தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இயேசுவின் பிரசங்கமும் இன்றைய நவீன பாஸ்டர்களின் பிரசங்கமும் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இயேசுவின் பிரசங்கமும் இன்றைய நவீன பாஸ்டர்களின் பிரசங்கமும் Empty இயேசுவின் பிரசங்கமும் இன்றைய நவீன பாஸ்டர்களின் பிரசங்கமும்

Tue Oct 20, 2015 10:04 pm
1. உன்னையே முழுவதுமாக கொடுப்பதே ஆசீர்வாதம் - இயேசு
* உன்னிடத்தில் உள்ளதைக் கொடுத்தால்தான் ஆசீர்வாதம் - பாஸ்டர்
2. தேவனுடைய அங்கீகாரமே ஆசீர்வாதம் - இயேசு
* தேவன் அங்கீகரித்தபின்தான் ஆசீர்வாதம் - பாஸ்டர்
3. இயேசுவைப் பின்பற்றினால் சிறிய வீடு பெரிதாகும் - பாஸ்டர்
* மனுஷகுமாரனுக்கே தலை சாய்க்க இடமில்லை - இயேசு
4. பேதுருவைப் பார்த்து இயேசு, “உன்னுடைய மரணத்தினாலே என்னை மகிமைப் படுத்துவாய்”
* விசுவாசிகளைப் பார்த்து பாஸ்டர், “உங்களுடைய கார், பங்களா, சரீர சுகம் இவற்றினால் தேவனை மகிமைப் படுத்துவீர்கள்”
5. பணக்கஷ்டம், சரீர வியாதியோடு, உள்ளவர்கள் கிரியை இல்லாத செத்த விசுவாசம் உள்ளவர்கள் - பாஸ்டர்
* சுகபோகமாய் வாழ்கிறவர்கள் உயிரோடே செத்தவர்கள் - இயேசு
6. விஷேசித்த பிரார்த்தனை மையங்கள், ஜெப கோபுரங்கள் மூலமாகத்தான் ஜெபிக்க வேண்டும்
* பிதாவை எங்கும் தொழுது கொள்ளும் காலம் வந்திருக்கிறது - இயேசு
7. ஜெபக்கோபுரங்களையும் சபைகட்டிடங்களைத் திறந்து வைக்க அரசியல்வாதிகளான ஏரோதுவையும் , பிலாத்துவையும் அழைத்து விழாவை சிறப்பிக்க வேண்டும் - பாஸ்டர்
* ஏரோதும் பிலாத்தும் மனந்திரும்பாததால் அவர்களின் ஜெபமும் அருவருப்பானது - இயேசு
8. அமாவாசை, பௌர்ணமி இரவில் ஜெபித்தால் விஷேசித்த பலன் கிட்டும் - பாஸ்டர்
* இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள் - இயேசு
9. பிள்ளைகளுக்கு பூச்சாண்டியைக் காட்டி மிரட்டி சாப்பாடு ஊட்டுவது போல, கர்த்தரின் சாபத்தை வைத்து மிரட்டினால் தான் மக்கள் ஒழுங்காக சபைக்கு வருவார்கள் - பாஸ்டர்
* ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் என்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்படிவான் - இயேசு
10. ஸ்தாபனங்களின் கீழும், மேலை நாட்டு மக்களின் ஆதரவும் இருந்தால் தான் ஊழியம் செய்ய முடியும் - பாஸ்டர்
* சகல தேசத்திற்கும் சென்று சுவிஷேசம் அறிவியுங்கள் நான் முடிவு பரியந்தம் உங்களுடனேகூட இருப்பேன் - இயேசு
11. நான் நடத்தும் கூட்டத்திற்கு வாருங்கள்,
என்னுடைய விசுவாசமுள்ள ஜெபம் உங்களை குணப்படுத்தும் - பாஸ்டர்
* உன் விசுவாசமே உன்னை இரட்சித்தது - இயேசு
12. ”இயேசுவின் உருவத்தை” (தரிசனத்தில்) கண்ட விசுவாசியே பாக்கியவான் - பாஸ்டர்
* என்னைக் காணாமலிருந்து விசுவாசிக்கிறவனே பாக்கியவான்- இயேசு
13. அரசியல் வாதிகளின் துணையில்லாமல் சுவிசேஷத்தால் வரும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாது - பாஸ்டர்
* என்னையன்றி உங்களால் ஒன்றும் செய்ய முடியாது - இயேசு
14. ரெவரெண்ட், பாஸ்டர் என்றே என்னை அழைக்க வேண்டும் - பாஸ்டர்
* மனுஷக்குமாரனையே பெயல் செபூல் என்றழைத்தால் உங்களை மக்கள் எவ்வாறு அழைப்பார்கள்? - இயேசு
15. என்னுடைய மாதப்பத்திரிக்கையும், ஜெப எண்ணெயும் உங்கள் சரீரத்தை குணமாக்கும் - பாஸ்டர்
* விசுவாசமுள்ள ஜேபம் பிணியாளியை சுகமாக்கும் - இயேசு
16. சபைக் கட்டிடத்திற்கு அதிகமாகப் பணம் கொடுத்தவர்களின் பெயர்கள் வரிசைக் கிரமமாய் ஆலய முகப்பு வாசலில் பொறிக்கப் படும் - பாஸ்டர்
* வலது கை கொடுத்ததை இடது கை அறியாதிருப்பதாக - இயேசு
17. ஆரம்ப கால ஊழியத்தில் வெள்ளை கலர் சட்டை அல்லது ஜிப்பா மற்றும் ஜோல்னா பை அணிந்திருந்தால்தான் பரிசுத்தம், பின்னர் ஊழியத்தில் வளர்ந்தபோது கோர்ட், சூட் ( எந்த கலராக இருந்தாலும்) அணிதலே பரிசுத்தம் - பாஸ்டர்
* புறம்பான அலங்காரமல்ல உள்ளான அலங்காரமே முக்கியம் - இயேசு
18. அதிகமாக கொடுத்தவர்கே சபை மக்கள் முன்பாகப் பாராட்டு- பாஸ்டர்
* 2 காசு போட்ட ஏழை விதைவைக்கே எனது பாராட்டு -இயேசு
19. மக்களின் அமோக ஆதரவைப் பெற்றவர்களே சபையின் தலைமைப் பதவியில் அமரவேண்டும் - பாஸ்டர்
* பரிசுத்த ஆவியின் சாட்சியைப் பெற்றவனே சபையின் கடைமட்ட வேலையைக்கூட செய்ய வேண்டும் -இயேசு
20. என்னை விட திறமையானவர்கள்(ஆவிக்குரியற்றில்) எத்தனை பேர் சபையில் இருந்தாலும் சீனியாரிட்டி பிரகாரம் எனக்குக் கீழ் தான் அவர்கள் அடங்கியிருக்க வேண்டும் - பாஸ்டர்
* என்னை விசுவாசிக்கிறவன் என்னைப் பார்கிலும் பெரிதான கிரியையை செய்வான் - இயேசு
21. என்னையும், என் குடும்பத்தையும், என் வீட்டையும் பராமரித்து சேவை செய்ய எப்போதும் எனக்கு சில விசுவாசிகள் தேவை - பாஸ்டர்
* ஆண்டவராகிய நானே உங்களுடைய கால்களைக் கழுவினதுண்டானால் நீங்கள்......-இயேசு...!!!
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum