தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர் Empty முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்

Tue Aug 20, 2013 8:05 am
இஸ்லாமிய நபியாகிய முகமது பற்றி, அவர் காலத்துமக்களின்(முஸ்லீமல்லாதவர்களின்) கருத்து என்ன? என்று குர்‍ஆன் சொல்லும்சாட்சியைப் பற்றிய ஓர் அலசல்.

இக்கட்டுரை "முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரதுஎதிரிகள் அவரை எப்படிப் பட்டவராகக் கண்டனர்" என்ற கட்டுரைக்கு மேலதிகவிவரங்களுக்காக இணைக்கப்படுகிறது.

முகமது அவர்கள் நபித்துவம் பெறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, தன் ஊர்மக்களிடம் ஒரு நேர்மையான மனிதராகவும், குற்றமில்லாத மனிதராகவும் பெயர்பெற்று இருந்தார் என்று இஸ்லாமிய தாவா செய்யும் அறிஞர்கள் கூறுவதுவழக்கம்.

இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள், முகமது ஒருநேர்மையானவர் என்றும், குற்றம் குறை இல்லாதவர் என்றும் தன் சமகாலத்துமக்கள் அறிந்து இருந்தார்கள் என்று கூறுவதை நாம் கண்டுயிருப்போம்.

இன்னும் சொல்லப்போனால், முகமது காலத்தவர்கள் முகமதுவிற்கு "அல்-அமீன் (Al-Amin)" அல்லது "நேர்மையானவர்-(Trustworthy)" என்றும் பெயர் சூட்டிஇருந்தனர் என்றும் கூறுவார்கள், இப்படி பலவிதமாக கூறுவார்கள்.

முஸ்லீம்கள் இப்படியெல்லாம் சொல்வதில் உள்ள பிரச்சனை என்னவென்றால்,இவர்களின் இந்த கூற்று, கண்களால் கண்டு சாட்சி சொன்னவர்களின் கூற்றின்மீது ஆதாரப்பட்டு இருக்கவில்லை,

அதற்கு மாறாக முகமதுவின் மரணத்திற்குபின்பு ஒரு சில நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டவைகளாகும்.

இன்னும்சொல்லப்போனால், இவைகள் அனைத்தும் முஸ்லீம்களின் கை மற்றவர்களின் மீதுஓங்கி இருக்கும் போது(இஸ்லாமிய அரசர்கள்/கலிபாக்கள் ஆட்சி செய்தபோது)எழுதப்பட்டவைகளாகும், மற்றும் அவர்கள் சரித்திரத்தை தங்கள்விருப்பத்திற்கு ஏற்ப திரும்ப எழுதினார்கள்.

அந்த கால்த்தில் முஸ்லீம்கள்தாங்கள் எந்த கண்ணோட்டத்தில் முகமதுவின் வாழ்க்கையைபடிக்கவிரும்பினார்களோ அந்த நம்பிக்கையின் படி எழுத

ஆரம்பித்தார்கள்(TheMuslims were pretty much free to read back into the life of Muhammadtheir specific theological views and beliefs concerning theirprophet.)

முக்கியமாகச் சொல்லவேண்டுமானால், முஸ்லீம்கள் முகமதுவிற்கு கொடுக்கும்இந்த புகழாரங்களுக்கு எதிராக‌ அவர்களின் வேதமே எதிர் சாட்சியாகஅமைந்துள்ளது.

நாம் குர்‍ஆனை ஆராய்ந்துப் பார்த்தால், முகமது ஒருஉண்மையின் களங்கரை விளக்காகவோ அல்லது ஒரு முழுமையான‌ நேர்மையான மனிதராகவோஇருந்தார் என்று அவரைச் சுற்றியிருந்த மக்கள் கருதவில்லை அல்லதுநம்பிக்கை கொள்ளவில்லை என்பதை நாம் அறியலாம்.

அம்மக்களின் சாட்சிமுகஸ்துதி செய்வதாக கூட இருக்கவில்லை, குறைந்தபட்சம் சொல்லவேண்டுமானால்,முகமதுவிற்கு பிறகு சேகரிக்கப்பட்ட விவரங்களாகிய‌ , முகமதுவை அவரதுஎதிரிகள் புகழ்வதாக உள்ள விவரங்கள் அனைத்தும் வெறும் கட்டுக்கதைகளாகவும்,மாயையாகவும் இருக்கிறது.

முகமதுவின் சமகாலத்து மக்கள் அவருக்கு சூட்டிய பெயர்கள், குர்‍ஆன்ஆதாரங்களின் படி:1. முகமது ஒரு பொய்யர்(நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக்கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்;

அவர்கள் உம்மைப்பொய்யாக்கவில்லை ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின்வசனங்களையல்லலவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். (குர்‍ஆன் 6:33)

உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால் எனது செயல் எனக்கு; உங்கள் செயல்உங்களுக்கு. நான் செய்வதை விட்டும் நீங்கள் விலகியவர்கள்; நீங்கள்செய்வதை விட்டும் நான் விலகியவன் என்று கூறுவீராக. (குர்‍ஆன் 10:41)

இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால்(வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாகபொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும்.(குர்‍ஆன் 35:4)

2. முகமது கதைகளை இட்டுக்கட்டி சொல்பவர்/கட்டுக்கதைகளைச் சொல்பவர்"உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?" என்று (குர்ஆனை குறிப்பிட்டு)அவர்களிடம் கேட்கப்பட்டால், "முன்னோர்களின் கட்டுக்கதைகள்" என்று அவர்கள்(பதில்) கூறுகிறார்கள். (குர்‍ஆன் 16:24)

(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால்,(உம்மிடம்) "நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்" என்றுஅவர்கள் கூறுகிறார்கள்;

எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதைஅல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை)அறிய மாட்டார்கள். (குர்‍ஆன் 16:101)

அப்படியல்ல! "இவை கலப்படமான கனவுகள்" இல்லை, "அதனை இவரே கற்பனை செய்துகொண்டார்" இல்லை, "இவர் ஒரு கவிஞர்தாம்" (என்று காஃபிர்கள் பலவாறாகக்குழம்பிக் கூறுவதுடன்) முந்தைய (நபிமார்களுக்கு) அனுப்பப்பட்டது போல்இவரும் ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்" என்றும்கூறுகின்றனர். (குர்‍ஆன் 21:5)

"இன்னும்; இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை இதை இவரேஇட்டுக்கட்டிக் கொண்டார் இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில்அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்" என்றும் நிராகரிப்பவர்கள்

கூறுகின்றனர்ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும்,பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள். (குர்‍ஆன் 25:4)

இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; "இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக்கதைகளே அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் - ஆகவே அவை அவர்முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன." (குர்‍ஆன்25:5)(நபியே!)

"வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனேஅதை இறக்கி வைத்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபைசெய்வோனாகவும் இருக்கின்றான்" என்று கூறுவீராக! (குர்‍ஆன் 25:6)

3. முகமது ஒரு சூனியக்காரர்மனிதர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், ஈமான் கொண்டவர்களுக்குஅவர்களுடைய இறைவனிடம் நிச்சயமாகப் பெரும் பதவி கிடைக்கும் என்றுநன்மாராயம் கூறுவதற்காகவும், அவர்களிலிருந்தே நாம் ஒரு மனிதருக்கு வஹீஅருள்கிறோம் என்பதில் மக்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு விட்டதா?

காஃபிர்களோ, "நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே" என்றுகூறுகின்றனர்.(குர்‍ஆன் 10:2)

நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால்,அவர்கள்; "இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை உங்கள் மூதாதையவர்கள்வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர்விரும்புகிறார்" என்று கூறுகிறார்கள்;

இன்னும் அவர்கள் "இது இட்டுக்கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை" என்றும் கூறுகின்றனர். மேலும், அல்ஹக்கு (சத்தியம்; திருக் குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, "இதுவெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை" என்றும் நிராகரிப்பவர்கள்கூறுகிறார்கள்.(குர்‍ஆன் 34:43)

அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப்பற்றி ஆச்சரியமடைந்தனர் "இவர் ஒரு சூனியக்காரப் பொய்யர்!" என்றும்காஃபிர்கள் கூறினர்.(குர்‍ஆன் 38:4)

4. முகமது ஒரு குறிசொல்பவர்/புலவர்"ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக்கைவிட்டு விடுகிறவர்களா?" என்றும் அவர்கள் கூறுகிறார்கள். (குர்‍ஆன்37:36)

எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக்கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர்,பைத்தியக்காரருமல்லர்.(குர்‍ஆன் 52:29)

(இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதைநினைந்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.(குர்‍ஆன் 69:42)

5. முகமது ஒரு பைத்தியக்காரர்/"ஜின்"னால் பீடிக்கப்பட்டவர்(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர்பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர்.(குர்‍ஆன் 15:6)

அல்லது, "அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது" என்று அவர்கள்கூறுகிறார்களா? இல்லை அவர் உண்மையைக் கொண்டே அவர்களிடம் வந்துள்ளார்,எனினும் அவர்களில் பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள்.(குர்‍ஆன் 23:70)

அவர்கள் அவதை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு (மற்றவர்களால் இவர்)"கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்" எனக் கூறினர்.(குர்‍ஆன்44:14)

முகமதுவின் சம காலத்து மக்கள் அவரை எப்படிப்பட்டவராக கண்டார்கள் என்றுகுர்‍ஆன் சொல்லும் சாட்சியை சுருக்கமாகச் சொன்னால் முகமது ஒரு:பொய்யர்( A Liar )கதைகளை இட்டுக்கட்டி சொல்பவர்/கட்டுக்கதைகளைச் சொல்பவர்(A forger andplagiarizer)சூனியக்காரர் (A sorcerer and a magician)குறிசொல்பவர்/புலவர் (A soothsayer and poet)பைத்தியக்காரர் / ஜின் என்ற ஆவியினால் பீடிக்கப்பட்டதால், இப்படிபைத்தியமாகி இருக்கலாம், அதாவது பிசாசு பிடித்தவர் (A madman, perhaps asa result of being possessed by jinn, i.e. demon-possessed. )

குர்‍ஆன் என்பது முகமதுவின் வாழ்நாட்களில் சிறிது சிறிதாக இறக்கப்பட்டதுஎன்றும், அதில் சம காலத்து நிகழ்வுகளைப் பற்றிய விவரங்கள் உண்டென்றும்முஸ்லீம்கள் நம்புகின்றனர்.

மக்காவில் வாழ்ந்த மக்கள் முகமதுவை ஒரு நல்லநேர்மையான, நம்பத்தகுந்த நபர் என்றுச் சொன்னார்கள் என்று இஸ்லாமியஹதீஸ்கள் சொல்லும் விவரங்களுக்கு எதிராக இந்த குர்‍ஆனின் சாட்சி உள்ளது.

முஸ்லீம்களின் வேதமாகிய குர்‍ஆன், முஸ்லீம்கள் சொல்வதற்கு எதிராகச்சொல்கிறது, அதாவது முகமதுவின் சமகாலத்து மக்கள் முகமதுவை ஒரு பொய்யராகக்கண்டனர்,

அவர் ஒரு ஏமாற்றுக்காரராகக் கண்டனர், கட்டுக் கதைகளைஇட்டுக்கட்டுபவராகக் கண்டனர். மற்றும் புராண கட்டுக் கதைகளைஇறைவனிடமிருந்து வந்த வெளிப்பாடுகளாக சொல்பவராகக் கண்டனர் என்று குர்‍ஆன்சாட்சி பகருகிறது.

இறைவன் என்னோடு பேசினார்(வெளிப்படுத்தினார்) என்றுமுகமது சொல்லும் போது ஏன் மக்கள் இவரை நம்பவில்லை என்பதற்கான காரணங்கள்இவைகள் ஆகும்.

முகமது பழைய கற்பனைக் கட்டுக்கதைகளையும், மாயையாககதைகளையும் சொல்கிறார் என்று அவர்கள் கண்டனர். முகமது தன்னை மக்கள்மிகவும் முக்கியமானவராக கருதவேண்டும் என்றும், தான் சொல்வதை மக்கள்கவனிக்கவேண்டும் என்றும், தன் விருப்பம் நிறைவேறவேண்டும் மற்றும் மக்கள்தன் செய்திக்கு கீழ் படியவேண்டும் என்றும் இவர் எண்ணுகின்றார் என்றுஅம்மக்கள் கருதினர்.

இதுமட்டுமல்ல, இஸ்லாமிய தாவா ஊழியம் செய்யும் அறிஞர்கள், இந்தஇஸ்லாமியரல்லாத மக்களின் குற்றச்சாட்டுகளை புறக்கணிக்கமுடியாது.

அதாவது,முகமது மீது மக்கள் வேண்டுமென்றே தவறாக குற்றம் சாட்டினார்கள் என்றுச்சொல்லமுடியாது.

காரணம், அப்படி இவர்கள் சொல்வார்களானால், "இஸ்லாமில்நம்பிக்கையற்றவர்கள் முகமதுவை ஒரு நேர்மையானவராகக் கண்டனர்" என்றுஇவர்கள் முன்வைக்கும் வாதம் பொய் என்று தெளிவாகிவிடும், மற்றும்இவர்களின் வாதங்களில் உள்ள முரண்பாட்டை மக்கள் தெளிவாககண்டுக்கொள்வார்கள்.

ஒன்றை மட்டும் எல்லாரும் மனதில்வைத்துக்கொள்ளுங்கள், அதாவது "முகமது ஒரு நேர்மையானவர் என்று அவர்எதிரிகள்(இஸ்லாமியரல்லாதவர்கள்) நற்சாட்சி சொன்னார்கள்" என்றுச் சொல்லி,முகமதுவின் நபித்துவததை நிருபிக்க பாடுபடுவது இந்த இஸ்லாமிய அறிஞர்களேஎன்பதை மறக்கக்கூடாது.

இஸ்லாமிய சகோதரரோ அல்லது சகோதரியோ, நம்பிக்கையில்லாத மக்கள் முகமதுவின்நடத்தைப் பற்றி சொல்லும் குற்றச்சாட்டை தள்ளிவிடமுடியாது அல்லதுபுறக்கணித்துவிடமுடியாது.

குறைந்த‌ப‌ட்ச‌மாக‌, இஸ்லாமிய‌ர‌ல்லாத‌ ம‌க்காம‌க்கள்(எதிரிகள்) முக‌ம‌துவின் ந‌ட‌த்தைப் ப‌ற்றிச் சொன்ன ந‌ற்சாட்சியைந‌ம்ப‌வேண்டும் என்றுச் சொல்லும் இஸ்லாமிய‌ர்க‌ள், அதே எதிரிக‌ள்,முக‌ம‌துவின் ந‌ட‌த்தைப் ப‌ற்றிச் சொல்லும் இந்த‌ குற்ற‌ச்சாட்டுக‌ளையும்நாம் நம்பி, முகமது ஒரு நல்ல நடத்தையுள்ளவர் அல்ல என்று நம்பலாம் அல்லவா?

இஸ்லாமியர்கள் ஏதாவது ஒன்றைத் தான் தெரிந்தெடுத்துக்கொள்ளமுடியும்,கூழும் குடிக்கனும், மீசையிலும் ஒட்டக்கூடாது என்றால் அது நடக்காது


நன்றி: கிறிஸ்தவம்.காம்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum