தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
 விழிமூடும் கத்தோலிக்கர்கள்  விண்ணுலகம் சேர்வார்களா? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

 விழிமூடும் கத்தோலிக்கர்கள்  விண்ணுலகம் சேர்வார்களா? Empty விழிமூடும் கத்தோலிக்கர்கள் விண்ணுலகம் சேர்வார்களா?

Tue Nov 21, 2017 10:02 pm
 விழிமூடும் கத்தோலிக்கர்கள்  விண்ணுலகம் சேர்வார்களா? 22195752_553288585062679_5092871186048954715_n

விழிமூடும் கத்தோலிக்கர்கள் 
விண்ணுலகம் சேர்வார்களா?
--------------------------
விருத்தெரிந்த நாள் முதலாய், ஆலயமும், ஆராதனையும், கடன்திருநாளும், புனிதர் பெருநாளும், கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகளுமாக ஓடிக்கொண்டிருந்த கத்தோலிக்கராகிய எமக்கு, எங்கள் முற்பிதாக்கள் செய்துவந்த அதே வழிமுறைதான் சரியென்று காணப்பட்டது! 

கல்வி பயின்ற பாடசாலையும் ரோமன் கத்தோலிக்க பாடசாலையாக இருந்தமையால், மறைக்கல்வி, வேதாகாமப் வினாவிடைப் போட்டி என்று கத்தோலிக்க கோட்பாடுகளே கல்வியிலும் புகுத்தப்பட்டிருக்க, பிரிந்துபோன கிறிஸ்தவர்களின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு, கத்தோலிக்கம்தான் பரலோகம் போகும் வழியைபோதிக்கிறது என்று எமக்கு நம்பவைக்கப் பட்டது! 

மார்ட்டின் லூதர் பயங்கரவாதியாகக் காண்பிக்கப்பட்டார்! 
அதனால் அறிவு தெளிந்த நாள் முதலாய், 
அவரைப் பின்பற்றுவோரும் பயங்கரவாதிகளாகவே எமக்குக்காண்பிக்கப்பட்டிருந்தனர்! 
ஆனால் 'நிதர்சனமான உண்மை' 
நேரெதிராக இருக்கிறதென்பதை அறியக்கூட வாய்ப்பின்றி நாங்கள் நம்பிக்கொண்டிருக்கிற வழி பரலோகத்துக்குப் பதில் நரகத்துக்கு நேராக போய்க்கொண்டிருந்தது! 

ஆலயம் என்றால் பங்குத்தந்தை இருப்பார், கன்னியாஸ்திரிகள் இருப்பார்கள், கோயிலுக்குப் பொறுப்பாக ஆலய நிர்வாகி (சங்கிலித்தாம்) இருப்பார், பீடப்பணியாளர் சங்கம் இருக்கும், என்பதே எமது சிந்தைக்குரிய (வேதக்கார) வாழ்க்கை!.... அயல்கிராம மக்களின் மத நம்பிக்கைக்கும் எமக்கும் பேரளவு வித்தியாசமின்றி, (சங்கிலித்தாமின் பிள்ளைகளுக்குக்கூட) 

நாள், நட்ஷத்திரம், ராசி, பலன் பார்த்தே சுபகாரியங்கள் நிகழ்வதால், இதுவும் கிறிஸ்தவ வாழ்க்கையின் அங்கம்தான் என்று ஒப்புக்கொண்ட மனநிலையில், காலத்தை நகர்த்திக் கொண்டிருந்தோம்! இஸ்ரவேலருக்கு நிகழ்ந்ததுபோல, இடப்பெயர்வுகள் எம்மையும் சூழ்ந்ததால், பல தேசங்களுக்கு நாம் துரத்தப்பட்ட போது, அங்கிருந்த கிறீஸ்தவர்களின் நிலை எம்மூரில் இல்லாதிருப்பதும், அதை அறிய ஆராய்ந்தபோது, நாம் ஏற்கனவே மோசமாக ஏமாற்றப் பட்டிருப்பதும் தெரியவந்தது! 

ஆபத்தை அறிந்து சுதாகரிப்பதற்குள், எமக்கு குடும்பமும் பிள்ளைகளும் ஏற்கனவே வந்துவிட்டிருந்தது! 
இந்த உண்மைகளை நாம் சொன்னால் ஏற்பார்களா என்ற கேள்வியும், அவர்கள் செய்கிற எந்த வழிபாடுகளும் பரலோகத்துக்கு நேராக அவர்களை நடத்தாது என்பதை நம்புவார்களா என்ற அங்கலாய்ப்பும் எமக்கு ஏற்பட்டது! அந்தளவிற்கு சமய காரியங்கள் சம்பிரதாயமாக, பாரம்பரியமாக, சடங்காச்சாரமாக எம்மை சுற்றி வளைத்து தப்பிப் போகாதவாறு வலையமைத்திருந்தது! இடம்பெயர்ந்தது நன்மைக்குத்தான் என்று சிந்திக்கத் தலைப்படும் அதேவேளை, சமூகக் கட்டுகள் இன்னும் குடும்பங்களை நெருக்குகின்றமை காணப்படுகின்ற போதிலும், உண்மையான கிறீஸ்துவையும் கிறீஸ்தவ வாழ்வையும் கண்டடைந்த சந்தோஷம், எம்மை துணிவோடு மரணத்தையே எதிர்கொள்ளும் தைரியத்தை தந்திருக்கின்றது! 

கத்தோலிக்கத்திலிருந்து ஒருவன் வெளியேறினால் அவனை தீண்டத் தகாதவனாக கருதும் சமூகம், தாங்கள் செய்கிற மாறுபாடுகளுக்கு ஒத்துவராததினால் அவனை தூஷிக்கிறது! உண்மையில் தூஷிக்கப்படுபவர் இயேசு என்பதை காலம் இவர்களுக்கு உணர்த்தும் என்பதும், பாரம்பரியங்களை விட மனதில்லாதவர்களாக, தவறான வழியில் செல்லும் வழிப்போக்கர்களாகி, பலர் பிழையான ஊர் போய்ச் சேர்வார்கள் என்பதும் நிச்சயமான உண்மை! 

வேசித்தனத்துக்கு ஒப்பான சிலைவழிபாடு விவிலியத்துக்கு எதிரானதால், எச்சரிப்பை புரிந்துகொண்டவன் புத்தியுள்ளவனாக தன்னை விடுவித்துக் கொள்வான்! மற்றவர்களுக்கு பரலோகம் என்பது கனவாகவே இருக்கும்!....

"தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும் அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்."
லூக்கா 12:47

(ஒரு முன்னாள் கத்தோலிக்க சகோதரரின்
குமுறல் )
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

 விழிமூடும் கத்தோலிக்கர்கள்  விண்ணுலகம் சேர்வார்களா? Empty Re: விழிமூடும் கத்தோலிக்கர்கள் விண்ணுலகம் சேர்வார்களா?

Tue Nov 21, 2017 10:02 pm
 விழிமூடும் கத்தோலிக்கர்கள்  விண்ணுலகம் சேர்வார்களா? 22089527_552399495151588_7289011702443243974_n

கத்தோலிக்க சகோதரனே..!! சகோதரியே..!!

அன்று பாரம்பரியத்தில் இருந்த சவுலுக்கு தரிசனமான இயேசு 
இன்று பாரம்பரியத்தில் இருக்கிற உனக்கு தரிசனமானால் என்ன சொல்லுவார் தெறியுமா..??

கத்தோலிக்க சகோதரனே "முள்ளில் உதைக்கிறது உனக்கு கடினமாம்"

என்னை தவிர உனக்கு தேவனில்லை என்று சொன்னேன் 
ஆனால் நீ
நான் படைத்த மனிதர்களையே எனக்கு நிகராக தேவனாக்கிவிட்டீர்கள்..!!

எனக்கு உருவமில்லை என்று சொன்னேன்
ஆனால் நீ
எனக்கு விதவிதமான உருவங்களை ஏற்படுத்தி விட்டாய்..!!

உனக்காக பரிந்துபேசுபவர் நான் மட்டுமே என்று சொன்னேன்
ஆனால் நீ
மரித்த புனிதர்கள் எல்லோரையும் பரிந்துபேசுபவர்கள் என்று மாற்றிவிட்டாய்..!!

உன்னை என் நாமத்தை மட்டுமே சொல்லி ஜெபிக்கசொன்னேன்
ஆனால் நீ
எல்லா புனிதர்களின் நாமத்தையும் சொல்லி ஜெபிக்கிறாய்..!!

போதும்.. போதும்.. நிருத்துவாயா...
உன்னால் துன்படுகிற இயேசு நானே

என்னை உன் ஆண்டவர் என்று அறிக்கையிடுகிற நீ என் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்காதது ஏன்...?

உன்னை வஞ்சிக்கிற சத்துரு யார்..??

என் வார்த்தையை நேசிக்காதபடிக்கு உன்னை தடுப்பது எது..??

உன் பாரம்பரியமா..?
உன் சபையா..?
உன் முன்னோர்களின் வழியா..?

அனைத்தையும் உடைத்தெறிவாயா?
இல்லையேல்
மீண்டும் முள்ளில் உதைப்பாயா..? 

முள்ளில் உதைக்கிறது உனக்கு கடினமாம்..!!

கத்தோலிக்கனே 
நீ சவுலாகவே இருக்கவிரும்புகிறாயா..?
இல்லை பவுலாக மாற விரும்புகிறாயா..?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

 விழிமூடும் கத்தோலிக்கர்கள்  விண்ணுலகம் சேர்வார்களா? Empty Re: விழிமூடும் கத்தோலிக்கர்கள் விண்ணுலகம் சேர்வார்களா?

Tue Nov 21, 2017 10:04 pm
 விழிமூடும் கத்தோலிக்கர்கள்  விண்ணுலகம் சேர்வார்களா? 20954031_536116726779865_938253724741621272_n


ஆடுகள் தன்னுடைய மேய்ப்பன் யார் என்பதை நன்றாக அறிந்திருக்கிறது;

மாடு தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது; 

கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத் தெரிந்து கொள்கின்றது; 

ஆனால் மனிதனோ தன்னை படைத்தவரை அறிந்து கொள்ளவில்லை. 

இன்னும் எவ்வளவு காலம் அவரை அறியாமலிருப்பீர்கள்?

அவரை அறிந்து கொள்ள விருப்பம் இல்லை!
என் ஜனங்களோ மதியற்றவர்கள், 

என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள், 
அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், 

அவர்களுக்கு உணர்வே இல்லை, 

பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், 

நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள், 

என்னை(கடவுளை) அறிகிறதே நித்திய நிலைவாழ்வு என்று கடவுள் எச்சரித்து சொல்கிறார்.

கடவுள் தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு தாம் செய்பவைகளை, அவரேயல்லாமல் உலகத்தோற்றம் முதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, 

செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை. அவ்வளவு மகிழ்ச்சியான பலன்கள் யாரும் அறியாத இன்பம்,

கடவுளோடு நித்தியகால வாழ்க்கை இதை விட வேறு என்ன வேண்டும்?ஏன் அவரை அறிய நேரம் ஒதுக்க மறுக்கிறோம்,

யார் தடுக்கிறார்கள்? எது தடுக்கிறது? உணர்வு எப்போது வரும்? நாம் ஒருபடி இறங்கி வந்தால் ,அவர் நமக்கு பலபடிகள் இறங்கிவந்து நாம் அறியாத பல காரியங்களை தெளிவுபெறசெய்வார்.

என்ன தயக்கம்? மீண்டும் மீண்டும் கடவுள் நம்மை தேடி நாடி வந்து கொண்டே இருக்கிறார். உணர்வுள்ளவர்களாக மாறுவோமா! 

ஒரு முதுமொழி ,கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்,தீர விசாரிப்பதே மெய். தீர விசாரணையை ஆரம்பிப்போமா? 

விவிலியத்தை படிப்போமா? மெய்யான கடவுளை அறிந்து கொள்வோமா? அவர் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று அறிந்து கொள்வோமா? 

அவரிடம் இல்லாதது ஒன்றுமில்லை உங்களுக்கு 
செல்வம்வேண்டுமா?
ஞானம் வேண்டுமா?
சுகம் வேண்டுமா?
ஆறுதல் வேண்டுமா?
பாதுகாப்பு வேண்டுமா?
பாவத்திலிருந்து விடுதலைவேண்டுமா? 
அனைத்தையும் கொடுக்க வல்லவர் நம்முடைய ஆண்டவர்..!!

உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும், எல்லா உணர்விலும், இன்னும் அதிகமாய்ப் பெருக வேண்டும்.

கடவுள் நாம் அறியாத பல காரியங்களை தெளிவுபடுத்துவார்.

மரித்த(மரியாள்)மனிதர்களை தேடுவதை விட்டுவிட்டு 
இனி அவரை தேடுவீர்களா..!!
Sponsored content

 விழிமூடும் கத்தோலிக்கர்கள்  விண்ணுலகம் சேர்வார்களா? Empty Re: விழிமூடும் கத்தோலிக்கர்கள் விண்ணுலகம் சேர்வார்களா?

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum