சரிதானே... (சிரிப்பு)
Sat Nov 29, 2014 8:16 am
ஆசிரியர் : "உண்மைக்கு எதிர்ப்பதம் என்னன்னு கேட்டா, பதில் சொல்லாம முழிக்கிறியே .. .. ஏண்டா" ?
மாணவன் :"நீங்கதானே சார் 'பொய்' சொல்லக்கூடாதுன்னீங்க"!

Re: சரிதானே... (சிரிப்பு)
Sat Nov 29, 2014 8:17 am
" நீங்க இந்த கிளினிக்கை ஆரம்பிச்சதுலேர்ந்து இதுவரைக்கும் நான் உங்களைத் தவிர, வேற எந்த டாக்டர்கிட்டேயும் போனதில்லை"..
" நானும் அப்படித்தான் இந்த கிளினிக்கை ஆரம்பிச்சதுலேர்ந்து இதுவரைக்கும் உங்களைத் தவிர, வேற எந்த பேஷண்ட்டுக்கும் ட்ரீட்மெண்ட் கொடுத்ததில்லை.!!!.."..
" நானும் அப்படித்தான் இந்த கிளினிக்கை ஆரம்பிச்சதுலேர்ந்து இதுவரைக்கும் உங்களைத் தவிர, வேற எந்த பேஷண்ட்டுக்கும் ட்ரீட்மெண்ட் கொடுத்ததில்லை.!!!.."..
Re: சரிதானே... (சிரிப்பு)
Sat Nov 29, 2014 8:24 am
ஐ.ஏ.எஸ் தேர்வு முடிஞ்சு இண்டர்வ்யூ நடந்துக்கிட்டிருந்திச்சு. அப்போ தேர்வுக்கு வந்திருந்த நபரிடம்..இண்டர்வ்யூ குழுவினர் இப்படி கேள்வி கேட்டாங்க..
நீங்க எத்தனை படி ஏறி வந்தீங்க?
நான் எத்தனை படி இறங்கப் போறேனே..அத்தனை படி ஏறி
வந்தேன் சார்.
அமாவாசை அன்னிக்கு, ஒரு காட்டிலே கறுப்பு தொப்பி, கண்ணாடி, கோட், சூட் போட்ட ஒரு கறுப்பு மனிதர், கறுப்பு நிறக் காரை100 கி.மீ வேகத்தில் ஓட்டிக்கிட்டு வந்துக்கிட்டிருந்தாரு. அந்தக் காரோட ஹெட் லைட் எரியலை. சாலையிலும் விளக்கும் எதுவும் எரியலை. அப்போ திடீர்ன்னு கறுப்புப் பூனை ஒண்ணு ரோட்டைக் கிராஸ் செஞ்சுச்சு. ஆனாலும் அவர் லாவகமா அதன் மேலே இடிக்காம காரை ஓட்டிக்கிட்டுப் போனாரு? எப்படி?
அது பகல் வேளை சார். அதான் தெருவிளக்கு எதுவும் எரியலை. காரோட ஹெட் லைட்டும் எரியலை. கறுப்பு கண்ணாடி போட்டிருந்தாலும் அவராலே தெளிவா சாலையைப் பாத்து ஓட்ட முடிஞ்சுது.
வெரி குட்..அந்த வாட்டர் ஃபில்டர்லேர்ந்து ஒரு கிளாஸ் வாட்டர் கொண்டு வந்து கொடுக்கறீங்களா?
உடனே இண்டர்வியூக்கு வந்தவர் டேபிள் மேல் இருந்த காலிங் பெல்லை அழுத்தி...ப்யூனை வரவழைச்சு...அவருக்கு ஒரு கிளாஸ் வாட்டர் கொண்டு வந்து கொடுங்கன்னு சொன்னாரு. ப்யூன் தண்ணீரைக் கொடுத்துட்டுப் போனதும்,
அதிகாரிங்க ஏன் அப்படி செஞ்சீங்க..நீங்களே எழுந்து போயி தண்ணீரைக் கொண்டு வந்திருக்கலாமே? நாங்க உங்களைத்
தானே கொண்டு வரச் சொன்னோம்?ன்னு கேட்டாங்க.
அதுக்கு அவர்,”நான் வந்திருப்பது மதிப்பிற்குரிய ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு. ப்யூன் வேலைக்கு அல்ல. ஒரு ஐ.ஏ.எஸ் ஆபீசருக்கு தண்ணீர் தேவைப் பட்டால் என்ன செய்வாரோ அதைத்தான் நான் செஞ்சேன்”ன்னு சொன்னாரு.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|