எதிரியை விட ஆபத்தானவர்கள்
Sat Apr 23, 2016 10:06 am
அந்த பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார். அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும். திடீரென்று சில நாட்களாக அந்த மலைப்பாம்பு உணவு உண்பதை நிறுத்தி விட்டதையும் அத்துடன் புதிய வழக்கமாக இரவினில் அந்த பெண் தூங்கும்போது அவள் மீது படுத்து கொள்வதையும் கவனித்தார். அவருக்கு மிகுந்த கவலை வந்துவிட்டது. என்ன என்னவோ செய்து பார்த்தும் அந்த பாம்பு எதையும் உண்ணவில்லை. இறுதியாக அந்த மலைப்பாம்பை ஒரு கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று பரிசோதித்தார்.
பரிசோதித்து முடித்தவுடன் அந்த மருத்துவர் கவலையுடன் அந்த பெண்ணிடம் ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார்."உங்க பாம்பு உங்களை கொன்று விழுங்க தயாராகிக்கொண்டிருக்கிறது. உங்களுடைய நீள அகலத்தை இரவுகளில் நீங்கள் தூங்கும்போது அளக்கிறது. அது உங்களை அதனுடைய இரையாக முடிவு செய்த மறுகணமே உங்களை விழுங்க வசதியாக தன்னுடைய வயிற்றை காலி செய்துக்கொண்டிருக்கிறது. உடனடியாக அதனை கொல்லுங்கள்....!"என்பதே அது.
நீதி: உங்களை சுற்றியுள்ள அனைவரும்,உங்களை அரவணைக்கும் அனைவரும் நல்லவர்கள் என கருதுவது ஆபத்து.உங்களை விழுங்கி ஏப்பம் விட தயாராக இருக்கும் அந்த மலைப்பாம்பை போன்ற நண்பர்களை இனம்கண்டு களைந்துவிடுங்கள்.
எதிரியை விட ஆபத்தானவர்கள் அவர்கள்....!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum