தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கீர்த்தனைக் கவிஞர் தேவவரம் முன்ஷியார் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கீர்த்தனைக் கவிஞர் தேவவரம் முன்ஷியார் Empty கீர்த்தனைக் கவிஞர் தேவவரம் முன்ஷியார்

Sat Sep 07, 2013 2:34 pm
தேவவரம் பிடல்ப் 1802 ஆம் ஆண்டு குமரி மாவட்டத்திலுள்ள மயிலாடி என்னும் ஊரில் வாழ்ந்த சிவனான் - ஞானாயி தம்பதிகளுக்கு ஒரே மகனாகப் பிறந்தார். தேவவரத்தின் தந்தையான சிவனான் முதல் கிறிஸ்தவர் மகராசன் வேதமாணிக்கம் தேசிகரின் மூத்த சகோதரன் ஆவார். ஜெர்மன் நாட்டு மிஷனெரி அருள்திரு. ரிங்கல்தௌபே போதகர் 1806 ஆம் ஆண்டு மயிலாடியில் இறைப்பணியாற்ற வந்தபோது அவரால் திருமுழுக்கு பெற்ற 40 பேர்களுள் தேவவரம் பிடல்பும் ஒருவர். தேவவரத்தின் தந்தையார்சிவனான் என்னும் தன் பெயரை மாற்றி ஞானாபரணம் எனத் திருமுழுக்குப் பெற்றார்.
இளமைப்பருவம்
                விளையும் பயிர் முளையிலே தெரியும் என்னும் முதுமொழிக்கேற்ப இளம் பருவத்திலேயே தேவவரம் கல்வியறிவில் மேம்பட்டு தேவனுடைய வரத்தைப் பெற்ற வராகத் திகழ்ந்தார். சிறுவர்களிடையே போட்டிகள் வைத்து அதிக வசனம் சொல்லுபவர்களுக்குப் பரிசு கொடுப்பது போதகர் ரிங்கல்தௌபேயின் வழக்கம். வசனங்கள் சொல்லி அதிகமானப் பரிசுகளைப் பெற்றுக் கொள்வது தேவவரத்தின் வழக்கம்.
கல்வி
                1809 ஆம் ஆண்டு போதகர் ரிங்கல்தௌபே முதன் முதலாக மயிலாடியில் தொடங்கிய ஆங்கிலப் பாடசாலை, 1819 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் இன்றுபெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி இருக்கும் வளாகத்தில் இறையியல் கற்பிக்கும் நிறுவனமாக ஜெர்மன் மிஷனெரி மீட் போதகரால் மாற்றி அமைக்கப்பட்டது. அந்நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டில் படித்த மாணவர்களுள் தேவவரமும் ஒருவர். படிப்பின் ஆர்வத்தையும்திறமையையும் கண்ட மீட் போதகர் தேவவரத்தைத் தஞ்சாவூர்கும்பகோணம்சென்னை ஆகிய இடங்களுக்குக் கல்வி கற்க அனுப்பினார். ஆங்கிலம்தமிழ்சமஸ்கிருதம்வானவியல்அறிவியல்இசை போன்ற பல துறைகளிலும் நன்முறையில் தேர்ச்சியடைந்தார். குறிப்பாகசமஸ்கிருதத்தில் நல்ல புலமையுடையவராகத் திகழ்ந்தார். சென்னையில் படிப்பை முடித்த பின் மீட் போதகருக்கு நற்செய்திப் பணி உதவியாளராக நாகர்கோவிலில் பணியாற்றலானார்.
கவிஞர்
                கவிஞர் ஜான்பால்மருக்குக் கவிதைகள் எழுத ஆரம்பகாலத்தில் கற்றுக் கொடுத்த திருவம்பலத் திண்ணமுத்தம் பிள்ளைதான் தேவவரத்திற்கும் தமிழ்க் கவிதைகள் எழுதக் கடைப்பிடிக்க வேண்டிய இலக்கண விதிமுறைகளைக் கற்றுக் கொடுத்தவராவார். தமிழ் மீது ஆர்வம் உடைய இவரது கவிதை நடை பிறர் போற்றும் வண்ணம் அமைந்திருந்தது. கிறிஸ்தவக் கொள்கைகளை அழுத்தமாகவும்ஆணித்தரமாகவும்தெளிவாகவும் விவரித்துக் கூறினார். அக்காலக் கிறிஸ்தவக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவராகக் காணப்பட்ட இவரால் திருவள்ளுவரின் பாடல்களுக்கு நிகரான பாடல்கள் பல எழுதப்பட்டன. இவரது கவிதைகளின் ஆற்றலைக் கண்டு இவரைத் தோமுனி எனக் கற்றறிந்த சான்றோர் அழைத்தனர். தோமுனி எனும் இவரது பட்டப் பெயரே நாளடைவில் முன்ஷி என வழங்கலாயிற்று.
ஜெபவீரர்
                தேவவரம் முன்ஷியார் கவிஞராகத் திகழ்ந்ததுடன் ஜெபவீரராகவும் வாழ்ந்தார். நெய்யூரில் மீட் போதகருடன் தங்கியிருந்த காலத்தில் அவ்வூரின் மேற்குப் பகுதியிலுள்ள பாறையில் நீண்ட நேரம் தனித்திருந்து ஜெபம் செய்வது தேவவரம் முன்ஷியாரின் அன்றாட வழக்கமாகும்.
ஒரு முறை கவிஞர் ஜான்பால்மர்நத்தானியேல் செட்டியார்தேவவரம் முன்ஷியார் ஆகிய மூவரும் குமரி மாவட்டத்தின் பெரும் புகழ் பெற்ற உலக்கை அருவியைக் கண்டு களிக்கச் சென்றனர். உலக்கை அருவி நீர் விழும் அசம்பு மலையின் உயரமான பகுதியிலிருந்து ஜெபம் செய்ய ஆரம்பிக்கும்போது ஒருவரிடமும் வேதாகமம் இல்லாததை அப்போது உணர்ந்தனர். அவர்களிடையே முன்ஷியார் Ôஇயற்கை இறை மகிமையை உணர்த்துவது என்பதைத் தானே சங்கீதக்காரன் குறிப்பிடுகிறான்Õ எனக் கூறி ஒரு சங்கீதத்தைத் தன் விவிலிய அறிவால் விளக்கி,இறை வேண்டுதலும் செய்தார். ஜான்பனியனை அவர் நாட்டு மக்கள் பேராயர் என அழைத்ததைப் போன்று தேவவரம் முன்ஷியாரைத் தந்தை எனப் பொருள்பட ஐயா என்னும் மதிப்புடனேயே பாமரர்களும் அழைத்தனர்.
கீர்த்தனைகள்
                கீர்த்தனைக் கவிஞர் தேவவரம் முன்ஷியார் எழுதியவற்றுள் ஒன்பது கீர்த்தனைகள் மட்டும் இன்று கிடைக்கின்றன. அவை பின்வருமாறு :
1.            அடியேன் மனது வாக்கும்
2.            அதிமங்கலக் காரணனே
3.            இயேசு நாயகனைத் துதிசெய்
4.            காரும் கிறிஸ்தேசுவே
5.            சேரும் கிறிஸ்தேசுவே எனைச்சேரும்
6.            தேவசுதன் பூவுலகோர்
7.            நித்தமும் சிந்தித்து சிந்தித்து
8.            வருவார் விழித்திருங்கள்
9.            வாரும் தேற்றரவரே

பிற படைப்புகள்
                கீர்த்தனைகள் எழுதியதுடன் பல்வேறு நூற்களையும் படைத்துள்ளார்.
1. வேதவிதிக்குறள்  
                திருவள்ளுவரின் திருக்குறளுக்கு இணையாகக் கிறிஸ்தவச் சமயக் கருத்துகளைக் குறள் வடிவில் தருவது இந்நூல்.  
2. திருட்டாந்த மாலை
                திருட்டாந்த மாலை என்னும் இந்நூல் கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை விவிலியச் சான்று வழிக் கூறுகின்றது. ஔவையாரின் மூதுரை நூலைப் பின்பற்றி இயற்றப்பட்டது திருட்டாந்த மாலை ஆகும். ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது. முதல் இரண்டு அடிகள் கிறிஸ்தவ நெறியைச் சுட்டுவனவாகும். இறுதி இரண்டு அடிகள் விவிலிய மேற்கோளாகவும் அமைந்துள்ளன.  
3. சிந்து கவிமாலை  
                பல்வேறு கீர்த்தனைகள் அடங்கிய நூல் சிந்து கவிமாலை ஆகும்.  
4. செம்மொழி மாலிகை  
                ஔவையாரின் ஆத்திச்சூடியைப் போன்று கிறிஸ்தவக் கருத்துகளைச் சுருங்கக் கூறி விளங்க வைக்கும் நூல் செம்மொழி மாலிகை என்பதாகும்.

5. சங்கீத வாரணம்
                தாவீதின் சங்கீதத்தைப் பாடல் வடிவில் தரும் நூல் இதுவாகும்.  
6. நல்லறிவின் சாரம்
                வினாவிடைப் பாடலாக விவிலியச் செய்திகளை இந்நூல் எளிமையாகத் தருகின்றது.

அகராதிப் பணி
                மேலை நாட்டுக் கிறிஸ்தவர்கள் செய்த அகராதிப்
பணியைத் தொடர்ந்தவர்களுள் தேவவரம் முன்ஷியாரும் ஒருவராவார்.
1. சதுரகராதி
                வீரமாமுனிவரின் சதுரகராதியைப் பின்பற்றி மேலும் நிறைவு செய்ய எழுதிய நூல் சதுரகராதி என்பதாகும்.
2. வினையகராதி (அ) பஞ்சகராதி  
                தமிழ்ச் சொற்களின் வேர்ச்சொல்லையும்வினைச் சொல்லையும் விளக்கும் வகையில் எழுதப்பட்ட வினையகராதி முழுமை பெறாததால் நூல் வடிவம் பெறவில்லை.
                வேத அகராதி  பெயரகராதி   என்பனவும் அவரால் எழுதப்பட்ட பிற அகராதி நூல்களாகும்.
கைப்பிரதி
                1830 இல் நெய்யூரில் அருள்திரு. மீட் போதகரால் தொடங்கப் பட்ட கைப்பிரதிக் கழகத்தில்  செயலர்முதன்மை எழுத்தர்மொழிபெயர்ப்பாளர் போன்ற பதவிகளின் மூலம் 150 வெவ்வேறு தலைப்புகளில் கைப்பிரதிகளை வெளியிட்டார். இக்கழகம் பல நூற்களையும் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜான்பால்மரின் கூற்று
தேவவரம் தேசிகருடைய திட்ப நுட்பமான சாயித்தியத்தைப் பற்றி நான் விவரித்துக் காட்டத் தேவையில்லை. அவரையும் அவர் பாடல்களையும்அறிந்தவர்களுக்கு அது பிரத்தியட்சந்தானே
எனக் கீர்த்தனைக் கவிஞர் ஜான்பால்மர் கூறியுள்ளார்.
அருள்திரு. அ. வேதக்கண் கூற்று
ஐயர் தாமே தேவவரம் உபதேசியாரின் தென்மொழிப் பாண்டித்துவத்தையும்அசடற்ற தேவபக்தியையும்தேவப் பணிவிடையில் ஊக்கத்தையும் நன்கு மதித்து கண்யப்படுத்திஅவர்மேல் கண் வைத்திருந்தார். அதை ஜனங்களும் நன்கு மதித்து அவருடைய நல்ல காலத்துக்குக் காத்திருந்தார்கள். அவர் குருப்பட்டம் அடையாதிருந்தும் அந்தச் சிலாக்கியத்துக்குத் தூரமானவரல்ல என்பது யாவருக்கும் தெரிந்த காரியம். அவருடைய கல்வித் திறமையினிமித்தம் வித்துவான்களும் அவர் சிநேகிதரில் பலரும் அவரை  தோமுனியார் என்று அழைத்து வந்தார்கள்
எனக் குறிப்பிட்டுள்ளமை நினைவில் கொள்ளத்தக்கது.
திருவனந்தபுரத்தில்
                மத்திகோடு சபையின் முதல் கிறிஸ்தவரான மாடன் மார்த்தாண்டனின் மகன் வேதமாணிக்கம் சுவிசேஷகர். இவர் கொத்தனார்விளை ஆலயத்தில் மிஷன் ஊழியர்கள் முன்னிலையில்முறைப்படி தேவவரம் முன்ஷியாரின் மூத்த மகளான லூயிஸ் அம்மையாரை மீட் போதகருக்கு 1851 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து வைத்தார். இந்த அம்மையாரே மீட் போதகரின் இறுதிக்காலம் வரை போதகருக்கு ஆறுதலாகவும்உதவியாகவும் இருந்தவர்.
                மாறுபட்ட இத்திருமணத்தினால் ஏற்பட்ட மனவருத்தத்தின் காரணமாகத் தம் பதவியை இராஜினாமா செய்த மீட் போதகர்திருவனந்தபுரத்திற்குச் சென்ற போதுதேவவரம் முன்ஷியாரும் அவருடன் தங்கியிருந்தார். இக்காலக் கட்டத்தில் பல்வேறு வகையான கிறிஸ்தவ இலக்கியங்களைப் படைத்தளித்தார். திருவனந்தபுரம் கிறிஸ்துநாதர் ஆலயத்தின்  தமிழ் வழிபாடு நடத்தும் பொறுப்பைப் பல ஆண்டுகள் ஏற்றுத் திறம்பட நடத்தினார். இவரது அருளுரைகள் சிறப்பாக அமைந்தன. மகனது மரணம்குடும்பச் சூழல் போன்ற பல்வேறு காரணங்களால் சில கையெழுத்துப் பிரதிகள் முடிவடைய வில்லை.
                கிறிஸ்தவ இலக்கியத்திற்குத் தொண்டாற்றிய கவிஞர் தேவவரம் முன்ஷியார் திருவனந்தபுரத்தில் 1874 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் நாள் காலமானார். அவரது உடல் திருவனந்தபுரத்திலுள்ள கிறிஸ்து நாதர் ஆலயத்திலுள்ளக் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


நன்றி: மயிலாடி ... 
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum