தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
அமெரிக்க அதிபர்கள்  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அமெரிக்க அதிபர்கள்  Empty அமெரிக்க அதிபர்கள்

Sat Aug 17, 2013 6:16 pm
அமெரிக்க அதிபர்கள்  1175097_520336774713240_1953914344_n

உலகத்தின் எந்த ஏழை நாடாக இருந்தாலும் பணக்கார நாடாக இருந்தாலும் ஆட்சியாளர்கள் மட்டும் எப்போதும் வசதியாகவே இருக்கிறார்கள்.

ஆப்பிரிக்காவில் பசியால் துடிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளைக் கொண்டிருக்கும் நாடுகளில்கூட ஆட்சியாளர்களின் ஆடம்பர வாழ்க்கைக்குக் கொஞ்சமும் குறைவில்லை. அப்படியெனில் உலக வல்லரசான அமெரிக்காவின் அதிபருக்கு எவ்வளவு வசதிகள் இருக்கும்.?

தங்கள் நாட்டு அதிபர் பெயர் தெரியுமோ இல்லையோ. அமெரிக்க அதிபரை நிச்சயமாக தெரிந்திருக்கும். காரணம் அமெரிக்க அதிபர்கள் அத்துணை பிரபலம். ஹாலிவுட்டின் பெரும்பாலான படங்களில் ஒரு ஹீரோ. உலகில் எந்தவொரு நாட்டு விவகாரத்தில் யாருடைய அனுமதியின்றித் தலையிடும் அதிகாரம் கொண்டவர். உலக அதிபர்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்தவர்.

இவரது சம்பளம் ஓராண்டிற்கு 4 லட்சம் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 2.6 கோடி ரூபாய். இது தவிர அவரது ஆண்டு செலவுக்காக 50 ஆயிரம் டாலர்கள், பயணச் செலவிற்காக வருமான வரி பிடித்தம் இல்லாத ஒரு லட்சம் டாலர்கள். பொழுதுபோக்கிக்காக 19 ஆயிரம் டாலர்கள். சாதாரண அரசு ஊழியரைப் போல இதரப் படிகளும் அவ்வப்போது சம்பளவு உயர்வும் உண்டு.

வெள்ளை மாளிகைதான் அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம். மருத்துவ வசதி, பொழுதுபோக்கு அம்சங்கள், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சேவைகள் என சகலமும் அந்த மாளிகையின் உள்ளே உண்டு.

அதிபரின் அலுவலக நிமித்தமான உணவு உபசரிப்பு மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கான செலவுகளை அமெரிக்க அரசு ஏற்றுக்கொள்கிறது. தமது உடைகளை துவைப்பதற்கும், தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய விருந்தினர்களுடனான விருந்துகளுக்கு அதிபர்தான் செலவு செய்துக்கொள்ளவேண்டும்.

அமெரிக்க அதிபருக்கு உரிமையான மற்றொரு இடம் கேம்ப் டேவிட் எனப்படும் மலைப் பகுதி ராணுவ முகாம். பாதுகாப்பு மிகுந்த இந்தப் பகுதியை, பொழுதுபோக்குக்காகவும், முக்கியக்கூட்டங்களை நடத்தவும் அதிபர்கள் பயன்படுத்துகிறார்கள். இது தவிர 70 ஆயிரம் சதுரடிக்கும் அதிக பரப்பளவை கொண்ட பிலையர் ஹவுஸ் அதிபரின் ஓய்வில்லமாக திகழ்கிறது.

ஊருக்குள் அவர் மேற்கொள்ளும் பயணத்திற்காக ஆயுதங்கள் தாங்கிய, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சொகுசு லிமோசைன் கார் உள்ளது. இதில் பாதுகாப்பு அம்சங்களுக்கென ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டு பயணித்திற்காக சிறப்பு போயிங் 747 - 200B ஜெட்விமானத்தில் அதிபர் பயணிக்கும்போது அது ஏர்போர்ஸ் ஒன் என்று அறியப்படுகிறது. நடுவானில் எரிபொருள் நிரப்பிக்கொள்ளும் வசதியுடைய இந்த விமானத்தில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்க முடியும். எந்த ஒரு நெருக்கடி நேரத்திலும் தகவல் ஏற்படுத்திக்கொள்ளும் அதி நவீன தகவல் தொடர்பு வசதிகள் அதிபர் பயணிக்கும் விமானத்தில் உள்ளன.

அதே போல் பிரத்யேக ஹெலிக்காப்டரில் அவர் பயணிக்கும்போது அது மரைன் ஒன் என அறியப்படுகிறது. அதிபர் பயணிக்கும்போது ஐந்து ஹெலிகாப்டர்கள் ஒரு சேர பறந்து அவ்வப்போது இடம் மாறி மாறி பறக்கும். பாதுகாப்பு காரணங்களுக்காக அவ்வாறு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரை காக்க அமெரிக்காவில் இரகசிய சேவை இயங்குகிறது. தாங்கள் காக்கும் நபர் மற்றும் இடங்களுக்கு தனியாக ரகசிய குறியீடு பெயர் அளிக்கப்படுகிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட இந்த காலக்கட்டத்தில் அது தெளிவான தகவல் தொடர்புக்காக பயன்படுத்தப்படுகிறது.

அதிபர் ஓய்வுபெற்ற பிறகு, ஓய்வூதியம், அலுவலகம் மற்றும் பணியாளர்கள் என பல சலுகைகள் உண்டு. அதிபராக இருந்தபோது கிடைத்த வசதிகள் சில ஓய்வு காலத்திலும் கிடைக்கிறது. பலர் அமெரிக்காவின் சர்வதேசப் பிரதிநிதிகளாக, சமூக ஆர்வலர்களாக தங்களுக்கென தனி அடையாளங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் தவறுவதில்லை.


thanks: Fb
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum