Obstructed heritage தடையுடன் கூடிய சொத்துரிமை
Wed Jan 20, 2016 10:49 pm
ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு சொத்து கிடைப்பதில் இரண்டு வகையில் கிடைக்கும். 1) Unobstructed heritage தடையில்லாத சொத்துரிமை; 2) Obstructed heritage தடையுடன் கூடிய சொத்துரிமை.
1) தடையில்லா சொத்துரிமை என்பது -- பூர்வீகச் சொத்துக்களில் தாத்தா, தகப்பன் இவர்களின் சொத்து அவர்களின் மகன், பேரன், கொள்ளுப்பேரன் இவர்களுக்கு எந்தவித தடையும் இல்லாமல் தானாகவே வந்து சேரும். அதாவது பிறப்பால் சொத்துரிமை. ஒருவருக்கு மகன் பிறந்தால் அந்த மகன், தகப்பன் சொத்தில் தானாகவே உரிமையை அடைந்துவிடுவான். அதுபோல அந்த மகனுக்கு ஒரு மகன் பிறந்தால் (பேரன்) அவன் பிறந்தவுடன் அவனின் தாத்தா சொத்திலும், பிறப்பால் ஒரு பங்கு அவனுக்கும் உண்டு. இந்த சொத்துரிமையை எதுவும் தடை செய்யாது. பிறந்தவுடன் சொத்தில் உரிமை வந்துவிடும். எதுவும் தடை செய்யாமல் வரும் சொத்துக்கு பெயர் தடையில்லா சொத்துரிமை என்னும் Unobstructed heritage.
2) தடையுடன் கூடிய சொத்துரிமை - Obstructed heritage - இது பூர்வீகச் சொத்துப்போல தடையில்லாமல் வராது. ஒரு தடை இருக்கும். உதாரணமாக: ஒருவரின் தாயின் தகப்பனார் (தாய்வழித்தாத்தா) ஒரு சொத்தை விட்டுவிட்டு இறந்தால், அந்த சொத்தில் அவரின் மகளுக்கு மட்டும் உரிமை வரும். அந்த மகளின் மகனுக்கு பிறப்பால் எந்த உரிமையும் வராது. ஆனால் அந்த பெண் (தாய்) இறந்துவிட்டால், அவருக்குச் சேரவேண்டிய பங்கு அவரின் மகனுக்கு வந்து சேரும். இங்கு அந்த தாய்வழித் தாத்தாவின் சொத்தில் அந்த பேரனுக்கு பிறப்பால் பங்கு கிடைக்கவில்லை; மாறாக அவனின் தாய் இறந்ததால் அந்த பங்கு அவனுக்கு வாரிசாக வருகிறது. நடுவில் ஒரு வாரிசு இருந்தால் பங்கு கிடைக்காது. அந்த வாரிசு இல்லாமல் போனால் பங்கு கிடைக்கும் சொத்துக்களை தடையுடன் கூடிய உரிமை Obstructed heritage எனலாம்.
நன்றி: http://gblawfirm.blogspot.in/
Permissions in this forum:
You cannot reply to topics in this forum