தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஒரு அரசியல்வாதியின் விசுவாச அறிக்கை Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஒரு அரசியல்வாதியின் விசுவாச அறிக்கை Empty ஒரு அரசியல்வாதியின் விசுவாச அறிக்கை

Wed May 14, 2014 8:35 am

ஒரு அரசியல்வாதியின் விசுவாச அறிக்கை 1096486_445456438892379_445455345559155_15822_1863_b

ஓர் அரசியல்வாதியின் விசுவாச அறிக்கை
01:29


ஜெகன் மோகன் ரெட்டி. ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் முதல்வர் YSR அவர்களின் மகனாவார். YSR அவர்கள் மறைவுக்கு பின் முதல்வராகக்கூடியவர் என்று பெரிதும் பேசப்பட்டவர். ஆனால் சில அரசியல் தந்திரங்கள் நிமித்தமாக சிறையில் அடைக்கப்பட்டு 16 மாதங்கள் கஷ்டப்பட்டு பின் எதையும் நிரூபிக்கமுடியாமல் போனதால் வெளியே வந்தார். ஓர் அடிப்படை மனிதனுக்கு கொடுக்க வேண்டிய பெயில் கூட கொடுக்காமல் போனது ஓர் வருத்தமான விஷயம். இன்று ஆந்திராவை அசைக்கும் புயல் என்று வர்ணிக்கப்படும் இவர் நிச்சயம் அடுத்த ஆந்திரா முதல்வராவார் என்று கருத்து கணிப்புகள் சொல்லி வருகின்றன. ஆதலால் இவரை முடக்க பல வழிகளிலும் பல கட்சிகள் போராடி வருகின்றன.

அக்டோபர் 5, 2013 அன்று ஆந்திரா பிரிவதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தபோது ஓர் பிரபல தொலைக்காட்சியான NDTV க்கு கொடுத்த பேட்டியில் ஜெகனை சிறையில் அடைத்த காங்கிரசை மன்னிப்பீர்களா என்று கேட்டனர். ஒரு வேலை இவர் தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பல கவர்ச்சியான வார்த்தைகளை பேசி இருக்கலாம். அனால் ஜெகன் அவர்களுடைய தகப்பனார், தாயார் இவரை வேதாகமத்தின் அடிப்படையில் வளர்த்ததால் இவரின் வாயில் கர்த்தருடைய ஜெபம் தானாக வந்தது. இந்த பேட்டி முன் குறித்து எடுக்கப்படவில்லை. திடீரென்று பேட்டி எடுத்தனர். இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்று வேதம் சொல்கிறது. நம் இருதயத்தில் இருப்பது உணர்ச்சிவசப்பட்டு பேசும் போது வெளிப்படும். அதை போல ஜெகனின் இருதயம் வேத வசனங்களை கொண்டிருந்ததால் இயேசுவை வெளிப்படுத்தினார். தான் கொண்டிருந்த விசுவாசத்தை வெளிப்படுத்தினார்.


ஜெகன் மோகன் ரெட்டியிடம் கேட்கப்பட்ட கேள்வி. 


"நீங்கள் காங்கிரஸ் கட்சியை மன்னிபீர்களா?


நான் தினமும் வேதாகமத்தை வாசித்து வருகிறேன். தினமும் இரண்டு முறை ஜெபிக்கிறேன். வேதாகமம் மிகவும் தெளிவாக சொல்வது என்னவென்றால்


நீங்கள் வேதத்தை வாசித்து முடித்தவுடன் இயேசு கற்று கொடுத்த ஜெபத்தோடு முடிக்க வேண்டும். அதில் " பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;



உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.

எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே


வேதம் தெளிவாக சொல்கிறது நம் குற்றங்களை கடவுள் மன்னிகிறது போல மற்றவர்கள் நமக்கு விரோதமாய் செய்யும் குற்றங்களையும் நாம் மன்னிக்க வேண்டும்.


நான் தினமும் வேதாகமம் வாசிப்பேன். நான் யார் மற்றவர்களை மன்னிக்க? கர்த்தாகிய தெய்வம் அவர்களை மன்னிக்க வேண்டும். யுத்தம் கர்த்தருடையது



ஓர் பிரபலமான தொலைகாட்சியில் பேசும் பொது ஓர் ஜெபத்தை தன் வாழ்க்கையில் எப்படி பின்பற்றுகிறார் என்பதை அழகாக சொல்லி இருக்கிறார். தேவன் நிச்சயம் இவரை கனப்படுத்துவார்.


சங்கீதம் 1. வேதம் தெளிவாக சொல்கிறது. நாமும் இதை சிறு குழந்தைகளுக்கு கற்று கொடுப்பது வழக்கம்.
சங்கீதம் 1:1. துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், 2. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். 3. அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.


தான் செய்யாத ஓர் குற்றத்திற்காக 16 மாதங்கள் சிறையில் வாடி பின் விடுவிக்கப்பட்டார். இவரின் மனைவி ஓர் பேட்டியில் தான் அனுதினமும் ஜெபித்ததாகவும் தேவன் தன் ஜெபத்திற்கு பதில் கொடுத்திருகிறார் என்றும் சொல்லி இருக்கிறார். சங்கீதம் தனக்கு பிடித்த புத்தகம் என்றும் அதை தினமும் வாசிப்பதாக வெளிப்படையாக தன் விசுவாசத்தை அறிக்கை செய்துள்ளார்.


இவர் கூறியதில் எனக்கு பிடித்தது: தினமும் வேதாகமத்தை வாசித்து இரண்டு முறை ஜெபிபாராம். சிறையில் இருக்கும் போதும் இதை அவர் வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். ஜெகன் மோகன் அவர்கள் சிறைவாசத்தில் சிதறுண்டு, அதிக சர்க்கரை வியாதியினால் மருத்துமனையில் அனுமதிக்கபடிருந்த போது இவரின் மனைவி வேதவசனங்களை கொண்டு தான் திடபடுத்துவாராம். பணம் பதவி, செல்வாக்கு அல்ல. தேவன் இவர்களின் குடும்பத்தை எவ்வளவு அழகாக நேசிக்கிறார் பாருங்கள்.



தேவன் சாமுவேல் தீர்க்கதிரிசியின் புத்தகம் 2:30 "என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்". என்று கூறி இருக்கிறார். தொடர்ந்து ஜெபிப்போம். இந்த குடும்பத்திற்காக. எந்த விதத்திலும் சாத்தான் இவர்களின் குடும்பத்தை தாக்காதபடி நாம் திறப்பின் வாயிலில் நிற்போம். ஆமென்.

நாம் எப்படி?? அரசியல் வாதிகள் தினமும் பணத்தை மட்டும் என்னும் இந்த காலத்தில் தங்கள் விசுவாசத்தை தெளிவாக, வேதத்தின் அடிப்படையில் இருந்து விளக்கி உள்ளனர். இப்படி பட்ட அரசியல் நம் கிறிஸ்தவ தலைமுறையில் இருந்து தமிழகத்தில் எழுமா?
மாற்றத்தை எதிர்பாத்துள்ள நாம் நிச்சயம் இதற்காக ஜெபிப்போம். வாலிபர்களை திருச்சபை தூண்களாக மட்டும் அல்ல. வேதத்தின் அடிப்படையில் வாழும் அரசியல்வாதிகளாகவும் எழுப்ப ஜெபிப்போம்.


பல இடங்களில் ஆலயங்கள் கட்ட தடை விதிக்கப்படுகிறது. ஆலயங்கள் பூட்டப்படுகிறது, கிறிஸ்தவ வளர்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று பலரும் இன்று போராடி வருகின்றனர். கிறிஸ்தவர்கள் படும் கஷ்டங்கள் ஏராளம். தேவன் நிச்சயம் நம் தலைமுறையில் நல்ல தலைவர்களை உருவாக்குவராக. ஜெபிப்போம். நிச்சயம் தேவன் நம் ஜெபத்தை கேட்ப்பார்.


கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum