தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
சட்டம் உன் கையில் பெண்ணே! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சட்டம் உன் கையில் பெண்ணே! Empty சட்டம் உன் கையில் பெண்ணே!

Tue May 06, 2014 7:07 am
சட்டம் உன் கையில் பெண்ணே!via தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்
The law on your hands

மதர் இன் லா 
ஃபாதர் இன் லா 
சிஸ்டர் இன் லா 
பிரதர் இன் லா - இப்படி எல்‘லா’ருடனும் அனுசரித்துப் போவது எப்படி?

இது புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்களுக்குக் காலம் காலமாகச் சொல்லப்படுகிற புத்திமதிகளில் இன்றும் முதன்மையானது! ஆனால், பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ‘லா’ அதாவது, சட்டங்கள் பற்றி போதிக்கவோ, புத்தி சொல்லவோ இங்கே யாருக்கும் அக்கறையிருப்பதில்லை.
அவசியமும் இருப்பதில்லை, பிரச்னைகள் தலைதூக்கும் வரை! சட்டத்தின் பார்வையில் ஆண்-பெண் என்கிற பாரபட்சம் இல்லை. எனினும் சட்டம் தெரியாமல் வஞ்சிக்கப்படுகிறவர்களில் பெண்களே பெரும்பான்மை! அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை சட்டங்களைக் கூடத் தெரிந்து வைத்திருக்காத காரணத்தால்தான், பல பெண்கள் ஏமாறுகிறார்கள். மெத்தப் படித்த மேல்தட்டுப் பெண்களும் கூட இதற்கு விதி விலக்கில்லை! நாள்தோறும் நமக்குக் காண, கேட்கக் கிடைக்கிற எத்தனையோ வழக்குகளே சாட்சி!
திருமணத்தில் தொடங்கி, சொத்துரிமை வரை சகல விஷயங்களிலும் சட்டம் பெண்களுக்கு சாதக மாகவே இருக்கிறது. அறிந்தவர்களுக்குத் தெரியும் சட்டம், இருட்டறை அல்ல என்பது.‘‘பெண்களும் குழந்தைகளும் எதிர்கொள்ளும் சட்டச் சிக்கல்கள் பலவற்றினைப் பார்த்திருக்கிறேன். சில நேரங்களில் சில வழக்குகள் சட்டத்துக்குப் புறம்பான ஏதேனும் விஷயங்களில் சிக்கி, நியாயமான தீர்ப்பு கிடைக்காமல் போகும்.
பாதிக்கப்படும் பெண்களும் குழந்தைகளும் படும் துயரம் சொல்லில் அடங்காது. அவர்கள் செய்த தவறுதான் என்ன? தெரிந்தோ, தெரியாமலோ சட்டத்துக்குப் புறம்பான செயலைச் செய்ததும், அதன் விளைவாக படுகுழியில் விழுந்ததும்தான்... வேறென்ன..?’’ வருத்தத்தோடு பகிர்கிறார் வழக்கறிஞரும் குடும்ப நல ஆலோசகருமான ஆதிலட்சுமி லோகமூர்த்தி.
பெண்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படைச் சட்டங்களை இனி இதழ் தோறும் அறிமுகப்படுத்த இருக்கிறார் அவர். 
‘‘வாழ்க்கையின் மற்ற தருணங்களில் ஏமாறுவதைவிட, பெண்கள் தங்கள் திருமணத்தின் போது ஏமாறுவதுதான் அதிகம். திருமணம் பற்றிய எந்த விழிப்புணர்வுமே இல்லாமல், வாழ்க்கையைத் தொலைக்கத் தயாராகிறார்கள்.

அந்தப் பெண் நன்கு படித்து, வேலையில் இருப்பவள். வீட்டார் எதிர்ப்பை மீறி, காதலரை நம்பி, கோயிலில் தாலி கட்டிக்கொண்டு, மணவாழ்க்கையை ஆரம்பித்தாள். திருமணமான மூன்றாவது நாள், புதுக்கணவனைத் தேடி வந்தது போலீஸ். தன்னை ஏமாற்றிவிட்டு, இன்னொரு திருமணம் செய்து கொண்டதாக கணவன் மீது, முதல் மனைவி கொடுத்த புகாரின் பிரதிபலிப்பு. நம்பினவன் கைவிட, பெற்றோரும் உதறித் தள்ள, முகவரி இல்லாமல் நிற்கிறாள் அந்தப் பெண்.
அவளுக்கு அம்மா இல்லை. சித்தியின் வற்புறுத்தலில், கல்லூரிக் கனவை காற்றில் பறக்க விட்டு, கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கப்பட்டாள். மாப்பிள்ளை கருப்பா, சிவப்பா, படித்தவனா, இல்லையா என எந்த விவரங்களும் அவளுக்கு அறிவிக்கப்படவில்லை. தான் கழுத்தை நீட்டியது மனநலம் சரியில்லாத ஆணுக்கு என்பதை அவளே கண்டுபிடித்த அவலத்தை என்னவென்று சொல்ல?
இன்னும் திருமண வயது பூர்த்தியாகாமல் காதலில் விழுந்து, கல்யாணம் வரை வரும் சிறுமிகள், தடுக்கப்பட்ட உறவுமுறைகளுக்குள் காதலித்து, கடைசியில் கல்யாணம் நடக்காமல் கண்ணீரில் கரையும் இளம்பெண்கள், முறைப்படி விவாகரத்து செய்யாத ஆணை, அவன் மீதான நல்லெண்ணத்தில் அல்லது அறியாமையில் நம்பி ஏமாறும் அப்பாவிப் பெண்கள் என தினம் தினம் நூற்றுக்கணக்கான வழக்குகள்... பஞ்சாயத்துகள்... அத்தனைக்கும் அடிப்படை காரணம் சட்ட விழிப்புணர்வு இல்லாததே...’’ என்கிற ஆதிலட்சுமி, திருமண சட்டத் தகவல்களை முன்வைக்கிறார்.
திருமணத்துக்கு அடிப்படை விதிகள்
1. திருமணம் செய்துகொள்ளும் ஆணும் பெண்ணும் ஏற்கனவே திருமணம் ஆகாமல் இருக்க வேண்டும். திருமணமானவர் என்றால், வாழ்க்கைத்துணை மரணமடைந்திருத்தலோ, விவாகரத்து பெற்றிருத்தலோ - திருமண பந்தம் முடிவு பெற்றிருப்பது சட்டப்படி அவசியம். விதிவிலக்காக ஒரு இஸ்லாமிய ஆண், அவர்கள் மதச்சட்டம் அனுமதிப்பதால் ஒரே நேரத்தில் 4 பெண்களை மனைவியாக்கலாம்.
2. திருமணம் செய்யும் ஆணும் பெண்ணும் நல்ல மனநலத்துடன் இருக்க வேண்டும்.
3. ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
4. திருமணம் செய்து கொள்ள இயலாத உறவுமுறை (உதாரணத்துக்கு அண்ணன்- தங்கை, தாய்-மகன்) மற்றும் தடை செய்யப்பட்ட உறவுமுறைகளில் இருக்கக் கூடாது. ஒருவேளை அவர்களது மதம் அனுமதிக்கும் பட்சத்தில் மட்டுமே அது ஏற்றுக்கொள்ளப்படும்.
பதிவுத் திருமணம்
திருமணங்களில் சிக்கல்கள் உண்டாகும்போது, அவற்றைச் சட்டரீதியாக எதிர்கொள்ளவும் தீர்த்துக்கொள்ளவும் முறைப்படி பதிவு செய்வது அவசியம். இந்த அடிப்படையில்தான் உச்சநீதி மன்றம் ‘சீமா வெர்சஸ் அஷ்வினிகுமார்’ வழக்கின் தீர்ப்பில் இந்தியாவில் திருமணப் பதிவைக் கட்டாய மாக்க வேண்டும் என்ற ஆலோசனையை முன் வைத்தது. அதன் அடிப்படையில் ‘தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச்சட்டம் 2009’ இயற்றப்பட்டது. அரசாணை எண் 987 உள்துறை நாள் 2009 நவம்பர் 24 முதல் இச்சட்டம் அமுலில் உள்ளது. திருமணம் நடைபெற்ற 90 நாள்களுக்குள், திருமணம் நடைபெற்ற எல்லைக்குட்பட்ட சார்பதிவாளரிடம் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.
சினிமா கல்யாணம்!
காதலன் ரெஜிஸ்தர் ஆபீசில் தாலி, மாலை, நண்பர்கள் சகிதம் காத்திருப்பான். கடைசி நிமிடத்தில் காதலி அங்கே வந்து சேர, நண்பர்கள் கையெழுத்திட, திருமணம் செய்து கொள்வார்கள். ‘மவுனராகம்’ தொடங்கி ‘எஸ்.எம்.எஸ்’ வரை எத்தனையோ படங்களில் இப்படியொரு காட்சி. ‘அட... பதிவுத் திருமணம் இவ்வளவு ஈஸியா?’ என நினைக்கத் தோன்றும். சினிமா கதாநாயகன் பத்து பேரை பறந்து பறந்து அடித்து வீழ்த்துவது எப்படி யதார்த்தம் மீறிய செயலோ, அதே போலத்தான், சினிமாக்கள் சித்தரிக்கும் இது போன்ற ‘ஆன் தி ஸ்பாட்’ பதிவுத் திருமணங்களும்!
பின்னே..?
பிழையின்றி பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன், அதற்குரிய கட்டணம், திருமணம் நடைபெற்ற ஆதாரம், திருமணப் பத்திரிகை, கோயில் ரசீது / சர்ச் பதிவேட்டின் ஆதாரங்கள், இருப்பிடம் மற்றும் வயது ஆவணங்களோடு, சாட்சிக் கையெழுத்து போடுகிறவர்களின் அடையாள அட்டையும் அவசியம். 
இவை அனைத்தும் சரியாக இருந்தால்தான் பதிவு செய்யப்படும். இல்லை என்றால் நிராகரிக்கப்படும். அதனை 30 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டப் பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யலாம். அங்கேயும் நிராகரிக்கப்படும் பொருட்டு அல்லது அதிருப்தி இருந்தால், அதன் மீதும் 30 நாள்களுக்குள் பதிவுத்துறைத் தலை வருக்கு மேல்முறையீடு செய்யலாம். அவரது ஆணையே இறு
தியானது.

தமிழ்நாடு திருமணங்கள் பதிவு விதிகள் 2009 அமலுக்கு வந்த நாள் முதல் நடைபெறும் அனைத்துத் திருமணங்களும் எந்த சாதி, மதமாக இருப்பினும் மேற்குறிப்பிட்ட நாள் களுக்குள் பதிவு செய்யப்படாவிட்டால் அல்லது தவறான தகவல் அளிக்கப்பட்டிருந்தால் அல்லது விதிமீறல் இருப்பது தெரிந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவழக்கு தொடரப்பட்டு, நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும்.
பொதுமக்களுக்கு திருமணப் பதிவு மேற்கொள்வதற்கான செயல்முறை மற்றும் படிவங்கள் அனைத்தும் பதிவு அலுவலகங்கள், மாவட்டப் பதிவாளர் மற்றும் துணைப் பதிவுத் துணைத்தலைவர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இயைத்திலும் (ஷ்ஷ்ஷ்.tஸீக்ஷீமீரீவீஸீமீt.ஸீமீt) உள்ளது.
சிறப்புத் திருமணச் சட்டம் 1954
சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் இரு வேறு மதத்தைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள சட்டம் வழிவகை செய்துள்ளது. இருவரில் யாரேனும் ஒருவர், திருமணம் பதிவு செய்யும் அலுவலக எல்லையின் வரையறைக்குள் குறைந்தது 30 நாள்கள் வசித்ததற்கான சான்றாவணத்தை, ஷெட்யூல் இரண்டில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்துடன் மற்றும் குறிப்பிட்ட பதிவுக் கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
திருமண அலுவலர் மேற்கூறிய சட்டத்தின் 5வது பிரிவின் கீழ் கொடுத்த அறிவிப்பினை திருமண அறிவிப்பு புத்தகத்தில் பதிவு செய்த பின் அனைவரின் பார்வைக்காக வைக்கப்படும். அறிவிப்பின் நகல் அலுவலகத்தில் ஒட்டி வைக்கப்படும். திருமணம் செய்யும் நபர்களில் யாரேனும் ஒருவர் திருமணம் பதிவு செய்யப்படும் அலுவலகத்தின் எல்லைக்குள் நிரந்தரமாக வசிக்காத பட்சத்தில், அந்நபர் வசிக்கும் எல்லைக்குட்பட்ட அலுவலகத்தில் அறிவிப்பு ஒட்டப்படும். 30 நாள்களுக்குள் யாரிடமிருந்தும் எந்த எதிர்ப்பும் வரவில்லையெனில் பதிவாளர் அலுவலகத்திலோ, மணமக்கள் விரும்பும் அருகாமை இடத்திலோ அவர்கள் விரும்பியபடி திருமணம் பதிவு செய்யப்படும்.
இத்திருமணத்துக்கு 3 சாட்சிகள் அவசியம். ஒருவேளை இத்திருமணத்துக்கு ஏதாவது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருப்பின், திருமண அலுவலர் தக்க விசாரணை செய்து, எதிர்ப்பில் நியாயமில்லை என்று தெரிந்தால், அந்த எதிர்ப்பை நிராகரித்து, பின்பு திருமணத்தைப் பதிவு செய்வார். அந்த எதிர்ப்பில் நியாயமிருப்பின் திருமணப் பதிவாளர் திருமணப் பதிவை மறுக்க வாய்ப்புள்ளது. திருமண அறிவிப்பு கொடுக்கப்பட்ட காலத்திலிருந்து 3 மாத காலத்துக்குள் மேற்படி திருமணம் பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில், புதிய அறிவிப்பு வேண்டும்.
இந்து திருமணச் சட்டம் 1955
இந்து மதத்தைச் சார்ந்த ஆணும் பெண்ணும் கோயிலிலோ, மண்டபத்திலோ, வீட்டிலோ முறைப்படி செய்துகொண்ட திருமணத்தை சார்பதி வாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். சான்றாக சில ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் (உ-ம்: 1. திருமண அழைப்பிதழ், 2. திருமணம் நடைபெற்ற கோயில் ரசீது, 3. இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படம், 4. இருவரின் வயதுச் சான்று, 5. இருவரின் இருப்பிடச் சான்று).
குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் 2006
இச்சட்டத்தின் கீழ், குழந்தைத் திருமணத்தை ஏற்பாடு செய்பவர், நடத்தி வைப்பவர், திருமண வயது வராத பெண் என்று தெரிந்தும் திருமணம் செய்பவர் என அனைவருக்கும், குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அபராதமும் சிறைத் தண்டனையும் உண்டு. இத்தகைய திருமணத்தைத் தடுக்க, அந்தக் குழந்தை தன்னிச்சையாகவோ அல்லது ஆசிரியர், தோழி, நலம் விரும்பிகள் மூலமோ காவல் துறையினருக்கோ, மகளிர் ஆணையத்திற்கோ, சமூக நல ஆணையத்திடமோ தகவல் கொடுத்து, தற்காத்துக் கொள்ளலாம். விஷயம் அறிந்த நல்ல உள்ளம் கொண்ட யார் வேண்டு மானாலும் இம்முயற்சியில் உதவலாம்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum