புரதச் சத்து மிக்க கறுப்பு உளுந்து அடை
Fri Aug 19, 2016 6:45 pm
புரதச் சத்து மிக்க கறுப்பு உளுந்து அடை
தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி - 250 கிராம்
கறுப்பு உளுந்து - 100 கிராம்
துவரம்பருப்பு - 1 கப்
வெங்காயம் - பெரியது 2
காய்ந்த மிளகாய் - 5
இஞ்சி - சிறு துண்டு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
• வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• புழுங்கல் அரிசி, கறுப்பு உளுந்து, துவரம்பருப்பை தனித்தனியாக 3 மணிநேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து கரகரப்பாக ரவை பதத்தில் அரைத்து கொள்ளவும
உளுந்து, துவரம்பருப்பை சேர்த்து அரைத்து, பிறகு எல்லா மாவையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு, வெங்காயம் சேர்த்துக் அடை மாவு பதத்தில் தயாரிக்கவும்.
• தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, சிறிது கெட்டியாக மாவை வார்த்து, இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum