தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கிறிஸ்துமஸ் துணுக்குகள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்துமஸ் துணுக்குகள் Empty கிறிஸ்துமஸ் துணுக்குகள்

Wed Nov 26, 2014 7:08 am
•தமிழ் மொழியில் முதன்முதலில் பைபிளை எழுதியவர் "சீகன்பால்' ஆவார். அவர் தஞ்சை மாவட்டம் தரங்கம்பாடியில் இருந்தபோதுதான் அதை எழுதினார்.

இயேசுபிரான் பற்றி கவிதை நூல் எழுதியவர் கிருஷ்ண பிள்ளை இவருக்கு "கிறிஸ்துவ கம்பர்' என்ற சிறப்புப் பெயர் உள்ளது.

•உலகிலேயே மிகப் பெரிய தேவாலயம் வாடிகன் நகரிலுள்ள செயின்ட் பீட்டர் தேவாலயம் ஆகும்.

•உலகிலேயே மிகச் சிறிய தேவாலயம் அமெரிக்காவின் கோரிங்டன் கென்ட்டரி நகரில் உள்ள மெüண்ட் கேசினா ஆகும்.

•இந்தியாவிலேயே மிகப் பெரிய சர்ச் கோவா மாநிலத்திலுள்ள "தி செ கதீட்ரல்' என்னும் தேவாலயம் ஆகும்.

•இந்தியாவிலேயே மிகப் பழமையான தேவாலயம், கேரள மாநிலத்திலுள்ள புனித தாமஸ் தேவாலயம் ஆகும்.

•ஜெருசலத்தில் உள்ள ஒலிவ மலை ஆலயத்தில் 68 மொழிகளில் இயேசு அருளிய ஜெபம் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளது. அவற்றில் தமிழ் மொழியும் ஒன்று.

•கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலிலிருந்து 20 கி.மீட்டர் தொலைவிலுள்ள நெய்யூர் என்னும் ஊரில் ஒரு தெருவின் பெயர் - கிறிஸ்துமஸ் தெரு.

•உலகத்தின் எல்லா நாடுகளிலும் பொது விடுமுறை அளிக்கப்படுவது யேசுபிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் அன்றுதான்.

•கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள "சுங்கர்ன கடை' என்ற இடம் நாகர்கோவிலிலிருந்து 8 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. 


இங்குள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் சிலுவைக்கு எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. அருட்பிரசாதமாக வேப்பிலை வழங்கப்படுகின்றது.
•திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் சாலையில் 3 கி.மீட்டர் தொலைவில் உள்ள "தோமையார்புரம்' புனித தோமையார் தேவாலயத்தில் பக்தர்கள் வீடு பெருக்கும் "விளக்குமாற்றை' காணிக்கையாக செலுத்துகின்றனர். அப்படி விளக்குமாறை காணிக்கை செலுத்தினால், உடலில் ஏற்படும் பரு, கட்டிகள் நீங்கிவிடும் என்பது பக்தர்
களின் நம்பிக்கை.

•தாம்ஸன் என்ற ஓவியர் தான் வரைந்த ஓவியத்துடன் கிறிஸ்துமஸ் வாழ்த்தினை இங்கிலாந்து அரசருக்கு அனுப்பிவைத்தார். அதைக் கண்டு மகிழ்ந்த அரசர் அந்த ஓவியரைக் கொண்டு பல ஓவியங்களை வரையச் செய்து பலருக்கு அனுப்பிவைத்தார். "லூயிஸ் பிராங்' என்பவர்தான் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை முதலில் விற்பனைக்குக் கொண்டுவந்தார்.

•கிறிஸ்துவர்கள் மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து இயேசுவை வணங்கும் வழக்கம் ஜெர்மானியர்களிடமிருந்து வந்தது.

•டென்மார்க் நாட்டில், கிறிஸ்துமஸ் விருந்தில் முதலிடம் வகிப்பது அரிசி உணவுதான்.

•கிறிஸ்துமஸ் என்ற சொல் கி.பி. 1131-ல் இருந்துதான் வழக்கத்திற்கு வந்தது.

•ரோம் - வாடிகன் நகரில் உள்ள போப்பாண்டவர் அரண்மனைதான் உலகிலேயே மிகப் பெரிய அரண்மனை.

•"கிறிஸ்துமஸ்' என்னும் பெயரைச் சூட்டியவர் "கிளமண்ட் முடே' என்ற அமெரிக்க பெண்மணி ஆவார்.

•கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் முறையைத் தோற்றுவித்தவர் அசீசீ நகரில் வாழ்ந்த "புனித பிரான்சிஸ்' என்ற துறவியாவார்.

•இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததால், அதை நினைவுப்படுத்தும் பொருட்டுதான் மாட்டுக்
கொட்டகை போன்ற குடில் அமைக்கப்படுகின்றது. அதேசமயத்தில் இத்தாலியர்கள் கிறிஸ்துமஸ் தினத்தன்று மாடுகளை குளிப்பாட்டி அழகுசெய்து மரியாதை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

•போப்பாண்டவர் வசிக்கும் நகருக்கு வாடிகன் என்று பெயர். வாடிகன் என்றால் "கடவுளிடமிருந்து வரும் வாழ்த்துச் செய்திகளைப் பரப்பும் இடம்' என்று பொருள்.

•"போப்' என்ற சொல் "பாபா' என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதாகும்.

•கோடைக்காலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் நாடு ஆஸ்திரேலியா ஆகும்.

•19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் இளவரசர் ஆல்பர்ட்தான் முதன்முதலாக கிறிஸ்துமஸ் மரத்தை வைத்தார்.

•கிறிஸ்துமஸ் பிறப்பை நிர்ணயித்த ஆண்டு, கி.பி. 386, டிசம்பர் 25, புதன்கிழமை ஆகும்.

•கிறிஸ்துமஸ் என்ற திருநாளுக்கு எக்ஸ்மஸ் என்ற இன்னொரு பெயரும் உண்டு. ஆங்கிலத்தில் உள்ள X என்ற எழுத்து கிறிஸ்துவையும் MASS என்பது கூட்டத்தையும் குறிக்கும் வார்த்தைகள். கிறிஸ்துமஸ் பிறந்த நாளில் அவரை வணங்கக்கூடிய கூட்டத்தையே கிறிஸ்துமஸ் என்று அழைக்கின்றனர்.

•யேசுவின் முதல் உருவப்படத்தை வரைந்தவர் புனித லூக்காஸ் என்ற யேசுவின் சீடரே! முதல் ஓவியம் இத்தாலியில் புனித பர்தலோமேயு தேவாலயத்திலும் மற்றொரு படம் போப்பாண்டவரின் அரண்மனையிலும் இடம்பெற்றுள்ளன.

•உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் பைபிள் ஆகும்.

•இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் முதன்முதலில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது.

•உலகின் மிகப் பெரிய பைபிள் 8043 பக்கங்களையும் 500 கிலோ எடையும் கொண்டது.
இந்த பைபிள் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளது
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்துமஸ் துணுக்குகள் Empty Re: கிறிஸ்துமஸ் துணுக்குகள்

Wed Nov 26, 2014 7:10 am
இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் விழாவே கிறிஸ்துமஸ் என்று அழைக்கப்படுகிறது. `கிறிஸ்துமஸ்' என்பதற்கு `கிறிஸ்துவை வழிபடுதல்' என்று பொருள். இலங்கைத் தமிழர்கள் இதை `நத்தார்' பண்டிகை என்று அழைக்கிறார்கள்.

கி.பி.2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித இரனேயுஸ், இயேசு பிறந்தநாள் டிசம்பர் 25 என்று குறிப்பிடுகிறார். முதல் 3 நூற்றாண்டுகளில் கிறிஸ்தவர்கள் மிகுந்த கொடுமைகளுக்கு உள்ளாகி இருந்ததால், கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்படவில்லை. 

கி.பி.313ஆம் ஆண்டில் ரோம அரசு கிறிஸ்தவர்களுக்கு சமய சுதந்திரம் அளித்த பிறகே, கிறிஸ்துவின் பிறப்பு விழாவாக சிறப்பிக்கப்பட்டது. முதன்முதலாக கி.பி.342ஆம் ஆண்டு, டிசம்பர் 25ந்தேதியில் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாட போப் முதலாம் ஜுலியஸ் அழைப்பு விடுத்ததாக நம்பப்படுகிறது. 

ரோமில் தொடங்கிய கிறிஸ்துமஸ் கொண்டாடும் வழக்கம் 5ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எகிப்துக்கும், 6ஆம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்துக்கும், பின்னர் மற்ற நாடுகளுக்கும் பரவியது. 

கிறிஸ்துமஸ் குடில்: 

இறைமகன் இயேசு பெத்ல கேமில் உள்ள மாட்டுத் தொழுவம் ஒன்றில் ஏழ்மை நிலையில் பிறந்தார். அன்னை மரியா குழந்தை இயேசுவைத் துணிகளில் பொதிந்து, அங்கிருந்த தீவனத் தொட்டியில் கிடத்தினார். 

அப்போது வயல்வெளியில் கிடையைக் காத்துக் கொண்டிருந்த இடையர்கள், வானதூதர்கள் மூலம் செய்தி அறிந்து இயேசுவைக் காணச் சென்றனர். இத்தாலியில் வாழ்ந்த அசிசி புனித பிரான்சிஸ், இயேசு பிறந்த ஏழ்மை நிலையை அதிகம் தியானித்து வந்தார். 

முதன்முதலாக 1223 டிசம்பர் 25ந்தேதி, கிரேச்சியா என்ற இடத்திலிருந்த குகையில் இயேசு பிறந்த காட்சியை மனிதர்களையும், மிருகங்களையும் கொண்டு அவர் அமைத்தார். அதிலிருந்தே கிறிஸ்துமஸ் விழாவின்போது குடில் அமைக்கும் பழக்கம் உருவானது. 

கிறிஸ்துமஸ் கீதம்: 

இயேசு பிறந்தபோது, பெத்லகேம் வயல்வெளியில் இருந்த இடையர்களுக்கு தோன்றிய வானதூதர், "இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்'' என்றார். 

உடனே விண்ணகத் தூதர் பேரணி அவருடன் சேர்ந்து, "உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!'' என்று கடவுளைப் புகழ்ந்தது. வானதூதர்கள் பாடிய இந்த பாடலே முதல் கிறிஸ்துமஸ் கீதம் (கேரல்) ஆகும். 

இதைப் பின்பற்றி இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் கிறிஸ்துமஸ் கீதங்களை ஆலயங்களில் பாடும் வழக்கம் 4ஆம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டது. தெருக்களில் கிறிஸ்துமஸ் கீதங்களைப் பாடும் வழக்கம் அசிசி புனித பிரான்சிசால் 13ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது. 

கிறிஸ்துமஸ் நட்சத்திரம்: 

இயேசு பிறந்த போது வானில் தோன்றிய ஒரு நட்சத்திரத்தைப் பின்பற்றி, கிழக் கத்திய ஞானிகள் சிலர் அவரை வணங்கச் சென்றனர். அவர்கள் வானியலில் சிறந்து விளங்கிய பெர்சிய மத குருக்களான கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்பது கிறிஸ்தவ மரபு. 

அந்த ஞானிகளுக்கு வழிகாட்டிய நட்சத்திரத்தை அடையாளப்படுத்தவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன. 16ஆம் நூற்றாண்டு முதலே கிறிஸ்துமஸ் விழாக்களை நட்சத்திரங்கள் அலங்கரித்து வருகின்றன. 

கிறிஸ்துமஸ் தாத்தா: 

துருக்கி நாட்டின் மிரா நகரில் கி.பி.4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ ஆயர் புனித நிக்கோலாஸ். இவர் ஏழைகளுக்கு உதவி செய்வதிலும், குழந்தைகளை மகிழ்விப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தார். சிறப்பாக பகிர்தலின் விழாவாகிய கிறிஸ்துமஸ் நாட்களில் ஏழை குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்வித்தார். 

அவரது முன்மாதிரியைப் பின்பற்றி, கிறிஸ்துமஸ் காலத்தில் தாத்தா வேடம் அணிந்து குழந்தைகளை மகிழ்விக்கும் வழக்கம் 19ஆம் நூற்றாண்டில் தோன்றியது. கிறிஸ்துமஸ் தாத்தாவைக் குறிக்கும் `சான்டாகிளாஸ்' என்ற பெயர் செயின்ட் நிக்கோலாஸ் என்பதில் இருந்தே உருவானது. தொப்பி, தொப்பையுடன் கூடிய தற்போதைய `சான்டாகிளாஸ்' உருவம், தாமஸ் நாஸ்ட் என்ற அமெரிக்கரால் 1863ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 

 கிறிஸ்துமஸ் மரம்:  

ஃபிர் மரத்தை நிலைவாழ்வின் சின்னமாக கருதிய ஸ்காண்டிநேவிய மக்கள் கி.பி.7ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களாக மாறினர். பைபிளில் காணப்படும் வாழ்வின் மரத்தோடு தொடர்புபடுத்தி, அவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஃபிர் மரத்துக்கு முக்கிய இடம் அளித்தனர். 

13ஆம் நூற்றாண்டில் இந்த வழக்கம் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. 15ஆம் நூற்றாண்டின் இறுதியில், கிறிஸ்துமஸ் மரங்களை மெழுகுவர்த்திகளால் அழகுபடுத்தும் பழக்கம் உருவானது. தாமஸ் ஆல்வா எடிசனின் உதவியாளர் எட்வர்ட் ஜான்சன், 1882ஆம் ஆண்டு முதன்முதலாக கிறிஸ்துமஸ் மரத்தை மின்விளக்குகளால் அலங்கரித்தார். 

கிறிஸ்துமஸ் கேக்-வாழ்த்து அட்டை: 

கிறிஸ்துமஸ் விழாவில் பகிர்தலை அடையாளப்படுத்தும் விதமாக கேக்குகளை வெட்டி பங்கிடும் வழக்கம் 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் தொடங்கியது. 1843ஆம் ஆண்டு, இங்கிலாந்தைச் சேர்ந்த ஹென்றி கோல் என்பவர் முதன்முதலாக கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டு அனுப்பினார். 

இவைதான் உலக வரலாற்றின் முதல் வாழ்த்து அட்டைகள். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது, நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களுடன் பரிசுப் பொருட்களை பகிர்ந்துகொள்ளும் வழக்கம் கடந்த நூற்றாண்டில் தோன்றி வளர்ந்தது.

 - டே.ஆக்னல் ஜோஸ்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்துமஸ் துணுக்குகள் Empty Re: கிறிஸ்துமஸ் துணுக்குகள்

Wed Nov 26, 2014 7:15 am
கிறிஸ்துமஸ் விளக்கம்

ஆசியாவின் மையப்பகுதியிலுள்ள சிறிய நாடான இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில்,  பெத்லகேம் என்னுமிடத்தில் இயேசு பிறந்தார். அவர் பிறந்தது பற்றிய விபரம், கி.பி.,154ல் போப் ஜூலியசால் முதன்முதல் அறிவிக்கப்பட்டது. மாஸ் என்றால் ஆராதனை, எனவே கிறிஸ்து+மாஸ் கிறிஸ்துவின் ஆராதனையாக மாறியது. இதை எக்ஸ்மாஸ் என்றும் சொல்வர். எக்ஸ்  என்பது கிரேக்க சொல். இங்கிலாந்தில் பழங்காலத்தில் டிசம்பர் 25ம் தேதியை ஆண்டின் முதல் நாளாக கொண்டாடினர். பிரெஞ்சு மொழியில் கிறிஸ்துமஸை நோயஸ் என்கின்றனர்.பிறந்த இடத்தில் சர்ச் இயேசு கிறிஸ்து ஜெருசலேம் நகரில் பெத்லகேம் என்ற இடத்தில் மாட்டுத் தொழுவில் பிறந்தார். இந்த இடத்தில் கடந்த 1982ல் ஒரு ஆலயம் கட்டப்பட்டது. இதைசர்ச் ஆப் நேட்டிவிட்டி என அழைப்பர். இதைக்கட்ட 65 கோடி ரூபாய் செலவிட்டனர். எட்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.

முழுச்செலவையும் 49 பேர் நன்கொடையாக பகிர்ந்தளித்தனர். கிறிஸ்துவின் மீது அன்பு கொண்டவர்கள் வாழ்வில் ஒரு முறையாவது ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்டு இந்த சர்ச்சை காண வேண்டுமென துடிக்கின்றனர்.

எக்ஸ்மாஸ் ஆனது எப்படி?

கிறிஸ்துமஸ் டிசம்பர் 25ல் நடத்தப்படும் என போப் ஜூலியஸ் அறிவித்தார். கிறிஸ்து+மாஸ் என்ற சொல்லே கிறிஸ்துமஸ் ஆனது. இதற்கு கிறிஸ்துவின் ஆராதனை எனப்பொருள். எக்ஸ்மாஸ் என்று எழுதினாலும், கிறிஸ்துமஸ் என்றே கூறவேண்டும். எக்ஸ் என்பது கிரேக்கச் சொல்.

பிரெஞ்சு மொழியில் கிறிஸ்துமசை நோயஸ் என்கின்றனர். இங்கிலாந்தில் பழங்காலத்தில் டிச.,25ம் தேதியை, ஆண்டின் முதல் நாளாக்கி, கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளனர்.
Sponsored content

கிறிஸ்துமஸ் துணுக்குகள் Empty Re: கிறிஸ்துமஸ் துணுக்குகள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum