தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
நெல்லை அண்ணாச்சி விளம்பரம்  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

நெல்லை அண்ணாச்சி விளம்பரம்  Empty நெல்லை அண்ணாச்சி விளம்பரம்

Sat May 07, 2016 9:04 am
நெல்லை அண்ணாச்சி விளம்பரம்  13138737_1128942880504281_3312769568392739160_n

நெல்லை அண்ணாச்சி விளம்பரம் சிரிக்க அல்ல... சிந்திக்க!.
–––––––––––––––––––––––––––––––––––––––––––––––

சென்னை அண்ணாநகர் அருகே உள்ள பாடியில் சரவணா ஸ்டார் புதிய கிளை இன்று காலை திறக்கப்பட்டது. சில நாட்களாக இந்த கிளை திறப்புவிழாவுக்கான விளம்பரம் டிவி உள்ளிட்ட ஊடகங்களில் வருகிறது. அதில் நடிப்பவரை பார்த்து சமூக ஊடகங்களில் அவ்வளவு கிண்டல், கேலி, நக்கல். ஏகப்பட்ட வில்லங்க, வயிற்றெரிச்சல் கமென்ட்கள். அதை பார்த்து உங்களில் பலர் சிரித்து இருக்கலாம். நீங்களும் கிண்டல் செய்துஇருக்கலாம். விளம்பரத்தை பார்த்து அந்த விளம்பரத்தில் வருவரை பார்த்து நீங்கள் சிரித்து இருந்தால் அது தவறு அல்லது வருத்தப்பட வேண்டிய விஷயம். நீங்கள் ஒன்றும் அறியாதவர் என்று அதர்தம். காரணம். அந்த விளம்பரத்தில் வருபவர் சரவணா ஸ்டார் பாடி கிளை அதிபர் எஸ்.எஸ்.சரவணன். சூர்யா, பார்த்திபன் போன்றவர்கள் சரவணாஸ்டார்ஸ் முந்தைய கிளை விளம்பரங்களில் நடித்து இருந்தார்கள்.பல முன்னணி நடிகைககள் நடித்து இருந்தார்கள். இந்தமுறை அண்ணாச்சியே ஹீரோவாகிவிட்டார். 

சின்ன பிளாஷ்பேக்...

1970களில் பிரிக்கப்படாத நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதி பணிக்கநாடார் குடியிருப்பு. இன்றைக்கு வறண்ட ஊர். திருச்செந்துாருக்கு அருகே இருக்கிறது. அங்கே இருந்து பிழைக்க சென்னைக்கு வந்தனர் 3 சகோதரர்கள். செல்வரத்னம், ராஜரத்னம், யோகரத்னம் என்பது அவர்களின் பெயர்கள். ஆரம்பத்தில் சென்னை வீதிகளில் சுக்கு காப்பி விற்றார் செல்வரத்னம். அப்புறம் சகோதரர்கள் ஒன்று சேர்ந்து இன்றைய சென்னை ரங்கநாதன் தெருவின் சின்ன பாத்திரகடை ஆரம்பித்தார்கள். ரோட்டில் படுத்து உறங்கினார்கள். எளிய வாழ்க்கை வாழ்ந்தார்கள். இப்போதுபோல அன்றைக்கு ரங்கநாதன் தெரு ஏரியா பிரபலம் ஆகவில்லை.தங்கள் உழைப்பால் படிப்படியாக சகோதரர்கள் உயர்ந்தார்கள். 


இப்போது சென்னையில் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாகிவிட்டது. சரவணா ஸ்டார்ஸ் கடைகள். சென்னை திநகர் தவிர்த்து பாடி, புரசைவாக்கம் என பல இடங்களில் பல அடுக்குமாடி கடைகள்.ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி பிஸினஸ். இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் ரீடெயில் துறையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனம் சரவணா ஸ்டார்ா்்
செல்வரத்னம்் யோகரத்னம்(இவர் மகன் தான் பாடி கடை ஓனர் எஸ்எஸ்சரவணன்)
காலமாகிவிட்டார்கள். அவர்களின் வாரிசுகள் கடை நடத்துகிறார்கள். கொஞ்சம் பாகப்பிரிவினை என்பதை தனிக்கதை 


ஆனாலும், 1970களில் நம்பிக்கையை மட்டும் மூலதனமாக வைத்து சென்னைக்கு பிழைக்க வந்த ஒரு நெல்லை அண்ணாச்சி இன்றைக்கு தனது உழைப்பால் இந்தியாவின் பெரும்பணக்காரர்களுள் ஒருவராக உயர்ந்து இருக்கிறார். உழைப்பே உயர்வு என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள். அவர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். சிரிக்க கூடாது. இன்றைக்கு நவீன ரங்கநாதன் தெரு, கலர்கலர் பல்புகள் மின்னும் பல அடுக்கு சென்னை திநகரை உருவாக்கியதில் இவர்களுக்கும் பங்கு உண்டு.இன்றைக்கு ஹன்சிகா, தமனாவுக்கு பல லட்சம் சம்பளம் கொடுத்துதான் விளம்பரத்தில் நடித்து இருக்கிறார். 


பல ஆயிரம் ஊழியர்கள் அவர்களிடம் வேலை பார்க்கிறார்கள். எதற்கு நடிகை வைத்து என்று நினைத்து தன்னம்பிக்கையாக தானே நடித்து இருக்கிறார். அவர் நடித்தால் வியாபாரம் குறைந்துவிடப்போகிறதா? இன்றைக்கு கடை திறப்புவிழா நாளிலே அவ்வளவு கூட்டம், அவ்வளவு தள்ளுமுள்ளு. பாடி பக்கம் போய் பாருங்கள் கடையி்ல எவ்வளவு கூட்டம் அலைமோதுகிறது என்பதை
அப்புறம், ஆணாதிக்க ஆண்கள் கவனத்துக்கு எத்தனை நடிகர்களை நடிகைகளை அழைத்தாலும், தேசியவிருது வாங்கி கவிஞரை அழைத்தாலும்,பல கோடி முதல்போட்ட கொண்ட கடையில் முதல்வியாபாரத்தை யாரை வைத்து அண்ணாச்சி தொடங்கியிருக்கிறார் தெரியுமா? அவர் நினைத்து இருந்தால் அமிதாப்பச்சனை அல்ல, அர்னால்டையே அழைத்து வந்து இருக்கலாம். முதல் வியாபரத்தை பெற்றுக்கொண்டவர் அவருடைய மனைவி செல்வி. அப்புறம், தனது மகள்கள் யோகன்யா, மீனாட்சி, மருமகன் சுரேந்தர், அம்மாவை அழைத்து கவுரப்படுத்தியிருக்கிறார். வீ்ட்டு பெண்களை மதிக்க தெரிந்தவன் வாழ்க்கையில் முன்னேறுவான்.

மீண்டும் ஒரு தகவல்... நீங்கள் பார்த்த சரவணாஸ்டோர்ஸ் அண்ணாச்சி விளம்பரங்கள் சிரிக்க அல்ல சிந்திக்க...! 

கொசுறு: சென்னையின் அடையாளங்களாக இருக்கும் சரவணா ஸ்டார் மட்டுமல்ல, சரவண பவன் ஓட்டல்கள், ஜெயசந்திரன் ஜவுளிக்கடை, ஆர்எம்கேவி, போத்தீஸ், டிவிஎஸ் குரூப் நிறுவனம், சிம்சன்ஸ் குரூப், 

இந்தியா சிமென்ட்ஸ்எல்கேஎஸ்நகைக்கடை,தினந்தந்தி, தினகரன், தினமலர், உதயம் தியேட்டர், வசந்தபவன் குருப் ஓட்டல்கள், 
வீனஸ் எலக்ட்ரானிக்ஸ்

சென்னை முழுக்க நீக்கமற நிறைந்து இருக்கும் பல ஆயிரம் பலசரக்கு, காய்கறிகடைகள், இரும்பு கடைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் நெல்லைசீமை மண்ணின் மைந்தர்களின் உழைப்பால் உருவானது.

யார் என்ன சொன்னாலும் உழைக்க தெரிந்த இனம் நெல்லைகாரர்கள் 

நெல்லைகாரன் என்பதில் எனக்கும் பெருமையே!

மீனாட்சி சுந்தரம், நிருபர்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

நெல்லை அண்ணாச்சி விளம்பரம்  Empty Re: நெல்லை அண்ணாச்சி விளம்பரம்

Mon May 09, 2016 5:46 pm
மூக்கை ஓட்டை பெரிதாகத் தெரியும்படி சற்று வடிவமைத்துக் கொண்டு போஸ் தரும்போதே இப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன்..உழைத்து முன்னேறியவர்கள் என்ற சப்பைக்கட்டு வேறு.....இப்படிப்பட்ட ஹீரோவுக்கு..



நெல்லை அண்ணாச்சி விளம்பரம்  13139155_949085775210631_3802788249401004365_n

மு.ரா. பேரறிவாளன்
May 7 at 8:05am · 

இந்த ரொம்ப நல்ல மனுசனோட இன்னொரு முகம் தெரியுமா?
ஏகப்பட்ட மனித உரிமை மீறல்கள் அறங்கேறும் சரவணா ஸ்டோர் கடையில் வேலை பார்க்கும் பெண்ணிடம் ஒருவர் உரையாடி ஏற்கனவேஇணையத்தில் எழுதப்பட்ட செய்திதான் இது..
கேள்வி: ‘‘எந்த ஊர் நீங்க?’’
பதில்: ‘‘திருவண்ணாமலை பக்கம்..’’ ‘‘திருநெல்வேலிகாரங்கதான் நிறைய இருப்பாங்கல்ல..’’ ‘‘இப்போ அப்படி இல்ல... அவங்கல்லாம் வேற கடைக்குப் போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150 பேராச்சும் இருப்போம்..’’
கேள்வி: ‘‘தினமும் எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’
பதில் ‘‘காலையில 9 மணிக்கு வரணும். நைட் 11 மணிக்கு முடியும்.’’
கேள்வி:‘‘அப்படின்னா 14 மணி நேரம் வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட். இங்கே ஷிப்ட் கணக்கு எல்லாம் உண்டா?’’
பதில்:‘‘ஷிப்டா... அதெல்லாம் தெரியாதுண்ணேன். காலையில வரணும். நைட் போகனும். அவ்வளவுதான்..’’
கேள்வி: ‘‘சாப்பாடு?’’ 
பதில்:‘‘கேண்டீன் இருக்கு. கொஞ்ச, கொஞ்ச பேரா போய் சாப்பிட்டு வருவோம்.’’
கேள்வி: ‘‘எத்தனை மணிக்கு தினமும் தூங்குவீங்க?’’
பதில்: ‘‘12 மணி, 1 மணி ஆகும். காலையில எழுந்ததும் வந்திருவோம்’’
கேள்வி:‘‘தங்குற இடம், சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குமா?’’
பதில்:‘‘அது பரவாயில்லண்ணேன். நாள் முழுக்க நின்னுகிட்டே இருக்குறோமா... அதுதான் உடம்பு எல்லாம் வலிக்கும்.’’
கேள்வி: ‘‘உட்காரவே கூடாதா?’’
பதில்: ‘‘ம்ஹூம்.. உட்காரக் கூடாது. வேலையில சேர்க்கும்போதே அதை எல்லாம் சொல்லித்தான் சேர்ப்பாங்க. மீறி உட்கார்ந்தா கேமராவுல பார்த்துட்டு சூப்பரவைசர் வந்திடுவார்’’ - (யாரோ ஒரு வாடிக்கையாளருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதையும் சூப்ரவைஸர் கேமராவில் பார்க்கக்கூடும். அதனால் அந்தப் பெண் இங்கும் அங்குமாக துணிகளை எடுத்து வைத்தபடியேப் பேசுகிறார்.)
கேள்வி: ‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’
பதில்: ‘‘5,500 ரூபாய்.’’
கேள்வி: ‘‘வெறும் 5500 ரூபாய்தானா? வேற ஏதாவது முன்பணம், கல்யாணம் ஆகும்போது பணம் தர்றது... அதெல்லாம் உண்டா?’’ 
பதில்:‘‘இல்லண்ணே... அது எதுவும் கிடையாது. இதான் மொத்த சம்பளம்.’’ ‘‘இதை வெச்சு என்ன பண்ணுவீங்க?’’ ‘‘தங்குறது, சாப்பாடு ஃப்ரீ. எனக்கு ஒண்ணும் செலவு இல்லை. சம்பளத்தை வீட்டுக்கு கொஞ்சம் அனுப்புவேன். மீதி பேங்க் அக்கவுண்டுல போட்டுருவேன்’’
கேள்வி: ‘‘எத்தனை வருஷமா இங்கே வேலைப் பார்க்குறீங்க?’’ 
பதில்:‘‘அஞ்சு வருஷம் முடியப் போகுது. அப்பவுலேர்ந்து இதே சம்பளம்தான். இன்னும் ஏத்தலை..’’
கேள்வி::‘‘வேலைக்கு சேர்ந்த முதல் மாசத்துலேர்ந்து மாசம் 5500 ரூபாய்தான் சம்பளமா?’’ 
பதில்:‘‘ஆமாம்.’’
கேள்வி: ‘‘யாராச்சும் 10 ஆயிரம் சம்பளம் வாங்குறாங்களா?’’ 
பதில்: ‘‘சூப்ரவைசருங்க வாங்குவாங்க. அதுவும் பத்து வருஷம் வேலை பார்த்திருந்தாதான். இல்லேன்னா ஏழாயிரம், எட்டாயிரம்தான்.’’
கேள்வி: ‘‘லீவு எல்லாம் உண்டா?’’
பதில்: ‘‘மாசம் ரெண்டு நாள் லீவு உண்டு. அதுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பளத்துலப் பிடிச்சுக்குவாங்க.’’
கேள்வி: ‘‘பிடிச்சுக்குவாங்களா? அப்படின்னா லீவே கிடையாதா?’’
கேள்வி: ''நீங்க ட்ரெஸ் லாம் எங்கே எடுப்பீங்க?"
பதில்: ''பாண்டி பஜார் ல எடுப்போம்னே.. இங்க விக்கிற விலைக்கு வாங்க முடியுமா?"
''கேள்வி: ‘‘உங்களுக்கு இங்கே விலை குறைச்சு தரமாட்டாங்களா?’’
பதில்: ‘‘ம்ஹூம்... அதெல்லாம் தரமாட்டாங்க. உங்களுக்கு என்ன விலையோ, அதான் எங்களுக்கும்’’
கேள்வி: ‘‘உங்களுக்கு எப்போ கல்யாணம்?’’
பதில்: ‘‘தெரியலை..’’
கேள்வி: ‘‘ஊர்ல என்ன பண்றாங்க..’’
பதில்: ‘‘நெல் விவசாயம்..’’
கேள்வி: ‘‘எவ்வளவு நிலம் இருக்கு?’’ 
பதில்:‘‘தெரியலை.. ஆனால் கம்மியாதான் இருக்கு’’
கேள்வி: ‘‘இங்கே இப்படி கஷ்டப்பட்டு வேலைப் பார்க்குறதுக்குப் பதிலா ‘சரவணா ஸ்டோர்ஸ்ல வேலைப் பார்த்தேன்’னு சொல்லி திருவண்ணாமலையிலேயே ஒரு துணிக்கடையில வேலை வாங்க முடியாதா?’’
பதில்: ‘‘வாங்கலாம். ஆனா இதைவிட கம்மியா சம்பளம் கொடுப்பாங்க. இங்கன்னா வேலை கஷ்டமா இருந்தாலும் சாப்பாடும், தங்குறதும் ஃப்ரீ. சம்பளக் காசு மிச்சம். அங்கே அப்படி இல்லையே..’’
கேள்வி: ‘‘இங்கே எவ்வளவு பேரு வேலைப் பார்ப்பீங்க?’’ 
பதில்: ‘‘இந்த ஒரு கடையில மட்டும் பொம்பளைப் பிள்ளைங்க மட்டும் 800 பேர் இருக்கோம்.’’
‪#‎இது‬ சரவணா ஸ்டோரில் வேலை பார்க்கிற ஊழியர்களின் நிலை. சரவணா ஸ்டோருக்கு வரும் வாடிக்கையாளர்கள் நடத்தப்படும் விதம் எப்படியென்று தெரியவேண்டுமா? மேலே படியுங்கள்#
சரவணா ஸ்டோரில் வாடிக்கையாளர்கள் தாக்கப்படுவது வாடிக்கையான ஒன்றுதான். இதை மாம்பலம் காவல் நிலையம் கண்டுகொள்வதே இல்லை என கூறப்படுகிறது. 
சரவணா ஸ்டோர் ஊழியர்களால் கடுமையாக தாக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கொஞ்ச காலத்திற்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது.
சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களால் தாக்கப்பட்ட அந்த இலங்கைத் தமிழரின் பெயர் இளஞ்செழியன். கடந்த பத்தாண்டுகளாக லண்டனில் குடும்பத்துடன் வசிக்கும் இவர், ‘விடுமுறையில் சென்னைக்கு வந்த இடத்தில்தான் இப்படியரு விபரீதம்.
மருத்துவமனையில் இளஞ்செழியனை சந்தித்துப் பேசிய செய்தியாளர்களிடம் அவர் சொன்ன தகவல்...
‘‘நான் இலங்கைத் தமிழன். தமிழ்நாடு மீதும் தமிழர்கள் மீதும் கொண்ட பற்று காரணமாக பல ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்து செட்டிலானேன். நந்தனம் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றேன்.
லண்டனில் கடந்த பத்து ஆண்டுகளாகக் குடும்பத்துடன் தங்கியிருந்து வியாபாரம் செய்து வருகிறேன். விடுமுறையைக் கழிக்க கடந்த ஜூன் மாதம் 25_ம் தேதி மனைவி சுதர்ஷினி, மகள்கள் நளாயினி, சிந்து ஆகியோருடன் சென்னை வந்தேன். கடந்த 21_ம் தேதி (சனிக்கிழமை) மீண்டும் லண்டன் கிளம்ப ஆயத்தமானோம். விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த நிலையில் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்க 20_ம் தேதியன்று, இரவு ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸ்க்கு சென்றோம்.
குழந்தைகளுக்கு பொம்மை, துணிமணிகள் உள்பட பத்தாயிரம் ரூபாய் வரை பொருட்கள் வாங்கினோம். அப்போது என் மூன்று வயது மகள் நளாயினி கடையில் இருந்த ஒரு பந்தைக் காட்டி அதைக் கேட்டாள். அங்கிருந்த ஊழியர் என் மகள் கையில் பந்தைக் கொடுத்தார்.
அந்தப் பந்துக்கான பத்து ரூபாயைச் செலுத்தி ரசீதையும் என் மனைவி வாங்கிக் கொண்டாள். பின்னர் அங்கிருந்து நகர்ந்து கீழ்த்தளத்துக்கு வந்தோம்.
அப்போது என் மகளை நான் தூக்கி வைத்திருந்தேன். அவள் கையில் இருந்த பந்தைப் பார்த்து ஓர் ஊழியர் எங்களை வழிமறித்து ‘குழந்தையின் கையில் இருக்கும் பந்துக்குப் பணம் செலுத்தி விட்டீர்களா?’ என்று கேட்டார். என் மனைவி பணம் செலுத்தி விட்டதைக் கூறி கையில் இருந்த ரசீதையும் காட்டினாள். அப்போது திடீரென அங்கு வந்த மற்றொரு ஊழியர் என் மகளிடம் இருந்த பந்தை வெடுக்கென பிடுங்கிக் கொண்டு போய் விட்டார்.பந்து பறிபோனதால் என் மகள் சத்தமிட்டு அழுதாள். உடனே ‘‘ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? குழந்தையிடம் பந்தை திருப்பிக் கொடுங்கள்!’’ என்று நான் சத்தம் போட்டேன்.
மறுநிமிடம் என் பின்னால் இருந்து ஓர் ஊழியர் என்னை ‘மடேர்’ என்று தலையில் அடித்து விட்டார். நான் மகளை கீழே இறக்கி விட்டுத் திரும்ப முயன்றேன். அதற்குள் மற்றொரு ஊழியர் என்னைக் கீழே தள்ளினார். நான் எழுந்திருக்க முயல்வதற்குள் பத்துப்பேர் கும்பலாகச் சேர்ந்து என்னை நையப் புடைத்தார்கள். கையில் கிடைத்த எவர்சில்வர் பாத்திரங்களை எடுத்து என் கை, முதுகு, கழுத்து என அடிக்க ஆரம்பித்தனர். நான் தாக்கப்படுவதைப் பார்த்து என் மகள் நளாயினி பயத்தில் வாந்தியெடுத்து விட்டாள்.என் மேல் விழுந்த அடிகளைத் தடுக்க முயன்ற என் தந்தையும், மருத்துவருமான சண்முகநாதனை வயதானவர் என்று கூடப் பார்க்காமல் தள்ளி விட்டனர். அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்து எங்களை மீட்டனர்.
கடைக்கு வெளியே என்னை அவர்கள் அழைத்து வந்தனர். முதுகில் கடுமையான வலி இருந்ததால் சட்டையைக் கழற்றிப் பார்த்தேன். ரத்தக்கட்டுகளும், காயங்களும் இருந்தன. அதைப் பார்த்து சக வாடிக்கையாளர்கள் கொதித்துப் போய்விட்டனர். என் மனைவி ஏறத்தாழ மயக்கம் போட்டுவிழும் நிலைக்கு வந்துவிட்டாள். உடனே நான் செல்போன் மூலம் போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் சொன்னேன். சற்று நேரத்தில் மாம்பலம் போலீஸார் அங்கே வந்து என்னை காவல் நிலையத்துக்கு அழைத்துச் என் காயங்களைப் பார்த்த போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்றனர். அதற்குள்ளாக போலீஸாருக்கு எங்கிருந்தோ போன் வந்துவிட ‘இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். இப்படியே விட்டுவிடுங்கள்’ என்று போலீஸார் என்னிடம் காம்ப்ரமைஸ் செய்ய முயன்றார்கள்.
அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. ‘இனிமேல் தமிழ்நாட்டில் யாருக்கும் இப்படியரு சம்பவம் நடக்கக்கூடாது. வழக்குப்பதிவு செய்யுங்கள்’ என்று கண்டிப்பாகக் கூறினேன். அதன் பிறகுதான் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தார்கள்.இந்தச் சம்பவம் மீடியாக்களில் வெளிவந்த பிறகு ஏராளமானோர் என்னைத் தொடர்பு கொண்டு ‘நாங்களும் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களால் இப்படி பாதிக்கப்பட்டுள்ளோம்’. ஆனால் நீங்கள்தான் தைரியமாக போலீஸ்வரை போய் புகார் கொடுத்திருக்கிறீர்கள்’’ என்று எனக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.
பத்தாயிரம் ரூபாய்க்குப் பொருள் வாங்கும் நான், பத்து ரூபாய் கொடுத்து பந்து வாங்க மாட்டேனா? என்னைப் பார்த்தால் பந்து திருடுபவன் மாதிரியா இருக்கிறது? அப்படியே இருந்தாலும் எடுத்த எடுப்பில் ஒருவர் மீது கை வைக்கலாமா? லண்டனில் ஒரு போலீஸ்காரர் கூட சாதாரண ஆளை இப்படிப் போட்டு துவைத்து விட முடியாது. அப்படித் தாக்கினால் நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழும்’’ என்றார் அவர் வேதனையுடன்.
(இது லண்டன் இல்லப்பா.. பெரு முதலாளிகளின் சொர்க்க பூமியான இந்தியா)
இப்படி நிறைய சம்பவங்கள்... இஸ்லாமிய பெண்ணை பர்தா நீக்கி சோதனை செய்ய முயன்றதாக ஒரு சம்பவம். விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடம் என ஒட்டுமொத்த சுரண்டலின், அத்துமீறலின், ஒழுக்கக்கேட்டின், அயோக்கியத்தனங்களின் அடையாளமாகதான் சரவணா ஸ்டோர் உயர்ந்து நிற்கிறது.
ஆக சரவணா ஸ்டோர் உரிமையாளர் விளம்பரத்தில் நடித்தது இணையத்தில் பலராலும் கேலிக்குள்ளாகும் இந்நேரத்தில் இந்த செய்தியை நான் பகிர காரணம்... 
இவர்களை சாதாரனமாக கேலி செய்தால் போதுமா? இந்த கேடுகெட்ட கேரக்டரை ஊடுகட்டி அடித்தாலும் தப்பே இல்லை..
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum