முதுகு வலியால் அவதியா? எளிய பயிற்சி!
Tue Jun 21, 2016 7:38 pm
முதுகு வலியால் அவதியா?
எளிய பயிற்சி!
வயதானவர்களுக்கு மட்டுமல்ல.. இன்றை இளைஞர்களுக்கும் முதுகு வலி பெரும் தொல்லை கொடுத்து வருகிறது. அலுவலக பணி காரணமாக அன்றாடம் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து வேலை செயபவர்கள் முதல், அன்றாடம் போக்குவரத்து வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் வரை அனைவருக்குமே இப்போது முதுகு வலி சொந்தமாகிவிட்டது.
முதுகு வலியை விரட்ட ஏதாவது எளிய பயற்சிகள் இருக்கிறதா? என்று நினைக்கும் உங்களுக்கான எளிய பயிற்சிகள் இங்கு கொடுக்கப்படடுள்ளது. முதுகு வலியை நின்ற நிலையிலிருந்தே பயிற்சி செய்து விரட்டி விடலாம்.
நீங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த இரு பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் படிப்படியாக முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். மேலும் முதுகு பகுதியை வலிமைபடுத்தவும் இந்த பயிற்சி துணை புரிகிறது. இந்த பயிற்சியை நின்று கொண்டு எந்த இடத்தில் வேண்டுமானலும் செய்யலாம்.
இந்த பயிற்சி செய்ய விரிப்பில் நேராக நிற்கவும். பின்னர் கைகளை பின்புற முதுகு பக்கம் வைக்கவும். இந்த நிலையில் இருந்தபடியே மெதுவாக பின்புறமாக (படத்தில் உள்ளபடி) சாய வேண்டும்.
உடலை மட்டும் வளைக்க வேண்டும். கால்களை வளைக்க கூடாது. பின்னர் சில விநாடிகள் ஓய்வு எடுத்தபின்னர் மீண்டும் செய்யவும். இதே போல் 10 முறை செய்ய வேண்டும்.
அடுத்த பயிற்சி செய்ய விரிப்பில் நேராக நின்று கொள்ளவும். வலது காலை தரையில் ஊன்றி இடது காலை முட்டி வரை மடக்கி இரு கைகளால் இடது கால் முட்டியை வயிற்றுக்கு இணையாக பிடித்து (படத்தில் உள்ளபடி) கொள்ளவும்.
ஆரம்பத்தில் ஒற்றை காலில் பேலன்ஸ் செய்ய முடியாதவர்கள் ஒரு கையால் சேர் அல்லது சுவற்றை பிடித்து கொண்டு செய்யலாம். இந்த நிலையில் கால்களை பிடித்தபடி வலது பக்கமாக (படத்தில் உள்ளபடி) திரும்பவும். இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் மறுபடியும் செய்யவும்.
இவ்வாறு கால்களை மாற்றி மாற்றி செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்யும் போது பேலன்ஸ் செய்ய சற்று கடினமாக இருக்கும். நன்கு பழகிய பின்னர் செய்ய எளிமையாக வரும். ஆரம்பத்தில் 10 முறையும், படிபடியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.
இந்த இரு பயிற்சிகளும் முதுகு பகுதிக்கு வலிமை தரக்கூடியவை. மேலும் முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் 1 மாதத்தில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
குறிப்பு : பயிற்சியின் போது வலி அதிகரித்தாலோ, பயிற்சியில் சந்தேகம் ஏற்பட்டாலோ அவசியம் பிசியோதெரபி மருத்துவரின் ஆலோசனை பெற்றுவது நல்லது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum