இ-சேவை மையத்தில் பாஸ்போர்ட்டுக்கும் விண்ணப்பிக்கலாம்!
Wed Sep 23, 2015 8:32 am
சென்னை: தமிழகத்தில் உள்ள 285 இ-சேவை மையங்களில் ‘ஆன்-லைன்’ மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.பாலமுருகன் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் ஜெ.குமரகுருபரன், பாரத ஸ்டேட் வங்கி பொதுமேலாளர் விஜயலட்சுமி மானில்கர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறுகையில், "முதல்மைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி சென்னை தலைமைச் செயலகம், 264 தாலுகா அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி அலுவலகம், 15 மண்டல அலுவலகங்கள், 54 கோட்ட அலுவலகங்கள் மற்றும் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என 339 இடங்களில் இ-சேவை மையங்களை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அமைத்து நிர்வகித்து வருகிறது.
இதில் சென்னையில் உள்ள 54 கோட்ட அலுவலகங்கள் தவிர்த்து மீதம் உள்ள 285 இ-சேவை மையங்களில், மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இணைந்து ஆன்-லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதிதாக பாஸ்போர்ட் பெற விரும்புபவர்கள் வீட்டு முகவரிக்கான சான்று, பிறப்பு சான்று, கல்வி சான்றுகளுக்கான அசல் மற்றும் நகல் சான்றுகளை கொண்டு செல்ல வேண்டும். அத்துடன் ரூ.1,655 ரொக்கமாக செலுத்தி பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள முடியும்.
மேலும் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விரும்புவோர் மற்றும் தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற விரும்புவோர் இ-சேவை மையங்களை அணுகி பயன் பெறலாம். பாஸ்போர்ட் அலுவலகமும், அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களும் இணையதளம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அனுப்பப்படுகிறது. விசாரணை முடிந்து அறிக்கையும் இணையதளம் மூலமாக பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு திரும்பி வரும் முறையிலான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாஸ்போர்ட் வழங்குவதற்கான காலதாமதம் தவிர்க்கப்படுகிறது.
நாட்டில் 127 கோடி மக்கள் தொகையில் 5 சதவீத மக்களிடம் மட்டுமே பாஸ்போர்ட் உள்ளது. நாடு முழுவதும் ஆண்டுக்கு 65 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு வந்தன. கடந்த 5 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் தற்போது ஆண்டுக்கு 1 கோடி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் ஆண்டுக்கு 9 லட்சமும், சென்னையில் மட்டும் 4 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகிறது. வரும் நவம்பர் மாதம் முதல் கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதால், அந்தவகை பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் பாஸ்போர்ட்டு அலுவலகங்களில் கொடுத்து புதிய பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்" என்று தெரிவித்தனர்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum