தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
சபை ஒரு ஒப்பீடு  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சபை ஒரு ஒப்பீடு  Empty சபை ஒரு ஒப்பீடு

Thu Mar 13, 2014 1:04 am
மற்ற ஜனக்கூட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, யேகோவா தேவனின் விசேஷித்த உடன்படிக்கைக்கு உள்ளானவர்களாகவும் ,அவரால் வேறு எந்த ஜனமும் பெற்றிராத சிறப்பான வாக்குத்தத்தம் உள்ள மக்களாகவும் இருப்பதைக் காணமுடியும். பழைய ஏற்பாட்டில் அந்த ஜனங்களின் வரலாறே குறிப்புகளாகவும், தீர்க்கதரிசனமாகவும் சொல்லப்படுகிறது. மேலும், அவைகளை ஒட்டிய பிற நாடுகள் பற்றியும் கூறப்படுகிறது. இஸ்ரவேல் ஜனங்களோடு கர்த்தராகிய யேகோவா தேவனின் உரையாடல் அனைத்தும் பூமிக்குரியவைகளாய் இருப்பதைக் காணலாம். அவர்கள் உண்மையும், கீழ்ப்படிந்தும் காணப்பட்டால் பூமிக்குரிய மேன்மைகள், செல்வம், பெலன் போன்றவை வாககுப்பண்ணப்பட்டுள்ளது. ஆனால், கீழ்ப்படியாதவராய், உண்மையற்ற நிலையில், அந்த பதினோரு சந்ததியினரும் பூமியின் ஒரு முனை தொடங்கி மறு முனை முடிய சிதறடிக்கப்படுவர் எனக்கூறப்பட்டுள்ளது. (எண்ணாகமம் 28:64)

தொடர்ந்து இப்புத்தகத்தை ஆராய்ந்து வரும் நபர், இன்னொரு தனிப்பட்ட அமைப்பைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணமுடியும் . அது தான் சபை! சபை சரீரமாக சொல்லப்படுகிறது. சரீரத்திற்கும், தேவனோடு இஸ்ரவேல் ஜனங்கள் போல சிறப்பான வாக்குத்தத்தம் உள்ளது. ஆனால் , இங்கேயே அந்த ஒத்த காரியங்கள் முடிவடைகிறதையும், குறிப்பிடும் படியான ஒரு வித்தியாசம் துவங்குவதைக் காணலாம். இயற்கையாக ஆபிரகாமின் வழி வந்த ஜனங்கள் மட்டுமே காணப்பட்ட நிலைக்கு மாறாக, சரீரமானது யூதர்கள் என்றும் புறஜாதிகள் என்றும் வேற்றுமை இன்றி காணப்படுகிறது. ஒரு சாதாரண உடன்படிக்கை மூலமாக இணைக்கப்பட்ட பந்தம் தற்பொழுது புதிதாய் பிறந்ததினாலே இணைக்கப்படுகிறது. கீழ்ப்படிதல் பூமிக்குரிய ஆசீர்வாதம் தரும் என்று இஸ்ரவேலருக்கு சொல்லப்பட்டது. சபைக்கோ, உண்ணவும் உடுக்கவும் இருந்தால் போதும் என்று இருங்கள். உங்களுக்கு உபத்திரவம், எதிர்ப்பு வரும் எனக்கூறுகிறது. இஸ்ரவேலர் அநித்தியமான பூமிக்குரிய காரியங்களோடும், சபை நித்தியமான ஆவிக்குரிய காரியங்களோடும் தொடர்புப்படுத்திக் கூறப்பட்டுள்ளது.

மேலும் வேதத்தை ஆராயும் நபர், இஸ்ரவேல் ஜனமோ, சபையோ, வரலாற்றில் எப்பொழுதும் இடம் பிடித்துள்ளதாக காணமுடியாது. ஒவ்வொன்றிற்கும் ஒரு பதிவு செய்யப்பட்ட காலம் உண்டு. இஸ்ரவேலரின் துவக்கத்தை ஆபிரகாமை அழைத்த போது காண்கிறான். பின்பு, சபையின் துவக்கம் அவனுடைய எண்ணத்திற்கு மாறாக, ஆதாமிலோ, மூத்த குடிமக்களோ அல்லாமல் இயேசு கிறிஸ்துவின் பூமிக்குரிய வாழ்க்கைக்கு பின்பாக பிறக்கின்றது. (மத்தேயு 16:18) " இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன் . பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. "

அப்படியே அந்த வேதத்தை ஆராயும் நபர், சபையைப் பற்றி பழைய ஏற்பாட்டில் எந்த ஒரு குறிப்பும் இல்லாமையால், அது தேவனுக்குள் புதைபொருளாக இருந்ததை உணரமுடியும். அவ்வாறே, சபை அப்போஸ்தலர் 2 ம் அதிகாரத்தில் தொடங்கி I தெசலோனிக்கேயர் 4 ல் முடிவடைவதைக் காணுவார்.

இஸ்ரவேலரையும் , சபையும் அல்லாத வேறு ஒரு தனிப்பட பழக்கம் கொண்ட பிரிவினர் சில இடங்களில் இருப்பதைப் பார்க்கலாம். அவர்கள் புறஜாதிகள் ! யூதர்கள், புறஜாதியார்,சபையார் போன்றவர்களின் நிலைகளை ஒப்பிட்டுப்பார்க்க கீழ்க்கண்ட வேத பகுதி உதவியாயிருக்கும்.

யூதர்கள் :ரோமர் 9:4,5; 3:1,2; யோவான் 4:22

புறஜாதியார் :எபேசியர் 2:11,12; 4:17,18; மாற்கு 7:27,28

சபை :எபேசியர்1:22,23; 5:29-33 I பேதுரு 2:9

இப்பகுதியை ஆராய்ந்து பார்த்தால் வேதத்தில் இஸ்ரவேலருக்கும் சபைக்கும் உள்ள வேற்றுமைகளை புரிந்துக்கொள்ள முடியும். அவர்களுடைய தோற்றம்,அழைப்பு, வாக்குத்தத்தம், ஆராதனை, ஒழுக்கமுறைகள் மற்றும் எதிர்கால நம்பிக்கை அனைத்தும் வேறுபட்டிருக்கும்.

இஸ்ரவேலின் அழைப்பு

கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.

ஆதியாகமம் 12:1

உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல தேசத்திலே பிரவேசிக்கப்பண்ணுகிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும் ஊற்றுகளும் ஏரிகளுமுள்ள தேசம்; அது கோதுமையும் வாற்கோதுமையும் திராட்சச் செடிகளும் அத்திமரங்களும் மாதளஞ்செடிகளுமுள்ள தேசம்; அது ஒலிவமரங்களும், எண்ணெயும் தேனுமுள்ள தேசம்; அது தாழ்ச்சியில்லாமல் அப்பம் புசிக்கத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம்; அது கல்லுகள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டி எடுக்கத்தக்க மலைகளுள்ளதுமான தேசம்.

உபாகமம் 8:7-9

அப்பொழுது அவன்: நான் ஆபிரகாமுடைய ஊழியக்காரன். கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் சீமானாயிருக்கிறார்; கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார்.

ஆதியாகமம் :24:34,35

உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்குமுன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.

உபாகமம் 28:7

இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வார்த்தைகள் யாவையும் விட்டு விலகி வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, நீ வலதுபுறம் இடதுபுறம் சாயாமல்,

உபாகமம் 28:13

இந்த பகுதியிலிருந்து இஸ்ரவேல் ஜனத்தை பூமிக்குரிய ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கும்படிக்கு அழைத்ததைப் பார்க்கமுடியும் .

சபையினுடைய அழைப்பு

இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்;

எபிரெயர் 3:1

நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

பிலிப்பியர் 3:20

அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப்பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.

மத்தேயு 8:20

அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.

I பேதுரு 1:4

இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம்.

I கொரிந்தியர் 4:11

அப்பொழுது இயேசு சுற்றிப்பார்த்து, தம்முடைய சீஷரை நோக்கி: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார்.

மாற்கு 10:23

என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?

யாக்கோபு 2:5

அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்.

யோவான் 16:2

ஆகையால் இந்தப்பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.

மத்தேயு 18:4

இந்த வேதபகுதியில் காணும்பொழுது, சபையினர் யூதர்களின் ஒரே காலக்கட்ட மக்களாய் இருப்பினும் அவர்களுடைய அழைப்பு வித்தியாசமானது. பூமிக்குரியதாய் இல்லாமல் பரலோக வாழ்க்கையின் ஆசீர்வாதத்தை வாக்குசெய்கிறதும் , மாம்சத்திற்கு உட்பட்டவை குறைந்தும், ஆவிக்குரியவை நிறைந்தும் காணப்படுகிறது.

ஆனாலும், தேவனுக்கு கீழ்ப்படிந்த யூதன் மரணத்திற்குப் பிறகு பரலோகம் செல்வதில்லை என்றில்லை. அந்த வேற்றுமை எங்கு உள்ளது எனப் பார்த்தால் , பரிசுத்தமாய் தேவனுக்கென்று வாழ அழைக்கும் தேவன் அவர்களுக்கு ஈவாக பூமிக்குரிய ஆசீர்வாதத்தை வாக்கு செய்கிறார். இருப்பினும்,இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலம் யூதரும் புறஜாதியரும் இரட்சிக்கப்படுவது உறுதி. அதினாலே அவர்கள் மறுபடியும் பிறந்து (யோவான் 3:3,16 )ஒரே சரீரத்திர்க்கு உள்ளாக ஞானஸ்நானப்பட்டு(I கொரிந்தியர் 12:13 ) யூதன் என்றும் புறஜாதியான் என்றும் வித்தியாசம் இன்றி சபை(எபேசியர்1:22-23 ) என்று உள்ளனர்.

இஸ்ரவேலரின் ஒழுங்குமுறைகள்

தேவன் தன்னுடைய ஜனங்களாகிய இஸ்ரவேலரை வழிநடத்துவதற்கு எழுத்து வடிவில் கட்டளைகளைக் கொடுத்துள்ளார் . அவையாவன:

நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளாகிய ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உனக்கு முன்பாகத் துரத்தி,உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும்போது, அவர்களை முறிய அடித்து, அவர்களைச் சங்காரம் பண்ணக்கடவாய்; அவர்களோடே உடன்படிக்கைபண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்.

உபாகமம் 7:1,2

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம், தழும்புக்குத் தழும்பு பழி கொடுக்கவேண்டும்.

யாத்திராகமம் 21:24,25

சந்தேகமின்றி, இக்கட்டளைகள் ஒரு நேர்மையான நாட்டின் ஒழுங்குமுறை சட்டம் போலவும் அதற்கு கிடைக்கும் பலன்களும், தண்டனைகளும் கொண்டவைகளாகத் தோன்றுகிறது.

சபையின் ஒழுங்குமுறைகள்

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

மத்தேயு 5:44

எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம்.தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம்; இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம்.

I கொரிந்தியர் 4:12-13

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.

மத்தேயு 5:39

அப்படியே உபாகமம் 21:18-21 மற்றும் லூக்கா 15:20-23 பகுதியை காண்க .

சபையில் பரவலாக தேவனுடைய மக்கள் இருந்தாலும், இஸ்ரவேலின் ஒழுங்கை விட ஒரு படி மேலான சட்டதிட்டங்களைக் கொண்டுள்ளதாக உள்ளது. ஒரு விசுவாசி இதனை தெளிவாய் புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஆராதனை இடம்

தேவனை தொழுது கொள்ளும் இடங்களிலும் வேற்றுமை உள்ளது. இஸ்ரவேலர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேவனை தொழுது கொள்ளுகிறார்கள். ஆசாரியன் மூலமாக தேவனோடு இடைபடுவதும் பழக்கமாக உள்ளது.

சபையார் எங்கே இரண்டு அல்லது மூன்று பேர்களாய் கூடியிருக்கிரார்களோ, அங்கே தேவனை ஆராதனை செய்ய முடியும் . மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்லும் வாய்ப்பும் பெற்றுள்ளது.

இதனை லேவியராகமம்17:8-9 மத்தேயு18:20 லூக்கா1:10 எபிரெயர் 10:19,20 எண்ணாகமம் 3:10 I பேதுரு2:5 போன்ற வேதபகுதியில் காணலாம்.

இஸ்ரவேலரின் வாக்குத்தத்தம்

இந்த கீழ்க்கண்ட வேதபகுதி இஸ்ரவேல் ஜனங்களின் வாக்குத்தத்தம் பற்றி விளக்கமாய் கூறுகிறது. இதனை படிப்பது நமக்கு தேவன் எவ்வாறு அவர்களை ஆசீர்வதிக்க விரும்பினார் எனப் புரிந்துக்கொள்ள உதவியாயிருக்கும்.

இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.

லூக்கா 1:31-33

தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளின விதத்தைச் சிமியோன் விவரித்துச் சொன்னாரே. அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்களும் ஒத்திருக்கிறது. எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமந்தரிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு,

அப்போஸ்தலர். 15:14-16

இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் சந்ததியிலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன்.இப்படியிருக்க, விழுந்துபோகும்படிக்கா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படியல்லவே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்பத்தக்கதாக அவர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது.சுபாவத்தின்படி, காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா? மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரிலொரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும். இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் என்றும்;

ரோமர் 11:1,11,24-26

கர்த்தர் யாக்கோபுக்கு இரங்கி, பின்னும் இஸ்ரவேலரைத் தெரிந்துகொண்டு, அவர்களை அவர்கள் தேசத்திலே தாபரிக்கப்பண்ணுவார்; அந்நியரும் அவர்களோடு சேர்க்கையாகி யாக்கோபின் வம்சத்தோடே கூடிக்கொள்வார்கள்.

ஏசாயா 14:1

ஆதலால், இதோ, நாட்கள்வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருடையஜீவனைக்கொண்டு இனிமேல் சத்தியம்பண்ணாமல், இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும் தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடையஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார். அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும்; அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர்என்பதே.

எரேமியா 16:14-15,23:5-6

இதோ, என் சினத்திலும், என் கோபத்திலும், என் மகா உக்கிரத்திலும், நான் அவர்களைத் துரத்தின எல்லாத் தேசங்களிலுமிருந்து அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை இந்த ஸ்தலத்துக்குத் திரும்பிவரவும் இதிலே சுகமாய்த் தங்கியிருக்கவும் பண்ணுவேன். அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்.

எரேமியா 32:37,38

சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு. கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.

செப்பனியா 3:14-15

சபையின் வாக்குத்தத்தம்

இப்பொழுது, வேத மாணவன், கீழ்க்கண்ட பகுதியில் சபை எப்படி ஆசீர்வதிக்கப்படுகிறது எனக் காணும்பொழுது மேற்கூறிய வேற்றுமைதனை உணருவார். சபை ஆவிக்குரிய காரியங்களை மையமாகக் கொண்டுள்ளது. மாறாக, இஸ்ரவேல் பூமிக்குரிய காரியங்களை மையமாகக் கொண்டுள்ளது.

என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.

யோவான் 14:2,3

கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.

I தெசலோனியர் 4:15-17

நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.

பிலிப்பியர் 3:20,21

பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.

I யோவான் 3:2

நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன். சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லியவஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே. பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.

வெளி 19:7-9

முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.

வெளி 20:6

கடைசியாக, சபை யூதர் முறைமைக்கு உட்படுத்த படும்பொழுது, அச்செயல் சபையின் வளர்ச்சியை தடுத்து, நோக்கத்திலிருந்து விலகச்செய்து, அதனுடைய ஆவிக்குரிய தன்மையை அழிக்கிறது. உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, தேவனை பின்பற்றுவதற்கான பரம அழைப்பின் பாதையிலிருந்து விலகி, அவர்களுடைய யூத வேதவார்த்தைகளை உலக நாகரீகத்திற்கும், செல்வதை திரட்டுவதற்கும், சடங்காச்சாரங்களை உருவாக்கவும், உயர்ந்த தேவாலயங்களைக் கட்டவும்,இராணுவ குழப்பங்களுக்கு தீர்வு காணவேண்டி கடவுளை நோக்கவும் தரம் தாழ்ந்த நோக்கம் உடையவராய் மாற்றி,சகோதரத்துவத்தில் மதகுருமார், பாமரமக்கள் என்ற வேற்றுமையை உருவாக்குகிறது.

நன்றி: தமிழ்பிரதரன்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum