தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
நாக்கு மென்மையானதா, கடினமானதா? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

நாக்கு மென்மையானதா, கடினமானதா? Empty நாக்கு மென்மையானதா, கடினமானதா?

Tue Aug 11, 2015 12:50 am
முதலாளி ஒருவர் தன் பணியாளரின் அறிவை சோதிக்க விரும்பினார். எனவே அவரிடம் , அன்று மதியத்திற்கு உலகிலேயே மென்மையான இறைச்சியை சமைத்து வைக்கும்படி கட்டளையிட்டார். பணியாளரும் அவர் சொன்னபடியே சந்தையிலிருந்து நாக்கு இறைச்சியை வாங்கி வந்து சமைத்து வைத்தார். முதலாளி சாப்பிடும் முன்னர் கேட்டார் , " இது என்ன இறைச்சி? இதுதான் உலகிலேயே மென்மையான இறைச்சியா?" . பணியாளரும்,

" ஐயா! இது நாக்கு. இதில் கொஞ்சம் கூட எலும்பே கிடையாது. முழுதுமாக சதை மட்டுமே உள்ளது. எனவே இதுதான் உலகிலே மிக மென்மையான இறைச்சி " என்றார். முதலாளி அமைதியாய் புன்னகைத்தபடியே சாப்பிட்டுவிட்டு சென்றார். மறுநாள் முதலாளி சொன்னார், 

" நேற்று உலகிலேயே மிகவும் மென்மையான இறைச்சியை சமைத்துக் கொடுத்தாயல்லவா? இன்று உலகிலேயே மிகவும் கடினமான இறைச்சியை சமைத்துக் கொடு " என்றார். 

பணியாளரும் உடனே சந்தைக்கு ஓடினார். மறுநாள் மதியம் முதலாளி ஆர்வத்துடன் உணவு மேஜைக்கு வந்தார். 


பணியாளரும் அடக்கமாய் உணவை எடுத்துப் பறிமாறினார். முதலாளி கேட்டார், " இன்று என்னப்பா இறைச்சி? இதுதான் உலகிலேயே கடினமான இறைச்சியா? " என்றார். பணியாளர் சொன்னார்,

" இன்றும் நாக்குதான் சமைத்திருக்கிறேன். ஏனென்றால் உலகிலேயே மிகவும் கடினமான இறைச்சியும் இதுதான் ".
முதலாளி கொஞ்சம் குழம்பித்தான் போனார். 

"என்னய்யா நீ ? நேத்துதான் சொன்னே , நாக்குதான் உலகத்திலயே மென்மையான பொருள்னு
ஆனா இன்னிக்கு நாக்குதான் உலகத்திலயே கடினமான பொருள்னு சொல்றே. ஏய்யா இந்த மாதிரி குழப்புறே?" என்றார். 


பணியாளர் சொன்னார் , " ஐயா! நாக்கு மென்மையானதுதான். இது நல்ல விஷயங்களைப் பேசி எத்தனையோ ஆத்துமாக்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. நொறுங்கிப் போன எத்தனையோ உள்ளங்கள் இந்த நாக்கினால் புத்துயிர் பெற்றிருக்கின்றன. இந்த நாக்கு மென்மையாகப் பேசுவதால் தோல்வியில் வாழ்ந்த எத்தனையோ பேர் வெற்றியாளர்களாகி இருக்கின்றனர்" . 

முதலாளி சொன்னார், 
" அதெல்லாம் சரிதான். அது கடினமானது என்றாயே! "
பணியாளர் ,

"அதையும் சொல்கிறேன் ஐயா! அது ஒரு கொடிய மிருகமென்பதால்தான் கடவுள் அதைப் பற்கள் என்ற கற்கோட்டைக்குப் பின்னே சிறை வைத்திருக்கிறார். இந்த நாக்கினால் நொறுக்கப்பட்ட ராஜ்யங்கள் எத்தனை! எத்தனை கோட்டைகளை இந்த நாக்கு தரை மட்டமாகியிருக்கிறது !

இல்லாததும், பொல்லாததும் பேசி எத்தனையோ வாழ்க்கையை அழித்திருக்கிறது! இப்போது சொல்லுங்கள். இதை விடக் கடினமான பொருள் உலகில் உண்டா? " என்றார். முதலாளி சந்தோஷமாய் அவரது முதுகில் தட்டிக் கொடுத்து, " உன்னால் பெருமை அடைகிறேன் " என்றார். செல்லமே! உன்னுடைய நாக்கு மென்மையானதா, கடினமானதா?
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum