குழந்தை இயேசு - ஒரு விளக்கம்
Tue Nov 21, 2017 9:39 pm
#குழந்தைஇயேசு
அமெரிக்கபிரதமர் இந்தியாவிற்கு வருகிறார் என்றால் செய்திதாளில் அவருடைய குழந்தையாய் இருந்தப்போ உள்ள போட்டாவை போட்டு வரவேற்பு கொடுத்து.
அவங்க அம்மா பிரதமரை குழந்தையாய் தூக்கிவைத்திருப்பது போல கட்டவுட் வைத்தீர்கள் என்றால் அமெரிக்கபிரதமருக்கு எப்படி இருக்கும்..??
அவரை கேவலபடுத்துவது போல இருக்கும் அல்லவா..!! என்னை ஒன்றும் தெரியாத குழந்தையாக நினைக்கிறீர்களா என்று
அதற்கு பிறகு அமெரிக்கபிரதமர் இந்தியா வருவாரா..!
ஒருகுழந்தைக்கு எதுதேவை என்றாலும் அதனுடைய அம்மாதான் நிவர்த்தி செய்யவேண்டும்.
அந்த குழந்தையால் தனக்கு தேவையானதை தானேபெற்று கொள்ளமுடியாமல் அம்மாவிடமோ, அல்லது அதை யார் தூக்கிவைத்திருக்கிறார்களோ அவர்களிடமே கேட்கும் நிலைதான்
அந்த குழந்தைக்கு. இப்பட்ட நிலையில் ஆண்டவரை பார்க்க உங்களுக்கு விருப்பமா..?
அகிலஉலகத்தையும் உண்டாக்கி ஆளுகின்ற ஆண்டவரை குழந்தையாக்கி
குழந்தை இயேசு என்றும்,மரியாள் தூக்கி வைத்துருப்பதை போலவும்,அந்தோணியார் தூக்கிவைத்திருப்பது போலவும் காட்டுகிறீர்களே. ஆளாளுக்கு ஆண்டவரை குழந்தையாக தூக்கிவைத்துகொள்கிறீர்களே..
இறைவனை
குழந்தை பொம்மையாக செய்து தூக்கி விளையாடவும்,முத்தம் கொடுக்கவும்,சட்டைபோடடு அழகுபார்க்கவும் இயேசு பிறக்கவில்லை
உங்கள் விவிலியத்தில் இயேசுவை குழந்தையாக பார்க்க சொல்லி சொல்லியிருக்கிறதா?
நம்மை உண்டாக்கினவருக்கு மதிப்பு கொடுங்கள். கேவலபடுத்தாதீர்கள்..!!
புதிதாய்ப் பிறந்த குழந்தைகள்போல, வஞ்சகமற்ற வார்த்தையாகிய பாலை அருந்த ஆர்வமுள்ளவர்களாயிருங்கள்.
1 பேதுரு 2:2
நம்மைதான் குழந்தையைபோல இருக்கசொன்னார்.
நீங்கள் ஆண்டவரையே வளராத
குழந்தையாகவே மாற்றிவிட்டீர்கள்.
நீங்கள் விளையாட,
நீங்கள் பொழுதுபோக்க,
நீங்கள் அழங்காரம் பண்ண,
அவர் ஒன்றும் பொம்மையல்ல.
நம்மை உண்டாக்கினர் தேவாதிதேவன்
நம்முடைய ஆண்டவர் அவர்
அவரிடம் பயபக்தியுடன் இருக்கவேண்டும்...
என் ஜனமே சிந்திப்பாயா!!!!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|