இயேசுக் கிறிஸ்துவுக்கு வெகுமதிகள்
Thu Jun 02, 2016 11:35 pm
# இயேசுக் கிறிஸ்துவுக்கு வெகுமதிகள் #
இயேசு கிறிஸ்து பிறந்தபோது அவரைக் காணவந்த வானசாஸ்திரிகள் அவருக்கு கொண்டு வந்த காணிக்கைகளில் பொன். வெள்ளைப்போளம். தூபவர்கம் என்பவைகள் இருந்தன என்று வேதம் குறிப்பிடுகிறது. இதில் பொன் நமக்குத் தெரிந்ததுதான். இவர்கள் கொண்டு வந்த தூபவர்கம் என்பது நம் நாட்டில் சாம்பிராணி மாதிரி ஒரு வகை பிசின் வகையைச் சேர்ந்த பொருள். இது குங்கிலியம் மாதிரியான மரப்பட்டையிலிருந்து பெறப்படுகிறது.
அக்காலத்தில் இந்த தூபவர்கம் மிகவும் விலையுயர்ந்ததாகக் கருதப்பட்டது. ( இக்காலத்தில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை, எதற்கும் நாட்டு மருந்துக் கடையில் கேட்டுப் பார்க்க வேண்டும்.) அக்காலத்தில் இது தேவாலயங்களில் புகையிடப்பட்டு, ஆராதனைகளில் தூபம் காட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.
வெள்ளைப்போளம் என்பதும் ஒருவகைப் பிசின்தான். ஆனால் இது புகைக்கான பிசின் அல்ல. வலி தீர்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பிசின். ( அமிர்தாஞ்சன் மாதிரி )
(பொன்) இயேசுக் கிறிஸ்து ஜனங்களைப் பரிசுத்தப்படுத்துபவர் என்றும்
( தூபவர்கம் ) இயேசுக்கிறிஸ்து ஜனங்களுக்காக பரிந்து பேசுபவர் என்றும்
( வெள்ளைப்போளம் ) இயேசுக்கிறிஸ்து ஜனங்களை குணமாக்குகிறவர் என்றும் , அடையாளப்படுத்தவே இப்பொருட்கள் சாஸ்திரிகள் காணிக்கையாக கொண்டு வந்தார்கள் என்று வேதவியாக்கினிகள் கருத்துச் சொல்கிறார்கள்.
ஆனால் உண்மையில் ஏன் இவற்றைக் கொண்டு வந்தார்கள் என்று அவர்களிடம் கேட்டால்தான் தெரியும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum