தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இஸ்லாமிய-கிறிஸ்தவ கலப்புத் திருமணங்களின் உண்மை Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இஸ்லாமிய-கிறிஸ்தவ கலப்புத் திருமணங்களின் உண்மை Empty இஸ்லாமிய-கிறிஸ்தவ கலப்புத் திருமணங்களின் உண்மை

Fri Aug 23, 2013 12:05 am
இஸ்லாமிய-கிறிஸ்தவ கலப்புத் திருமணங்களின் உண்மை
ஜேம்ஸ் அர்லண்ட்சன்
ஒரு முஸ்லீம் ஆண் ஒரு கிறிஸ்தவ பெண்ணைத் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றான், ஆனால் ஒரு கிறிஸ்தவன் ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்ய அனுமதியில்லை.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு வானொலி நிகழ்ச்சியில் ஒரு இஸ்லாமியருடன் நடந்த‌ நேர்க்காணலை கேட்டது என் நினைவிற்கு வருகிறது. அந்த நேர்க்காணல் தொடங்கியதும் நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்த இஸ்லாமியரிடம் “நீங்கள் திருமணமானவரா?” என்று பேட்டி எடுப்பவர் கேட்டார். இதற்கு அந்த இஸ்லாமியர் "இஸ்லாம் மிகவும் சகிப்புத்தன்மையும் சுதந்திரமும் கொண்டது, எனவே நான் ஒரு கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்திருக்கிறேன்" என்று கூறினார். இஸ்லாம் பாகுபாட்டை அல்ல சமத்துவத்தை குறிக்கிறது என்றும் அவர் கூறினார். 

உடனே, பேட்டி எடுப்பவர் துரிதமாக "அப்படியானால் ஒரு யூதனையோ அல்லது ஒரு கிறிஸ்தவனையோ ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா?" என்று கேட்டார். அந்த இஸ்லாமிய‌ விருந்தாளியின் உற்சாகம் சிறிது குறைந்து போனது. இஸ்லாம் அதை அனுமதிப்பதில்லை என்று அவர் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. வானொலி நிகழ்ச்சியாளர் அந்த விருந்தாளியிடம் “உங்களுடைய முதல் கூற்று கொஞ்சம் தவறாக வழிகாட்டுவதாக உள்ளது இல்லையா" என்று துருவி துருவி கேட்டார். அவர்கள் அதைப் பற்றி ஒரிரூ நிமிடங்கள் விவாதித்தார்கள். பிறகு, அந்த விருந்தாளியின் சிரமத்தை உணர்ந்து பேட்டியெடுப்பவர் வேறு விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

ஒரு இஸ்லாமிய தளத்தின் கட்டுரைகள், கலப்புத் திருமணம் பற்றி கீழ்கண்டவாறு கூறுகிறது:
ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு முஸ்லீம் அல்லாத ஒரு ஆணை திருமணம் செய்ய அனுமதியில்லை. 

ஒரு முஸ்லீம் ஆணுக்கு ஒரு யூத / கிறிஸ்தவ பெண்ணைத் திருமணம் செய்ய பின்வரும் இரண்டு நிபந்தனைகளின் கீழ் அனுமதி உண்டு. 

1) அந்தப் பெண் பெயரள‌வில் அல்லது தத்து எடுக்கப்பட்டதினால் அவள் ஒரு யூத / கிறிஸ்தவ பெண்ணாக இருக்கக்கூடாது, இதற்கு பதிலாக‌, அவள் ஒரு உண்மையான யூத / கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த‌ பெண்ணாக இருக்கவேண்டும். 

2) அவள் இஸ்லாமிலிருந்து கிறிஸ்தவத்திற்கோ அல்லது யூதமதத்திற்கோ மாறியிருக்கக் கூடாது.
ஏன் இந்த திருமணம் ஒரு பக்கமாக சாய்ந்து ஆண்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது? இதற்கு ஏழாம் நூற்றாண்டு அரபி கலாச்சாரம் பதிலளிக்கும். ஒரு பெண் திருமணம் ஆனவளாக இருந்தாலும் சரி, ஆகாமல் இருந்தாலும் சரி, குர்‍ஆன் அப்பெண்ணை மதிப்பதில்லை. 

புதிய ஏற்பாடு இதைப்பற்றி என்னச் சொல்லுகிறது?

குர்‍ஆன் 

இந்த சூரா 5ன் பின்னணியை அறிய இந்த தொடுப்பில் சென்று படிக்கவும். 

சூரா 5: 5ல் குர்‍ஆன் சொல்கிறது.
… முஃமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்பட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. …. (குர்‍ஆன் 5:5)
இந்த வசனத்தில் குறிப்பிட்டபடி ஒரு முஸ்லீம் ஆண், இஸ்லாமியரல்லாத பெண்ணாக இருக்கும் ஒரு கிறிஸ்தவ அல்லது யூதப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது, ஆனால் ஒரு யூத, கிறிஸ்தவ மனிதன் ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது. (இந்தக் கட்டுரையில் நான் கிறிஸ்தவ சமுதாயத்தைப் பற்றி மட்டும் எழுதுகிறேன்.) 

இந்த சட்டம் வருவதற்கான காரணம் என்ன? 

இஸ்லாம் ஒரு குலத் தலைவன் முறையை (Patriarchal) பின்பற்றுகிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆகையால், குடும்ப உறவுகளில் மற்ற எல்லா காரியங்களில் ஆணின் ஆதிக்கமே ஓங்கியிருக்கும். உதாரணமாக சூரா 4:34 சொல்லுகிறது “ஒரு கணவன் தன் மனைவியை அடிக்கலாம்”, ஆனால் எந்த வசனத்திலும் மனைவி கணவனை அடிக்கலாம் என்று குர்‍ஆன் சொல்லுவதில்லை - குடும்பத்தில் கணவன் மனைவியை எவ்வளவு துன்புறுத்தி கொடுமைப்படுத்தினாலும் சரி, மனைவிக்கு இந்த உரிமையில்லை. 

ஆரம்ப காலத்தில் முஹம்மது யூதர்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் மரியாதை கொண்டு இருந்தார் என்பது உண்மை தான். ஆனால், பிறகு தன் வாழ்நாட்களில் அவரே அவர்களுக்கு எதிராக மாறினார், இதனை இந்த இரண்டு கட்டுரைகள் (Muhammad and the JewsIslamic Crusades vs. Christian Crusades) விளக்குகின்றன. எனவே இதன்படி ஏழாம் நூற்றாண்டின் அரபு கலாச்சாரத்தில் ஒரு அரபு மனிதன் தன்னுடைய மனைவி அல்லது மனைவிகள் மீது அதிகாரம் செலுத்தலாம். ஆனால் ஒரு கிறிஸ்தவன் தன் இஸ்லாமிய மனைவி மீது அதிகாரம் செலுத்தக் கூடாது. 

முழு மனித இனத்திற்கும் இஸ்லாம் தான் இறுதியான சிறந்த மார்க்கம் என்று இஸ்லாமியர்களால் நம்பப்படுகிறது, ஒரு முஸ்லீம் ஆண் தன் அடிபணிந்த மனைவியை மதம் மாற்றலாம். ஒரு முஸ்லீம் தீவிர மதப்பற்றுள்ளவனாக இருந்தால் அவனை எந்த பெண்ணாலும் மாற்ற முடியாது என்று ஒரு வேளை முஹம்மது த‌ன் மனதில் எண்ணியிருக்கக்கூடும். இன்றைக்கும் ஒரு முஸ்லீம் தீவிரமாக இஸ்லாமை பின்பற்றும் நாட்டைச் சார்ந்தவனாக இருந்தால் அல்லது தீவிர இஸ்லாமிய கட்டுப்பாடுகள் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவனாக இருந்தால் கூட‌ இது உண்மையே. 

எனவே கிறிஸ்தவ பெண்கள் ஒரு முஸ்லீம் மனிதனைத் திருமணம் செய்வது பற்றி மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இஸ்லாம் ஆண்களுக்கு கொடுக்கும் அதே உரிமைகளை பெண்களுக்கு கொடுப்பதில்லை. உண்மையில் பெண்கள் ஆண்களை விடத் தாழ்ந்தவர்களே என்று குர்‍ஆன் தெளிவாக கூறுகிறது. 

இன்னும் எதையும் மூடி மறைக்காமல் மழுப்பாமல் நேரடியாகச் சொல்ல வேண்டுமானால், மற்றும் உண்மையைச் சொல்லவேண்டுமானால், “இஸ்லாம் ஒரு கொடூரமான எஜமான்-அடிமை தத்துவம் கொண்ட” ஒரு மதமாகும். முஸ்லீம் ஆண்கள் தங்கள் பெண் அடிமைகளோடு உடலுறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. ஏன் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமாக‌ இல்லை என்பதற்கான முக்கியமான பத்துக் காரணங்களை இந்த தமிழ் கட்டுரை விளக்குகிறது. இயேசு நமக்கெல்லாம் ஒரு மிகச்சிறந்த நெறியை காண்பித்து ஆறு நூற்றாண்டுகளுக்கு பிறகும், ஏன் இஸ்லாமிய சட்டங்கள் மித மிஞ்சியதாகவும் இரத்தம் சிந்தச் செய்யக் கூடியதாகவும் மற்றும் கொடூரமானதாகவும் இருக்கிறது என்பதற்கான பத்து முக்கிய காரணங்களை இந்த கட்டுரை விளக்குகிறது. இறுதியாக பெண்களை ஒடுக்கி அவமானப்படுத்தும் குர்‍ஆனின் பத்து முக்கிய சட்டங்களைப் பற்றி இந்தக் கட்டுரை விளக்குகிறது. முழு உலகமும் அறிந்திருக்கிறபடி, உலகத்தில் நடந்துக்கொண்டு இருக்கும் அனேக‌ நிகழ்வுகள் நமக்கு “இஸ்லாம் பெண்களை மதிக்கவில்லை” என்பதை நிருபிக்கின்றன.

ஆகையால், சாதாரண மனிதனாக இருந்து, பெரும்பான்மையான நேரங்களில் மிகவும் கொடுமையானவராகவும், கடினமுள்ளவராகவும், பெண்களை வெறுத்தவராகவும் இருந்த, மரிக்கும் தூதுவராக இருந்த முஹம்மதுவிற்காக (சூரா 3:144, 39:30, 41:4), மக்களை விடுதலையாக்குகிறவராகவும், இறைவனின் அன்பை தருபவராகவும் இருந்த தேவக் குமாரனை கிறிஸ்தவர்கள் புறக்கணிக்கக்கூடாது. இஸ்லாம் பெண்களை கவுரப்படுத்தவில்லை. 

ஒரு கிறிஸ்தவ‌ பெண் ஒரு இஸ்லாமிய ஆணை திருமணம் செய்துக்கொண்ட பிறகும், அவள் இயேசு தான் தேவகுமாரன் என்றும், அவர் தான் மேசியாவாகிய தேவன் என்றும் நம்பிக்கொண்டு இருந்தால், குர்‍ஆனின் மற்றும் இஸ்லாமிய பாரம்பரியங்களாக உள்ள ஹதீஸ் சட்டங்களின் படி அவள் ஒரு தவறான நம்பிக்கைக் கொண்டு இருப்பவளாகவும் மற்றும் அவள் "காஃபிராக"வும் கருதப்படுவாள். 

மேலும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் கிறிஸ்தவர்களாக கருதப்படுவார்களா அல்லது முஸ்லீமாக அல்லது மதச்சார்பற்றவர்களாக இருப்பார்களா? இஸ்லாம் உறுதியாக பின்பற்றப்படும் போது அதற்கான பதில் தெளிவாக உள்ளது. 

எனவே இது எப்படிப்பட்ட திருமணமாக இருக்கும்? கணவனுக்கும் மனைவிக்கும் இறைவனுக்கும் இடையில் காணப்படும் ஆன்மீக வாழ்வு மற்றும் தொடர்பு எப்படி இருக்கும்?
புதிய ஏற்பாடு 

புதிய ஏற்பாடு, திருமணம் செய்ய விரும்புகிறவர்களுக்கு துணையை தெரிந்தெடுப்பதில் சமமான நிலைப்பாடு கொடுத்து தொடங்குகிறது. 

புதிய ஏற்பாட்டில் 1 கொரிந்தியர் 7:39 சொல்லுகிறது, கிறிஸ்தவ பெண் ஒரு கிறிஸ்தவ ஆணையே மணம் முடிக்கவேண்டும் (ஆணும் அப்படியே) (மேலும் 2 கொரிந்தியர் 6:14-18 வசனங்களை படிக்கவும்). முதன் முதலில் இந்த புனித ஆலோசனையை படிக்கும் போது, இது மிகவும் கட்டுப்பாடு கொண்டதாக தெரியும், ஆனால் சற்று ஆழமாக பார்க்கும் போது இதில் அதிக ஞானம் இருப்பதை காணமுடியும். திருமணமான தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை தங்களுடைய ஒரே விதமான நம்பிக்கை மற்றும் கொள்கையுடன் தொடங்கும் போது தங்கள் துணையை மற்ற நம்பிக்கைக்கு மாற்றவேண்டிய பெரும் நெருக்கத்தை தவிர்க்க முடிகிறது. துணையில் ஒருவர் மற்றொருவருக்கு சுவிசேஷம் சொல்லி ஆயத்தப்படுத்த வேண்டுவதில்லை. ஒருவர் இன்னொருவரைக் குறித்து "இவள்/இவன் தவறான நம்பிக்கையில் இருக்கிறார் என்றோ, அல்லது காஃபிர் என்றோ" கருதவேண்டிய அவசியமிருக்காது. 

பைபிள் காட்டும் கிறிஸ்தவத்தில் ஆணும் பெண்ணும் திருமணத்தில் ஒரே சரீரமாக மாறுவதற்கு முன் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அவர்கள் தனிப்பட்ட ரீதியில் இயேசு கிறிஸ்துவோடு ஆழமான ஆவிக்குரிய உறவில் பலப்படவேண்டும். இதன் அர்த்தம் என்னவென்றால் இறைவனோடுள்ள அவர்களுடைய ஆழமான ஆன்மீக‌ நெருக்கமானது அவர்களுடைய தனிப்பட்ட‌ நெருக்கத்தோடு பகிர்ந்துகொள்ளப்படுகிறது. 

மேலும் இந்த ஆவிக்குரிய சமத்துவமானது அவர்களுக்குள் உள்ள எல்லா அதிகாரப் பிரச்சனைகளையும் எடுத்துப்போடுகிறது. மார்க்க சம்பந்தமான காரியங்களில் ஏற்கனவே மனைவி கணவனோடு ஒருமனப்பட்டு இருப்பதினால், கட்டுப்படுத்துதவற்காகவும் கணவன் மனைவி மீது மதம் சம்மந்தப்பட்ட எந்த சட்டங்களையும், பிரயோகிக்க வேண்டிய அவசியமில்லை. 

ஒருவகையில் சொல்லவேண்டுமானால், இஸ்லாம் கூட இப்படிப்பட்ட கட்டுப்பாட்டை அங்கீகரிக்கிறது, அதாவது ஒரு முஸ்லீம் பல தெய்வ வழிபாடுகளை பின்பற்றும் பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்ற தடை உள்ளது (சூரா 2:221). பல தெய்வ வழிப்பாட்டுக்கும் இஸ்லாமுக்கும் இடையே கோட்பாடுகளில் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. இதே போல, இஸ்லாமும் கிறிஸ்தவமும் பல தெய்வ வழிப்பாட்டு மார்க்கமாக இல்லாமல் இருந்தாலும், இவ்விரண்டிற்கும் இடையே கோட்பாடுகளில் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. 

முக்கியமான வித்தியாசமாக கூறவேண்டுமானால், கிறிஸ்தவத்தில் அடிப்படையாக உள்ள மற்றும் மாற்றியமைக்கமுடியாத கோட்பாடாக உள்ள, இயேசுவின் தெய்வத்தன்மையை முஹம்மது மறுத்துள்ளார். இது தான் இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசமாகும். இயேசு ஒரு சாதாரண நபி என்று இஸ்லாம் தவறாக சொல்கிறது. புதிய ஏற்பாட்டின் எல்லா இடங்களிலும் இயேசுவின் தெய்வத்துவம், குமாரத்துவம் உறுதிசெய்யப்படுகிற‌து. 

இதயத்தில் உணரக்கூடிய அளவிற்கு முஸ்லீம்க‌ள் பரிசுத்த ஆவியைப் பெறுவதில்லை ஏனென்றால் அவர்கள் இயேசுவை ஆண்டவரும் இரட்சகருமாக ஏறறுக்கொள்வதில்லை. உண்மையில் இஸ்லாமிய போதனை பரிசுத்த ஆவியை தவறுதலாக காபிரியேல் தூதனுக்கு சமமாக குறைத்துள்ளது. இதன்படி ஒரு முஸ்லீமுக்கும் கிறிஸ்தவ பெண்ணுக்கும் இடையே திருமணம் சமாதானமானதாக இருக்காது. எனவே ஒரு கிறிஸ்தவளுக்கு இது மிகவும் கடினமானதாக இருக்கும், ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு தன் குடும்ப வாழ்வில், ஆண் ஆதிக்கம் தலை தூக்கும், அப்போது அவளது வாழ்வு இன்பமானதாக இருக்காது. 

மனைவிகளின் கை குடும்பங்களில் ஓங்குகிறது என்று அல்லது அவர்கள் தன்னை எதிர்க்கிறார்கள் என்று இஸ்லாமிய கணவன் நினைத்தால், அவன் தன் மனைவிமார்களை அடிக்க அவனுக்கு குர்‍ஆன் (சூரா 3:43) அதிகாரம் கொடுக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 

இந்த நடைமுறை காரணங்கள் ஒரு புறமிருக்க, ஒரு கிறிஸ்தவன் புதிய ஏற்பாட்டை சரியாக புரிந்து கொண்டால், அவன் அல்லது அவள் ஆவிக்குரிய மற்றும் இறையியல் காரணங்களுக்காக கண்டிப்பாக ஒரு முஸ்லீமைத் திருமணம் செய்யக் கூடாது. 

ஒரு கிறிஸ்தவ தம்பதிகள் ஆவிக்குரிய ஒற்றுமையை காத்துக் கொள்ளவேண்டும். அவர்கள் தங்கள் பிள்ளைகளை ஆவிக்குரிய பழக்க வழக்கங்களில் கிறிஸ்துவின் அடியவர்களாக வளர்க்க‌வேண்டும்.
முடிவுரை 

என்னுடைய விமர்சனங்கள் முஸ்லீம்களுக்கு எதிரான விமர்சனங்கள் அல்ல, மாறாக இஸ்லாமின் மத அமைப்புச் சட்டத்திற்கும், அதன் ஆரம்பகால‌ வரலாற்று வன்முறைகளுக்கும், முஹம்மது தன் சொந்த சமுதாயத்தை உருவாக்கிவிட்ட பிறகு தொடாந்த ஆரம்பகால‌ வன்முறைகளுக்கும் எதிரானதாகும். 

இஸ்லாம் பற்றிய உண்மைகள் நிச்சயம் வெளியே வரவேண்டும். 

இந்த கட்டுரை இனத்தைப்(Race) பற்றி சொல்வதற்காக எழுதப்படவில்லை. கிறிஸ்தவமும், இஸ்லாமும் வெவ்வேறான‌ இனத் திருமணங்களை அனுமதிக்கிறது. உதாரணமாக ஒரு வெள்ளைக் கிறிஸ்தவன் ஒரு கருப்பின கிறிஸ்தவளை திருமணம் செய்யலாம், எந்த பிரச்சனையும் இல்லை. கிறிஸ்தவத்தில் உள்ள ஒரே நிபந்தனை என்னவென்றால் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியைப்பெற்று, இயேசு கிறிஸ்துவின் விசுவாசியாக அடியவர்களாக இருக்கவேண்டும். 

இந்த கட்டுரையானது நற்குணங்கள் மதிப்பீடுகள் மற்றும் இறையியல் கோட்பாடுகள் பற்றியதாகும். முக்கியமாக இது இயேசுவுடன் நம்முடைய உறவைக் குறித்ததாகும். அவரோடு நல்ல உறவு இல்லாமல் இருந்தால் அது மிகவும் துக்ககரமானது. 

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தின் மதசம்பந்தமான திருமணத்தில் உள்ள வித்தியாசம் எளிமையாது. 

முஸ்லீம் ஆண்கள் கிறிஸ்தவ பெண்களை திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது. ஆனால் ஒரு கிறிஸ்தவ ஆண் ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம்செய்ய அனுமதியில்லை. எனவே இஸ்லாமின் “திறந்த மனப்பான்மை" “சகிப்புத் தன்மை" மற்றும் “இனபாகுபடற்றது" என்று சொல்வதெல்லாம் ஒருவழிப் பாதையாகும், அதாவது மாய்மாலமாகும். இஸ்லாமிய‌ ஆண்கள் தான் எப்போதும் சர்வ அதிகாரமும் செலுத்துபவர்கள். ஆனால், இஸ்லாமியர்களில் சிலர் ஆண் ஆதிக்கம் செலுத்தாதவர்களாகவும், இன்னும் சிலர் நற்குணமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். இருந்த போதிலும் அவர்கள் குர்‍ஆனை பின்பற்றுவார்களென்றால் மேலே குறிப்பிட்ட குர்‍ஆன் 4:34ல் சொல்லப்பட்டதின் படி, மனைவிகளை அடிக்க அதிகாரம் பெற்று, ஆண் ஆதிக்க அதிகாரத்தை பிரயோகிப்பார்கள். 

முஸ்லீம் மனிதன் - வீட்டிற்குத் தலையாக இருந்து - இஸ்லாமை பின்பற்றும் போது , குழந்தைகள் முஸ்லீம்களாக வளர்க்கப்படுகின்றனர். இவ்வாறு அந்தக் குடும்பம் சரியான ஐக்கியத்தில் ஒருமனத்தில் இருக்காது. 

கிறிஸ்தவம் அதற்கு எதிர்மறையாக சொல்லுகிறது, ஒரு கிறிஸ்தவ திருமணத் தம்பதிகள் சமமாக கிறிஸ்துவின் ஆவிக்குரிய குடும்பத்தில் பிணைக்கப்பட்டிருக்கவேண்டும். அதன்படி அவர்கள் ஆழமான எந்த இறையியல் வித்தியாசங்களுக்கா கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் ஒற்றுமையோடு அதை துவக்குகிறார்கள். மனைவி வேறு மார்க்கத்தை பின் பற்றுகிறாளே என்று ஆண் கவலைப் படவேண்டியதில்லை. ஆணுக்கு தன்னுடைய ஆண் ஆதிக்க‌ அதிகாரத்தை பயன்படுத்தவேண்டிய‌ அவசியமில்லை குடும்பத்தில் நிலவிக்கொண்டு இருக்கும் ஒருமனத்தை அமைதியை காத்துக்கொண்டால் போதும். பிள்ளைகள் இயேசுவின் சிறிய அடியார்களாக கிறிஸ்தவர்களாக வளர்க்கப்படுகின்றனர். அதினிமித்தம் அந்த் குடும்பம் மிக இணக்கமாக காணப்படும். 

கிறிஸ்துவில் குடும்பங்கள் இணக்கமாக ஒற்றுமையாக‌ இருக்கிறது. இஸ்லாமிய கலப்புத் திருமணங்களில் குடும்ப வேறுபாடுகள், உயர்வு தாழ்வுச் சண்டைகள் காணப்படுகிறது. 

மேலதிக விவரங்களுக்காக கட்டுரைகள் 

இயேசு பற்றி குர்‍ஆனின் குழப்பம் பற்றி விவரிக்கும் இந்த கட்டுரையின் "முடிவுரையை படிக்கவும்". 

ஒரு இஸ்லாமிய ஆணை திருமணம் செய்துக்கொண்டு பிரச்சனைகளை சந்திக்கும் கிறிஸ்த பெண்களின் பிரச்சனையை அலசுகிறது இந்த பக்கத்திலுள்ள கட்டுரைகள், இன்னும் இதர கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறது. 

ஒரு இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியரல்லாதவரின் (திம்மி/ஜிம்மி - Dimmi or Zimmi) வாழ்க்கையைப் பற்றி அலசுகிறது, இந்த கட்டுரை. Dimmi என்றால் அது யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் குறிக்கும், இவர்கள் இஸ்லாமிய நாட்டில் இரண்டாம் தர குடிமக்களாக வாழ்கிறவர்கள். இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியரல்லாதவர்களின் வாழ்க்கை இனிமையானதாக இருக்காது, இன்றும் இதனை காணமுடியும், முக்கியமாக இஸ்லாமியர்களை திருமணம் செய்துக்கொள்ளும், இஸ்லாமியரல்லாத பெண்களின் நிலையும் இதே தான்.
ஆங்கில மூலம்: The truth about Muslim-Christian marriages

நன்றி: ஆன்சரிங் இஸ்லாம்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum