தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
சுய வேலை வாய்ப்பு Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சுய வேலை வாய்ப்பு Empty சுய வேலை வாய்ப்பு

Fri Sep 13, 2013 2:29 pm
கால் பைக் பிசினசை எப்படி நடத்துவது?

உங்களது ஊரில் ஒரு நல்ல ஒரு அறையை தேர்ந்தெடுங்கள். 

அதை உங்கள் விலாசமாக எடுத்துக் கொள்ளுங்கள். 

உங்களது கம்பெனிக்கு 'Fly Bikes & Couriers ' என்று பெயர் வையுங்கள்....

சிறிய துண்டு சீட்டுகள் மூலம் உங்களது கம்பெனி கீழ்க்காணும் சேவைகளை செய்வதாக தெரிவியுங்கள் 

- பொருள்களை கொண்டு வருவது மற்றும் கொண்டு சேர்ப்பது... உள்ளூர் மட்டும் . 

- வெளியூருக்கு அனுப்பும் கூரியர் பொருள்களை வீட்டிலேயே வந்து வாங்கிச் செல்வது 

- வீட்டிற்குத் தேவையான பொருள்களை மாதா மாதம் மளிகைக் கடையில் போன் செய்தால், அவர்கள் கட்டி வைத்தப் பொருள்களை வீட்டிற்குக் கொண்டு வந்து கொடுப்பது. 

- உடனடி அவசரத் தேவைக்காக மருந்து, உணவு, மற்றும் இரவு நேரங்களில் பிரயாணம் செல்ல போக்கு வரத்து உதவி....

- உடனடி பஸ் பிரயாணம் மற்றும் ரயில் டிக்கெட்டுகள் வாங்குதல் போன்ற சேவை 

- ஈமெயில் மூலம் உறவினர்களுக்கு செய்தி அனுப்புதல் 

- அரசாங்க ஒப்புதல்கள், சான்றிதழ்கள், போன்றவற்றை வாங்கித்தர சேவை 

- வியாபாரக் கடைகளின் பொருள்களை குடோனில் இருந்து கடைக்கும், அவர்களது இன்வாய்ஸ், டெலிவரி ஆர்டர் முதலியவைகளை கொண்டு சேர்ப்பது... 

மேலே உள்ள சேவைகளை குறிப்பிட்டு துண்டுப் பிரசுரம் அடியுங்கள். அதை அனைவருக்கும் விநியோகம் செய்யுங்கள்....

வருடத்திற்கு ரூ 10 இலட்சத்திற்கும் குறைவாக டர்ன் ஓவர் இருந்தால் அதற்கு வணிக வரித்துறையிடம் இருந்து VAT பதிவு செய்ய வேண்டியதில்லை. VAT பதிவு இல்லாமலேயே சேவை வரியாக 1% கட்டிவிட்டுப் போகலாம். 

ஒரு நல்ல கணக்காளரை (பகுதி நேரப் பணியாளர்) உங்களின் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்ள வேலைக்கு வைத்துக் கொள்ளுங்கள்.....

ஆட்டோ ரிக்ஷாக் காரர்கள் முதலில் எதிர்க்கத்தான் செய்வார்கள். ஆனால் அவர்களிடம் சொல்லுங்கள், உங்களது கம்பெனி கூரியர் கம்பெனிதான் என்று. 

கேரளாவில் கொச்சியில் இதுபோல ஒரு தொழில் மிகவும் பிரமாதமாக 2003 இல் இருந்து நடக்கிறது என்று கேள்விப் பட்டேன். அது போலவே ஆந்திராவிலும் நடப்பதாகத் தெரிகிறது....

ஆகவே... தைரியமாகத் தொடங்குங்கள்...... ஒவ்வொரு ஊரிலும் இதை நீங்கள் தொடங்கலாம். அலுவலகம் தனியாக வேண்டாதோர் தங்கள் வீட்டையே சிறிய அலுவலகமாக மாற்றிக் கொள்ளலாம். தங்கள் தொடர்பு என் உங்களது கைபெசியாகவே இருக்கட்டும்.... 

பெண்களும் இந்த தொழிலைத் தொடங்கலாம். முதலில் ஒரே ஒரு பைக் வைத்துக் கொண்டு செய்யுங்கள். அது நீங்களாகவே இருக்கட்டும். இந்தத் தொழிலை நீங்களே செய்யும்போது அதில் உள்ள கஷ்டங்கள் உங்களுக்குப் புரியும். தொழில் வளரும்போது அடுத்து எத்தனை பைக் வாடகைக்கு எடுக்கலாம் என்பதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள்....

ஒன்று மட்டும் நிச்சயம், இதை நீங்கள் செய்யாமல் வேறு யாராவது செய்தால் அவருடன் கூட்டு சேர்ந்து செய்வோம் என்று நினைக்காதீர்கள். நீங்கள் தனியாக நின்று இதை செய்யும்போதுதான் தன்னம்பிக்கை வரும்... பின்னர் வேறு ஒரு தொழிலை செய்ய நினைக்கையில் இந்த தன்னம்பிக்கைதான் துணை வரும் என்பதை மறவாதீர்கள்... 

என்னுடைய வாழ்த்துக்கள் எப்போதும் உங்களுக்கு உண்டு...

வெற்றி உங்கள் பக்கம்.....



நன்றி: டிமிடித் பெட்கோவ்ஸ்கி
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சுய வேலை வாய்ப்பு Empty Re: சுய வேலை வாய்ப்பு

Fri Sep 13, 2013 2:33 pm
பெருகி வரும் விலைவாசியாலும், பெட்ரோல் விலையாலும், மாற்று வழிகள் இல்லாத போக்கு வரத்து நிதர்சனங்களாலும் உந்தப்பட்டு, உங்களுக்காக ஒரு திட்டம் இங்கே கொடுத்திருக்கிறேன். 

இந்தத் திட்டத்தை நடை முறைப் படுத்துவதின் மூலம் நீங்கள் ஒரு தொழில் அதிபர் ஆகலாம் அல்லது ஒரு நல்ல வருமானம் ஈட்டும் தொழிலாளியாக ஆகலாம்....

இந்தத் திட்டம் குறித்து உங்களுக்கு ஏதேனும் விளக்கம் வேண்டும் என்றால் என்னை உள்டப்பியில் தொடர்பு கொள்ளலாம்....

FaceForce அமைப்பின் மூலம் இந்தத் திட்டத்தை உங்களுக்கு சமர்ப்பிப்பதில் நான் இந்தியன் என்ற முறையிலும், தமிழன் எனும் பெருமையிலும், என்னைப் படிக்க வைக்க செலவு செய்த அரசாங்கத்திற்கும் நன்றி சொல்லும் வகையில் நான் மிகப் பெருமை அடைகிறேன்...... 

இது போல மக்களுக்குப் பலப் பல நன்மை பயக்கும் திட்டங்களை, நான் இனி வருங்காலத்தில் வெளியிடுகிறேன்....

என் நாடு; என் ஜனநாயகம்; என் உரிமைகள்;

- டிமிடித் பெட்கோவ்ஸ்கி....

***************************************

‘கால் பைக் (Call Bike)’. Project for Unemployed youth and aspiring entrepreneurs of Tamil Nadu......

Project dedicated to all my fellow Tamilians and Government of Tamil Nadu


சமீபகாலமாக வெகுஜன வணிகப் போக்குவரத்து துறையில் வெற்றிகரமாகவும்- மக்களின் அமோக ஆதரவுடனும் இயங்கி வருவது ‘கால் டாக்ஸி”. தகவல் தொழில் நுணுக்க வசதி மூலமாக எளிதாக அணுகக் கூடியதாகவும் (Easy Access), அதே சமயம் பேரம் என்று டிரைவருடன் மல்லுக்கட்டும் அவசியம் இல்லாததாகவும் இருப்பதால் இந்த கால் டாக்ஸி போக்குவரத்து தமிழகத்தில் சென்னையையும் தாண்டி சிறு, நடுத்தர நகரங்களிலும் செல்வாக்குடன் காலூன்றி உள்ளது. அந்த வரிசையில் கொண்டு செல்லப்பட வேண்டியதே நமது ‘கால் பைக்’ வாகனப் போக்குவரத்து. அதாவது ’கால் டாக்ஸி’யின் கையடக்கப் பதிப்பே ‘கால் பைக் (Call Bike)’.

**********************
இலக்கு (Taget customers)
________________________ 
ஆட்டோவிலோ- அல்லது டாக்ஸியிலோ போக அவசியமில்லாத- டவுன் பஸ்சுக்கு காத்திருக்க நேரமில்லாத அவசரமான- அல்லது டவுன் பஸ் Access இல்லாத பகுதியில் அல்லாடும் ஒற்றை வாடிக்கையாளர் தான் நமது ’கால் பைக்’கின் பிரதான இலக்கு.
****************

யார் யாருக்கு வேலை வாய்ப்பு?
_____________________________________
* மோட்டார் பைக், ஸ்கூட்டர், ஸ்கூட்டி பெப், ஆக்டிவா… போன்ற இரு சக்கர வாகனங்கள் (100 அல்லது 100 ccக்கு மேல் இருக்க வேண்டும்) சொந்தமாக வைத்திருக்கும் உடல் ஆரோக்கியமுள்ள – முறையான டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்கும் ஆண்கள், பெண்கள் இரு பாலருக்கும். 

* பைக்கில் வீதி வீதியாக ‘பறந்து’ மார்க்கெட்டிங் என்ற பெயரில் வீடு வீடாக ஏறி இறங்கும் இளையோர்.(இளைஞிகள் உட்பட) 

* சுய உதவிக்குழுக்களில் ஈடுபாடுள்ள பெண்கள். 

* நேர்மையுடன் உழைத்து சொந்தமாக சம்பாத்தியம் செய்து வாழ வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டுள்ள சுய சார்பில் நாட்டமுள்ள இல்லத்தரசிகள்- படிப்பை முடித்த, படிப்பை பாதியில் நிறுத்திய இளம் பெண்கள் .

* மொத்தத்தில், தான் வைத்திருக்கும் மோட்டார் சைக்கிளை உருப்படியான வழியில் பயன்படுத்தி கையும் மனசும் நிரம்ப நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற உந்துதல் கொண்டுள்ள ஆண்களும் பெண்களுக்கும் இந்த ‘கால் பைக்’ திட்டம் ஒரு வரப்பிரசாதம்.
********************************************

சிறப்பு அம்சம்: இரட்டை சம்பாத்தியம்
______________________________________________
நமது ‘கால் பைக்’ இரு வகைகளிலும் வருமானம் ஈட்டித் தரக்கூடியது. வாடிக்கையாளர்களை அழைத்து செல்லும் போக்குவரத்து வாகனம் என்ற முறையில் வருமானம் பார்க்கலாம் என்பது ஒரு புறம். ஒருவருக்கு ஒரு பொருள் அது மருந்தோ அல்லது ஓட்டலில் இருந்து சிற்றுண்டியோ எதுவோ முக்கியமாக/ அவசரமாக தேவைப்படலாம். 

அதுபோல குழந்தைக்கு மதிய உணவு பாக்ஸ் கொடுக்க வேண்டியிருக்கலாம். ஆனால் அவரால் எதாவது ஒரு அசந்தர்ப்பத்தால் போக முடியாமல் போகும்பட்சத்தில் அவர் தொலைபேசி மூலம் ‘கால் பைக்’கை தொடர்பு கொண்டு தனது தேவையை சொல்லி அழைத்தால் அந்த சர்வீஸ் மூலமும் ஒரு கூரியராக/ சரக்கு வாகனமாக கூட நமது ’கால் பைக்’ பயன்பட்டு வருவாய் ஈட்டலாம். 

ஆக, பயணிகள் போக்குவரத்து வாகனமாகவும்- சரக்கு அல்லது கூரியர் வாகனமாகவும் இரு வகைகளிலும் நல்ல வருமானம் ஈட்டலாம் என்பது நமது ‘கால் பைக்’கின் சிறப்பு அம்சம்.
************************************************ 
செயல் திட்டம்
__________________
# ‘கால் பைக்’ என்கிற பெயரில் முறையாக பதிவு செய்யப்பட்டு ஒரு நிறுவனம் ஏற்படுத்தப்படும். விருப்பமுள்ள இரு சக்கர உரிமையாளர்கள் அந்த நிறுவனத்துடன் சில நிபந்தனைகளின்/ சட்ட திட்டங்களின் அடிப்படையில் ஒப்பந்தம் செய்துக் கொள்ள வேண்டும். அதற்கு பிறகு, ‘கால் பைக்’ நிறுவனத்திற்காக அதன் Brand’ல் அவரவர்கள் தங்களின் இரு சக்கர வாகனங்களை தாங்களே இயக்கி கொண்டிருக்க வேண்டும். 

# கால் பைக்’குகள் சாலையில் அங்குமிங்கும் இயங்கி, வழியில் வாடிக்கையாளர்களை பிக்-அப்’ செய்து கொள்ள வேண்டும். மிக அபூர்வமாக – தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டும் ‘கால் பைக்’ நிறுவனம் மூலம் செல்போனில் வாடிக்கையாளர் பிக்-அப் செய்வது குறித்து வாகன ஓட்டிக்கு தெரிவிக்கப்படும். மற்றபடி, சாலையில் வழியில் வாடிக்கையாளர்களை ஏற்றி கொண்டு செல்லும் வழிமுறை தான் அடிப்படையானது என்பது குறிப்பிடத்தக்கது. 

# வாடிக்கையாளர்களிடம் பயணத் தொகையாக வசூலிக்க ஒரு கி.மீ., தூரத்திற்கு இவ்வளவு என்று கட்டணம் நிர்ணயிக்கப்படும். மினிமம் சார்ஜ் உண்டு.

# மாதக் கடைசியில் கணக்குப் பார்த்து குறிப்பிட்ட சதவீதம் தொகையை (தோராயமாக ஒரு உரிமையாளர் மாதம் ஒன்றுக்கு ரூ.1000 வீதம்) Brand-ஐ பயன்படுத்துவதற்காகவும் இன்ன பிற நிர்வாகச் செலவுகளுக்காகவும் ‘கால் பைக்’ நிறுவனத்திற்கு, ஒப்பந்தம் செய்து கொண்டு வாகனத்தை இயக்கும் ஒவ்வொரு உரிமையாளரும் அளிக்க வேண்டும். ’கால் பைக்’ நிறுவனத்திற்கு அளிக்கப்படும் தொகை போக, மீதியுள்ள தொகை முழுவதும் அந்த உரிமையாளருக்கே. பெட்ரோல், டீசல், காஸ் என வாகன இயக்கத்திற்கான எரி பொருள் செலவு மற்றும் வாகனப் பழுது பார்த்தல், வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட இதர பிற செலவுகள் வாகன உரிமையாளரையே சாரும்.

# பொதுமக்களின் இருசக்கர வாகனங்களில் இருந்து ‘கால் பைக்’ வாகனங்களை வித்தியாசப்படுத்தி காண்பிப்பதற்காக, ‘பேக் கேரியர்’ வைத்தல்- பிரத்யேக பெயிண்ட் அடித்தல்- வாகன ஓட்டிக்கு பேட்ஜ் அல்லது ஜெர்கின் போன்ற கோட்டு தருதல் போன்று சில நடவடிக்கைகள் ‘கால் பைக்’ நிறுவனத்தின் சார்பில் செய்து தரப்படும்.

# இரு சக்கர வாகனம் என்பதால் ஒரு வாடிக்கையாளரை மட்டும் தான் ஒரு வாகனத்தில் ஏற்றி அழைத்து செல்ல வேண்டும். ஓவர் லோடு எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படாது.
# மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டுவது- வாடிக்கையாளர்களிடம் அடாவடியாக நடந்து கொண்டு தகராறு செய்வது- பெண்களிடம் முறைதவறி நடந்து கொள்வது- சாலைப் போக்குவரத்து விதிகளை மீறி இயக்குவது போன்ற அநாகரீக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழாதபடி ’கால் பைக்’ வாகன உரிமையாளர்கள் மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும். புகார் வந்து அது உண்மை தான் என நிரூபணமானால் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டி மீது கடும் நடவடிக்கை எடுக்க ‘கால் பைக்’ நிறுவனத்திற்கு முழு அதிகாரம் உண்டு.
*************************************************

நிர்வாக அமைப்பு
________________________
# ‘கால் பைக்’ செயல்படும் ஊர் அல்லது மாவட்டம் ஒவ்வொன்றிலும் கால் பைக்’ நிறுவனத்திற்கென ஒரு நிர்வாக அலுவலகம் இருக்கும். நிறுவனத்தின் தலைமைச் செயலகம் சென்னையில் செயல்படும்.
# ஒப்பந்தம் செய்து கொண்டு இயக்கும் கால் பைக்’ வாகன உரிமையாளர்கள் /வாகன ஓட்டிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகியோர் தொடர்பு கொள்ளும் மையமாக அவரவர் பகுதியில் உள்ள கால் பைக் நிர்வாக அலுவலகம் விளங்கும்.

# வெகுஜனத் தொடர்புக்காக அவர்கள் மனதில் சுலபமாக பதியும் வகையிலான ஃபேன்ஸி எண்ணுடன் கூடிய தரைவழி தொலைபேசி இணைப்பு ஒவ்வொரு நிர்வாக அலுவலகத்தில் இருக்கும்.

# கணக்கு வழக்கு பரிவர்த்தனை, புகார்கள், தகவல்கள், வாடிக்கையாளர்கள் அழைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் நிர்வாக அலுவலகங்கள் மூலமாக செய்யப்படும்.

# ஒட்டுமொத்த நிர்வாக மேலாண்மை, கணக்கு வழக்கு மேற்பார்வை, சட்ட ரீதியான பிரச்சினைகள், போலீஸ் மற்றும் அதிகாரிகள் தலையீடு, இடையூறு போன்ற விவகாரங்களை கவனித்து தீர்த்து வைப்பது போன்ற முக்கியமான நடவடிக்கைகளை சென்னையில் இயங்கும் தலைமை அலுவலகம் மேற்கொள்ளும்.

# ஒவ்வொரு நிர்வாக அலுவலகமும் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அமைக்கப்படும். ஒவ்வொரு அலுவலகமும் தலைமை அலுவலகத்துடன் தொழில் நுட்ப சாதனங்கள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.
************************************************

எதிர் நோக்கும் உத்தேச சவால்கள்/ பிரச்சினைகள்
_________________________________________________
# முக்கியமாக, இருசக்கர வாகனங்களை வணிக போக்குவரத்துக்கு வாகனமாக (Commercial Transport vehicle) பயன்படுத்தலாமா? சட்டப்பூர்வமானதா? 

தற்காலம் பிஸ்ஸா டெலிவரி மற்றும் ஓட்டல் காரர்கள் விளம்பரப் பலகைகளுடன் மோட்டார் சைக்கிளில் செல்கிறார்கள்... அவர்களுக்கு எந்த வித கட்டுப்பாடும் இல்லை. எனவே. இந்த திட்டத்திற்கும் கட்டுப்பாடுகள் கூடாது என்றும் இது மக்களுக்கான ஒரு திட்டம் என்பதையும் அரசிற்கு தெளிவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. 

# கால் பைக் வந்தால் ஆட்டோக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அரசியல் புள்ளிகள், போலீஸ் உள்ளிட்ட பெரிய அதிகாரிகளின் பினாமிக்களால்/ அல்லது அவர்களின் மறைமுக ஒத்துழைப்பால் பெரும்பாலான ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் பெருத்த சவாலை / பிரச்சினையை சந்திக்க வேண்டி வரலாம்.

ஆட்டோ மீட்டர்கள் திருத்தப்பட்டும் கூட, இன்று வரை ஆட்டோக்காரர்கள் பழைய அடாவடி அணிந்யாய வாடகையை வாங்கி வருகிறார்கள். பலர் அந்த ஆட்டோவின் உரிமையாளர்கள் கூடக் கிடையாது. அவர்கள் பத்து பேர் சேர்ந்து RTO அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி கட்டணப் பட்டியலை தர வைக்கிறார்கள். 

ஆகவே... அவர்களுக்கு மட்டும்தான் இது போல சவாரி எடுக்க வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறதா என்ன? 

ஷேர் ஆட்டோ வந்ததும் அவர்களால் என்ன செய்ய முடிந்தது? கால் டாக்சி வந்தபோது என்ன செய்ய முடிந்தது? 

ஆகவே, அது போல கால் பைக் வந்தாலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. 

ஆகவே, உங்களின் வெற்றிப் பயணத்தைத் தொடங்குங்கள்.....

இந்த திட்டத்தை நான் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று என்னும் அனைத்து உழைப்பாளர்களுக்கும், தமிழக அரசிற்கும் காணிக்கை ஆக்குகிறேன்..... 

# RTO office கெடுபிடி- தொந்தரவு. RTO அலுவலகத்திற்கு டாக்ஸ் கட்டினால் போதும். ஆகவே இந்த திட்டம் செயல்பாட்டில் வந்தால் அரசாங்கம் தானாகவே முன்வந்து அதற்க்கான வரியை நிர்ணயிக்கும். எனவே, முந்திக்கொள்ளுங்கள்.

அதுவும் அல்லாது, அரசாங்கத்திற்கு நல்லது செய்யும் உண்மையான எண்ணத்துடன் நாம் இந்த வேலை வாய்ப்பைப் பெருக்குகிறோம் என்பதையும், அரசாங்கம் நிச்சயம் உணர்ந்து கொள்ளும். 

- DP
நன்றி: டிமிடித் பெட்கோவ்ஸ்கி
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சுய வேலை வாய்ப்பு Empty Re: சுய வேலை வாய்ப்பு

Fri Sep 13, 2013 2:38 pm
தீபாவளி நெருங்கும் இந்த சமயத்தில் கீழ்க்காணும் விற்பனை நிச்சயம் நல்ல பலன் தரும்

1. பட்டாசு - சிவகாசிக் காரர்கள் பட்டாசு விளம்பரம் செய்யலாம்
2. துணி - திருப்பூர் மற்றும் கோவை ஈரோடு பகுதியை சேர்ந்தவர்கள் வணிகம் செய்யலாம்.
3. இனிப்பு - சென்னையை சேர்ந்தவர்கள் தென் பகுதிக்கு இனிப்புகளை வாங்கி அனுப்பலாம். 

இந்த வணிகத்தின் மொத்த வியாபாரம் இந்த இரண்டு மாதங்கள் மட்டும் 

1. பட்டாசு - ஒரு குடும்பம் X ரூ 1000 X 2 இலட்சம் குடும்பங்கள் = ரூ 20 கோடி 

2. துணி வகைகள் - ஒரு குடும்பம் X ரூ 5000 X 2 இலட்சம் குடும்பங்கள் = ரூ 100 கோடி 

3. இனிப்பு - ஒரு குடும்பம் X ரூ 500 X 2 இலட்சம் குடும்பங்கள் = ரூ 10 கோடி....

இந்த ரூ 130 கோடி மொத்த விற்பனை மதிப்பில் எவ்வளவு பணத்தை நீங்கள் வியாபாரத்தில் கைப்பற்றப் போகிறீர்கள்?



நன்றி: டிமிடித் பெட்கோவ்ஸ்கி
Sponsored content

சுய வேலை வாய்ப்பு Empty Re: சுய வேலை வாய்ப்பு

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum