எந்தப் பள்ளியிலும், கல்லூரியிலும் சாதி சான்றிதழ் கட்டாயம் கிடையாது
Mon Sep 01, 2014 7:37 pm
எந்தப் பள்ளியிலும், கல்லூரியிலும் சாதி சான்றிதழ் கட்டாயம் கிடையாது. மீறி அவர்கள் கேட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
சாதி சான்றிதழ் இல்லாமல் எப்படி பள்ளி கல்லூரிகளில் சேர முடியும் என நண்பர்கள் பலர் கேட்டிருந்தார்கள்.
அவர்கள் பார்வைக்கு: POSTED BY Cartoonist Bala
சாதி ஒழிப்பை முதலில் நம்மில் இருந்து துவங்குவோம்..
என் மகன் இளமாறனும் சாதி மத மறுப்பாளனாகவே வளர்வான்.. பள்ளியில் அவனை சாதி மத அடையாளம் இல்லாதவனாக தான் சேர்த்திருக்கிறேன்..
(இந்த நடைமுறையை எல்லோருக்கும் பொதுப்படையாக்க முடியாது. சமூகத்தில் சாதி வெறி குறையாத நிலையில் இடஒதுக்கீட்டை பயன் படுத்தி மேலே வர வேண்டிய தேவை உள்ளவர்களுக்கு இது பொருந்தாது.. இதை பயன் படுத்த வேண்டியது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்..)
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|