வேர்டு அடிக்கோடு அர்த்தங்கள் புரியவில்லையா?
Thu Apr 30, 2015 4:27 pm
வேர்டு பயன்பாட்டில் கடிதம் ஒன்றை அடித்துக் கொண்டு இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். ஏதேனும் ஒரு சொல்லை தவறாக அடித்தால் உடனே அதன் அடியில் சிவப்பு நிறத்தில் அலை அலையாய் ஒரு கோடு தோன்றும். அதைக் கண்டு அந்தச் சொல் பிழையாக உள்ளது என்று தெரிந்து கொண்டு திருத்திக் கொள்கிறோம்.
சில நேரங்களில் இதே மாதிரியான கோடு வேறுசில வண்ணங்களில் தோன்றும். அதற்கான அர்த்தங்களை பலரும் அறிந்திருப்பதில்லை. அதுபற்றி தெரிந்து கொள்வோம்...
வார்த்தைகளின் அடியில் பச்சை நிறத்தில் அடிக்கோடு ஏற்பட்டால் 'அதில் சொல்லில் எதுவும் பிழை இல்லை. இருந்தாலும் இலக்கண அமைப்பு சரியில்லை, எனினும் ஏற்றுக்கொள்வது உங்கள் விருப்பம்' என்பதற்கான அறிகுறிதான் அந்த அடிக்கோடு.
அரிதாக ஊதா நிறத்திலும் கோடு ஏற்படும். அது கருத்துப் பிழையை குறிக்கும். இலக்கண பிழையும், எழுத்துப்பிழையும் இல்லாத இடங்களில் இது காண்பிக்கப்படும்.
உதாரணமாக their you are rama is a kinger George is an kin என்று தட்டச்சு செய்தால் சிவப்பு, பச்சை மற்றும் ஊதா வண்ண அடிக்கோடுகளை பார்க்கலாம். அது மூன்று கோட்டிற்கான பிழை மற்றும் விளக்கங்களை நமக்கு தெளிவுபடுத்தும்.
நன்றி: தினத்தந்தி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum