தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
வேதாகம கால அட்டவணை Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வேதாகம கால அட்டவணை Empty வேதாகம கால அட்டவணை

Wed Sep 04, 2013 6:05 am
கி.பி 670 வரை லத்தீன் மொழிபெயர்ப்பான வல்கேட் 4 நூற்றாண்டில் ஜெரோமினால் எழுதபட்டு நடைமுறையில் இருந்து வந்தது. கி.பி 670 வரை லத்தீன் மொழிபெயர்ப்பான வல்கேட் 4 நூற்றாண்டில் ஜெரோமினால் எழுதபட்டு நடைமுறையில் இருந்து வந்தது.
 

  • விக்கிளிப் வேதம் (கி.பி 1320 -1384 ) John Wycliff

முதன் முறையாக இங்கிலாந்தை சேர்ந்த விக்கிளிப் என்பவர் வல்கேட்டிலிருந்து வேதாகமத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இது வல்கேட்டிளிருந்த சில தவறுகளை ஆங்கிலத்திலும் கொண்டு வந்தது.80 புத்தகங்களும் மொழி பெயர்க்கபட்டது.
 

  • குடென்பெர்க் (கி.பி 1455) குடென்பெர்க்

குடென்பெர்க் அச்சகத்தை கண்டு பிடித்தார். வேதாகமம் கையினால் எழுதப்படாமல் மாறாக அச்சிடப்படும் காலம் வந்தது. குடென்பெர்க் மூலம் அச்சிடப்பட்ட முதல் வேதாகமம் லத்தீன் மொழியில் அமைந்தது.
 

  • 1516 கிபி: எராஸ்மஸ் என்பவர் ஒரு லத்தீன் / கிரேக்கம் மொழிகளில் புதிய ஏற்பாடை தயாரித்தார்.

 

  • 1522 கிபி: மார்ட்டின் லூதர் புதிய ஏற்பாடை மொழி பெயர்த்தார்.

 

  • 1526 கிபி: வில்லியம் டின்டேல் புதிய ஏற்பாடு ஒன்றினை தயாரித்தார்; ஆங்கில மொழியில் அச்சிடப்பட்ட முதல் புதிய ஏற்பாடு.

 

  • 1535 கிபி: Myles கவர்டேல் பைபிள்; அச்சிடப்பட்ட முதல் முழுமையான பைபிள். ஆங்கில மொழி (80 புத்தகங்கள்: புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு மற்றும் உறுதிப்படாதவை)

 

  • 1537 கிபி: டின்டேல் மத்தேயு  பைபிள்; எட்டாம் ஹென்றி ராஜா ஜான் ரோஜருக்கு புதிய வெளியீட்டான மத்தேயு வேதாகமத்தை வெளியிட அனுமதி கொடுத்தார். இவர் டிண்டேளின் நண்பர் ஆவர்.

 

  • 1539 கிபி: "கிரேட் பைபிள்" அச்சிடப்பட்டது; முதல் ஆங்கில மொழி வேதாகமம் (80 புத்தகங்கள்). மக்களின் பொது பாவனைக்காக அங்கீகரிக்கப்பட்ட வேதாகமம். இந்த வேதம் மத்தேயு பைபிள் டின்டேல் பைபிள் மற்றும் எபிரேயு பைபளையும் ஒப்பிட்டு மொழி பெயர்க்கபட்டது.

 

  • 1560 கிபி: ஜெனீவா பைபிள் அச்சிடப்பட்டது (80 புத்தகங்கள்). இளவரசி மேரியினால் உண்டான உபத்திரவத்தில் அநேக அறிஞர்கள் ஜெனிவாவுக்கு சென்றனர். அங்கே மொழி பெயர்ப்பு செய்து எலிசபெத் இளவரசி ஆனா பின்பு தங்கள் நாடு திரும்பி அந்த வேதாகமத்தை பரிசாக இளவரசிக்கு அளித்தனர்.

 

  • 1568 கி.பி: ஆயர்கள் பைபிள் அச்சிடப்பட்டது (The Bishops Bible).ஒன்பது பிஷப்புகள் கேண்டர்பரி மத்தேயு பார்க்கருடன் இணைந்து வெளியிட்ட பதிப்பு.

 

  • 1609 கிபி: Douay version  ரோமன் கத்தோலிக்கர்களுக்காக ஆங்கில முதல் முழுமையான  கத்தோலிக்க பைபிள். லத்தீன் வல்கேட் (80 புத்தகங்கள்) இருந்து மொழிபெயர்த்தது.

 

  • 1611 கிபி: கிங் ஜேம்ஸ் பைபிள் 
    சிறந்த வேதம் எது என்கின்ற பிரச்சனையை கிறிஸ்தவர்கள் மத்தியிலிருந்து அகற்ற முதலாம் James  மன்னர் கி.பி 1604 இல் புதிய வெளியீட்டிற்கு அனுமதி வழங்கினார். இதையே king james பதிப்பு என்று அழைக்கின்றோம்.
    ஐம்பத்தி நான்கு அறிஞர்கள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு பகுதியை மொழி பெயர்த்தது. பின்னர் முழு குழுவும் தங்கள் பணியை ஆராய்ந்து ஒவ்வொரு பகுதியையும் திருத்தி சிறப்பாக அமைத்தனர். இறுதியாக தீர்மானிக்கின்ற குழு திருத்தம் செய்து முடித்தது.
    மற்ற ஆங்கில வேதத்தை மொழிபெயர்க்கும் பொழுது இருந்த ஆதாரங்களை காட்டிலும் இவர்களுக்கு அதிக ஆதாரங்கள் இருந்தது. பழைய ஏற்பாட்டை மொழி பெயர்க்க நான்கு மசசொறேடிக் (Massoretic text ) பிரதிகளும், புதிய ஏற்பாட்டை மொழிபெயர்க்க பாசவினால் (இவர் கால்வின் குழுவில் இருந்தவர்) திருத்தியமைக்கப்பட கிரேக்க text  ம் பயன்படுத்தபட்டன.

    அயராத ஆறு வருட கடின உழைப்பிற்கு பின் ஒவ்வொரு வார்த்தைக்கும் தெளிவான பதத்தை கண்டு பிடித்து மொழிபெயர்த்து கடைசியாக 1611 ல் இந்த பதிப்பை வெளியிட்டார்கள். 1629 ,1638 ,1672 ,1769  இந்த வருடங்களில் அநேக திருத்தங்கள் செய்யப்பட்டு முன்னேற்றப்பட்டிருந்தும் மூன்று நூற்றாண்டுக்கு பிறகும்கூட வாசிக்ககூடியதாகவும் விநோயிகிக்ககூடியதாகவும் இருக்கின்றது.

 

  • திருத்திய பதிப்பு (the revised version )
    கிங் ஜேம்ஸ் பதிப்பிற்கு பிறகு மொளிபெயர்ப்பிட்கு பயங்கரமான எதிர்ப்பு வந்தது. இருந்தாலும் திருத்திய பதிப்பு அமெரிக்க ஆங்கில அறிஞர்களின் திறமையால் வெளிவந்தது.

 

  • அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் பதிப்பு: கி.பி 1901 (The American standard version)
    ரிவைஸ்ட் பதிப்பின்  திருத்தும் ஆலோசனை குழு தங்களுடைய வேலையையும் ஆராய்ச்சியையும் 1885 ல் தொடர்ந்தனர். மீண்டுமாக மொழிபெயர்த்தனர். அதனிமித்தம் மூலபாஷயோடு அதிக ஒத்திருக்கிறது. டாக்டர் வில்லியம் கிரீன் இதற்கு தலைவராக இருந்தார்.

 

  • தி ரிவைஸ்ட் ஸ்டாண்டர்ட் பதிப்பு. கி.பி 1952 ( The Rivised standard version)
    திருத்தப்பட்ட ரிவைஸ்ட் பதிப்பு தான் "தி ரிவைஸ்ட் ஸ்டாண்டர்ட் பதிப்பு". தேசிய கிறிஸ்தவ சபையின் ஆலோசனை சங்கம் 32  அறிஞர்கள் அடங்கிய குழுவிற்கு அதிகாரம் வழங்கி இதை செய்தது. இப்படி 1937 ல் தொடங்கி 1952 ல் முடிக்கப்பட்டது. நேர்முறை பேச்சுக்கள் மேற்கோளிட்டு எழுதப்பட்டிருக்கிறது. இன்று இந்த குழு தொடர்ந்து அகில உலக ஐக்கிய குழுவாக செயல்பட்டு வருகிறது. 1973 ல் முதல் பதிப்பு வெளிவந்தது.

 

  • Amplified பதிப்பு கி.பி 1958 (Amplified Version)
    கலிபோனியா வை சேர்ந்த 12 ஆசிரியர்கள் பொருத்தமான வேறுசில விளக்கங்களை கொடுத்து விரிவான பதிப்பாக வெளியிட்டனர்.

 

  • பெர்க்லி பதிப்பு  கி.பி 1959 (Berkely Version)
    டாக்டர் பெர்க்லி தனது குழுவான 20  அறிஞர்களுடன் இந்த பதிப்பை கடினமான பகுதிகளுக்கு அடிக்குரிப்புகளோடு விளக்கம் எழுதி வெளியிட்டார்.

 

  • எருசலேம் வேதம்  கி.பி 1966 (the Jerusalem Bible)
    எருசலேமிலுள்ள ரோமன் கத்தோலிக்க வேதாகம பள்ளியின் பாடங்களை சார்ந்து வெளியிடபட்ட பதிப்பாகும். இது அதிக தெளிவாகவும் சரியாகவும், அறிஞர்களை கொண்டு வெளியிடபட்டதாக காணப்படுகிறது.

 

  • புதிய ஆங்கில வேதம். கி.பி 1970 ( The New English Bible)
    oxford மற்றும் cambridge அச்சகங்களின் 22  வருட முயற்சியினால் வந்த பதிப்பாகும்

 

  • புதிய அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் பைபிள்  கி.பி 1971 (The New American standard bible)
    லோக்மன் என்பவரின் ஆதரவோடு சுவிசேஷ அறிஞர்கள் 10  வருட பனியின் முடிவே இந்த பதிப்பு.

 

  • லிவிங் பைபிள்  கி.பி 1971 ( The Living Bible)
    அமெரிக்காவை சேர்ந்த கென்னத் டெய்லர் சாதாரண மனிதனும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் நடைமுறை ஆங்கிலத்தில் வெளியிட்டார்.

 

  • குட் நியூஸ் பைபிள்  கி.பி 1976 ( The good News Bible)
    இன்றைய நடைமுறை ஆங்கில பதிப்பு. இறையியல் வார்த்தைகள் தவிர்க்கப்பட்டு சாதாரண பதங்கள் பயன்படுத்தபட்டிருக்கிறது.

 

  • நியூ இன்டர்நேஷனல் பதிப்பு  கி.பி 1978 (The New International Version)
    அகில உலக சுவிசேஷ அறிஞர்களின் கூட்டு முயற்சியால் வெளியிடப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பு மிக சிறந்ததாகவும் ஏனைய பதிப்பை காட்டிலும் மேன்மை உள்ளதாகவும் காணப்படுகின்றது.

 

  • நியூ கிங் ஜேம்ஸ் பதிப்பு  கி.பி 1982
    அகில உலக வேதாகம கல்வி சங்கமும் தாமஸ் நெல்சன் வெளியீட்டாரும் இணைந்து 119  வேத சாஸ்திர வல்லுனர்களை வைத்து இந்த மொழிபெயர்ப்பை செய்தனர். இதன் முக்கிய நோக்கம் கிங் ஜேம்ஸ் பதிப்பின் இலக்கிய அழகை காத்து இன்றைய பழக்கத்தில் உள்ள பதங்களை பயன்படுத்தி மொழிபெயர்க்கப்பட்ட ஒரு முன்னேற்ற பதிப்பாகும்.

    இவ்விதமாக இன்று பழக்கத்தில் உள்ள பல வித வேதாகம பதிப்புகள் உருவாகின.

 நன்றி: தமிழ் கிறிஸ்து
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum