அரசு இதழ்கள் இனி டிஜிட்டல் வடிவில் வெளியாகும்!
Tue Oct 13, 2015 9:09 pm
அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக, அரசு இதழ்களை காகித வடிவில் அச்சிடுவதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது. அரசு இதழ்கள் இனி இணையதளம் மூலம் டிஜிட்டல் வடிவில் உடனுக்குடன் வெளியிடப்பட உள்ளன.
அரசு பிறப்பிக்கும் புதிய உத்தரவுகள் மற்றும் சட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், கெஸெட் என குறிப்பிடப்படும் அரசு இதழ்கள் வெளியிடப்படுகின்றன. பொதுவாக அரசு இதழ்களை அச்சிடுவதற்கான கோரிக்கைகள், பல்வேறு அமைச்சகங்கள் சார்பில் அரசு அச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு அவை வெளியிடப்படும். பல்வேறு அமைச்சகங்களின் அறிவிக்கைகள் வெளியிடப்படுவதால் அரசு இதழ்களில் அறிவிப்புகள் வெளியாக தாமதமாவது வழக்கம்.
இந்நிலையில் அரசு நிர்வாகம் மற்றும் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் வகையில், 'டிஜிட்டல் இந்தியா' திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு இதழ்களை காகித வடிவில் வெளியிடுவதை நிறுத்திக்கொள்வதாக இதற்கு பொறுப்பேற்கும் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இனி அரசு இதழ் அறிவிப்புகள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் வடிவ இதழ்களை, அச்சு வெளியீடு துறையின் இணையதளம் மூலம் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
2000 மாவது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, டிஜிட்டல் வடிவம் மற்றும் தரவிறக்கம் செய்த வடிவம் சட்டப்பூர்வமாக செல்லுபடியாக கூடியதாகும் என்பதால் டிஜிட்டல் வடிவ அரசு இதழ்களை பயன்படுத்திக்கொள்வதில் எந்த சிக்கலும் கிடையாது.
அரசு அறிவிக்கை கிடைக்கப்பெற்ற ஐந்து நாட்களில், அவை டிஜிட்டல் வடிவில் வெளியிடப்பட உள்ளன. மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வலியுறுத்தலை அடுத்து இந்த டிஜிட்டல் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இதன் மூலம் அரசு இதழ்களை எவரும் உடனடியாக தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். அரசைப் பொறுத்தவரை ஆண்டுக்கு 3.5 கோடி பக்கங்களை காகித வடிவில் அச்சிடும் பணி இதன் மூலம் மிச்சமாகும். ரூ.50 கோடி செலவும் மிச்சமாகும்.
அரசு இதழ்கள் தொடர்பான தகவல்களைப்பெற:
http://www.egazette.nic.in/default.aspx?AcceptsCookies=yes
-சைபர் சிம்மன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum