கூத்தாடிகள் வருவாய் ஈட்ட
Wed Apr 03, 2013 5:28 pm
ஆம் நான் ஏதோ உளறுகிறேன்
நண்பா,
கூத்தாடிகள் வருவாய் ஈட்ட நீ என்ன
இலவச சந்தைப்படுத்தும் ஊடகமோ?
ஆம் நான் ஏதோ உளறுகிறேன்
பசியினில் தினம் சாகும் பச்சிளம்
குழந்தையும் உன்னருகே வசிக்கையில்
பாலாபிஷேகம் செய்யும்
அளவுக்கு அவனிடம் யாது கண்டாய்?
ஆம் நான் ஏதோ உளறுகிறேன
இறவல் வசனத்தில்
வாயசைத்து ஒரு கலைஞனால்
ஆட்டுவிக்கப்படும் பொம்மைகளிடம் உன்
ஆறறிவை அடகு வைப்பதேனோ?
ஆம் நான் ஏதோ உளறுகிறேன்
முகச்சாயம் பூசி திரையில் தோன்றும்
அம்மனிதனிடம்
மனச்சாயமும் உள்ளதை நீ
மறப்பது ஏனோ?
ஆம் நான் ஏதோ உளறுகிறேன்
நச்சு வார்த்தையும் காட்சிகளையும்
காட்டி எம் இளைய தலைமுறையின்
மனத்தை சிதைக்கும் நவீன கள்ளிப்பால்
அவர்கள்
ஆம் நான் ஏதோ உளறுகிறேன
நடிகனுக்காய் நீ கத்துகையில் உன்
வயிற்றை பாரேன அவனும்
உரைப்பதில்லை
கோடிகளில் புரளும் அவனுக்கு உன்
குடிசையில் விளக்கு எரியாவிடிலும்
ஓரு நட்டமுமில்லை
ஆம் நான் ஏதோ உளறுகிறேன்
பஞ்ச் டைலாக்கும்,ஸ்டைலும்
உனை ஆளத் தேவைப்படும் தகுதியா?
உண்மை உலக நடைமுறையைத் தெரியாத
நீயும் என்ன பேதையோ?
ஆம் நான் ஏதோ உளறுகிறேன்
உன் மனத்துள் குப்பைக் கொட்டும்
சபை நாகரீகம் தெரியா சில
கூத்தாடிகளை சன்னதியுள்
கொண்டு வைத்தாய்
உன் சுற்றத்தை சுத்தம் செய்யும் சுகாதார
பணியாளர்களை என்றாவது நினைத்துள்ளாயோ,
ஆம் நான் ஏதோ உளறுகிறேன்
நண்பா
நல்ல படங்களை பாருங்கள் அதில் வரும்
நல்ல கருத்துகளை மனத்துள்
ஏற்றுங்கள்,நடிகனையல்ல.
பா.தியாகராஜன
Permissions in this forum:
You cannot reply to topics in this forum