு மாற்ற வேண்டிய தருணம் இது. இதற்கு விநியோகஸ்தர் கோரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?  P32bகாலக்கெடுவும் கருணை அடிப்படையும்!
ஜனவரி 1, 2015 முதல் இந்தத் திட்டம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அமலுக்கு வருவதால், அதற்குள் இதில் இணைந்துவிட வேண்டும். அப்படி இணையாதவர்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு கருணை அடிப்படையில் மானிய விலை சிலிண்டர் வழங்கப்படும். இதைப் பயன்படுத்தி இணைந்துவிட வேண்டும். இல்லையென்றால், மானிய விலை சிலிண்டர் பெறுவதில் சிக்கல் ஏற்படும். இந்தத் திட்டத்தில் இணையாதவர்கள், அதாவது மானிய விலை சிலிண்டர் தேவையில்லை என்று இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இத்திட்டம் பற்றிய சந்தேகங்களுக்கு  mylpg.in என்ற ஆன்லைன் முகவரிக்கு சென்று பார்க்கலாம். படிவங்களை சம்பந்தப்பட்ட ஏஜென்சி அல்லது இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட ஆயில் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை பெறலாம்’’ என தகவல்களை நிறைவு செய்தார் வரதராஜன்.
இந்தியா முழுக்கவே 8000 பேர்!
மானிய விலை சிலிண்டர் தேவையில்லாதவர்கள், ஆன்லைன் வழியாக  mylpg.in என்ற முகவரியில் டிஎன்எஸ்சி  (DNSC-DOMESTIC NON SUBSIDIARY HOUSEHOLD CYLINDER)  என்ற ஆப்ஷன் மூலம், ‘தேவையில்லை’ என்று குறிப்பிடலாம். அல்லது நேரடியாக ஏஜென்சியிடம் விண்ணப்பம் 5 மூலம் பதிவு செய்யலாம். இப்போது இந்தியா முழுவதும் 8,000 பேர் மட்டுமே இந்த ஆப்ஷனை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.[/size]
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?  Empty Re: சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?

Fri Jan 02, 2015 11:30 am
ஆதார் எண்ணை உங்கள் சமையல் எரிவாயு உடன் இணைக்க கம்பெனியின் வாசலில் கால் கடுக்க நிற்க வேண்டிய அவசியமில்லை. 


1800 233 3555 என்ற எண்ணை அழையுங்கள். உங்கள் கன்ஸ்யூமர் எண்ணையும், ஆதார் எண்ணையும், டிஸ்ரிபூட்டர் பெயரையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். 


தமிழ் உட்பட பல மொழிகளில் இந்த சேவை கிடைக்கிறது. உங்கள் பெயர், கன்ஸ்யூமர் எண், ஆதார் எண் இந்த மூன்றும் போதும். 


ஒரு வாரம் கழித்து இதே எண்ணுக்குத் தொடர்பு கொண்டு இணைப்பு பற்றிய நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?  Empty Re: சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?

Sat Jan 03, 2015 7:41 am
சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?  1375755_1680862652140152_8516243727677299103_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?  Empty Re: சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?

Sat Jan 03, 2015 7:56 am
சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?  1395827_1677462739146810_8016505601876941963_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?  Empty Re: சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?

Sat Jan 03, 2015 7:56 am
சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?  10857879_1677462679146816_5383867344073216842_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?  Empty Re: சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?

Sat Jan 03, 2015 7:57 am
சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?  10352910_1677462639146820_2790563685984874454_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?  Empty Re: சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?

Mon Jan 12, 2015 4:51 am
சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?  10898108_711650695622061_8240371255728781768_n
Sponsored content

சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?  Empty Re: சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன?

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum